Pages

Sunday, September 5, 2010

மாணவர்களை முட்டாளாக்கும் ஆசிரியர் தினம்...முன்னால் ஆசிரியராக இருந்து இந்தியாவின் ஜனாதிபதியான  டாக்டர். இராதாகிருஷ்ணனன் பிறந்தநாள் நினைவாக இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினம் நாடுமுழுவதும் கொண்டாடபடுகிறது. இந்தியாவில் 68% கல்வியறிவு பெற்றுள்ளது. முழு கல்வி அறிவு பெற போராடி கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாடு 75% கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரி கல்வியறிவை விட அதிகம். பாராட்டபடவேண்டியவை...


ஒரு நாட்டின் முட்டாள்கள் எங்கு உற்பத்தி பண்ணி அனுப்படுகிறார்கள் என்றால் அது  பள்ளிகளிலும், பல்கலைகழங்களிளும்தான் என்று கூறலாம். ஜாதி, மதம் இங்கிருந்தே துற்றபடுகிறது. பிள்ளையை பள்ளியில் சேர்க்கும் போதே ஜாதி இணைப்பு நுழைகிறது. பின்பு ஜாதி பிரிவு அடிப்படையில் தரம் பிரிக்கபடுகிறது. அதன்பின் என்ன மதத்தை சார்ந்தவன் எனபது வருகிறது.

இன்று அரசின் கல்விகொள்கை ஒரு விதமாக இருந்தாலும் தனியாக நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் முழுக்க முழுக்க ஜாதி, மத அடிபடையில்தான் இயங்குகிறது. ஒரு இந்து நிர்வாகியால் நடத்தப்படும் பள்ளி அதில் இயங்கும் நிலைகள் இந்து மதம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது...உதாரணமாக என் நண்பரின் மகன் ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறான். அங்கே காலை தேசிய கீத வாழ்த்துப்பாடல் எல்லாம் முடிந்தவுடன் கடைசியாக ஓம் விஷ்ணு, ஓம் நாராயண...என்று மந்திர பாடல் பாடவைக்கிறார்கள். அப்பள்ளியில் இந்து குழந்தைகள் தவிர கிறிஸ்டின், இஸ்லாமிய குழந்தைகளும் படிகின்றன...அக்குழந்தைகள் அதை பாடவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை...ஆனால் மறைமுகமாக பின்பற்ற வைக்கிறார்கள். இந்த இந்து பள்ளிபோலதான் பல கிறிஸ்டியன், இஸ்லாமிய பள்ளியிலும் குழந்தைகளுக்கு மறைமுகமாக மதம் வளர்ப்பு ஆரம்பகட்டமாக  நடக்கபடுகிறது. "பிஞ்சு மனதில் நஞ்சை வளர்கிறார்கள். இவர்கள் சுயநலத்திற்கு...இவர்கள்தான் நல்லாசிரியர் ஆகிறார்கள். விருதுகள் வாங்கும் தகுதியை  பெறுகிறார்கள்.                   

"சொல்வதை சொல்லுமாம் கிளி பிள்ளை" இதுபோலதான் உள்ளது.  மாணவர்களை சுதந்திரமாக சிந்திக்ககுடியதாக இல்லை இன்றைய கல்வியறிவு புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து பரிட்சையில் படித்ததை வாந்தி எடுக்கும் நிலையில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். புரியவைத்து கல்வி புகட்டபடுவதில்லை...இன்று சமசீர் கல்வி தமிழகத்தில் கொண்டுவந்துதிருகிறார்கள் இவை எவ்வாறு செயல்படும் எனபது போகபோகதான் தெரியும்.

காலையில் செய்திதாளில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. அது சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும்  மாணவர்கள் இன்று ஆசிரியார் தினம் என்பதால்  ஆசிரியர் கால்களுக்கு பாத பூஜை செய்தார்களாம். பாத பூஜை எனபது இந்து மதத்தை தவிர எந்த மதத்தில் செய்யபடுகிறது. என்று எனக்கு தெரியவில்லை. இதில் அந்த பள்ளியில் மற்ற மதத்து பிள்ளைகளும் இருக்கும் அல்லவா...இது மறைமுக மத புகுத்தல் வேலைதானே..அதுவும் இல்லாமல் இந்த காலில் விழும் வழக்கத்தை பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதைனையாக இருக்கிறது. இதுபோலதான் நமது கல்வின் தரம் சுயசிந்தனை அற்று, சுயமரியாதை இழந்த   நிலையில் செயல்படுகிறது. அதனால் மறுபடியும் சொல்கிறேன்.  "ஒரு நாட்டின் முட்டாள்கள், அதிமேதாவி முட்டாள்கள்  பள்ளிகளிலும், பல்கலைகழங்களிடமிருந்தான்  உற்பத்தி செய்து  அனுப்படுகிறார்கள்...உற்பத்தி என்றும் நிற்காமல்...!


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

9 comments: