Thursday, September 30, 2010
ஏன், உங்க சிந்தனை கருத்துக்கு பஞ்சமா....வந்துவிட்டது
வலைபதிவில் மற்றும் மூகநூலில், மொக்கையா ஒரு மேட்டர் போட்டா அதிகம் பேர் லைக் போட்டு கருத்து வேற சொல்றிங்க....ஆனால் கருத்துள்ள மேட்டர் போட்ட லைக், கருத்து எதுவும் இல்லாமே போய்டுது.... ஏன் உங்கள் கருத்துக்கு பஞ்சமா....இல்லை உங்கள் சிந்தனைக்கு பஞ்சமா....
ஆனால் வார்த்தைகளிலும், செயல்களிலும் பொழுதுபோக்கு,கவர்ச்சி, போதை இவைகள் மட்டும் இருந்தால் மக்கள் என்கிற நண்பர்கள் எங்க இருந்தாலும் வந்துவிட்டு போவார்கள்போல...ஏனென்றால் இதன் மவுசு மக்கள் மனதில் என்றும் நீங்காமல், குறையமால் இருக்கிறது.... டாஸ்மார்க் கடை சந்து போந்துல எங்க இருந்தால் தேடி பிடிச்சு போய் தண்ணி அடிக்கிறான். நல்ல உணவு பொருட்களை பார்க்கும் படி விற்றால் வாங்க மறுக்கிறான்.
அடுத்து சினிமா, இது ஒரு பொழுதுபோக்கு எனபது போய் பலபேருடையா வாழும் கனவாகவே மாறிவிட்டது....ஒரு 80 வருஷம் முன்னே நாடு, நாடாயாய் திரிந்து நாடகம் நடத்தி ஏதோ சொற்ப வருமானத்தில் வாழ்ந்த கூத்தாடிகள். இன்று இருந்த இடத்தில் ஆடி பார்பவர்களை கூத்தாடியாக்குகிறான், பின் முட்டாலாக்குகிறான். நாட்டின் ஆட்சி, அதிகாரம் எல்லாம் மறைமுகமாக கூத்தாடி கைகளுக்கே போய்விட்டது. பொழுதுபோக்காக பார்க்கும் சினிமா மக்களின் வாழ்வில் பொழுதுவிடிய விடாமல் கபளீகரம் செய்கிறது. இது ஒரு வகை போதை ஆனால் இது போதைல பெரியா போதைதான் இருக்கு. அடுத்து கவர்ச்சி...இது சொல்லவே வேண்டாம் லைட் போஸ்ட்கம்பத்திற்கு போடவை கட்டினாலும் , வறட்சி, விரட்சியோடு பார்பவனுங்கதான் நாட்டில் பலபேரு இருக்கானுங்க....இந்த சினிமா கூத்தாடிகள் இதை புரிந்துகொண்டு படம் என்ற பேர்ல ஒரே பிட்டு படமா எடுத்து தல்றானுங்க...அந்த பிட்டுள இவன் மயங்கிறான்...மயங்கியவன் வெளிய வந்து மக்களுக்கு என்ன ஞான உபசேமா பண்ண போறான். பார்க்குற பெண்களை ஒரு மாதிரியாய் பார்ப்பான் இதில் போதை அதிகமா ஆயடுட்சுனா பெண்ணை கைய பிடிச்சு இழுப்பான், அடுத்த காட்சி கற்பழிப்பு....இதில் பாதிக்கப்படும் பெண்ணுக்கு நீதி. "கோர்ட், கேசு, வாய்தா.... என்று நீண்டு கொண்டே போகும். அவளின் மறுக்கப்பட்ட நீதி....
அதனால் மனிசனுங்க அடிமையாகறது கூத்தாடி ஆடும் சினிமா, டாஸ்மார்க் சரக்கு, பாலியல் இன கவர்ச்சி.
இதுபோல மயக்கங்கள் எதுவும் இல்லாமல். பார்க்கும் நிகழ்வையும், கேட்கும் வார்த்தைகளையும், பேசும் சொற்கள்களையும் நம் சிந்தனையில் ஏற்றி சரியா, தவறா என கொஞ்ச நேரம் அலசி சிந்தித்தாலே பல உண்மைகள் வந்து விழும். நம் வாழ்வின் இருண்ட பொழுதும் விடியும்...
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
15 comments:
\\இதுபோல மயக்கங்கள் எதுவும் இல்லாமல். பார்க்கும் நிகழ்வையும், கேட்கும் வார்த்தைகளையும், பேசும் சொற்கள்களையும் நம் சிந்தனையில் ஏற்றி சரியா, தவறா என கொஞ்ச நேரம் அலசி சிந்தித்தாலே பல உண்மைகள் வந்து விழும். நம் வாழ்வின் இருண்ட பொழுதும் விடியும்... \\
மக்கள் நாம இப்படி மனசின் பிடியிலும், புலன் கவர்ச்சியிலும் சிக்கிக்கொண்டு இருக்கிறேன் என்கிற தெளிவு வராமல் மாயையில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் .
எனவே அவர்களுக்கு தூண்டுகோலாக நாம் இருக்கவேண்டும். மாறாக...
வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
இது உண்மையான வார்த்தைகள்.இந்த மாதிரி தனித்து வேறுபட்டு இருந்தால் உண்மையாக இருந்தால் அவனை பிழைக்கதெரியாதவன்,கோமாளி இன்னும் பல பெயர்களை கொடுத்து அவனை வாழ விடாமல் செய்கிறதே?
well said. குரு .:))
எப்படில்லாம் பேசி இழுக்க வேண்டியதா இருக்கு !!
மொக்கைகளுக்கு ஆயுசு கம்மி.
நல்ல விஷயம் என்னைக்கும் பொறுமையாத்தான் போய் சேரும் குரு,ஆனா நிலைக்கும். அதுக்காகவெல்லாம் மனசு தளர்ந்திடாதிங்க ..!!
அன்புடன் ,
பாபு பழமலை.
நீங்கள் சொல்வது போல் சாதாரண விஷயங்களை ரசிக்கும் கருத்து கூறும் மக்கள், சிந்தனை ரீதியான பதிவுகளுக்கு பதில் கருத்து கூறுவது மிக குறைவுதான். காரணம் மனித மனம் எப்போதும் களிப்பையே நாடுகிறது.
ஆனால் நிச்சயம் இந்நிலை மாறும்.
////...இதில் பாதிக்கப்படும் பெண்ணுக்கு நீதி. "கோர்ட், கேசு, வாய்தா.... என்று நீண்டு கொண்டே போகும். அவளின் மறுக்கப்பட்ட நீதி....////
நல்ல தகவல் சகோதரம் ஆனால் பலருக்க சங்கு ஊதுற மாதிரித்தான்...
ஆகா அருமையான பகிர்வு நண்பரே
கோமாளிகள் சங்கம் ஆரம்பிக்கலாமா, தலைவரே? நான்தான் முதல் மெம்பராம்.
உலகம் போற போக்க பார்த்தா அப்படிதான் தோனுது.. :-(
nengal solvathu miga unmaithan nanbare
ரைட்..
நான் சொல்லி திருந்தவா போறாங்க...
//வலைபதிவில் மற்றும் மூகநூலில், மொக்கையா ஒரு மேட்டர் போட்டா அதிகம் பேர் லைக் போட்டு கருத்து வேற சொல்றிங்க....ஆனால் கருத்துள்ள மேட்டர் போட்ட லைக், கருத்து எதுவும் இல்லாமே போய்டுது.... ஏன் உங்கள் கருத்துக்கு பஞ்சமா....இல்லை உங்கள் சிந்தனைக்கு பஞ்சமா....//
உண்மைதான் தல ...இது வலை(லி)பதிவுக்கு வந்த கொஞ்ச நாளிலே தெரிந்து விட்டது .....
பொதுவாகவே சமுகத்தில் கவர்ச்சிக்குதான் மதிப்பு அதிகம் ...
//அதனால் மனிசனுங்க அடிமையாகறது கூத்தாடி ஆடும் சினிமா, டாஸ்மார்க் சரக்கு, பாலியல் இன கவர்ச்சி.//
போதை இல்லாமல் வாழ்க்கை இல்லை தல..... நம்முடைய உடம்பில் ஒவ்வொரு நரம்பும் எதோ ஒரு உணர்வு ,போதை யை தானே எடுத்து செல்லுகிறது ......நல்ல கருத்து,சிந்தனை என்பது கூட ஒரு விதத்தில் போதை தானே .....
சாப்பாடு சாப்பிடும் போது கூட நமக்கு ருசியான (போதையான ) வற்றை தானே தேடி சென்று சாபிடுகிரோம்.......
அது போல தான் சிலர் ரோஸ் மில்க் சாப்பிடுகிறார்கள்.....சிலர் black drink சாபிடுகிரார்கள்.......
வாழ்வே ஒரு போதை தானே தல ...
இதில் நல்ல போதை ,கெட்ட போதை எதுவும் மற்றவரை பாதிக்காமல் இருந்தால் சரிதான் .....
உலகம் இப்படிதான் தல... உங்களுக்கு தெரியாததா !!!?
தலைவரே நாம் கருத்து சொல்ற இடம் இப்படித்தான் இருக்கும்... இதுக்கு போய் வருத்தப்படலாமா?..
பதிவுலகம் பத்தி என்னிடம் ஒரு சர்வே இருக்கு நேரில் பேசுவோம் ...
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே இந்த உணர்வு வந்துவிடுவது தவிர்க்க முடியாதது. விஷயம் எதுவும் இல்லாமல் வெறும் படங்களை போட்டு வைத்தாலே போதும்,முப்பது ஓட்டுக்கள் வாங்கி விடும் . மண்டையை குடைந்து ஒரு குறிக்கோளுடன் , மன நிறைவுடன் ஒரு கருத்தை வெளியிட்டால் பத்து ஓட்டுக்கள் வாங்கிக்கொண்டு பின்னுக்கு போய்விடும்.
ஒன்று புரிகிறது. வலையில் தீவிரமான அல்லது சற்று திடமான கருத்துக்களை தொடர்ந்து எல்லோராலும் எழுதி அதிக ஓட்டுக்கள் வாங்கி பிரபல படுத்த இயலாது. இடையில் சற்று மாறுபட வேண்டும். நகைசுவையாக ,யாரையும் கிண்டலடித்து எழுதினால் அதிக வாசகர்களை காணலாம். இதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. வலையில் வலம் வருபவர்களுக்கு மனம் மகிழ , சிரிக்க, தன்னை போன்றவர்களுடன் "கும்மி "அடிக்கவும் ,சற்று சினிமா ,கேளிக்கைகள் பக்கமும் தலை காட்ட வேண்டும் . அவ்வளவுதான். இது ஒரு சாதாரண பழக்கம் தான்.
இது இயல்பான ஒன்று. வாசகர்களை தங்கள் பக்கம் கொண்டுவர மிக சுலபமான ஒரு வழி: தொடர்ந்து சில "கிண்டல்" பதிவுகளை இட்டு பின்னர் தீவிர சிந்தனையுடன் நீங்கள் யோசித்து வைத்துள்ள கருத்துக்களை வெளியிடுங்கள். கூட்டம் அல்லும்.
எனக்குத்தெரிந்து நிறைய நல்ல பதிவுகள் காற்று வான்கிக்கொண்டுள்ளது காரணம் இதுதான்.
// நான் எழுதுவதைத்தான் நீ படித்து தொலைக்க வேண்டும் // என்ற எண்ணம் நமக்கு வரவே கூடாது. பல நேரங்களில் வாசகர்களின் இயல்பை அறிந்து பதிவுகளை இட்டால் நமக்கென்று உள்ள வாசகர்கள் என்று வருவார்கள்.
--
அருமை தோழரே....., உங்கள் கருத்து அருமை.., நல்ல விசயங்கள், கருத்துக்கள் இந்த நாட்டில் கேட்ப்பாரற்றுதான் கிடக்கின்றன. ஆனாலும்... நாம் தொடர்ந்து எழுதுவோம்.... இந்த சமூகம் ஒரு நாள் வருந்தி திருந்தும் என்ற நம்பிக்கையில். நன்றி. முடியும்போது வாருங்கள் ( ithayasaaral.blogspot.com )
Post a Comment