Pages

Saturday, October 2, 2010

காந்தி யாருக்காக பிறந்தார்...


காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.

‎"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு  நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால்  காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.

காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம்  இல்லாமல்  இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார்.  அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில்  உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம்   ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...

இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை  பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது.  பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல்  சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...

காந்தியின்  மகன் தேவதாஸ் குடிகாரன் என்பதால் இவனுக்கு கல்யாணம் செய்தால் திருந்துவான் என்று கல்யாணம் செய்ய முடிவிடுத்திருகிறார்கள் ஆனால் குடிகார தேவதாசுக்கு பெண் கொடுக்கக யாரும் முன்வரவில்லை அப்போது ரொம்ப துணிச்சலாக தன் பெண் வாழ்வை விட என் பார்பான்  இனமும் நமக்கு ஒரு தலைமையும் வேண்டும் என்பதற்காக மூதறிஞசர்   என்று சொல்ற ராஜாஜி தன் மகளை தேவதாசுக்கு மனம் முடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். கல்யாணமும் சிறப்பாக,சிரிப்பாக நடந்து சிலவருடம் கழித்து தேவதாஸ் மரணம் அடைகிறான். ராஜாஜிக்கு இதன் மூலம் பெற்ற மகளின் வாழ்க்கை போனாலும் காந்திக்கு சம்பந்தி என்ற உறவு கிடைத்தது. அதன் மூலம் ராஜாஜிக்கு தன் இன மக்களுக்கு "மகளை கொடுத்து இனத்தை காத்த பெருமாகான்" என்ற பட்ட பெயரும் ராஜாஜி கிடைத்தது...

இதனாலையே பாப்பானின் ஆதிக்க சக்திக்கு உட்பட்டு பல ஈ(ஜி)களின் சொல்படி கேட்டும் வாழ்ந்த காந்தி "தன் கொள்கையில் உறுதியானவர், இவராலே நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்க முடியும், கொடுக்கப்பட்டது" என்ற ஒரு திட்டமிட்ட மாயயை  பாப்பான்னிய ஆதிக்க சக்தியால் வளர்க்கப்பட்டது, வளர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது ....

காந்தி, அவர் இனம், மதம் சார்ந்த அடிப்படையில் இல்லாமல் இருந்திருந்தால் அவர் உண்மையிலே எல்லா மதத்து மக்களுக்கும் அவர் ஒரு புனித ஆத்மாவா இருந்திருப்பார். ஆனால் ஹே ராம்...என்ற தந்திரத்தை அடிகடி உச்சரித்து நான் இன்னார் மதத்தில் இருந்து வந்தவன் என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டார்...அதனால் அவர் இந்துக்களுக்கு மட்டும் மகாத்தமா....


காந்தின் நிகழ்வின் ஊடே என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:  (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

13 comments: