Pages

Tuesday, November 30, 2010

இன்னல்படும் காஷ்மீர்...


நம்ம வீட்டு எதிர் வீட்டுக்காரன் ரொம்ப பிரச்சனை பண்றான். அவனுடன் மோத நாம் தயாரில்லை ஆனா நம்ம பக்கத்து வீட்டுகாரன் ரொம்ப பவ்வியமான ஆளு என்று நினைத்து அவனிடம் பாதுகாப்பு கேட்டு உதவிக்கு போறோம். பக்கத்து வீட்டுக்காரன், "நான் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் பயபடாதிங்க" என்று ஆறுதல் சொல்லி பாதுகாப்புக்கு அவன் வீட்டில் உள்ள நண்டு, சிண்டுகளை நம் வீட்டின் முன் நிறுத்துகிறது. இதை எதிர்வீட்டுக்காரன் பார்த்து பயந்து தற்காலிகமாக ஒதுங்கிட்றான் ஆனா அப்போ அப்போ ஒளிந்து ஒளிந்து நம் வீட்டுமேல கல் எரியுறான். இப்ப நம்ம பக்கத்து வீட்டுக்காரன் செத்து போய்ட்டான் அவனுங்க புள்ளைங்க நம் பாதுகாப்புக்கு பொருப்பெடுத்துகுதுங்க பாதுகாப்புக்கு இருந்த நண்டு, சிண்டுங்க எங்க வீட்டு பொம்பள பிள்ளைகளை கைய பிடிச்சி இழுக்குதுங்க பலாத்தாரம் செய்யுதுங்க இதை தட்டி கேட்டா எங்கலையே அடிக்குதுங்க...ஏன் இப்படி பண்றிங்க என்று கேட்டா, அதுங்க சொல்லுதுங்க "இத்தன வருடம் பாதுகாப்புக்கு  இருந்ததால உங்க வீடு எங்களுக்குத்தான் சொந்தம் எங்கள கேட்காம நீங்க எங்கையும் போக கூடாது" என்று. சொல்றானுங்க..இந்த சங்கதியெல்லாம் தெரிஞ்சும் எதிர்வீட்டுக்காரன் அப்போ அப்போ கல்லு விட்டுக்கொண்டுதான் இருக்கான். அண்ணன் எப்போ காலியாவான் தின்ன எப்போ காலியாகும் என்று கடுப்புல எதிர் வீட்டுக்காரனுக்கு இருக்கான்.

எதிர்வீட்டுகாரனுக்கு என்ன வெறுப்புன்னா.. இவ்வளவு நாள் நாம எடுத்துக்கலாம் என்று பகல் கனவு போட்டுகிட்டே இருக்கோம்...ஆனா பக்கத்து வீட்டுக்காரன் அந்த வீட்ட எடுத்துட்டு போயிட்டானே அந்த வீடு எப்போ நம்ம கைக்கு வரும் என்று எதிர்பர்த்துகொண்டிருக்கிறான். இந்த மேட்டர் எல்லாம் நம்ம பக்கத்து விட்டுகாரனுக்கு நல்லா தெரியும். "எதிர் வீட்டுக்காரன் எடுத்துகொண்டு போரதுக்கா  நாங்க இவ்வளவு நாள் காவல் இருக்கோம் அதெல்லாம் முடியாது நாங்கதான்  இந்த வீட்டுக்கு வாரிசு" என்று பஞ்சாயத்துக்கு வரவங்க கிட்டயெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கான். ஆனா நாங்க மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம நம்ம பேடிதாத்தா  கோழைத்தனத்த, விவேக,வீரமில்லாததனத்தை  நினச்சி நினச்சி ரொம்ப வருத்ததுல இருக்கோம்...இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன்னே  எங்க வீட்டு சின்ன பையன் பேரிக்கா வாங்க கடைக்கு போனான் அவன் கைல பேரிக்கா  இல்ல வெடிகுண்டு இருந்தது  என்று சொல்லி  எங்க பையன சாக அடிச்சுட்டானுங்க.. எங்க குலமே கொஞ்ச கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கு....இப்படி அநியாயம் ஏன் பண்றிங்க என எங்களுக்கு ஆதரவா தட்டி கேட்ட சமுக போராளி அருந்ததிராய் மேல சமகடுப்புல இருக்கானுங்க அவங்க என்ன அப்படி இல்லாதத கேட்டுடாங்க "அவங்க வீடு அவங்களுக்குத்தானே சொந்தம்.  நீங்க சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கு" என்று கேட்டதுக்கு அவங்கள கைது பண்ண போறங்களாம்....

எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்..எங்கள் வீடு வேண்டும்.....!

("எங்கள் நாட்ட எங்களுக்கு கொடுங்க" என்று அடிபட்டு உதைபட்டுதானே வெள்ளக்காரன்கிட்ட நாமும் சுதந்திரம் பெற்றோம். அந்த உரிமை நமக்கு இருந்தது ஏனென்றால் அது நம் பூமியாக இருந்தது அதுபோலத்தானே காஷ்மீர்...ஆனா நாம் ஏன்  காஷ்மீர் மக்களின் நியமான சுதந்திரத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

இதில் நான்  காஷ்மீர் மக்களின் உணர்வில் கலந்தவன்....)


என் எண்ணத்தை புரிந்துகொண்டு நீங்களும் குரல் கொடுக்க  வாருங்கள்...நன்றி என்றும் நட்புடன்:    (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, November 27, 2010

ஆங்கில மொழி மவுசு இன்னும் இருக்கா...


ஆங்கில மொழியை ஒரு மாயையாக ஆக்கிவிட்டான் நம்மை ஆட்சிசெயதவன், அதற்கு இன்னும் துணைபுரிந்துகொண்டிருப்பவர்கள்  நம்  ஆட்சியாளர்களும் ஆனால் இன்னும் அந்த ஆங்கில மாயையில் மயங்கித்தான் கிடக்கிறோம் இது வெட்கப்படவேண்டியவை வெள்ளக்காரன் ஆட்சி செய்த காலனி ஆதிகத்தில் உள்ள நாடுகளிலெல்லாம் அவன் மொழி அவன் மதத்துடன் சேர்ந்தே அப்போது  பரப்பப்பட்டது. அவர்கள் ஆட்சி செய்த நாட்டின் மொழியுடன் தேவையான வார்த்தைகளையும் இணைத்து கலப்பின மொழியாகத்தான் ஆங்கில மொழி இன்றுவரை  செயல்பட்டுகொண்டிருக்கிறது. அது ஒரு உலக வர்த்தக மொழியாகவும் இருக்கிறது. இதை இந்த கண்ணோட்டத்தில் மட்டுமே நாம் பார்க்கவேண்டும். மத்தபடி நம் அன்பின் உணர்வுகளை வெளிபடுத்த அதால் முடியாது அதற்கு  நம் தாய் மொழிதான் சிறந்தது. லண்டன்ல கழிப்பிடம் (கக்குஸ்) கழுவுறவன் அட்டகாசமா ஆங்கிலம் பேசுவான்...அது அவன் தாய் மொழி அவன் அப்படி பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஆனால் இங்கு உள்ளவர்கள் தட்டு தடுமாறி பேசினால் ஒரே சிரிப்புதான் அதில் ஒரு நக்கல் பார்வைவேற பார்பாங்க...

நம்ம மாநிலத்தில் உள்ள சுற்றுலாதளமான  மாமல்லபுரம் போனா அங்க இருக்கிற வழிகாட்டி (Guide) அட்டகாசமா ஆங்கிலம் பேசுவான் அதுமட்டும் இல்லாமல் பிரஞ்ச், தெலுகு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒரு ஐந்தாறு மொழி அவர்களுக்கு  தெரியும்...அதுவும் அவர்களின் பள்ளிபடிப்பு 5 வது 8 வது என்ற அளவில்தான்  இருக்கும். இது எப்படி சாத்தியம்  என்றால் அவர்கள் தினமும் பேசி பேசி பழக்கம்...அதுபோலதான் மொழி தெரியாத ஊரில் ஒரு ஆறு மாதம் இருந்தாலே போதும் தானாகவே வந்துவிட போகிறது...வந்துதான் ஆகணும் ஏனென்றால் அது கட்டாயத்தால் நாமாகவே பேச ஆரம்பித்துவிடுவோம். அதனால பிற இடத்தில் தங்கிதான் பிற மொழிகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருந்தால் எங்கிருந்தும் எம்மொழியையும்  கற்றறியலாம் அதனால் இந்த மொழிதான் சிறந்தது அந்த மொழிதான் சிறந்தது என்று சொல்வதை விட எது தேவையோ அது தெரிந்துகொள்வது நல்லது. அது நம் தாய் மொழியையும் பாதிக்காமல் இருக்கும். அதனால் மொழிக்கும், சிந்திக்கும் அறிவுக்கும் சம்பந்தம்மில்லை அது சிந்தனைக்கு ஒரு எழுதுகோல் (Pen) போலதான். இதில் எழுதுகோலே முழு அறிவாகாது... ஒரு மொழி எனபது மக்களின் அன்பின் மற்றும் சிந்தனை உணர்வுகளை தாங்கி வரவேண்டும். அம்மொழிகளை  நான் மதிக்கிறேன்...


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...என்றும் நட்புடன்:    (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, November 23, 2010

ஓஷோ சொன்ன நகைச்சுவை புராண கதை....


ஒருமுறை ஓஷோவின் இளமை காலவாழ்வில் அவர் வாழ்ந்த பகுதியில் புராண நாடகங்கள் நடக்கும். இவர் நாடக நடிகர்களுடன் நல்ல நட்புடன் பழகிவந்தார். அவர்களின் நடிப்பில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி மக்களை சிரிக்க வைத்து கண்டு ரசிப்பார். இது நாடகம் நடத்துபவர்களுக்கு பெரும் இன்னலாக இருக்கும். அவர் தந்தையிடம் ஓஷோவை பற்றி சொல்வார்கள். அதனால் நாடக நடிகர்கள் இவருடன் பழகுவதை நாடகம் நடத்துபவர்கள் விரும்பவில்லை. அதனால் இவர் நாடக நடிகர்களின்  தொடர்பு இல்லாமல் இருந்தார். ஓஷோவின் வீட்டிற்கு தட்சர் ஒருவர் வருவார். ஓஷோவின் வீட்டில் உள்ள மரவேலைகளை எல்லாம் அத்தட்சர்தான் செய்வார் அவர் ஒரு நாட நடிகரும் கூட இதை ஓஷோ தெரிந்து அவரிடம் "நான் சொல்வதை நீங்க கேட்பிங்கள" என்று கேட்க அதற்கு "அவர் தாரளமாக கேட்கலாம்" என்ன விவரம் என்று கேட்டதற்கு... நீங்க இன்று நடக்கும் நாடகத்திற்கு போகும்போது நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்றார். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

அன்று அவ்வூரில் நாடகம் நடக்கிறது. என்ன நாடகம் என்றால் இராமாயணயத்தில் வரும் கதையில் லட்சுமணன் எதிரின் விஷஅம்பு பட்டு மயக்கத்தில் சாகும் நிலையில் இருக்கிறார். இதை பார்த்த ராமனுக்கு பெரும் கவலை மருத்துவர் சஞ்சீவி மூலிகை இருந்தால் இவரை காப்பாற்றிவிடலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட அனுமன் அதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறார். அதற்கு மருத்துவர் அது அருணாசல பர்வதமலையில் இருக்கிறது அது இருளில் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும் அதுதான் அந்த மூலிகை அதை பறித்துக்கொண்டு வா என சொல்கிறார். அதை கேட்டு அனுமன் பறந்து சென்று  மூலிகை எதுவென்று தெரியாமல் மொத்த மலையே பெயர்த்துகொண்டு வருவார். அதுதான் அப்போது நடக்கும் கதை.  அட்டையில் செய்யப்பட்ட மலைபோன்றதில் மெழுவர்த்தி கொளுத்தபட்டு அதை அனுமன் தூக்கி கொண்டு வரும் போது அந்த தச்சர் அனுமனை கயிரு முலம் இழுக்கவேண்டும். ஆனால் தச்சரிடம் ஓஷோ சொல்கிறார் "நீங்க பாதி இழுத்து அப்படியே இருந்திடுங்க அதுக்கு மேல இழுக்காதிங்க" என்று அவரும் அதையே செய்கிறார்.

இச்சம்பவத்தை ஓஷோ சொல்கிறார்:

இப்போது லட்சுவணன் அடிபட்டு சாக இருக்கிறான். இராமன் சோகமாக பக்கத்தில் நிற்கிறான். ஆனால் வர வேண்டிய அனுமன் பாதிலே தொங்கிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த மக்களுக்கு ஒரே சிரிப்பு இதை அறிந்த நாடக மேனஜர் ஓடிவந்து கயிறை வெட்டி விடுகிறார். அனுமன் தொப்பென்று கிழே விழுந்து கோவம் அடைகிறார்.  ஆனால் இராமன் தான் பேசவேண்டிய வசனத்தை திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறான்.

அனுமனே, என் பக்தி நிறைந்தவனே நண்பனே" என்று..

அனுமனோ, "உன் நண்பர்கள் நாசமாய் போக! எனக்கு எலும்பு முறிந்துவிட்டது" என்றான். ஆனால்  இராமன் அதே வசனத்தை சொல்லிகொண்டே இருந்தான்.  "என் தம்பி செத்துகொண்டிருக்கிறான்" என்று...

அதற்கு அனுமன், அவன் சாகட்டும் எனக்கு ஒன்று தெரியவேண்டும் யார் கயிறை அறுத்தது என்று அவன நான் கொல்லாமவிடமாட்டேன்! என்று கத்தினான். இதை பார்த்த மக்கள் வயிறு குலங்க சிரித்தார்கள். அவர்கள் சிரித்த சிரிப்பை கண்டு நான் மகிழ்ந்தேன். பின் என் தந்தையிடம் சென்று என்னை பற்றி பெரிய நாடகமே நடந்தது...

"பழைய பாரம்பரிய மதவாதிகளுக்கு சிரிப்பை ஏற்றுகொள்வது சிரமம்தான் மாதா கோயிலில் நீங்கள் சிரிக்கவே முடியாது. மதங்களுக்கு மதபண்பு வேண்டும். சில பண்புகள் காணப்படவே இல்லை அவற்றில் மிக மிக முக்கியமானவை நகைச்சுவை உணர்வு...ஓஷோவின் வாழ்வின் நகைச்சுவை கதையும், கருத்தையும் படித்த அனைவருக்கும் நன்றி....
என்றும் நட்புடன்:

Sunday, November 21, 2010

வாள் முனையில் பரப்பட்ட மதம்...


"அல்லாவுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் யுத்தம் செய்யுங்கள் (8-49) " - என்று குரானே சொல்கிறது அப்புறம் எப்படி யுத்தமும் வன்முறையும் அதுனுடன் சேர்ந்த மிரட்டலும் இல்லாமல் இருக்கும்.

நபியின் தம்பி அலி இவர் நபியின் பெரிய தந்தையின்  கடைசி மகன்...இஸ்லாம் மார்கத்தை பின்பற்றியவர்களில் இண்டாவது நபராக  இருப்பவர். முதல் நபர் நபியின் மனைவி...இந்த அலி முலம்தான் பல யுத்தங்கள் செய்து இஸ்லாம் மார்க்கம் பரப்பப்பட்டது...மற்றபடி ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்று சீனே இல்லை மார்கத்திற்கு மசியலன வெட்டு, துண்டுபோடு அடையலாம் தெரியாமல் ஆக்கு...இதுதான் அவர்களின் மதபரப்பு கொள்கையாக இருந்திருக்கிறது. அதற்கு சாட்சி குரான் வாக்கியங்கள்:

யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது(2-216)

யுத்தம் செய்ய மறுப்போரை நீங்கள் சந்திப்பீர்களானால் அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)

அவர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை கணுக் கணுவாக துண்டித்து விடுங்கள் (8-12)

சிறை பிடியுங்கள் முற்றுகையிடுங்கள் பதுங்கி இருந்து பாயுங்கள் (9-5)

வாள் முனையில்தான் அம்மதம் பரப்பட்டது எனபது முகமது நபியின் தம்பி அலியே ஒரு சாட்சி....

மூஸாவுக்கு ஹாருன் எப்படியோ அதுபோல் எனக்கு(ஸல்), அலி(ரபி) முக்கியமானவன். நான் ஒரு மார்கத்தை துவக்க போகிறேன் என்னுடன் இருப்பவர்கள் எல்லாம் வரலாம் என்று....தன் உறவினர்களுக்கு  விருந்துவைத்து இஸ்லாம் மதத்தை தழுவுங்கள் என்று நபிகள் சொன்னபோது. அதை யாரும் சட்டை பண்ணவில்லை ஆனால் அதில் அலி மட்டுமே நபியின்  வாதத்தை ஏற்றார். மறுபடியும் சொல்கிறேன் வாள் முனையில்தான் அம்மதம் பரப்பட்டது. அன்பினால் அல்ல...அதற்கு சாட்சி அலிதான்.


என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Friday, November 19, 2010

காமம் அசிங்கமா....?


உலகில் போராட்டம், புரட்சி எனபது ஆண்களை மையபடுத்தியே வருகிறது அதன் வரலாறும் ஆண்களின் துடுப்பாக இருக்கிறது.அவனுக்கு தேவையானததை அவன் பெற்றுகொள்கிறான் ஆனால்  பெண்கள் உரிமையை பெறுவதில் விரல் விட்டு எண்ணகுடிய நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் உரிமை பெறுவதில் சிலது வேடிக்கையும் இருக்கிறது. கொடுமை என்னவென்றால் ஆணுக்கு நிகராக பெண்களும்  ஆண்களை  கற்பழித்தார்கள் என்று கேள்விப்படும்போது சிரிப்புடன் சேர்ந்து எரிச்சல்தான் வருகிறது. அதெப்படி பெண் ஆணை கற்பழிக்கமுடியும். ஒரு பெண் சம்மதம் இல்லாமல் ஆண் கற்பழிக்கலாம் ஆனால் ஒரு ஆண் ஈடுபடாமல் பெண்கள் கற்பழித்தார்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இருப்பதில்லை. எனென்றால் ஆணின் உறுப்பு வெளிப்புறத்தே இருக்கிறது. பெண்ணின் உறுப்பு உடலுடன் இணைந்தே இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஆண்களுக்கு விறைப்பு ஏற்படாத நிலையில் பெண்கள் கற்பழிக்க முடியாது. ஆணின் விறைப்பு மனத்தால் மூளையில் உண்டாகும் கட்டளையால் உண்டாவது. அதில்லாமல் பெண்கள் கற்பழித்தார்கள் என்று சொல்வது பொய்தான் கற்பழித்தார்கள் என்று இருந்தால் அது கற்பழிப்பு நிலையில் இருந்திருக்காது பெண்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஆணை பலவந்தபடுத்திருக்கவேண்டும் அவன் இணைய மறுத்ததால் கொலை செய்திருக்கலாம். இந்த ஆராய்ச்சி தேவையா என்று நீங்கள் கேட்கலாம்.? செய்தி தெரிந்ததால் உங்களுடன் சொல்கிறேன்.

நித்தமும் எல்லார் மனதிலும் வக்கிரங்கள் நிறைந்திருக்கிறது. அதில் சிலது அறிவை மிஞ்சி செயல் வடிவம் பெறும்போதுதான் சீரழிவு ஏற்படுகிறது பலது சட்டம் என்ற பயத்தால் தடுக்கபடுகிறது. சிலது அறிவால் தடுக்கபடுகிறது. ஆனால் சட்டத்தின் பயம் ஆசைக்கு முன் ஒதுங்கிவிடுகிறது. அறிவும் வேலை செய்வதில்லை. இதில் சாவதற்க்கும் துணிந்து தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அதன் விளைவு அவர்களை மட்டும் பாதிப்பதில்லை அவர்களை சார்ந்திருந்த குடும்ப நபர்களையும் பாதிக்கிறது. தனி நபர் குற்றம் தனி நபருடன் போவதில்லை அது சமுக சூழலுடன் சேர்ந்தே வருகிறது.

இந்த குற்றபிரச்சனையில் உண்டாகும் காமத்தை கவனித்தோம் என்றால் அவை உடல்சார்ந்த கூறுதான் அதை ஒதுக்கிவைத்து வாழ்வை அணுக முடியாது.  வயிற்றுக்கு பசி எடுத்தால் சாப்பிடுகிறோம், தாகம் எடுத்தால் நீர் அருந்துகிறோம் ஆனால் உடலில் ஹார்மோன் முலம் உண்டாகும் காமம் மட்டும் ஏன் வேறுவிதமாக பார்க்கபடுகிறது. அடக்கபடுகிறது. அடக்காமல் பாதுகாப்பான, பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான். இது இல்லாமல்  தவம் செய்யலாம், காமத்தை கட்டுபடுத்தலாம் என்று நாம் நினைத்தால் மேலே சொன்னதுபோலத்தான் நடக்கும் ஆண், பெண்ணை கற்பழிப்பான். பெண் ஆணை கற்பழித்தேன் என்று பொய்யும் சொல்லுவாள். காமத்தை கட்டுபடுத்தும் சமுகம்தான் நோய்வாய்பட்ட சமுகம் அங்கே குற்றங்கள் குறைவில்லாமல் நடக்கும். காமத்தை கட்டுபடுத்துதல் நடந்தால்  இயற்கையின் படைக்கப்பட்டதிற்கான பொருள் விளங்காமலே போய்விடும்.

நம் தாய், தந்தை காமத்தை அசிங்கம் என்று நினைத்தால் நாம் இப்போது காமத்திற்கு விளக்கம் கொடுத்திருக்க முடியாது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. மலம் வயிற்றில் உள்ளவரை அது அசிங்கமாக இல்லை அதுவே  உடலை விட்டு வெளியேறிய பின்தான் மனது அதை அசிங்கமாக நினைக்கிறது. புரிதல் இருந்தால் மனது எதையும் ஏற்புடையதாகத்தான் மாற்றும் காமம் உட்பட....! மறுபடியும் சொல்கிறேன். பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான்.

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:    (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Wednesday, November 17, 2010

எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள்

 ஒரு பிரச்சினை நம்மிடம்  'பலன் தராது' என்றால் கடைசிவரை பகையும் தீராது. ஒரு செயலின் தொடக்கம் எதுபோல தொடங்குகிறாதோ அதுபோல் முடிவும் அமைகிறது. இதில் நாம் பிரச்சனை  தொடங்குவதற்கான நிலையைதான் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் நல்ல செயல், தீயசெயல் எல்லாம் நம் எண்ணங்களை தாங்கி இருக்கும் மனம் சார்ந்த உளவியல் காரணங்கள்தான் அதை ஏன் நாம் அதே உளவியல் பூர்வமாக ஆராய்ந்து தீர்வுகாண முற்படகூடாது. ஏனென்றால் நம் செயலின்  எல்லாவற்றிலும் தொடக்கம் இருந்தால் முடிவும் இருக்கும் அது அழிவானதாக இருந்தாலும், வளர்சியானதாக இருந்தாலும் தொடக்கமும், முடிவும் இருக்கும்.  இதில் நாம் வளர்ச்சியாவதைதான்  கவனத்தில் கொள்ளவேண்டும். அதன் அடிபடையில் பார்த்தோமானால் வளர்சிக்கான எந்த செயலை செய்வோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். இதில் "விழிப்புணர்வு" எனபது மிக முக்கிய சொல்...

போராட்டம், புரட்சி இதன் மூலமே தீர்வு ஏற்படும் என என்னும் நாத்திகம் சார்த்த கருத்துடையோர் ஏன் தியானம் மூலம் ஏற்படும் விழிப்புணர்வை ஏற்க மறுக்கிறது. புத்தரை மேற்கோள்காட்டி பேசும் நாத்திகம் தியானத்தையும் அதன் மூலம் ஏற்படும் விழிப்புணர்வையும் முன்மொழியலாமே விழிப்புணர்வு  ஏற்படுத்தினால் அவை உண்டானால்  மக்களிடம் சண்டையும் தேவை இல்லை, சமாதானமும் தேவையில்லை..அது அது அதன் வழியே தொந்தரவு இல்லாமல் போகும்..ஒரு உதாரணத்திற்கு நான் உங்களை கோவமாக திட்டும்போது நீங்க கோவப்பட்டு என்னை அடிகிரீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள். இப்போது திட்டிய வார்த்தையை விட அடித்ததே வன்முறையாக போய்விடுகிறது. நான் திட்டியது உங்க மனதில் வலியை உண்டாககியிருக்கலாம் ஆனால் நீங்கள் அடித்தது என் உடலில் வலியை உண்டாக்கியது. இதில் வன்முறைக்கு வார்த்தையை விட உடம்பே பிரதானமாகிறது. இது ஒரு இனம், மதம் சார்ந்த அடிபடையில் நிகழும்போது இதன் வெடிப்பு படுபயங்கரமாக இருக்கும். இதன் தீர்வின் உள்ளாழத்தை எப்படி அறிவது.. கசப்பான சூழ்நிலையால் கோவமான எனக்கு உங்கள் மேல் உண்டான வார்த்தையா.? இல்லை நீங்கள் அதை சகிக்காமல் அடித்ததா.? சமாதானம் பேசும் இடத்தில் சமாதானம்தான் பேசியாகணும்..அடிக்கிற இடத்தில் அடித்துதான் ஆகணும் என்ற நிலை இருக்கும் போது இதில் தேவைகளை தேவையான நேரத்தில் தேடியும்,அடித்தும்தான் பெறவேண்டி  இருக்கிறது விழிப்புணர்வு அற்று இருந்தாலும்  அதைதான் செய்தாகவேண்டும் இருக்கிறது வாழ்வுக்காக...

எப்போதும் ஒரு நிலைத்தான் சிறந்தது என்று நினைத்து அதையே செயல்படுத்திக்கொண்டு மற்றவர்களையும் செயல்படவைத்தால் அது கால சுழற்சியில் மக்கிதான் போகும்..அதுபோல்தான் இந்த அகிம்சை தற்போது இம்சையாக இருக்கிறது. இது தற்போது நடைமுறை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது.  இந்த அஹிம்சை ஓட்டு பொறுக்கி அரசியல்'வியாதி'காரணங்களுக்கு வேண்டும்யேன்றால் ஏற்றதாக இருக்கலாம். காந்திய தேசம், அஹிம்சை தேசம் என்று உலக நாட்டையே  பொய் உரையாய் உரைக்கும் இந்நாடுதான் பொய்யாக மாவோஸ்ட் வேட்டையாடுதல் என்ற பெயரில் உள்ளூர் பழங்குடி மக்களை சுற்றி வளைத்து தாக்குகிறது. அஹிம்சை தேசம் என்ற சொல்ற நாடு ஏன்.? வன்முறை, மனித உரிமை மீறலை கட்டுகடங்காமல் நடத்திகொண்டிருக்கிறது. இதில் எல்லாமே வேஷம் போட்டுதான் நடக்கிறது.

எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள். ஒருவருடைய விருப்பு, வெறுப்பு மாறும்போதுதான் தாக்குதல் ஆரம்பமாகிறது. புலி குட்டி, நாயிடம் பால் குடிக்கலாம். அது புலியாகும்வரை...! உண்மை குணம் வெளிபடும்வரைதான் மனிதன் என்று நாம் நம்புவது. வெளிபட்டால் அது மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.. இதை நாம் எப்படி அறிந்தோம் பகுத்துதானே பகுத்தறிவது என்றால் பகுத்து அறிவதுதான் அது கல்லானாலும் சரி, கடவுளானாலும் சரி. கடவுள் கருத்துக்காக பிறர் மனம் புண்படும் என்று சமரசம் செய்யும் போது அச்சமரசம் மனம் சம்பந்தப்பட்டதாகிறது. கொள்கையை அடமானம் வைக்கும் ஒருவரை அதிகமாக பாராட்டுவதும் சமரசத்தீர்க்கு ஈடுதான் பாராட்டி பேசினால் அவர்கள் மனம்  குளிரும் பின் சமரச திட்டம் தயாராகும் அப்புறம் எல்லாம் கலைந்துவிடும் மறுபடியும் தொடக்கத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அது உப்பு சப்பில்லாமல் தொடங்கிவிடும். பின் எடுபடாமல் போய்விடும்           

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:     


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Wednesday, November 3, 2010

'தொல்'லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:


 நீங்கள் இந்த 'தொல்'லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:

நான் என்ன நினைக்கிறேன் என்றால் அது சிறுத்தை அல்ல...அது  பயந்து ஓடும் ஒரு பூனை... என்ன அதுக்கு பாராட்டு விழா என்று தெரியலா நான் இருக்கிற ஊரெல்லாம் ஒரே போஸ்டரா ஒட்டிருக்கு அப்போஸ்டரில் இருக்கும் வார்த்தைகளை பார்த்தால் அவருக்கு அதுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கு. அதில் வீரத்த தமிழனே, ஈழமக்களுக்கு குரல் கொடுத்தவனே(டம்மிய குரல் மட்டும்தான் கொடுத்தார் உயிரை கொடுக்கல) எங்கள் தளபதியே, நாளையே தமிழகத்தின் விடிவெள்ளியே, ராஜபக்ஷவை நேருக்கு நேர் நின்று எதிர் கேள்வி தொடுத்தவனே....இதில் எல்லாத்தையும் பார்த்து சகிச்சிகின்ன ஆனா கடசியா படிச்சத பார்த்துதான் ரொம்ப கடுப்பாகிடுச்சு...

அது என்ன சமட்சாரம் என்றால் "ஈழதமிழர்கள் இன்னும் உயிரோடு இருக்காங்களா எல்லோரும் காலியாயுட்டார்களா..." என்று பார்க்க ஒரு எம்பிக்கள் குழு டி.ஆர் பாலு தலைமையில் இலங்கைக்கு சென்றுச்சு அந்த குழுவில் 'தொல்ஸ்' விடாபிடியாக இணைந்து கொண்டு இலங்கைக்கு போனார். போனவர் சண்டாளன் ராஜாபக்ஷவையும் மீட் பண்ணார். அப்போது அந்த பன்னாட  ராஜாபக்க்ஷசே, இந்த வீராதி வீரனை பார்த்து சொல்லிச்சு..."நீங்கள் பிரபாகரன் நண்பர் தானே நீங்க பிரபாகரன்னுடன் இருந்திருந்தால் உங்களை கொண்டிருப்போம். தப்பிட்சிங்க..." என்று சொல்ல நம்ம வாய்சொல்லில் சூரர் சும்மா சூ... முடிக்கின்னு கொம்முன்னு இருந்து வந்துச்சு...அப்படி இவர் மானம் நாரிபோய் இருக்கும் போது இது ஜால்ட்ரங்க இங்கே இப்படி எல்லாம் டயலாக் விடுதுங்க....அந்த ஸ்பாட்ல நான் இருந்தென்ன நம்ம டைலாக்கே வேறமாதிரி இருந்திருக்கும். நான் சொல்லிருப்பேன்  "பிரபாகரன் என் நண்பர் என்று சொல்றத எனக்கு பெருமைதான் அது யாருக்கும் கிடைக்காத பெருமை...அப்போது நான் சாகும் நிலை வந்தால் குறைந்தது ஒரு பத்து பேரையாவது சாக அடிச்சுட்டுதான் சாவேன். அந்த பத்து பேரில் நீங்களும் ஒருத்தனா இருந்திருந்தா ரொம்ப சந்தோசமா செத்துருப்பேன்"  என்று என் பேச்சு இருந்திருக்கும்.

போரினால் பாதிக்கபட்ட முள்வேலிக்கு இடையில் தடுக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக  இந்தியா சார்பில் சென்ற ஒரு குழுவில் இடம் பெற்ற இவர், எதுக்கு அந்த பன்னாட அப்படி சொன்னதுக்கு இந்த வீராதி சோணகிரி அப்படி பயந்துச்சு என்று தெரியல...அப்படியே எதிர்த்து பேசிருந்தால் என்ன   பண்ணிருப்பான் அந்த நாதாரி...இப்படி அவமானப்பட்டு திரும்பிவந்த 'தொல்ஸ்' இங்கே சவுண்டு அதிகமாக விட்டுகிட்டு திரியுது...

வீராதி வீரனாம் சூராதி சூரனாம் இது இடதுபக்கம் சேகுவாரா படம் வலது பக்கத்துல பிரபாகரன் படம் நடுவுல இவர்  படம்... இதுகூட இருக்கிற அள்ள கைகிங்க இப்படி படம் போடுதுங்க....

வீரன்னா  எவன்தெரியுமா வீரன் நிர்கதியா ஆயுதங்கள் அற்ற நிலையிலும் எதிரிக்கு அடிபணியாமல் நெஞ்ச நிமிர்த்தி "உனக்கு தைரியம் இருந்தா என் நெஞ்சில சுடுடா" என்று நெஞ்ச நிமிர்த்தி காட்டி தில்லா நிற்பவன்தான்  மரணத்தை கண்டும் கலங்காத வீரன்....அவனே சேகுவாராவை போன்றவன். இதில்லாமல் இந்த 'தொல்ஸ்' மாதிரி ஆட்கள் பளுனில் உள்ள காத்த பிடிகிங்கி விட்டது போல காத்து ஏறும்போது நல்லா  ஏறும் ஆனா பிடிக்கிங்கவிட்டா புஸன்னு போய்டும்....

காற்றை பிடிங்கிவிட்ட பளுன்தான் இந்த தமிழர்களின் 'தொல்'லை திருமாவளவன்.  


 பதிவை பொறுமையாக படித்தற்கு  நன்றிகள்...!என்றும் நட்புடன்:     


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, November 2, 2010

'அருந்ததிராய்' நினைப்பது நடக்குமா...

 
இந்த மதச்சார்புடைய அரசியல்வாதிகளுக்கும், தேசியம் ஒருமைப்பாடு என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கும் காஷ்மீர் இந்தியாவுடன் ஒருகிணைந்த ஒரு மாநிலமாகத்தான் இருக்கவேண்டுமே தவிர அது இந்தியாவுடன் சுதந்திரம் பெற்று தனிநாடு என்ற அந்தஸ்தை பெற கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள், ஏனென்றால் காஷ்மீர் தனி நாடு அந்தஸ்து பெற்றுவிட்டால் இந்தியாவின் ஒற்றுமை கதை முடிஞ்சது ....இப்பவே அங்க ஒன்னு இங்க ஒன்னு என்று பத்திகின்னு எரியுது ..அப்புறம் ஒட்டுமொத்தமா எரிய ஆரம்பிக்கும்....

தமிழ்நாட்டில் பெரியார் எதிர்பார்த்த தனி தமிழ்நாடு கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும்.(அது ஒலிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமும்.) அப்புறம் பஞ்சாப் சர்தார்ஜிகள் சும்மா இருப்பார்களா...ஏற்கனவே நம் பிரிவினை குரல் கொடுக்கும் போதே அவர்களுக்கும் குரல் கொடுதவர்கலாட்சே...இதுதான் சான்ஸ் என்று பால்தாக்கரே, பூ... தாக்கரே என்ற இவர்கள் மாரத்தி மாரத்தியர்கலுக்கே என்று மாராத்தி நாடு வேண்டும் என்று சவுண்டு அதிகமாக விடுவானுங்க. அப்புறம் தெலுங்கான சந்திரசேகர்ராவ் தெலுங்கான மாநிலம் பிரிப்பது போய் தெலுங்கான நாடு எங்களுக்கு வேண்டும் என்று வழக்கம்போல் சாகாமல் உண்ணாவிரதம் இருப்பார்.

இங்கு நான் சொன்னதெல்லாம் நடக்கும்...(ஏன்னா நான் நாஸ்ட்றோம் மாதிரி இதுவெல்லாம் நடக்களன்னா உங்க பேர மாத்தி வச்சுக்குங்க) இந்தியாவின் தலையே காஷ்மீர்தான் அதை வெட்டி எடுத்துட்டா அப்புறம் இந்தியா முண்டம் ஆகிடும்....அப்புறம் முண்டம் இருந்து என்ன பிரோஜனம்....அதனால் தலை விழவேண்டும். ஒருநாள் விழும். நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்தியாவின் ஒற்றுமை ஒரு நூல் இழையில்தான் உள்ளது, அது எந்நேரமும் அறுந்து விழலாம்....அது காந்தியம் என்ற நூல் இழை அது தற்போது மக்கி போய் இருக்கிறது....அது அறுந்துவிழும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இந்த பிரிவினை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ரொம்ப சாதகமாக மாறிவிடும்....எனக்கே தெரிஞ்ச சங்கதி இந்தியாவின் உளவு அமைப்பு 'ரா'வுக்கு தெரியாதா...இதெல்லாம் கணக்கு போட்டுதான் காஷ்மீர் பிரிய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.அந்த உறுதியை அருந்ததிராய் கொஞ்சம் ஆட்டிவிடுருக்கார் அது இப்போதுதான் கொஞ்சம் ஆட ஆரம்பிச்சிருக்கு இன்னும் நல்லாவே ஆட ஆரம்பிக்கும்....


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்: (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)