Saturday, September 4, 2010
உங்களுக்கு ஏன் இந்த அழிவு சிந்தனை....
சில பேரிடம் இந்த உலகம் அழிபோகுதாமே என்றால் அது சீக்கிரம் அழியட்டும் ஒருத்தனும் இருக்க கூடாது என்று சொல்வாங்க...ஏன் இந்த கொலை வெறில இருக்காங்க என்று தெரியலா இதில் ஒரு காமெடி என்னவென்றால் அவங்க போல இருப்பவர்கள்தான் அமைதியை பற்றி பேசுவாங்க, போதனை செய்வாங்க..உள்ளுக்குள் வன்முறை, அழிவு சிந்தனை வெளியே அமைதியான தோற்றத்துடன்....
வளரும் குழந்தைகளுக்கு பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்து "உங்க அப்பாவா சுடுடா" என்று சொல்லும் அம்மாக்கள் அதிகம்...சுடுபடும் அப்பாவும் "ஏன் புள்ள என்னமா சுடுறான்" என்று மெச்சிபார். அதே புள்ள வளந்து நிஜ துப்பாக்கியில் பிறரை சுடும் போது "ஐயோ, ஏன் புள்ள இப்படி தீவரவாதியா ஆயட்டானே" என்று அழுது புலம்பல்...அவன் துப்பாக்கி எடுக்க யார் காரணம்...இதுபோல் வளரும் வன்முறை பல குடும்பங்களை தாங்கி நிற்கும் சமுதாயத்தில் அடிப்படை காரணமாய் மறைக்கபட்டிருக்கு. வன்முறை அழிவு சிந்தனை வளரும் பருவத்தில் இருந்தே வளர்க்கபடுகிறது
நாம் பார்க்கும் திரைப்படங்கள் கூட நாட்டில் வாழும் மக்கள் அமைதியாக வாழுகிறார்கள். என்று வருவதில்லை 2012 இல் உலகம் அழிந்துவிடும், சுனாமி வந்து எல்லாரும் போய்டுவோம், பெரிய விண்வெளிகல் பூமியில் வந்து விழும், வேற்று கிரக மனிதன் பூமியில் உள்ள மனிதர்களை அழித்துவிடுவான் என்ற கதையை தாங்கிய படங்கள்தான் வருகிறது. இவையெல்லாம் எதை அடையாலபடுத்துகிறது. "மனிதர்களான எங்களுக்கு என்றும் அமைதி வேண்டாம் அழிவுதான் வேண்டும்..அழிவு முடிந்த பின் அமைதி வேண்டும்..அதில் ஒரு ஆறுதல் வேண்டும்" என்றுதான் நினைகின்றார்கள். மனிதனால் மட்டும் அழிவு இல்லாமல் படைக்கப்பட்ட இயற்கையால் உலகத்திற்கு ஒட்டு மொத்த அழிவு என்றும் உண்டாகாது. அது உயிரினகள் வாழும் தடயத்தை விட்டு செல்லும்..ஆனால் அணுகுண்டுகள் தாங்கி நிற்கும் மனிதனால் அது முடியாது. இந்த பூமிக்கு ஒட்டுமொத்த அழிவு இவனாலே சாத்தியம்....
வெளியே அமைதியை பற்றி நினைக்கும் முன் உங்கள் உள்ளுக்குள் உணமையிலே அமைதியாக இருகிறீர்களா என்பதை பாருங்கள்....உள்ளொன்று வைத்து புறமொன்று பேசவேண்டுமே...!
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
5 comments:
நல்ல கருத்துள்ள பதிவுங்க
நான் உங்க பக்கம்தான்
அன்புள்ள குரு
இந்த உலகில் வாழும் ஒரு சாராருக்கு இந்த உலகம் நமக்கு எதுவும் அளிபதில்லை அல்லது நான் நினைத்தது போல் இது இல்லை , இந்த உலகம் என்னை ஏமாற்றிவிட்டது , கைவிட பட்டுவிட்டோம் என்ற எதிர்மறை உணர்ச்சி அவர்களை இப்படி பேச வைகிறது என்று எண்ணுகிறேன் , உலகத்தின் நியதியோடு நேசிபோடும் அதே சமயம் தவறுகளை கண்டிக்கும் தாயுள்ளமொடும் உலகத்தை இயற்கையை நாம் கண்டால் நமக்கும் அதுவே திரும்பும் , இதெல்லாம் மீறி அழிவுகால் வந்தால் வேறுவழி இல்லை அதையும் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் , நல்ல பதிவு
// இந்த பூமிக்கு ஒட்டுமொத்த அழிவு இவனாலே சாத்தியம்.... //
s its true . thanks for sharing. good post.
அருமை நண்பா உண்மையான கருத்துக்கள்.
வெளியே அமைதியை பற்றி நினைக்கும் முன் உங்கள் உள்ளுக்குள் உணமையிலே அமைதியாக இருகிறீர்களா என்பதை பாருங்கள்..
வாஸ்தவமான பேச்சு.
Post a Comment