Pages

Thursday, August 18, 2011

உணமையை விரும்புவர்கள் இதை படிக்கலாம்...


"தளர்வான நிலையில் கூட புத்த நிலையை காணலாம். பிஞ்சு குழந்தையை பார்க்கும் பார்வையிலும் தன்னை மறக்கலாம்." நாம் காணும் மனிதனை மனிதனாக அழைத்து வந்துவிடலாம் ஆனால் அதற்க்கு ஆன்மிக மூலாம் பூசப்பட்ட மதம்தான் தடையாக உள்ளது. உண்மை ஆன்மிகம் தனக்குளே தன்னை தேடிபெருவதில்தான் இருக்கிறது. இதைதான் புத்தரும் கடைசியாக சொன்னார். "அபோ திபோ பவ" -உனக்கு நியே ஒளியாக இரு என்று. இதற்காக தங்களை மகரிஷி என்று சொல்லிகொள்பவர்கள் தேவை இல்லை. உண்மை சொன்ன ஒரு புத்தரே போதும்.

இந்துமதம் ஒரு வாழ்கை நெறியாக சொல்லப்பட்டது என்று சொல்கிறார்கள் அப்படி இருக்கும்போது அதை ஏன் தவறாக புரிந்துகொள்கிறார்கள். அரச மரத்தை சுற்றிவந்தால் குழந்தை பிறக்காத பெண்களுக்கும் குழந்தை பிறக்கும் என்று இந்து வழிகாட்டி சொல்கிறது அது ஏன் அப்படி சொல்கிறது "காற்று அரச மரத்தின் மேல் பட்டு விசும் போது அக்காற்று பெண்கள் கர்ப்ப பைக்கு வலிமையை கொடுக்குமாம்" இதனை பகுத்தறிவுடன் விளக்கிருந்தால் மதத்தின் வாழ்கை நெறி வழுவாமல் போற்றபட்டிருக்கும். அதை விடுத்து மறைபொருள் போல் அரசமரத்தின் கிழ் ஒரு மத அடையாள பொம்மையை குட்காரவைத்து மக்களுக்கு மதம் சார்ந்த பயத்தை உண்டாக்கி சொல்லப்பட்டதால் அதன் பகுத்தறியும் உண்மைத்தன்மை காணமல் போய்விட்டது அப்பொழுது இருந்த மக்கள் அறிவற்ற, படிப்பறிவற்ற, நாகரிகம் இல்லாத மக்களாகத்தான் இருந்தனர் இதனால் அதன் உண்மை வடிவத்தை மதத்துடனே இணைத்துவிட்டார்கள் அதையே நடைமுறையும் படுத்திவிட்டார்கள். உதாரணமாக திருக்குறள் எடுத்துகொள்ளுங்கள் எத்தனை பேருக்கு அதன் விளக்க உரை தெரியும். தெரியவில்லை என்றால் விளக்க உரை எழுதியத்தை படித்து தெரிந்துகொள்கிறார்கள் அப்படி தெரிந்துகொள்ளவதில் பகுத்தறிவு இருக்கிறது ஆனால் அப்போது வாழ்ந்த கூட்டம் செவி வழி செய்தியே உண்மை என்று நம்பியது அதீத நம்பிக்கை முட நம்பிக்கையாய் மாறியது என்னை கேட்டால் நான் சொல்வேன் மதங்கள் தான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது. மதங்கள் இல்லாத மனிதன் சுதந்திரமானவன் ஆனால் மக்கள் சுதந்திரமாக இருக்க மதத்தலைவர்களும், அரசியல்வாதியும் என்றும் விடமாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயம்.

மதம் எனபது மக்களை நல்வழிபடுத்துகிறது என்று சொல்லி கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒரு வியாபார தந்திரம் அது மத பிரசங்கம் செய்வோராலும், அந்நிய படையெடுப்பாலும், தன் சுய பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்பாலும் பரப்பபட்டதே. இந்நாட்டில் உள்ள மதங்கள் இந்துமதம் உட்பட.."மதத்தின் அடிப்படையில் கைவைக்க கூடாது" என்றுதான் எல்லா மதங்களும் மறைமுகமாக சொல்கிறது. இதில்அடிப்படையில் கைவைத்தால் மதங்களே ஆட்டம் கண்டுவிடும். உதாரணமாக இந்துமத கடவுள்கள் எப்படி எப்படி தோன்றின என்று நீங்கள் கேட்கும்போதும், கிறிஸ்த்து எப்படி பிறந்தார் என்று கேட்கும்போதும், நபிகளுக்கு குரான் ஓதப்பட்ட போது யார் அவருடன் இருந்தார்கள் என்று கேட்கும்போதும் அதன் அடிப்படையே கொஞ்சம் அசைந்தாடத்தான் ஆரம்பிக்கும். ஜாதிகளுக்கு அடிப்படையே மதங்கள்தான். மதங்கள் ஒழிந்தால் ஜாதிகள் தானே ஒழியும்.இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லிகொள்கிறோம் ஆனால் அடிப்படை இந்திய சட்டத்தில் மதம், மாற்றம் அடையாமல்தான் இருக்கிறது.அச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும் ஆனால் மதத்தில் உள்ள தீண்டாமை அப்படியே அனுசரிக்கப்படும் என்று சொல்கிறது. இதுதான் மதசார்பற்ற நாடா..? ஜனநாயகம் எனபது ஜாதி மதம் இல்லாமல் சதர்மம் சமநிலை கொண்டது. ஒருவரின் விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டதல்ல...ஜாதி மதங்கள் உட்பட்டு வாரி வழுங்குபவன் எல்லாம் தலைவன் ஆகமுடியாது அவனே மக்களின் துன்பத்தை நீக்கும் இரச்சகராக இருக்க முடியாது. இருப்பதை பகிரிந்து கொடுப்பதுதான் உண்மை ஜனநாயகம் ஆனால் இதை ஜனநாயகத்தில் இருந்து காண்பதுதான் அதிசயமாக இருக்கிறது. சாதி மதம் பார்கிறவன்தான் சமதர்மம் பேசுகிறான்.

ஒருவருக்கு பகுத்தறிவு வளர்ந்தால் மனித நேயம் தானாய் வரும். உண்மையில் உண்மையோடு நடபவனுக்கு ஒழுக்கத்தை போதிக்கவேண்டிய அவசியமில்லை...அவன் ஒழுக்கம் மனித நேயத்துடனே செல்லும். உண்மை என்பதே பகுத்தறிவு. அது குருட்டு நம்பிக்கை அல்ல...!

குழந்தைக்கு புலப்படும் தவறேனும் உண்மை நமக்கு பொய்யாக தெரிவதேன். ஏனென்றால் அது பகுத்தறியும் பருவத்தில் இருக்கிறதால். நீங்கள் இல்லாத கடவுளை வணங்குகிரிங்க ஆனால் குழந்தையும் வணங்க கட்டாயபடுத்துரிங்க அது கேட்குது "எங்கே கடவுள்" என்று நீங்கள் கல்லை காட்டுகிரிங்க அக்குழந்தை அதை கல் என்கிறது நீங்கள் குழந்தை தலைலையே ஒரு குட்டு வைத்து "சாமியே அப்படி எல்லாம் சொல்ல கூடாது" என்று சொல்றிங்க...உண்மையில் குழந்தை கேட்டது உண்மைதான் என்ற உண்மை உங்களுக்கும் தெரியும் ஆனால் அதை தவறென சொல்றிங்க குழந்தைக்கு இருக்கும் பகுத்தறிவு கூட அப்பொழுது உங்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது

இன்றைய வளர்ந்த மீசை வைத்த குழந்தைகளுக்கு பிரார்த்தனை எனபது அவர்களை் அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு தேவையாகத்தான் இருக்கிறது. விவேகனந்தர் "சொல்கிறார் பசியோடு வருவோனிடன் வேதாந்தம் பேசாதே முதலில் அவனுக்கு சோறுபோடு பின்பு சவுகாசமாக வேதாந்தம் உபசரிக்கலாம்" அவர் சொல்வது உண்மைதான் எது தேவையோ அதைதான் முதலில் செய்தாகவேண்டும். பிரார்த்தனை எனபது உண்மையை அறியா பாடம் உண்மை அறிந்தால் பிரார்த்தனைக்கு வேலையே இல்லை நாம் எதற்காக அழுது ஆர்பாட்டம் செய்தோம்" என்ற நினைப்புத்தான் வரும். ஒவ்வொருத்ததுக்கு ஒவ்வொருவிதமான கருத்து இதில் ஆன்மிக பேசுவோருக்கு வாழ்வின் நம்பிக்கை சார்ந்த கருத்தாய் இருக்கிறது. மாடர்ன் சாமியார்களின் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. தேவைக்காக தேங்காய் உடைக்கிறது காரியம் ஆகுவதற்காக கற்பூரம் ஏற்றுவது இதெல்லாம் ஆன்மிக பேசுவோரிடம்தான் மலிந்து கிடக்கிறது. உண்மை ஆன்மிகம் பேசுவோர்ருக்கு தேவைகள் எதுவும் இருக்காது. பல புண்ணிய ஆத்மாக்கள் நம்மிடம் இருந்து நம்மை காக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்காது. இல்லாத ஒன்றை தேடி ஓடுவதை விட இருப்பதை பார்த்து மகிழ்வது நன்று...உயிரனங்களில் மனிதனின் மனம், அறிவு இயற்க்கை பரிமாணத்தில் படி படியாக எழுர்ச்சி பெற்றவை பெற்றுகொண்டிருப்பவை...இதில் கடவுள் என்ற இல்லாத ஒன்றை முன்னிளைபடுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆசைகொண்ட மக்களின் பயம்தான் கடவுளின் பொழப்பாக இருக்கிறது. கடவுள் மனிதன் தேவைக்கு உண்டாக்கப்பட்ட ஒரு வேடிக்கையான விளையாட்டு பொருள்...நாம் உண்டாக்கிய பொருளுடனே நாம் பிரார்த்தனை என்ற பெயரில் அதனிடம் கெஞ்சிகிறோம். இதுதான் மக்களின் இன்றைய ஆன்மிக பிரார்த்தனையாக இருக்கிறது.

மறுபடியும் நினைவுபடுத்துகிறேன் உண்மை ஆன்மிகம் தனக்குள்ளே தன்னை தேடிபெருவதில்தான் இருக்கிறது. இதைதான் புத்தரும் கடைசியாக சொன்னார். "அபோ திபோ பவ" -உனக்கு நியே ஒளியாக இரு என்று. இதற்காக தங்களை மகரிஷி என்று சொல்லிகொள்பவர்கள் தேவை இல்லை. உண்மை சொன்ன ஒரு புத்தரே போதும்.என்றும் நட்புடன்: