Pages

Wednesday, September 15, 2010

என் கேள்விக்கான பதில் என் எண்ணத்தில் இருந்தே.....

 
நம் தமிழ் மொழியில் நிறைவு பெற்ற நிலை உள்ளதா...?

இது தமிழ் மொழியில மட்டும் இல்லை எல்லா மொழியிலும் நிறைவு எனபது இல்லை மற்ற மொழி அப்படியெல்லாம் இல்லையென்று நாம் மறுந்தாலும் அப்படிதான்  "உள்ளூர் மாடு வெளியூர் சந்தையில்தான் அதிக விலை போகும்....." எதுவும் நம் அருகில்  இருக்கும் போது அதன் அருமை தெரியாது அது தொலைவில் இருக்கும் போதுதான் அதனை நினைத்து ஏங்கும் மனம்.....இவை மொழிக்கும் பொருந்தும் இது மொழியுணர்வு சார்ந்தது என்று சொல்வதைவிட மனஉணர்வு சார்ந்தது என்று நினைக்கலாம். நம் தாய் படிக்கவில்லையே என்பதற்காக அவளை மாற்றாந்தாய்யாக்க முடியுமா...இவள் பெற்ற மக்கள் படிக்கவில்லை, தெரியவில்லை என்றாலும் நம் தாய் இவள் அல்லவா அதுவும் நமக்கு தமிழ் பாலூட்டிய தமிழ்தாய் அல்லவா... அவளை பழிக்கலாமா...மாற்றம் எனபது மாறாமல் இருப்பது...இதுவும் கடந்துபோகும்...தமிழ் மொழியின் நிறைகளை பாராட்டி குறைகளை சுட்டிகாட்டினால் தமிழ் மொழின் குறையும் கடந்துபோகும்....எல்லாம் நிறைவடைந்த சமுதாயம் எனபது உலகத்தில் எதுவும் இல்லை


வருடத்தின் கொண்டாட ஒவ்வொரு தினம் வருகிறது இவை எதற்கு....? 

உலகத்தில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தினம் வைக்கலாம் போல.அம்மக்கள் தினம் ஒன்று உள்ளது. எல்லா அம்மாவுக்கும் வாழ்த்து சொல்லணும் என்று இருக்கும். எனக்கு தெரிஞ்ச ஒருவர் அவர் அம்மாவுக்கு வாழ்த்து சொல்ல சென்றார் முதியார் இல்லம் நோக்கி ...! இப்படிதான் இருக்கிறது வருடத்தின் பல பல தினங்கள்...அதுபோல புத்தாண்டு தினம் 12 மணி வரவரைக்கும் மக்களுக்கு ஒரே சந்தோசம் எல்லோருக்கும் ஏதோ புது உலகில் நுழைந்தது போல பிரம்மை ஒரே ஆட்டம், பாட்டம்தான் அந்த ஒரு நாள் மட்டும் சென்று வருடம் பூராவும் அவர்கள் களையிழந்து இருப்பாங்க.. இது போன்ற கலையிழந்த தினங்களெல்லாம் நமக்கு தேவையா...?


நம்மை காப்பாத்துமா கடவுள்...?

பலர் என்னை காப்பது என்று கடவுள் கிட்ட முறையிடுவாங்க இதில் அந்த  சாமி எப்படி காப்பாத்தும் அதுக்கே பாதுகாப்பு இல்லாமல்தான் கதவு அதுக்கொரு பூட்டு, சாமி சேத்து வச்சிருக்கும் உண்டியலுக்கு ஒரு பூட்டு, பின்பு கோவில் பாதுகாப்புக்கு ஒரு காவலாளி என்று சாமி பயத்துடனே இருக்க  அதுகிட்ட போய் ஆத்தா மகமாயி என்ன காப்பாத்து என்று கத்தி கதரனா எப்படி ஆத்தா வருவா, அருள் தருவா...


பலபேர் குற்றத்தின் பார்வை எது மாதிரி...?

ஒரு குற்றம் வெளி உலகத்திற்கு தெரியாதவரை அது ஒரு குற்றமாக தெரியாது. அந்த குற்றம் தன நண்பர்களிடம் சொல்லும்போது நண்பர்கள் சொல்லுவார்கள் நீ கில்லாடிடா....உன் திறமை உனக்குத்தான் என்று சொல்லுவாங்க...அதே அவன் மாட்டிகினா கில்லாடி என்று சொன்ன நண்பர்கள் பார்வை அவனை வேறுவிதமாக பார்ப்பார்கள் எனக்கு அப்பவே தெரியும் இவன் எப்படியும் மாட்டிப்பான் என்று சொல்லுவாங்க...         


மனித உறவுகளை கட்டுபடுத்துவது நல்லதா....?

மனித உறவுகளை ஏன் கட்டுபடுத்தவேண்டும்...முதலில் மனித உறவு எனபது எதை மையபடுத்தி இயங்குகின்றது. உறவுகளை சமூக சுழலளிலும், குடும்ப சுழலளிலும் கட்டுபடுத்தலாம் ஆனால் மனித மனங்களை யார் கட்டுபடுத்துவது. கட்டுப்பாடு என்பதே கட்டுபோடுவதுதானே...  கணவனுக்கு மனைவியை மறைமுகமாக கட்டிபோடுவது.... சட்டம் என்ற பொய்மையை காட்டி மக்களை கட்டிபோடுவது இவையாவும் கட்டுபடுத்துதல் என்ற விதியின் கிழ்தானே வருகிறது. காதலன், காதலியாய் இருக்கும் வரை காதல் உறவில் கட்டுபடுத்துதல் இல்லை ஆனால் கல்யாண உறவில் கட்டுபடுத்துதால்தான் மேலோங்கி இருக்கிறது. ஆதலால் கட்டுபாடுகள் இல்லாத மனித உறவுகள்தான் சாத்தியமானது. முதலில் மனிதன் என்பவன் சுதந்திர உணர்வு கொண்டவன். அவனுடைய பேச்சு, சிந்தனை, கருத்து எல்லாம் சுதந்திரம் மிக்கவை. ஆட்டு மந்தைபோல் பின் செல்பவனால் எந்த முன்னேறத்தையும் சமுகம் காணமுடியாது. சுதந்திர உணர்வு கொண்டு தனித்து இயங்குபவனாலே மாற்று கருத்தை சொல்லமுடியும். என் அப்பன் எனக்கு நுழைவதற்கு  வாசற்படிதான். அதில் நுழைந்து வெளி உலகை கண்டு அனுபவித்தது என் உயிர் தன்மை அது எதையும் கட்டுபடுத்துவதில்லை பார்க்கும் இயற்கையே நானாகி போகும் போது இதில் எதை கட்டுபடுத்துவது, எவற்றை கட்டுபடுத்துவது....


நமக்கு யார் உதவி புரிகிறார்கள்...?

புகழ்பவனை விட இகழ்பவன்தான் நமக்கு உதவி புரிகிறான். நம் சிந்தனையை சீண்டி விடுகிறான். சொற்களை வாங்குகிறான். "மலர்ப்பாதையில் நடபதைவிட மலைபாதையில் நடப்பது புதிரானது, புரட்சிமிக்கது."விமர்சனம் செய்பவர்களுக்கு விளக்கம் போதவில்லை என்றால் நாம்... விலகிவிடலாம்....அஞ்சவேண்டியதில்லை. 


மனிதர்கள் அன்பை எப்படி பார்கிறார்கள்....?

எல்லா உயிரினத்திர்க்கும் அன்பு பொதுவானதுதான்...அது முழுமையாக வெளிப்படும்போதுதான் அதன் அழகே வெளிபடுகிறது.  மனிதர்கள் அன்பை பூட்டிய வீட்டிற்குள்ளே இருந்து பார்கின்றனர்.   


நம்மிடம் கேள்விகள் எப்படி வரும்......?

"கேள்விகள் கேட்கும்போதுதான் தேடுதல் தொடங்குகிறது" அதுவரை மனது எதாவது வெந்தது வேகாததை அசைபோட்டுக்கொண்டுதான்  இருக்கும். கேள்வின்னு வரும் போதுதான் சிந்தனை மனத்தால் துண்டபடுகிறது...


மரணம் எப்படி நிகழும்.....?

உடலில் தினமும் ஆயிரகனக்கான செல்கள் சாகின்றன, புதிய செல்கள் பிறக்கின்றன. உடலறுவு கொள்ளும்போது விந்து வெளியேற்றத்தில் சாகிறோம் அங்கு ஆற்றல் இழந்து விருப்பு, வெறுபற்ற நிலையில்  வெறுமையாகிறோம் அது ஒரு மரணத்திற்கு ஒப்பானது...மரணம் எனபது உடலில் இயக்கப்படும் ஆற்றல் நின்றுபோதல். என கொள்ளலாம்... இன்னும் இதை சிறப்பித்து கூறவேண்டும் என்றால்....ஒருவருக்கு மரணம் நிகழ்வது....மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுவது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது விழுவது மரமும் அறியாது, இலையும் அறியாது....மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி விழும்....மரண காயத்தை ஏற்படுத்தாமல்...!                        


கசப்பான நிகழ்வுகளை மறகடிகலாமா....?

நடக்கும் நிகழ்வின் முலம் உண்டாகும்  உணர்சிகளை விழிப்புணர்வுடன் உன்னிப்பாக பார்த்தாலே... மரத்து போவதற்கு பதில் அது இல்லாமலே போகும் அதையும் தாண்டிபோகும் இதற்கு எந்த  செயளையும்  விழிப்புடன் பார்க்கும் பயிற்சி வேண்டும்....நம் இன்பத்திற்கும்,  துன்பத்திற்கும் நூலிழை வித்தியாசம்தான்... கஷ்டம் என்று சொல்ற வேலையும் சுயதேவையான வேலையாக கூட மாற்றலாம்...சிலபேருக்கு படிக்கட்டு ஏறுவதற்கே சிரமம் என்பார்கள் அதையே உடலுக்கு தேவையான பயிற்சி என்று நினைத்தால் துன்பம் எனபது தேவையான இன்பமாக மாறும்...


மனம் எதன் அடிப்படையில் இருக்கிறது.....?

உணர்வுகளில் உண்டாகும் உணர்சிகள் எல்லாமே மனம் சார்ந்தே வருகிறது...மனம் எண்ணத்தை தாங்கி நிற்கிறது எண்ணம் எனபது நடந்தது, நடகின்றது, நடப்பது இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது.... எண்ணத்தை விழிப்புடன் கவனித்தாலே எல்லாமே அடங்கிவிடும்....வேதனை உண்டாக்கும் உணர்ச்சியும் ஒரு கனவுபோல் வந்து மறைந்துவிடும் அது எந்த காயத்தையும் ஏற்படுத்தாமல் சென்றுவிடும்....எதையும் பயிற்சி மூலமே சாத்தியம் அதற்கு பொறுமை ரொம்ப முக்கியம் சகிப்பு தன்மையும் வேண்டும்...நடிகர் கமஹாசன் கூறியது: "ஒத்திகை இல்லாத நாடகமும்; பயிற்சி இல்லாத போரும் கேளிக்குத்தாகும்" எதுவும் எளிமையாக கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பில்லாமல் போகும்...  


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!

என்றும் நட்புடன்:  (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

9 comments: