Pages

Friday, December 16, 2011

சில பேர் கேட்கிறார்கள்...!?

"முல்லைப் பெரியாறில் மலையாளிகளோடும், காவிரி நதிநீரில் கன்னடர்களோடும் சண்டை. இந்த ஆறுகளால் பண்ணையார்களாய், நில உடமையாளர்களாய் இருக்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களுக்குத்தான் பாதிப்பு. நிலமற்ற தலித்துளுக்கு என்ன பாதிப்பு" என்று...


# கொஞ்சம் உங்கள் ஜாதிய பாகுபாடை தள்ளிவைத்து நம் தமிழ் இன உணர்வுடன் சிந்திப்போமே...அம்பேத்காருக்கு இந்தியாவில் உள்ள உயர் இந்துகளிடம் வெறுப்பு இருந்தாலும் அவர் ஒருபோது வெள்ளைகாரனை நேசித்ததில்லை. வெள்ளக்காரன் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று விரும்பியதில்லை. சொந்த வீட்டில் பகை எப்போதும் இருக்கும் அது எப்போது வேண்டுமானாலும் நீர்த்து போகும் அது கொஞ்சம் காலதாமதமாக ஆகும் அறிவியல் மாற்றத்தில் இந்த பகையை மாற்ற சாத்தியம் உண்டு. இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஆனால் தமிழன், மலையாளி என்ற இன உணர்வில் இது சாத்தியமே இல்லை. இது மக்களின் மொழி உணர்வுடன் கலந்தது. நாடு கடந்தும் தமிழக தொப்புள்கொடி மக்களான ஈழ மக்கள் இருந்தாலும் அவர்கள் தாய்தமிழ் மக்களை நேசிக்காதவர்கள் இல்லை அவர்கள் நேசிப்பதற்கு காரணம் அவர்களும் செந்தமிழ் பேசும் மக்கள். ஏன் நம் பக்கத்து யுனியன் பிரேதேசம் பாண்டிச்சேரியை பாருங்கள் அங்கே அரசியல் ரீதியில் பகைமை இருந்தாலும் அங்கு இருக்கும் மக்களுக்கு தமிழமாநில மக்கள் மேல் எந்த கோவமும் இல்லை ஏனென்றால் அது தமிழ் இன உணர்வுடன் அதிகபடியான தமிழ்மொழி உணர்வு கலந்தது. ஆனால் கேரளா, கர்நாடக, ஆந்திர இம்மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் நம்முடன் சேர்த்து திராவிட இன பாரம்பரியத்தை கொண்டவர்கள் இவர்கள் திராவிட இனம் என்று வரலாற்று ஆசிரியர்களும் அவர்களின் ஆய்வுகளும் கூறுகிறது. இப்படி ஒரு திராவிட இனமாக இருந்தும் ஏன் நமக்குள் பகைமை இருக்கிறது. இதை கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் இப்பகை ஒரு நாட்டின் மத, ஜாதி, இன உணர்வுடன் வருவதை விட, மொழி உணர்வுடன் வருவதுதான் அதிகம் இதுவே மக்கள் உணர்வுகளின் முதன்மையானதாக இருக்கிறது எனபது நன்றாக தெரியும்.

ஒரு இனத்தின் மொழி உணர்வை தகர்தெரிந்தால் மற்ற உணர்வுகள் எதுவும் மிஞ்சாது. உலக புகழ் பெற்ற இயக்குனர் சத்தியஜித்ரே தான் இயக்கிய வங்க மொழி படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தை பற்றி ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி கண்டார் "நீங்கள் ஏன் உங்கள் படங்களை வங்கமொழில் எடுகீரீர்கள் ஏன் இந்தியிலும் எடுக்கலாமே" என்றதுக்கு அவர், "என் மொழி உணர்வை என் மொழில்யிதான் வெளிபடுத்த முடியும் அதை வேறுஒரு மொழில் வெளிபடுத்தினால் அதன் உயிரோட்டம் போய்விடும் அது மரத்தில் இருந்து முறிந்த கிளைகலாகத்தான் இருக்கும்" என்றார். சத்தியஜித்ரே தன வங்க மொழிக்கு அதன் உணர்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் பாருங்கள். ஒரு நாட்டு மக்களின் மொழி உணர்வுதான் அந்நாட்டுக்கு மகத்தான ஒன்று. இவை அந்நாட்டின் தேசிய கீதம், தேசிய இறையாண்மையை விட வலிமையானது. அதன் மேல் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் கட்டமைப்பை ஏற்படுத்தலாம் அவ்வளவு உறுதியானது. அதனால் தமிழ் மக்களாகிய நாம் ஜாதி, மத பேதங்களை மறந்து தமிழ் மொழி உணர்வுடன் மட்டும் ஒன்றுபடுவோம்.


என்றும் நட்புடன்:

Saturday, November 12, 2011

போதிதர்மரை கொஞ்சமாவது தெரிந்துகொள்ளுங்கள்...


போதிதர்மர் ஒரு சென் துறவி. அவர் இன்னோர் புத்தர் என்று ஓஷோவே சொல்கிறார். அம்பேத்கார் பவுத்த மதத்திற்கு மாறினார். மாறினார் என்றால் புத்தத்தையும் புத்தரை ஏற்றுகொண்டார் என்றுதான் அர்த்தம். தாழ்த்தபட்டவர்களின் தலைவராக இருந்தவர் புத்தரை ஏற்கும் போது போதிதர்மரை ஏற்காதவரில்லை அவர் பாப்பான் என்று சொல்வதிற்கில்லை. அப்படி இருக்கும் போது ஒரு சென் துறவியை இனம் மொழி சாதி என்று ஒரு குறுகிய நோக்கத்தில் அடையாளபடுத்தி தற்குறியாய் நிருத்திவைப்பது அவரை பற்றிய சரியான புரிதலின்மையைதான் காட்டுகிறது. உண்மையில் அவரை பற்றி அவரின் விழிப்புணர்வை பற்றி யாரும் தெரிந்துகொள்ளவே முற்படவில்லை.

பிராமணர்கள் வசிக்கும் இடத்தில் போய் சுவாசித்தாலும் அதே காற்றுதான் , தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு போய் சுவாசித்தாலும் அதே காற்றுதான்...காற்றுக்கு நிறமும் இல்லை, வடிவமும் இல்லை. அதுபோல் போதிதர்மருக்கு இனமும் இல்லை மொழியும் இல்லை, சாதியையும் இல்லை 'இதுபோல' இருப்பவர் என்று சொல்லிலே அடங்காதவர். அவர் புத்தரானவர்.

நீங்கள் பசி எடுக்காத நேரத்திலும் சாப்பிடுவிங்க, தூக்கம் வராத பொழுதும் தூங்க முற்படுவிங்க, வாய் விட்டு சிரிக்கலாம் என்று இருந்தாலும் கவுருவம் என்ற போர்வையில் சிரிக்க மாட்டிங்க, அழுவலாம் என்றால் அழமாட்டிங்க, ஆனால் போதிதர்மர் நம்மிடம் மாறுபட்டு இருந்தார் அவர் விழிப்புடன் இருந்தார். அதுவே ஜென்.

ஒரு ஜென் துறவியிடம் ஞானத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர் சொல்கிறார் "ஞானம் சொல்லில் அடங்காதது அப்படியும் சொன்னால் அது ஞானமில்லாதது.

என்றும் நட்புடன்

Thursday, August 18, 2011

உணமையை விரும்புவர்கள் இதை படிக்கலாம்...


"தளர்வான நிலையில் கூட புத்த நிலையை காணலாம். பிஞ்சு குழந்தையை பார்க்கும் பார்வையிலும் தன்னை மறக்கலாம்." நாம் காணும் மனிதனை மனிதனாக அழைத்து வந்துவிடலாம் ஆனால் அதற்க்கு ஆன்மிக மூலாம் பூசப்பட்ட மதம்தான் தடையாக உள்ளது. உண்மை ஆன்மிகம் தனக்குளே தன்னை தேடிபெருவதில்தான் இருக்கிறது. இதைதான் புத்தரும் கடைசியாக சொன்னார். "அபோ திபோ பவ" -உனக்கு நியே ஒளியாக இரு என்று. இதற்காக தங்களை மகரிஷி என்று சொல்லிகொள்பவர்கள் தேவை இல்லை. உண்மை சொன்ன ஒரு புத்தரே போதும்.

இந்துமதம் ஒரு வாழ்கை நெறியாக சொல்லப்பட்டது என்று சொல்கிறார்கள் அப்படி இருக்கும்போது அதை ஏன் தவறாக புரிந்துகொள்கிறார்கள். அரச மரத்தை சுற்றிவந்தால் குழந்தை பிறக்காத பெண்களுக்கும் குழந்தை பிறக்கும் என்று இந்து வழிகாட்டி சொல்கிறது அது ஏன் அப்படி சொல்கிறது "காற்று அரச மரத்தின் மேல் பட்டு விசும் போது அக்காற்று பெண்கள் கர்ப்ப பைக்கு வலிமையை கொடுக்குமாம்" இதனை பகுத்தறிவுடன் விளக்கிருந்தால் மதத்தின் வாழ்கை நெறி வழுவாமல் போற்றபட்டிருக்கும். அதை விடுத்து மறைபொருள் போல் அரசமரத்தின் கிழ் ஒரு மத அடையாள பொம்மையை குட்காரவைத்து மக்களுக்கு மதம் சார்ந்த பயத்தை உண்டாக்கி சொல்லப்பட்டதால் அதன் பகுத்தறியும் உண்மைத்தன்மை காணமல் போய்விட்டது அப்பொழுது இருந்த மக்கள் அறிவற்ற, படிப்பறிவற்ற, நாகரிகம் இல்லாத மக்களாகத்தான் இருந்தனர் இதனால் அதன் உண்மை வடிவத்தை மதத்துடனே இணைத்துவிட்டார்கள் அதையே நடைமுறையும் படுத்திவிட்டார்கள். உதாரணமாக திருக்குறள் எடுத்துகொள்ளுங்கள் எத்தனை பேருக்கு அதன் விளக்க உரை தெரியும். தெரியவில்லை என்றால் விளக்க உரை எழுதியத்தை படித்து தெரிந்துகொள்கிறார்கள் அப்படி தெரிந்துகொள்ளவதில் பகுத்தறிவு இருக்கிறது ஆனால் அப்போது வாழ்ந்த கூட்டம் செவி வழி செய்தியே உண்மை என்று நம்பியது அதீத நம்பிக்கை முட நம்பிக்கையாய் மாறியது என்னை கேட்டால் நான் சொல்வேன் மதங்கள் தான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது. மதங்கள் இல்லாத மனிதன் சுதந்திரமானவன் ஆனால் மக்கள் சுதந்திரமாக இருக்க மதத்தலைவர்களும், அரசியல்வாதியும் என்றும் விடமாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயம்.

மதம் எனபது மக்களை நல்வழிபடுத்துகிறது என்று சொல்லி கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒரு வியாபார தந்திரம் அது மத பிரசங்கம் செய்வோராலும், அந்நிய படையெடுப்பாலும், தன் சுய பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்பாலும் பரப்பபட்டதே. இந்நாட்டில் உள்ள மதங்கள் இந்துமதம் உட்பட.."மதத்தின் அடிப்படையில் கைவைக்க கூடாது" என்றுதான் எல்லா மதங்களும் மறைமுகமாக சொல்கிறது. இதில்அடிப்படையில் கைவைத்தால் மதங்களே ஆட்டம் கண்டுவிடும். உதாரணமாக இந்துமத கடவுள்கள் எப்படி எப்படி தோன்றின என்று நீங்கள் கேட்கும்போதும், கிறிஸ்த்து எப்படி பிறந்தார் என்று கேட்கும்போதும், நபிகளுக்கு குரான் ஓதப்பட்ட போது யார் அவருடன் இருந்தார்கள் என்று கேட்கும்போதும் அதன் அடிப்படையே கொஞ்சம் அசைந்தாடத்தான் ஆரம்பிக்கும். ஜாதிகளுக்கு அடிப்படையே மதங்கள்தான். மதங்கள் ஒழிந்தால் ஜாதிகள் தானே ஒழியும்.இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லிகொள்கிறோம் ஆனால் அடிப்படை இந்திய சட்டத்தில் மதம், மாற்றம் அடையாமல்தான் இருக்கிறது.அச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும் ஆனால் மதத்தில் உள்ள தீண்டாமை அப்படியே அனுசரிக்கப்படும் என்று சொல்கிறது. இதுதான் மதசார்பற்ற நாடா..? ஜனநாயகம் எனபது ஜாதி மதம் இல்லாமல் சதர்மம் சமநிலை கொண்டது. ஒருவரின் விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டதல்ல...ஜாதி மதங்கள் உட்பட்டு வாரி வழுங்குபவன் எல்லாம் தலைவன் ஆகமுடியாது அவனே மக்களின் துன்பத்தை நீக்கும் இரச்சகராக இருக்க முடியாது. இருப்பதை பகிரிந்து கொடுப்பதுதான் உண்மை ஜனநாயகம் ஆனால் இதை ஜனநாயகத்தில் இருந்து காண்பதுதான் அதிசயமாக இருக்கிறது. சாதி மதம் பார்கிறவன்தான் சமதர்மம் பேசுகிறான்.

ஒருவருக்கு பகுத்தறிவு வளர்ந்தால் மனித நேயம் தானாய் வரும். உண்மையில் உண்மையோடு நடபவனுக்கு ஒழுக்கத்தை போதிக்கவேண்டிய அவசியமில்லை...அவன் ஒழுக்கம் மனித நேயத்துடனே செல்லும். உண்மை என்பதே பகுத்தறிவு. அது குருட்டு நம்பிக்கை அல்ல...!

குழந்தைக்கு புலப்படும் தவறேனும் உண்மை நமக்கு பொய்யாக தெரிவதேன். ஏனென்றால் அது பகுத்தறியும் பருவத்தில் இருக்கிறதால். நீங்கள் இல்லாத கடவுளை வணங்குகிரிங்க ஆனால் குழந்தையும் வணங்க கட்டாயபடுத்துரிங்க அது கேட்குது "எங்கே கடவுள்" என்று நீங்கள் கல்லை காட்டுகிரிங்க அக்குழந்தை அதை கல் என்கிறது நீங்கள் குழந்தை தலைலையே ஒரு குட்டு வைத்து "சாமியே அப்படி எல்லாம் சொல்ல கூடாது" என்று சொல்றிங்க...உண்மையில் குழந்தை கேட்டது உண்மைதான் என்ற உண்மை உங்களுக்கும் தெரியும் ஆனால் அதை தவறென சொல்றிங்க குழந்தைக்கு இருக்கும் பகுத்தறிவு கூட அப்பொழுது உங்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது

இன்றைய வளர்ந்த மீசை வைத்த குழந்தைகளுக்கு பிரார்த்தனை எனபது அவர்களை் அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு தேவையாகத்தான் இருக்கிறது. விவேகனந்தர் "சொல்கிறார் பசியோடு வருவோனிடன் வேதாந்தம் பேசாதே முதலில் அவனுக்கு சோறுபோடு பின்பு சவுகாசமாக வேதாந்தம் உபசரிக்கலாம்" அவர் சொல்வது உண்மைதான் எது தேவையோ அதைதான் முதலில் செய்தாகவேண்டும். பிரார்த்தனை எனபது உண்மையை அறியா பாடம் உண்மை அறிந்தால் பிரார்த்தனைக்கு வேலையே இல்லை நாம் எதற்காக அழுது ஆர்பாட்டம் செய்தோம்" என்ற நினைப்புத்தான் வரும். ஒவ்வொருத்ததுக்கு ஒவ்வொருவிதமான கருத்து இதில் ஆன்மிக பேசுவோருக்கு வாழ்வின் நம்பிக்கை சார்ந்த கருத்தாய் இருக்கிறது. மாடர்ன் சாமியார்களின் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. தேவைக்காக தேங்காய் உடைக்கிறது காரியம் ஆகுவதற்காக கற்பூரம் ஏற்றுவது இதெல்லாம் ஆன்மிக பேசுவோரிடம்தான் மலிந்து கிடக்கிறது. உண்மை ஆன்மிகம் பேசுவோர்ருக்கு தேவைகள் எதுவும் இருக்காது. பல புண்ணிய ஆத்மாக்கள் நம்மிடம் இருந்து நம்மை காக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்காது. இல்லாத ஒன்றை தேடி ஓடுவதை விட இருப்பதை பார்த்து மகிழ்வது நன்று...உயிரனங்களில் மனிதனின் மனம், அறிவு இயற்க்கை பரிமாணத்தில் படி படியாக எழுர்ச்சி பெற்றவை பெற்றுகொண்டிருப்பவை...இதில் கடவுள் என்ற இல்லாத ஒன்றை முன்னிளைபடுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆசைகொண்ட மக்களின் பயம்தான் கடவுளின் பொழப்பாக இருக்கிறது. கடவுள் மனிதன் தேவைக்கு உண்டாக்கப்பட்ட ஒரு வேடிக்கையான விளையாட்டு பொருள்...நாம் உண்டாக்கிய பொருளுடனே நாம் பிரார்த்தனை என்ற பெயரில் அதனிடம் கெஞ்சிகிறோம். இதுதான் மக்களின் இன்றைய ஆன்மிக பிரார்த்தனையாக இருக்கிறது.

மறுபடியும் நினைவுபடுத்துகிறேன் உண்மை ஆன்மிகம் தனக்குள்ளே தன்னை தேடிபெருவதில்தான் இருக்கிறது. இதைதான் புத்தரும் கடைசியாக சொன்னார். "அபோ திபோ பவ" -உனக்கு நியே ஒளியாக இரு என்று. இதற்காக தங்களை மகரிஷி என்று சொல்லிகொள்பவர்கள் தேவை இல்லை. உண்மை சொன்ன ஒரு புத்தரே போதும்.என்றும் நட்புடன்:

Saturday, June 18, 2011

அல்லோலபடும் சமச்சீர் கல்வி...


தமிழகத்தில் இப்போது நடக்கும் சமச்சீர் நாடகங்களை பார்த்தால் கேளிக்குரியதாகத்தான் இருக்கிறது அடிபடையில் தமிழக ஆட்சியில் இருக்கும் அம்மையார் எங்கே படித்தார் என்பதை நாம் எல்லோரும் மறந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். அம்மா ""சர்ச் பார்க் கான்வென்ட்" என்ற தனியார் பள்ளியில்தான் படித்தார். அப்பள்ளியில் படித்தவருக்கு தனியார் பள்ளி பாசம்தான் முழுவதும் இருக்கும். இதுவும் ஒருவித சாதி உணர்வுபோலத்தான். அதுவும் அம்மையாரின் சாதி எவ்வகை சாதி என்று உலகம் அறிந்தது அல்ல அப்படி இருக்கும் போது சமசீரை முடக்கும் வேலைதான் நடக்கும். இவர் கூட்டனி தோழர் விஜயராஜ் என்கிற விஜ்யகாந்த் சமசீர் கல்வியை பற்றி நல்ல தரமான கருத்தை உதித்தார். அது என்னவென்றால் "சமச்சீர் எனபது தனியார் பள்ளிகளில் என்ன என்ன வசதிகள் எல்லாம் கிடைக்கிறதோ அதுவெல்லாம் அரசு பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று கூவினார் அவர் கூவினது ஒருவிதத்தில் ஏற்றுகொண்டாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. வசதி வாய்ப்பு எனபது அவரவர் பொருளாதார அடிப்படையில் நிர்ணயக்கபடுவது ஆனால் அறிவில் ஏற்ற தாழ்வு இருக்கும்போதுதான் ஒருவரிடம் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது. உதாரணமாக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனும் அரசு பள்ளியில் படித்த மாணவனும் ஒரு நேர்முக தேர்வுக்கு போகிறார்கள் என்றால் அங்கு அறிவு அடிபடையில்தான் வேலை கிடைக்கிறது. அங்குதான் அரசு பள்ளி மாணவனின் தாழ்வு உணர்வு ஏற்படுகிறது. இது எனக்கும் ஏற்பட்ட உணர்வுதான்.

அறிவில் ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கிற அறிவு ஒன்று இருக்கிறது. தன் சுய முயற்சியினால் ஏற்படுகிற அறிவு ஒன்று இருக்கிறது. சுயமுயற்சி அறிவு இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் வருவது அப்தூல் கலாமுக்கு ஏற்பட்ட அறிவும் இப்படித்தான் ஆனால் அடிப்படை அறிவு எல்லா மாணவர்களுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டும் என்பதுதான் நம் எல்லோர் எண்ணம். வெள்ளையன் நம்மை ஆட்சி செய்ய வரும்போது வாணிப நோக்கத்துடன்தான் வந்தான் பின்பு மெல்ல மெல்ல உள்நாட்டு அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான் அதுபோலத்தான் உள்ளது இப்போது உள்ள தனியார் பள்ளிகளின் லட்சணங்களும் முதலில் இவர்கள் சொன்னது அரசால் தரமான கல்வியை கொடுக்க முடியவில்லை நாங்கள் அதை கொடுப்போம் என்றார்கள் பின்பு மெல்ல மெல்ல அதிகபடியான கட்டணத்தை நிர்ணயத்தார்கள் அதன் பின் சங்கம் ஏற்படுத்தினார்கள். அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தைக்கு நடத்தினால் அதை புறக்கணிக்கும் நிலைக்கு வந்தார்கள். வெள்ளையனின் அடிப்படை வாணிப கொள்கையும், தனியார் பள்ளிகளின் கொல்லைகாரர்களின் கொள்கைகளும் சுரண்டல் அடிப்படையில்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் இவர்களின் சுரண்டல் முடிவு மக்களால் அடித்து துரத்தும் நிலையில்தான் இருக்கும்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் மகளை ஊராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்திருக்கிறார். இவரையே எல்லோரும் முன்மாதிரியாய் எடுத்து அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளிலே சேர்க்கவேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளின் திமீர் தனம் அடக்கப்படும்.

அறிவில் உயர்வு தாழ்வு இல்லாமல் சமசீரான சமத்துவம் உண்டாகவேண்டும் என்பதுதான் நல்ல உள்ளங்களில் விருப்பமும் அது போராட்டம் என்னும் ஆயுதத்தால் கட்டாயம் நிறைவேறும்.

தோழமைக்கு நன்றி...


என்றும் நட்புடன்

Monday, February 7, 2011

எனக்கு உண்டான மரண அனுபவம்...உலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு வாழ்கை சம்பவங்களில் ஏற்படும் அனுபவம் அவர்கள் வாழும் வாழ்வில் நிரந்தரமாக தங்கிவிடும். இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சில வருடங்களுக்கு முன் ஒருநாள் நான் உடல் அசைவுகள் ஏதும் அற்ற நிலையில் தரையில் வெறுமனே படுத்துக்கொண்டு மரணித்ததுபோல அதாவது நான் இறந்ததுபோல எண்ணி என் நினைவுகள் தாங்கி உள்ள மனதை  நம்பவைத்தேன் அப்போது என் உடம்பில் துளி கூட அசைவு இல்லாமல் அமைதியாக இருந்தேன். அம்மனதை நம்பவைக்கும் முயற்சியிலே இருந்தேன்.  "நான் இறந்து போய்விட்டேன், இறந்து போய்விட்டேன்" என்று மனதில் திரும்ப திரும்ப சொல்லியபடியே இருந்தேன். ஒரு சில நிமிடங்களில் என் மனது நான் சொன்னதை நம்ப ஆரம்பித்துவிட்டது. இப்போது மனது என்னிடமிருந்து தனித்துவிடப்பட்டது. அந்த நேரத்தில் எனது மனது  பரிதவித்த பரிதவிப்பு இருக்கிறதே..! எப்பப்பா..அதை வார்த்தைகளில் சொல்லமுடியாத பரிதவிப்பு.  மனது உண்மையில் "நான் இறந்துவிட்டேன்" என்று  நம்ப ஆரம்பித்துவிட்டது. "அவ்வளவுதான் இந்த உடம்பு மீண்டும் திரும்ப வராது உறவுகள் எல்லாம் அவ்வளவுதான். மனைவி, குழந்தைகள் எல்லாம் விட்டு விட்டு போகவேண்டியதுதான். மறுபடியும் சேரமுடியாதே..! என்ற ஒருவிதமான இறுக்கமான பரிதவிப்பு. அது எதுபோல பரிதவிப்பாய் இருக்கும் என்று சொன்னால்  "நீங்கள் எப்போதாவது மரணத்தை நெருங்கி சென்று வந்திருந்தால் அதை நீங்கள் உணர்ந்திருக்கலாம் அப்போது உங்களுக்கு ஏற்படும் பயம்  "அவ்வளவுதான் நம் கதை முடிந்தது" என்ற நினைக்க தோன்றும்.  ஒரு பத்து பதினைந்து மாடி கொண்ட ஒரு கட்டிடத்தில் முழுவது மூடிய லிப்டில் நீங்கள் தனியாக  போகும் போது லிப்ட் எட்டாவது மாடியில் சென்று கொண்டிருக்கும்போது மின்சார தடைபட்டு நின்றால் அப்போது ஏற்படும் ஒரு நிலை அது கட்டாயம் மரண நிலைக்கு ஒப்பானதுதான். அப்போது  மூச்சு திணறல் ஏற்படும், ஒருவித படபடப்பு, பரிதவிப்பு "அவ்வளவுதான் நம் கதை முடிந்தது" என்ற நினைப்பு கூடவே வந்துவிட்டு போகும். இப்படிபட்ட பல சம்பவங்கள் என் வாழ்வில் வந்துபோன அனுபவங்கள் உண்டு. அவ்வனுபவம்  மரணத்தை தொட்டுவிட்ட அனுபவமாய் இருக்கும் ஆனால் இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மரணத்தின் ஒரு புதுவித  வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. என் மனம் அலைந்த பாடு இருக்கிறதே பெரும் போராட்டமே நடக்கும். அதில் இருந்துதான் நான் தெரிந்துகொண்டேன். "உயிர் பிரிந்த பின் மனமானது  நிறைவேறாத  ஆசைகளுடன் எண்ணங்களுடனே தங்கியிருக்கும்" என்றும் மனமானது அந்த ஆசை எண்ணங்கள் நிறைவேற புதிய உடலை தாங்கி பிறப்பெடுக்கும் என்றும் அப்போதுதான் தெரிந்துகொண்டேன். இவை எல்லாம் என் அனுபத்தில் நான் கண்ட உண்மை...இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்தால்தான் உங்களுக்கு அது உண்மையாக இருக்கும்.இதேபோன்று இன்னொரு அனுபவமும்  ஏற்பட்டிருக்கிறது.  ஒருமுறை நான் தியானம் செயலாம் என்று அமர்ந்தேன் அமர்ந்து சற்று நேரம் கண்ணை மூடிய நிலையில் என் எண்ணங்களையே கவனித்து கொண்டிருந்தேன். சட்டேன என் எண்ணம் திசை மாறிய பயணம் செய்தது மனத்தின் பிடிப்பு இல்லாமல் எண்ணம் படுவேகமாக சென்று கொண்டிருந்தது. வேகம் என்றால் சாதாரண வேகம் இல்லை படு பயங்கரமான வேகம் அது  ஒளிவேகத்தைவிட  மிஞ்சிய வேகமாகத்தான் இருந்திருக்கும் அது எங்கையோ என்னை இழுத்து கொண்டே சென்றது. ஒரு இளம் சிவப்பான நிறம் அதினுள் எங்கே சென்று கொண்டே இருக்கிறேன். அவை என்னவென்று ஆராயா கூட அங்கே எண்ணம் இல்லை. ஒரு நிலையில் நான் பயந்துவிட்டேன். கடும் முயற்சி செய்து கண்ணை திறந்தேன். கண்ணை திறந்தால் நான் இருந்த இடத்தில்தான் உட்கார்ந்துகொண்டிருந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை எனக்கு என்ன ஆச்சு என்று எனக்கே தெரியவில்லை பிரம்மை பிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டிருந்தேன் மீண்டும் மீண்டும் என் நினைவில் அந்த காட்சிகள்  ஓடிகொண்டிருந்தது. மறுநாள் அதே இடத்தில் தியானத்தில் உட்கார்ந்தேன். இப்போதும் கண்ணை மூடி அமைதியாக என் எண்ணங்களை கவனித்தேன் இப்போது முன் நாள் ஏற்பட்ட அந்த காட்சி  ஏற்படவில்லை மீண்டும் மீண்டும் முயற்சியில் இருந்தேன் ஆனால் அது இன்று வரை எனக்கு தோன்றவில்லை அந்த நிகழ்வு ஏற்பட்டு சில மாதங்கள் கழித்து நூலகத்தில் விவேகானந்தரின் புத்தகம் ஒன்றை படித்துகொண்டிருந்தேன் அப்புத்தகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுவத்தையும் சொல்லிருந்தார் அதுபோல ஏற்படும் நிலை ஒருவரின் ஆன்மிக மேலான நிலையான சமாதி நிலைக்கு ஒருவரை இட்டுசெல்லும் என்று குறிப்பிடபட்டிருந்தது ஆனால் சில பேர் அந்த நிகழ்வு ஏற்படும் அச்சத்தை பார்த்து திரும்பி வந்துவிடுவார்கள். அதை கடந்து சென்றால் சமாதி நிலை அடையலாம். என்று அவரால் சொல்லபட்டியிருந்தது.


மரணத்தை தழுவிய இன்னொரு நிகழ்வு. ஒரு முறை நான் நன்றாக உறங்கிய  நிலையில் என் உடலை நானே பார்பதுபோல ஒரு காட்சி ஏற்பட்டது. அதில் என் உடம்பு எப்படி இருக்கிறது என்று நானே பார்கின்றேன் ஆனால் பார்க்கும் எனக்கு எந்த உடலும் இல்லை ஆனால் என்னால் பார்க்கமுடிகிறது, கேட்கமுடிகிறது, அதை உணரமுடிகிறது.  இதில் கேட்க முடிகிறது என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். நான் உறங்குவதற்கு முன்னே பக்கத்து வீட்டில் சில பேர் பேசும் சத்தம் என் காதில் விழுந்தது. அவர்கள் ஏதோ பேசிகொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி நானும் நன்றாக உறங்கினேன் என் உறக்கம் தழுவதை நான் நன்றாக உணர்ந்தேன். உறங்கிய சிறிது நேரத்தில் என் நினைவு பிரிக்கப்பட்டு என் உடலை நானே பார்கின்றேன். இது எனக்கு ஏற்பட்ட உண்மை அனுபவம் இதில் சிறிதளவும் கற்பனை இல்லை. கற்பனையை சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை.  என்னை நானே பார்த்தேன். அந்த உடல் இல்லா நான் பக்கத்து வீட்டில் பேசுவதை நன்றாக கேட்கிறேன். என் உடலையும் பார்கிறேன். என்னால் போகமுடிகிறது என் உடலையே சுற்றி சுற்றி வருகிறேன். இது எனக்கு ஒன்றும் புரியவில்லை "நான் எப்படி இங்கே படுத்துகொண்டிருக்கிறேன்" என்று ஒருவித குழப்பம். அந்த குழப்பம் கொஞ்சம் ஆழ்ந்து போகும்போதே என் உடம்பில் ஒருவித சிலிர்பு ஏற்பட்டது. நான் மிரண்டு எழுந்து உட்கார்ந்தேன். சற்றும் முற்றும் பார்த்தேன் யாரும் இல்லை என் உடலை இப்போது பார்க்க முடிகிறது. இப்போதும் மீண்டும் குழப்பம் யார் என்னை பார்த்தது" என்று ஆனால் பக்கத்து வீட்டில் பேசும் பேச்சுகள் நன்றாக கேட்டுகொண்டிருந்தது இதற்கு முன் என்ன பேசினார்கள் என்றும் என் நினைவில் இருந்தது. அப்போதுதான் என்னால் உணரமுடிந்தது உயிர் தற்காலிகமாக பிரிந்த நிலையை...ஏனென்றால் தூக்கமும் ஒரு தற்காலிக மரணத்திற்கு (sleep  is temprary death) ஒப்பானதுதான் என்று ஒரு புத்தகத்தில் படித்தது நினைவில் வந்தது. அந்த மரணமும் என்னால் உணரமுடிந்தது. இதுபோல் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் மறக்கமுடியாத அனுபவங்களை என் நினைவிலே தங்கிவிட்டது.


ஒருமுறை மெய்உணர்வு அனுபவமும் உண்டானது. ஆனால் அதை உண்மை ஞானத்துடன் ஒப்பிடமுடியாது. அது ஏதோ ஒரு தூரல போல்தான் வந்தது. பொதுவாக ஞானிகளுக்கு உண்டாகும்  மெய்யுணர்வு அனுபவமும் ரொம்ப ஆனந்தமானது அவ்வுணர்வு எனபது  தன்னைத்தானே உணர்தல். தன்னை யார்.? என்று உணர்தல். அது ஒரு பரிபூரனமான ஆனந்த நிலை அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதை நான் உணர்ந்தவரை சொல்கிறேன். காரணகாரியம் இல்லாமல் ஒரு சந்தோசம் உண்டாகும். அந்த ஆனந்தத்தை நாம் இதுவரை அனுபவதிருக்கமாட்டோம். மரம் செடிகள் எல்லாம் நம்முடன் பேசுவதுபோல தெரியும். எல்லாமே அழகாக தெரியும் அசிங்கம் என்றும் எதுவும் இருக்காது. அன்பு ஊற்று பெருவெள்ளம் போல் நம்மை நோக்கி வரும். அதை அப்போது தாங்கும் மனவலிமை இல்லாமல்தான் இருப்போம். அதனால்தான் ஞானம் அடைந்தவர்கள் அதை கட்டுபடுத்தமுடியாமல் ஆனந்த நடனம் ஆடுவார்கள். பிறர் பார்வைக்கு பைத்தியம் பிடித்ததுபோல இருப்பார்கள். எல்லாமே பரம்பொருள் ரகசியம். இது சாமானியனுக்கு புரியாது. அதன் சாரல் மழையில் நான் நனைந்திருக்கிறேன். முழு மழையும் எதிர்பார்த்துகொண்டிருகிறேன. மறுபடியும் சொல்கிறேன். இவை எல்லாம் என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை...இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்தால்தான் உங்களுக்கு அது உண்மையாக இருக்கும்.
                                                             

என்றும் நட்புடன்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு-இல்
பதியவும் ...நன்றி.)

Friday, February 4, 2011

தேவை ஏற்படும்போதே தேடுதலும் தொடங்கிவிடுகிறது...


 
குடும்பத்தின் அதிகாரம்:

ஒரு குடும்பத்தின் அதிகாரம் குடும்ப தலைவரிடம் இருக்கிறது. அவ்வதிகாரம் தளர்வானால் அக்குடும்பத்தில் அதிகார பரவல்தான் ஏற்படும் அப்புறம் தடிஎடுத்தவரரேல்லாம்  தண்டல்காரனாக இருப்பார்கள். அப்போது குடும்பம் குடும்பமாக இருக்காது. அதிகாரம் இல்லாத தலைவன் இறந்து போனால் அவரின் சொத்தின் உரிமையை மட்டும் எடுத்துகொண்டு அவரை புரகனிப்பார்கள் புரகனிக்கபட்ட குடும்ப தலைவர் இறந்தால்தான் அவருக்கு முழு மரியாதையே கிடைக்கும். பொதுவாக உறவுகள் வாழ்பவர்களை  கவனிக்க மாட்டார்கள்.  செத்தவர்களைதான்  விழுந்து விழுந்து கவனிப்பார்கள் ஏனென்றால் அவர் மீண்டும் வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவர் நினைவுநாளில்  படையல் போட்டு போலியான ஒரு துக்கத்துடன் கவனிப்பார்கள். செத்தவரே இறக்கும்போது கவனிக்க ஆள் இல்லாமல்தான் செத்துபோயிருப்பார். செத்த பிறகு அவரை நினைத்து கொள்கிறோம் என்று அவர்கள் உறவுக்குள் விளம்பரம் தேடிகொள்கிறார்கள்.

வாழ்வு ஒரு நீர்குமிழி:

என்னை கேட்டால் நான் சொல்லுவேன்  "எதுவும் எதுவும்மில்லை அதுவும் அதுவுமில்லை" அது உடலும் இல்லை உள்ளமும் இல்லை எல்லாமே நீர்குமிழிதான். இந்த நீர்குமிழி போடும் வடிவம்தான் வாழ்கை. நம்மிடம் அடக்கப்பட்ட ஒன்றின் வெளிபாடுதான் வார்த்தைகளாக வரும். வார்த்தை தூய்மை எல்லாம் அவர் அவர் வெளிப்பாடு, என்னை பொறுத்தவரை விழிப்புணர்வு கொள். விழிப்புணர்வுடன் இரு...இதுதான் மிகவும்  உன்னதமான வார்த்தை. ஒருவர் விழிப்புணர்வில் நிலைகொண்டால் எல்லாமே அடங்கிவிடும் எல்லாமே மறைந்துவிடும், அங்கு எதார்த்தம் ஒன்றே இருக்கும். முழு வாழ்வும் புரிதலான வாழ்வாய் இருக்கும்.  நான் சுட்டெரிக்கும் சூரியன்.....! என்று மனம் சொல்லும். உன்மையிலே நாம் சுட்டெரிக்கும் சூரியனா.? அப்படி இருந்தால் யாருக்காவது நாம்  பயன்படுவோமா.? மனதுக்கு தன்னையும் அழித்து கொண்டு பிறரையும் அழிக்கும் வேலையைத்தான் நடத்தும். மனம் அதன் தனித்துவத்தை இழந்து தன்னை என்றும் ஒன்றோடு ஒன்று அடையாலபடுத்தியே வெளிப்படும். அதனால் மனத்தின் போக்கை அறிவதை விட வாழ்வின் எதார்த்த போக்கை அறியலாம். 

பரிணாம வளர்ச்சியில் சிதைபடும் உறுப்புகள்:

பயன்படுத்தாத உறுப்புக்குகள் பரிமாண வளர்ச்சியில் இல்லாமல் போகும். உணவை மென்று தின்னத்தான் பற்கள் ஆனால் ஏனோ தானோ என்றுதான் உண்ணுகின்றனர். இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதனின் பல் சிறிதாக போய்விடுமாம் இது விஞ்ஞான தகவல். நொறுங்கி தின்றால் நூறு வயது வாழலாம் எனபது ஒரு பழமொழி அதனால் ஜீரண உறுப்புகளுக்கு அதிக வேலைகொடுக்காமல் உணவை நன்கு மென்று தின்போம் பரிணாம வளர்ச்சியில் சிதைபடாமல் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்போம்.

எதை தேர்ந்தெடுப்பது:

பிரச்சனைகளுக்கான காரணங்களை எளிதாக அலசிவிடுகிறோம் ஆனால் பிரச்சனையில் இருப்பது எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கிறது.  எவ்வளவு சிரமபடவேண்டிருக்கு...ஒருவர் "ஆபாச படங்கள் இணையத்தில் அதிகம் இருக்கிறது. அதை எல்லாம் தடை செய்யவேண்டும்" என்கின்றார். எவ்வளவுதான் தடை செய்வார்கள். தடுத்து வைத்தால்தான் தடைகளை மீறும் மனம்.  காய்கறிகளில்  நல்லது எது.? சொத்தை எது.? என்று தேர்ந்தெடுத்து வாங்குவதுபோல் நல்ல தகவல்களை தேர்ந்தெடுத்து படியுங்கள். நீங்கள் விழிப்புடன் இருக்கும் வரை உங்களை யாரும் முட்டாளாக்க முடியாது.

இணைத்தலின் சூத்திரம்:

பெரிதாக நினைத்தால் சிறிது தானாக அடங்கிவிடும். அதாவது பாடத்தில் பெரிய கணக்கு போட்டால் சிறிய கணக்கு விடை எளிதாக தெரிந்துவிடும். பெருந்தன்மையாக நடந்தால் சிறுபுத்தி மறைந்துவிடும். ஒன்றுபட்டு தமிழர் உணர்வுடன் ஒற்றுமையுடன் இருந்தால் ஜாதி தானாக மறைந்துவிடும். இணைத்தலின் சூத்திரம் இதுதான் ஆனா ஒன்றுபட்டு இருப்பதுதான் பல பேருக்கு கடினமாக இருக்கிறது. இருப்பது கடினம் என்றால் பெறுவதும் கடினமாகும். அதனால் போதியமட்டும் ஜாதி,மத பேதம் இல்லாமல் சமத்துவமாக இணைந்திருப்போம்.  என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு-இல்
பதியவும் ...நன்றி.)

Tuesday, February 1, 2011

'உண்மை'யை ஏற்பவர்கள் படிக்கலாம்....இந்த முட்டாள், அறிவாளி என்ற சொற்களில்தான் எவ்வளவு பாகுபாடு. அறிந்தேதேல்லாம் அறிவாகுமா.? நயவங்கஜமான அறியாவாளியாய் ஒருவன் இருப்பதை விட முட்டாளாகவே இருந்து விடலாம். அவனால் தன்னை தவிர யாருக்கும் ஒரு கெடுதலும் நேராது ஆனால் எல்லோரும் தன்னை ஒரு அறிவாளி என்று பிரகனபடுத்த என்றும் முயற்சித்துகொண்டுயிருக்கிறார்கள். தன்னுடைய முட்டாள்த்தனத்தை மறைத்துக்கொண்டு..! சிலநேரங்களில் நானும் இந்த முட்டாள்தனத்தை செய்கின்றேன். ஒருவரை நாம் அறிவாளி என்று சொல்ல அவர் வீட்டில் இருக்கும் புத்தக அலமாரி கூட  அவருக்கு விளம்பரம் தேடிகொடுகிறது. வீட்டிற்குள் வரும் மக்களை அழகுபடுத்தும் புத்தக அலமாரிகள். அழகுக்கு மட்டும்தான் பயன்படுகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா.? மதங்கள் ஒன்றாக அமரும் இடமும்    "புத்தக அலமாரி"தான். கீதையும், குரானும் கட்டி தழுவி கொண்டிருக்கும். ஆனால் புத்தகங்களில் மட்டும்தான் தழுவல் இருக்கும் அந்த மதங்களை சார்ந்த மனிதர்களில் என்றும் இருக்காது.   மதங்களில் உள்ள மூடபழக்க வழக்கங்கள் ஒழியவேண்டும் அப்போதுதான் மனிதத்துவம், மனித நேயம் காணும். இவை காணவேண்டும் என்றால் அறிவியல் வளர்ச்சி அபரிதமான அளவில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அறிவியலில் அறிந்ததை ஆதாரமாக்கி அறிவின்மையை அழிக்கலாம். அறிந்ததையே இன்னும் பகுத்தாய்ந்து பகுத்தறிவாளனாய் மாற்றலாம், நாமும் மாறலாம்.  அதனால் நித்தம் நொடிபொழுதும் அறிவியலின் படைப்பில் புதிய குழந்தையாக நாம் பிறபெடுப்போம்.

அறிவார்ந்த ஒரு மொழியை கற்றவரின் நற்சிந்தனை சில,பல மொழி கற்றவரின் அறிவுக்கு ஈடாகுமா.? என்றால் அது ஈடாகமல்தான் இருக்கும். ஒருவரின் சிந்தனைகள் என்றும்  படைக்கப்படும் படைப்பை உண்டாக்கும். ஆனால் அதன் 'மொழி அறிவு' படைப்பின் வளர்ச்சிக்கு பயன்படும். மொழியை மொழி மாற்றம் செய்ய வேண்டுமானால் பிற மொழி தேவை படலாம் ஆனால் நம் சிந்தனை கருத்துகள், அதன் படைப்புகள் எல்லாம் நம் தாய்மொழியிலே வெளிபடவேண்டும். எவர் ஒருவர் தன் தாய் மொழியை சிறந்து கற்று உணர்பவரே அவரே கருத்துள்ள சிந்தனைக்கு உரியவராக இருப்பார். சிந்தனையில்  தன்னை மற்றவர் முன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றும் முன்னிலைபடுத்தி கொள்ளவேண்டும், அடையாளபடுத்தி கொள்ளவேண்டும்  என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் அதிகமாக இருக்கும். இதில் முன்னிலைபடுத்துதல் எனபது  அதிகாரத்துடன் சேர்ந்து வரும்போது படுமோசமான விளைவுகள்குடியதாக இருக்கும். அதுவே அறிவின் ஊடாக முன்னிலைபடுத்தும்போது ஆணவம் கொண்டால் அதுவும் மோசமாகதான் இருக்கும். இதில்  வசதி மூலமாக உறவின் முன் தங்கள் முன்னிலைபடுத்தினால் அது உறவை மதிக்காததனமாக இருக்கும். தனக்காக வாழாமல் பிறர் பார்க்கவேண்டும் என்று வாழ்ந்தால் அது தன் சுயநல ஆசையை முன்னிலைபடுத்தியதாக இருக்கும். இப்படியே முன்னிலைபடுத்துவதுதான் ஒருவரின் வாழ்வாக என்றும் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. அவர் குணங்கள் மாறாமல்....

நேற்றிய அழிவு இன்றிய ஆக்கமாக பயன்படுகிறது. காலம் மெல்ல விழுங்கும் சக்தி படைத்தது. எனக்கு தெரிந்த நண்பன் எதிர்பாராமல் மேலே கல் எறிந்த போது அது அந்த பக்கமாக வந்த ஒருவர் மண்டையில் பட்டுவிட்டது. நாங்கள் பதறியடித்துக்கொண்டு கிட்ட போய் பார்த்தோம் அவருக்கு ரத்த காயங்கள் எதுவும் இல்லை ஆனால் அவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார். பின்பு அவரை தண்ணீர் தெளித்து. நான் நண்பரை கடிந்துகொண்டு அவரை எழுப்பும் போது அவர் ஏதோ...சந்தோசம் கொண்டவர்போல் எழுந்தார். தலையை முன்னும் பின்னுமாக ஆட்டினார். ஆ.! என்று அதிசயத்தார். அவர் சொன்னார் "பல மாதங்களாக இருந்த என் தலைவலி இப்போது இல்லை. எனக்கு கல்லடிபட்டது வேதனை என்றாலும் இப்போது தலைவலி போனதை நினைத்து ரொம்ப சந்தோசம்" என்று நண்பனிடம் நன்றி சொல்லிவிட்டு சென்றார். இப்போது நான் நண்பனை பார்த்தேன். எனக்கு அவன் மேல் இருந்த கோவம் மாறி எனக்கும் ஆச்சரியம் வந்தது. இப்போது நான் நண்பனை வாழ்த்துவதா.? இல்லை திட்டுவதா.? என்று எனக்கு குழப்பம் வந்துவிட்டது. முன்னர் செய்த செயல் குற்றம் பின்னர் நடந்த செயல் அற்புதம்.

வெயில் கடுமையை உணர்ந்தவனுக்கு மழையின் பொழிவையும் எதிர்பார்த்து அதை உணரத்தான் செய்வான். உணர்ந்து மீண்டும்  வெயிலுக்காக காத்திருப்பான் மழையின் பொழிவை ஏற்கனவே  உணர்ந்ததால்  இப்போது வெயிலின் கடுமை அவனை ஒன்றும்  பாதிப்பதில்லை பின்னால் மழை வரும் என்று அவன் நன்றாக உணர்ந்தவனாக இருப்பான். இப்படியே பருவ காலங்களை மாறி மாறி பார்த்தவனுக்கு அவனின் வலி எங்கே.? வேதனை எங்கே.? எல்லாம் சமமாகி நீரோட்டமாய் போய்விடும். ஒன்றில் உள்ளே இன்னொன்றும் உள்ளது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. சேர் அசிங்கம் என்று நாம் நினைத்தால் அழகான செந்தாமரையாய் காணமுடியாது. வலியான வேதனை வேண்டாம் என்றால் பூமாறி பொழியும் இன்பத்தை நாம்  ரசிக்க முடியாது. இயற்கையின் படைப்பில் எல்லாமே ஏற்க்ககுடியது வெறுப்பதாய் இருந்தால் இயற்கை எதுவும் நமக்கு படைக்கபட்டிருக்காது.

பொதுவான நியாயமான விஷயங்கள் சொல்வதற்கும் ஒரு நயம் வேண்டும் போல இருக்கிறது. நாம் கொஞ்சம் கோவம் கலந்து நியாயத்தை சொன்னால் கேட்பவருக்கு அந்நியாயம் கூட அநியாயாமாக போகிறது.  நாம் ஒருவருக்கு  நியாயமான விளக்கம் கொடுத்து வந்து கொண்டே இருப்போம் கடைசியாக  "நான் சொல்வது உனக்கு புத்தி இருந்தால் புரிந்துகொள்வாய்" என்று முடித்தால் அவ்வளவுதான் நாம் சொன்ன நியாயங்கள் எதுவும் அவர் ஏற்றுகொள்ள மாட்டார். நம் நியாயத்தை விட அதுனுடன் சேர்ந்து வரும் அன்பான நியாயத்தைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

நம் எண்ணம்தான் செயலுக்கு வடிவம் கொடுகிறது. நாம் எல்லோரும் நினைக்கும் எண்ணங்களை வெளியில் சொன்னால் மனித இனமே இருக்காது. நம் எண்ணம் அறிவால் தடுக்கபட்டுதான் செயலாக வருகிறது அதில் நல்லது, தீயது என்று பிரிகிறது. எல்லாவற்றிக்கும் எண்ணம்தான் ஆதாரமாக உள்ளது. இதில் உடல் வெறும் கருவிதான். எண்ணம்  ஒடசொன்னால் ஓடும் நில் என்றால் நிற்கும். இதில் நம் எண்ணத்தைதான் சரியான முறையில் நாம் பயன்படுத்தவேண்டும் அப்படி பயன்படுத்தினால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும்  வெற்றி கிடைக்கும். இதைதான் ஏசுபிரான் சொன்னார் " தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கபடும்" என்று.  நம் எண்ணத்திற்கும் அற்புதமான   பிரபஞ்சதிற்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. நம் எண்ணத்தின் வேகத்தை நாம் எப்போது உணரலாம் என்றால்  நாம் செயல் மற்றவரால் செயல் தடுக்கபடும்போதும், நம்மிடம் ஒருவித தடுமாற்றம் ஏற்படும்போதும்  அதாவது உங்களை ஒருவர் கோவப்பட்டு திட்டும்போதும், அடிக்கும்போதும் எண்ணத்தின் வேகம் அதிகமாக இருக்கும். நம்மிடம் அமைதி  நிலையிலும் எண்ணம் வேகமாகத்தான் இருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் உங்கள் எண்ணங்களை கவனியுங்கள் ஏற்கனவே நடந்ததை, நடப்பதை  எண்ணிகொண்டிருக்கும். உங்கள் எண்ணங்களை கவனியுங்கள். நிச்சயம் வாழ்வு நலம் பயக்கும். கண்ணை திறந்தால் பார்க்கும் காட்சிகள் எண்ணங்கலாகிறது . கண்ணை மூடினால் எண்ணங்களே காட்சிகலாகிறது. காட்சிகளை கவனித்தால் எண்ணங்கள் விழ்கிறது. எண்ணங்கள் இல்லாத இடத்தில் புதிய காட்சி தோன்றுகிறது. அது அழியா காட்சியாய் இருக்கிறது. அது புத்தன் கண்ட காட்சியை இருக்கிறது. அதனால் மீண்டும் சொல்கிறேன் எண்ணங்களை கவனியுங்கள் புதிய தரிசனம் காணலாம்.

கற்பனைகளை உண்மையாக்குவதுதான் பெரிய சாவலே அடங்கிருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை செய்த மனிதன் அதை உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் 'ரைட் சகோதரர்களால்' உண்மையாக்கபட்டது. நாம் சொல்லும் கற்பனை அல்லாத உண்மையை இறுகிய நிலையில் சொன்னால் இறுகிய நிலையிலே கேட்பவர்களும் உண்டு. அதனால் எனக்கு இறுகிய நிலை இல்லாமல் உங்களுக்கு நன்கு புரியும் நிலையில் இயல்பான நடையிலே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். மீண்டும் உங்கள் ஆதரவுடன்........நன்றி..!என்றும் நட்புடன்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு
பதியவும் ...நன்றி.)

Thursday, January 27, 2011

நீ நினைப்பதைத்தான் நானும் நினைக்கின்றேன்.


கட்டளை இடுபவன் தலைவனாகிறான். செயல்படுத்துபவன்தான் செயலாலாளர் ஆகிறான் ஆனால் தலையை விட வால்கலே நாட்டில் ரொம்ப ஆடுகிறது. தலைவனே ஒரு அடிமை. இந்த அடிமைக்கு ஒரு அடிமை  கிடைத்துவிட்டால் சும்மா இருந்துவிடுவானா.? தான் எப்படி எல்லாம்   அடிமைபட்டோம் என்று தன் அடிமைத்தனத்தை அந்த அடிமைமேல் சுமத்தி அடிமையாக்க என்றும்  நினைப்பான். இதுதான் இப்போது இருக்கும் அதிகார ஆளும்  அடிமைகளின் குணம். இந்த அடிமைகள் இப்பொழுது வாழும் நாட்டில் மத அடிமைகளாகவும் , ஜாதி அடிமைகளாகவும், அதிகார அடிமைகளாகவும் புற்றிசல்போல் பரவி இருக்கிறது. இவ்வடிமைகளின் குணம் ஆணவம் கொள்ளும் மனதை கொண்டதுதான் அது அன்பை விரும்பாது வெறுப்பைத்தான் விரும்பும் அடிமைதனத்தைதான் என்றும் ஏற்கும்.

நம்மில் பலபேர்  நண்பர்களைவிட எதிரியைத்தான் அதிகமாக தேடுகிறோம். பல எதிரிபோல் இருக்கும் திருடன்கள் திருடாத நம்மிடம்  கூட்டு வைத்தால்  மற்றவருக்கும் நாமும் திருடியவனாகத்தான்  தெரிவோம். இதில் நேர்மை என்ற கண்ணிருந்தும் அவன் குருடன்தான். உணர்விருந்தும் அவன் ஜடம்தான். நம் நியமான கருத்துக்கு எதிர்ப்பு இருக்கும்வரை அக்கருத்துள்ள எதிர்பாளர்களும் இருப்பார்கள் இருக்கத்தான் செய்வார்கள். தன் உணர்வே சிறந்தது தம் கருத்தே நியாயமானது என்று நினைப்பது ஏற்புடையதாக இருக்காது. காலத்தால் பல கருத்துகளும் கறுத்துதான் போகிறது. உண்மையான கருத்தே கருத்துகளை தாங்கி நிற்கிறது. ஆத்திக கருத்துடையோர் இருக்கும் வரை நாத்திக கருத்தும் இருக்கும்.

ஒருவருக்கு பொழப்பு வேண்டும் என்றால் எதிர்க்கும் இன்னொன்றும் இருந்தாகவேண்டி இருக்கிறது. நம்மில் யாருக்கும் நோயே இல்லையென்றால் டாக்டர் பொழப்பு எப்படி நடக்கும். யாருமே சாகவில்லையென்றால் அதை நம்பி இருப்பவர்களுக்கு எங்கே பொழப்பு...ஒன்றின் விழ்ச்சிதான் இன்னொன்றின் தொடக்கமாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்திற்கு  வேண்டும் என்றால் தொடக்கம்  சொல்லாடல் தேவைபடலாம் ஆனால் வறுமையின் பசியோடு இருப்பவனை இலக்கன சொல்லாடல் கவராது. வறுமையில் உள்ளவனை  சுரண்டும் கூட்டம் என்றும்  சொல்லும் "என்ன மயிருக்குடா நீங்களெல்லாம்  வாழுரிங்க" என்று. இங்கே மயிறு எப்படி அதிகார அழுத்தமாக பயன்படுகிறது பார்த்திர்களா...இதில் வார்த்தையின் பொருளை விட அடக்கும் அதிகாரம்தான் மேலோங்குகிறது. ஒரே வார்த்தையை அன்பாகவும் பயன்படுத்தலாம், அதிகாரமாகவும் பயன்படுத்தலாம் இவை எல்லாம் அவர் அவர் குணங்களை பொறுத்து அமைகிறது. நமக்கு அன்புதான் வேண்டுமே தவிர அதிகாரம்மில்லை அதுவும் சுரண்டி தின்னும் ஆளும் அதிகாரம்மில்லை.

ரோஜா மென்மையுடன் மேன்மையானாலும் அது முட்கள் பாதுகாப்புடன்தான் பூக்கின்றது..எல்லோரிடமும் சுயமரியாதை ஒன்று உள்ளது. முட்டாளும் இதை விரும்புவான்.    'திமீர்தனம்' ஒன்று உள்ளது. இது நியாய, அநியாய அடிபடையில் தன் தவறுகளை திருத்தி கொள்ளும். ஆனால் அடங்கா திமிர்தனம் என்று உள்ளது. அது ஆணுக்கும் உள்ளது. பெண்ணுக்கும் உள்ளது. இந்த திமிர்தனம் மெத்த தெரிந்த ஒட்டுமொத்த ஆணவத்தின் வெளிபாடு. இதனின் ஆரம்பம்  நல்லதாக  இருக்கும் ஆனால் முடிவு இதற்கு பெரும்சோகதான். ஆணவம் முதலில் பிறரை அழிக்கும் பின்    ஆணவம் கொண்டவரையே அழிக்கும்.  நாட்டில் மூன்று வகை பிரிவு மக்கள் இருக்கிறார்கள்.  1.அநியாயங்களை எதிர்த்து போராடுபவர்கள் (பொதுநலவாதிகள்) 2.அநியாயம் நடந்தாலும் எதிர்ப்பு காட்டாமல் ஒதுங்கி செல்பவர்கள் (பல குடும்ப தலைவர்கள்) 3.எப்பவுமே அநியாயம் செய்பவர்கள். (ஆளும் அதிகாரம் படைத்தவர்கள்) இவர்களின் தேவை பொறுத்தே மக்களின் வாழ்வு நகர்கிறது. நியாயங்களை, உண்மைகளை  மக்கள் ஓரளவுக்கு ஏற்றுகொண்டாலும் அது பொய்யாக்கும் வேலைத்தான் அதிகம் நடக்கிறது. மக்களுக்கு கொள்கைகளை முன்னிறுத்தி செல்வதில் அதை  சொல்வதில் கூட ஒரு வித சுயநலம் உள்ளது. கொள்கைகள் எல்லாம் எப்படி உருவாகிறது இன்று நாம் பார்த்தோமானால். கொள்கை வகுப்பவர் பார்த்தது, கேட்டது, அனுபவித்தது எல்லாம் கலந்துதான் ஒரு கொள்கை வடிவம் அவர் பெறுகிறார். இப்படி பார்க்கும் போது அவர் நலன் சார்ந்து பாதிக்கப்பட்ட  ஒரு சுயநலம் உள்ளது என்ன அச்சுயநலம் உருவமில்லாமல் பொதுநலமாய் மாறுவதுதான் என்றும் நடக்கும் அதிசயம். நம் கொள்கைகள் எல்லாமே ஒரு நலனுக்கு உட்பட்டதுதான். அம்மா குழந்தையை அன்புடன் வளர்கிறாள் பாசம் காட்டுகிறாள் பரிவுடன் இருக்கிறாள் என்றால் அது பார்பவருக்கு அக்குழந்தையின் பொதுநலன்தான் ஆனால் அக்குழந்தையின் பாதுகாப்பு பிற்காலத்தில் தனக்கும் கிடைக்கவேண்டும் என்ற சுயநலமும் அதில் அடங்கிருக்கு.  இதனால்தான் பல வீட்டில் மாமியார், மருமகள் பிரச்சனையே வருகிறது. மருமகளால் தன் சுயபாதுகாப்புக்கு ஆபத்து வருமோ என்று பல தாய்கள் பயபடுவதுண்டு. இது ஒருவித சுயநல அடிப்படையில் சார்ந்ததுதான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உண்டு. அதில் தலையிட கூடாது. என்றால் அது எது மாதிரி சுதந்திரம் என்பதுதான் முதலில் கவனிக்கப்படவேண்டும். போலியில் உழன்று போலியாக ஒரு சுதந்திரம் இருக்க அதை ஏன்,? எதற்கு.? என்று கேட்க கூடாது...தாரலாமாய் கேட்கலாம். இந்த சுதந்திரத்தை கேட்பது தவறில்லை...பல பெண்களுக்கு சமையல்கட்டு, கணவன், குழந்தைகள் என்று அவள் இறுதி வாழ்வை முடித்து கொள்கிறார்கள். கேட்டால் அது அவளுக்கு சுதந்திரம்தான் என்பாள் வெளியுலகம் காணாதவரை அவளுக்கு அது சுதந்திரம்தான். இவை இத்சுதந்திரம் கவனிக்கபடுவது  தனி சுதந்திரம் பெரும்பாலும்  மூடநம்பிக்கை கொண்டே வருகிறது. அது சொந்த மதத்தில் நிலையில் மட்டும் பார்த்தால் அது  பகுத்தறிவாளர்களுக்கு ஏற்புடையதாக என்றும் இருப்பதில்லை எல்லோரும் மனிதர்கள் என்று நினைக்கும் போது மனிதன் சார்ந்த நிலைகளும் அதன் பகட்டு சுதந்திரம் தழுவிய மூடபழக்கங்களும் குறிப்பிடபடுபவைதான் அவை மதம், இனம், மொழி எவ்வகையதும் சார்ந்ததுதான். இதில் பாகுபாடு கிடையாது. உண்மை ஜனநாயக சுதந்திரம் எனபது சுதந்திர கருத்துடன் பேசுவது அப்பேசும் சுதந்திரத்திற்கு தடை விதிப்பதில்லை. அப்படி விதித்தால் அது ஜனநாயகமே இல்லை அது ஒரு சர்வாதிகாரத்தனம். சில நாட்டில் மதங்கள் சார்ந்த நிலையிலே அதன் சட்டங்களுக்கு இருக்கிறதால் அங்கு பேச்சு சுதந்திரத்திற்கு எழுத்து சுதந்திரத்திற்கு ஏது மரியாதை இருக்கிறது. அங்கு அடக்குமுறைதான் இருக்கும். ஆனால் காலம் மாறும் போது பல காட்சிகளும் உடைக்கபட்டுதான் ஆகவேண்டும்.

ஒருவரின் வயதை அவரின் அனுபவ முதிர்ச்சியாய் கொள்ளமுடியுமா.?  வயது முதிர்ச்சில் ஒருவர் அனுபவத்தை அனுபவமாக கொள்ள முடியாது. ஏனென்றால் இன்னும் பெரிய மனிதர் என்ற போர்வையில் டவுசர் போட்ட சின்ன பையன்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருவனின் முதிர்ச்சி எனபது அவன், பிறவி தாய், தந்தை குணம், வசிக்கும் இருப்பிட குணம், படிப்பில் தெளிந்த குணம், நடைமுறை வாழ்வில் அறிந்த குணம் இவையாவும் அவனுக்கும் அவனை சார்ந்த பிறருக்கும் பயன்படுபவதாக இருந்தால் அது அவனின் முதிர்ச்சி அனுபவமாக இருக்கும். இது இல்லாமல்  வெறும் வயது முதிர்ச்சியை மட்டும் வைத்து ஒருவர் அனுபவ முதிர்ச்சியை சமன் செய்யமுடியாது.

அழுதே காரியம் சாதிப்பவர்கள் இருக்கிறார்கள். அதிகாரம் செய்து காரியம் சாதிபவர்களும் இருக்கிறார்கள். நியாமான உரிமையை போராடி பெறுபவர்களுக்கும் இருக்கிறார்கள். இதில் நான் நியாயமான உணர்வின் வார்த்தைகளை எழுதி கருத்தை திணிக்காமல் உங்கள் பகுத்தாயும் அறிவில் உட்புகுத்தவே என்றும் இருக்கின்றேன். என்றும் உங்கள் ஆதரவுடன்....

  
என்றும் நட்புடன்:Thursday, January 6, 2011

வளர்ந்த குழந்தையின் அவநம்பிக்கை ஆழமானது....


ஒரு குழந்தையின் நம்பிக்கை எப்படி வளர்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஏதும் நம்பிக்கை இல்லாமல்தான் சுதந்திர சிந்தனையுடந்தான் பிறக்கிறது ஆனால் அது சுதந்திரத்தை சாதி, மதம், ஒழிங்கின கல்வி போதனை, அதன் கேள்விஞான அறிவை சீர்குலைத்தல் போன்றவை எல்லாம் ஒட்டுமொத்தமாக இந்த சமுதாயத்தால் இழக்கிறது.

 இந்த சமுதாயத்தில் குழந்தைகள் மதம் மற்றும் பிற நம்பிக்கையில் ஊறி வளரும் குழந்தைகள் அம்மதங்களை ஆராயாமல் கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே சொல்வதை நம்பிக்கை என்ற பேரில் எற்றுகொள்கிறது. குழந்தை குழந்தையாக இருக்காது  இப்போது வளர்ந்து ஆளாய்  இருக்கும். மற்றும் மன திடமும், உடல்பலமும்  கொண்டவனாய் இருக்கும். இப்போது இவன் நம்பிய மதத்தினை  பிறர்  விமர்சனம் செய்யப்படும்போது. இவனின் நம்பிக்கையின் ஆணிவேரே கொஞ்சம் தளர்வடையும் ஆட்டம்காணும்.  இதை இவன் என்றும் விரும்பமாட்டான். அடுத்து  இவனின் மத நம்பிக்கையை  காப்பதற்கு மத ஆளுமை பிறரின் துணையுடன்  நடத்துவான். இது அடங்கா வன்முறையில் போய் முடியும்.  இதுபோன்ற அடங்கா ஆளுமைதான் எல்லா மத, மார்க்கங்களிலும் நடக்கிறது.

குழந்தையில் நாம் ஏதோ அற்பமாக விதைத்த விதைதான் இன்று இவன் மனதில் ஆழமாக நம்பிக்கை வேறாகி போனது. இதில் இவனின்   போலி நம்பிக்கையை உடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல..அவனின் நம்பிக்கை மண்ணில் ஊன்ற எவ்வளவு வருடம் எடுத்து கொண்டதோ..அதுபோல் அன்னம்பிக்கையை உடைபதர்க்கும் பல வருடம் ஆகும். இது அறிவியல் படைப்பால் நிகழும் சாதனையால் சீக்கிரம் உடைத்து காட்டலாம்.

இப்பதிவில் நான் கூறுவது என்னவென்றால் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் போது அது கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே நம்ப ஆரபிக்கும். பின் அதில் விமர்சனம் ஏற்படும்போது வளர்ந்த மீசை வைத்த குழந்தையால் தாங்கி கொள்ள முடியாது. அது ஏதோ ஒரு பற்றுதலுடன்தான் வாழ முற்படுகிறது. அந்த பற்றுதல் நாம் திணிக்கும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருக்க கூடாது.

குழந்தைகளுக்கு கோவில், சர்ச்,  மசூதி என்று எதுவும் தெரியாது. நாம்தான் அதற்கு அறிமுகபடுத்திகிறோம் வன்முறை நம்பிக்கையை விதைக்கிறோம். இதில் எதையும் விதைக்காமல், எங்கையும்  அழைத்து கொண்டு போகாமல் அவன் கேள்வி கேட்கும் வரை காத்திருங்கள். அவன் விருப்பட்டால் அவனே தேர்தேடுக்கட்டும் மறுபடியும் சொல்கிறேன் வளர்ந்த மனிதனின் பொய்யான நம்பிக்கையை உடைப்பது அவன் எடுத்துக்கொண்ட காலம் போல் ஆகும். இதில் சிரமம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் குழந்தையிடம் எளிதாக ஞான கேள்வியான நம்பிக்கையை உண்டாக்கலாம். அதனால்தான் முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வளர்ச்சியான, லஞ்சம் ஏதும் அற்ற இந்தியா வரவேண்டும் என்றால் குழந்தைகளிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்று புரிந்துகொண்டு செயல்படுத்தி கொண்டிருக்கிறார். அவர் காண்பது வளர்ச்சி. நாம் காண்பது பகுத்தாயும்  வளர்ச்சி சிந்தனை அதனால்  குழந்தையை சுதந்திரமாக வளர அனுமதியுங்கள். நாளைய சமுதாயம் பகுத்தறியும் சமுகதாயமாக ஜாதி, மத பூசல் இல்லாமல் நல்வழிபாதையில் பயணிக்க வேண்டும் ...இதுவே நம் விருப்பமாக இருக்கவேண்டும்.


 
          
என்றும் நட்புடன்: