Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Tuesday, May 23, 2023

பெண்ணியம் பேசும் பெண்களுக்கு...

ஒரு கல்யாணமான பெண்ணுக்கு கணவனின் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பதை கணவனின் ஆதரவு இல்லாமல் போகும்போதுதான் அவள் நன்கு உணர்வாள். இங்கு யாருக்கும் எதுவும் எளிமையாக கிடைக்கும்போது அதன் மகத்துவம் தெரியாது. தாயின் அன்பும் அதுபோல்தான்.. தாய் இல்லாமல் போகும்போதுதான் அதை நினைத்து ஏங்குவார்கள். ஒரு பெண் என்னதான் மிகப்பெரிய சாதனை செய்தாலும் அங்கு ஆண் இருக்கும்போது அதை பகிர்ந்துகொள்ள அவளுக்கு மிகுந்த சுவாரஸ்யம் மற்றும் ஆத்ம அழகு மிளிரும் #ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது போல் பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் நிச்சயமாக ஆண் இருக்கிறான். இதை புரிந்து கொள்ளாத, ஆணை மதிக்காத பெண்ணியம் (Feminism) பேசும் பெண்களுக்கு அவர்கள் தன் வாழ்நாளில் அதை புரிந்துகொள்ள முடியாமலே போகின்றது. :-Rk.Guru (Share this post...)

Friday, May 12, 2023

இவ்வுலகில் எது அறம்.!?

அறம் என்ற ஒன்றை நாம் பிரிக்கும்போது அறமற்ற இன்னொன்று தொங்கிக் கொண்டு உள்ளதே.. அப்பொழுது 

இரட்டைத் தன்மை அங்கு உள்ளது என்று பொருள்படுகிறது.


இரட்டைத் தன்மை கொண்டமை மனதில் அதிநுட்ப செயல் திட்ட வடிவமே..


மனது அறம் என்பதை விரும்புகிறது. மனம் விரும்பும் அறம், எப்படி ஞானம் என்று சொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லும்.!?


மனதின் இன்னொரு முகம் அறிவு. அறிவின் உள்ளாழம் பகுத்தறிவு என்று எடுத்துக் கொள்ளப்படும்போது இந்த மனம், அறிவு, பகுத்தறிவு இவையெல்லாம்தான் ஞானத்தின் பாதை தீர்மானிக்குமா.!?


மனதின் வரையறை, விளக்கங்கள் எதை திருப்திப்படுத்துவது.!? எதை முழுமைப்படுத்த முனைவது .!?


 ஒன்று ஒரு வடிவம் கொடுத்து 

நாம் சொல்வதால் அது ஒன்றே என்று பொருள் கொள்ளப்படுகிறது.


அந்த ஒன்று எண்ணை இரண்டு என்று கூட சொல்லிவிட்டுப் போகலாம்.


இதே போன்று தானே அறம்  என்பதும் இன்று நீங்கள் சொல்லும் 'அறம்' நாளை அது அறமற்றதாகக்கூட மாறலாம்.!


இறுதியாக யாம் சொல்லபடுவது யாதெனில்.


அறம்,அறமற்ற தன்மையை கடந்த பார்வை வேண்டும் ஒரு சாதகனுக்கு.


அறத்தொடு நிற்பது மனதின் பாதுகாப்பான, ஒரு சவுகரியமான விசயம்.


ஏன் நம்மை ஒரு ஆசிரியர், பேராசிரியர், கல்லூரி முதல்வர், துணைவேந்தர் என்றெல்லாம் அழைத்துக் கொள்கிறோம்.


ஏனென்றால் அங்கு  மனதின் ஒரு நுட்பமான ஆணவம் வெளிப்படுகிறது. தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது. தன்னை மறைமுகமாக பெருமைப்படுத்திக் கொள்வது . அறம் சார்ந்த வட்டத்துக்குள் நிலை நிறுத்திக் கொள்வது.


ஏன் நம்மை,  "யாம் ஒரு அறம் சார்ந்த பிச்சை எடுப்பவன், பிச்சை எடுத்ததை பிறருக்கும் கொடுத்து தானும் உண்பவன்" என்று பெருமையாக ஏன் சொல்லிக் கொள்வதில்லை.!?

அங்கேயும் அறம் என்பது சொல்படுவது உள்ளதுதானே...


அறம் என்று சொல்லப்படுவதில் ஆணவம் பொதிந்துள்ளது. அறம், அறமற்றது என்பதை தாண்டிய 

பார்வை வேண்டும்.


நாம் மரம் என்று சொல்வதனால் மரத்துக்கு எந்தவித உணர்தல் தேவையும் இல்லை. அது அதுவாகவே உள்ளது.


நம் மனதின் தேவைக்கு  மாமரம், பலாமரம் என்று பெயரிட்டு பயன்படுத்திக் கொள்கிறோம்.


அறம் மனிதகுலம் தோன்றிய வரலாற்றில் மரபுசார்ந்த மனிதர்களின் சொல்லிலும், செயலிலும், நூல் வடிவிலும் ஏராளமாக உள்ளன.


அப்படி இருந்தும் ஏன் மனிதனுக்கு இன்னும் அறத்தை போதித்துக் கொண்டே இருக்கின்றோம்.!?


ஏனென்றால் மனிதனுக்கு அறம் பற்றி சொல்வதில் மனதின் சுய அரிப்பு அடங்கியுள்ளது.  தன்னால் முடியாததை பிறரை செய்யவைத்து காண வேண்டும் என்ற ஆசையின் அரிப்பு.


#அறம்,அறமற்றதை மறப்போம்.

புல் தானாக வளரும்..

மேகங்கள் விலகும்

சூரியன் பிரகாசிக்கும்..


:-Rk.Guru


(Share this post....)