Pages

Thursday, January 8, 2015

55 வார்த்தைக் கதைகள்

                     நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவுலகில் (Blog)  எழுதுகிறேன். பலவேறு பதிவுகள் எழுதியுள்ளேன். அப்பதிவுகளின் கருத்துகள் பரவலாக பல பேரின் பாராட்டையும், பல பேர் திட்டையும் பெற்றுவந்திருகின்றன.. அதில் ஏற்பட்ட மிகையான அனுபவம் என்னை தொய்வடையாமல் இன்னும் எழுதவே துண்டியது. அது என் எழுத்தாற்றளையும் வளர்த்தது.

                சில காலமாய் நான் பதிவுலகில் எழுதுவதை நிறுத்திருந்தேன். அதற்கு காரணம் முகநூலில் (facebook) எழுதிய சிறு பதிவுகளே போதும் என்றிருந்தேன்.  ஆனால் பல நீண்ட கருத்தாக்க மிக்க பதிவை முகநூலில் பதிவேற்றம் செய்தாலும் சேமிக்கும் நிலையில் முகநூல் இல்லை ஆனால் அது பதிவுலகில்  சாத்தியம். இது காலம் கடந்தும் தலைமுறை தாண்டியும் இருக்கும். அந்த அடிபடையில் கட்டுரை, கவிதை, சிறுகதை போன்ற இலக்கியம் சார்ந்த படைப்புகளை என் பதிவுலகிலே எழுதலாம் என்று  நினைகிறேன்.

                சில சிறுகதைகளை "சிறுகதை.காம்" (இணைப்பு) என்ற இணையத்தில் "லஷ்மிகாந்தன்" என்ற புனைபெயரில் வெளியிட்டுயிருகிறேன். ஆனால் இப்போது என் வலைப்பதிவிலே சில கதைகளை பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன். இக்கதைகள் வெறும் 55 வார்தைகளை மட்டுமே கொண்ட கதைகளாக எழுதியுள்ளேன். படியுங்கள் உங்கள் மேலான கருத்துகளையும் சொல்லுங்கள்...  நன்றி..!


                                    விதை விதைத்தால் அறுவடை நிச்சயம்.

           குழந்தைகளின் சுட்டித்தனம் அதிகமாகவே இருந்தது. அதுவும் வேலுவின் நான்காவது படிக்கும் பையனின் லூட்டி, அவனை மிகவும் எரிச்சலுட்டியது.

                சத்தம் அதிகமாகவே அவன், குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு போய், பிள்ளைகளை அடித்துவிட்டான்.

       “இதுப்போல நீ சும்மா எரிச்சல் படுத்திக்கொண்டிருந்திங்க, உன்னை ஹோஸ்டல்ல சேர்த்துடுவேன். வீட்டுக்கே வரமுடியாது என்று மிரட்டல் தொனியில் சொன்னான்.

                அந்தப் பையன், அவன் சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டுக் கேட்டுக்கொண்டிருந்தான்.


                பல வருடங்கள் கழிந்தது. முதியோர்களின் சத்தம் அங்கு அதிகமாக கேட்க, கனத்த மனதுடன் வேலு உட்கார்ந்துக்கொண்டிருந்தான்

                                                                     பேசினான்; பேசுவான்..
        
அவன் அந்த இயக்கத்தின் முக்கிய பிரிதிநிதி. அன்று உலக மகளிர் தினம், மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசினான்,

         அன்றோ பாரதியும், பெரியாரும் சொன்னார்கள். அதையே இன்று நான் சொல்கிறேன். பெண்களுக்கு எதிராக பாலியல் பலத்காரம் அதிகரித்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்று அவனின் பேச்சில் அனல் பறந்தது.
         அவனின் பேச்சு அன்று மாலை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்தது. அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வேலைக்காரி குனிந்து வீட்டைப் பெறுக்கிக்கொண்டிருந்தாள்.

      அவன் டிவியை பார்க்கவில்லை.                                                                                பொய்க் காதல்

        “நான் இத்தனை வருடம் காதலிச்சும், நீ என் காதலை புரிந்துக்கொள்ளல..“

        “அப்படி இல்ல சிவா, என் நிலையை நான் உனக்கு எப்படி புரியவைப்பேன்
               
                புரிந்தது எல்லாம் போதும் பிரியா, நாளைக்கே நீ என்னுடன் வரனும். நாம் எங்காவது போய், நம் புது வாழ்கையை ஆரம்பிப்போம்
                 “...ம்ம் 

சரி நாளைக்கு நைட்டு 11 மணிக்கு கார் எடுத்துட்டு வரேன், நீ கிளம்பி இரு “..ம்ம், சரி  .. சொல்லமறந்துட்டேன், எந்தக் காரணம் கொண்டும் உன் புருசனுக்கு சந்தேகம் வந்துடக்கூடாது  


                                                                 அதேக் கதை மாறியது

            நிலவில் தேவையான ஆக்ஸிஜன், நீர் எல்லாம் உற்பத்திப் பண்ணியாகிவிட்டது. ஒரு தலைமுறை மனிதர்கள் அங்கு வசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

                நிலவில் பஞ்சாங்க தேதி எல்லாம் குறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அமாவாசை, பௌர்ணமி மட்டும் குறிக்க முடியவில்லை.

                நிலவில் குழந்தைகள் சோறு உண்ண மறுக்கிறது.

                என் ராசா, என் கண்ணு.. அதோ பாரு பூமி, அங்க பாரு, நம்ம பாட்டி வடை சுடுறாங்க..” என்று சொல்லி, அம்மாக்கள் பூமிச்சோறு கூட்டிக்கொண்டிருந்தார்கள்.

        அப்போது பூமி செழிமை இழந்து வயதானவர்களின் முதியோர் இல்லமாக மாறிக்கொண்டிருந்தது                                                                            கவனக் குறைவு

                  பாலைக் காயிச்சிக் கொண்டிருந்தாள். பால் பொங்கி வழிந்தது. அந்நேரம் பிள்ளைகளின் சண்டை,

            யேய், சும்மா இருங்க.. என்றுச்சொல்லி கேஸ் அடுப்பை அணைத்தாள்.

                நேரம் ஆகிவிட்டது. காலை 5 மணிக்கேல்லாம் எழுந்து சமையல் பார்த்தாகனும். இப்போதே மணி 10 ஆகிவிட்டது என்று நினைத்துக்கொண்டே படுக்கைக்கு சென்றாள்.

         வீட்டின் ஜன்னல், கதவு எல்லாம் சாத்தப்பட்டிருந்தது. ரெகுலேட்டர் முழுவதும் ஆஃப் செய்யாமல் சிறிது மேல் நோக்கியே இருந்தது.

                கேஸ் காற்றில் மெல்லக் கலந்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவே அவர்களுக்கு மிக நிசப்தமாக இருந்தது.
உங்கள் நட்புடன்:


Wednesday, May 16, 2012

ஓஷோ என்ற மெய்ஞானியை பற்றி தவறான புரிதலுடன் கட்டுரை வெளியிடும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு...


எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்ட "ஓஷோ கடிதங்கள்" http://www.jeyamohan.in/?p=27343 என்ற பதிவுக்கு என்னாலான விளக்கம்.கடிதங்கள் முற்றுபெற்றுருக்கும் என்று நினைத்திருந்தேன் ஆனால் தேடி பிடித்து வெளியிடுகின்றீர்கள். இதனிலே தெரிகிறது உங்கள் மன சலனம் எப்படி கலவரபட்டுள்ளது என்று...என்ன பிரச்சனை  உங்களுக்கும் ஓஷோவுக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதாவது உண்டா.? புத்தக வியாபர  போட்டிதான் என்ன செய்வது...எதார்த்தம்தான் என்றும் வெற்றிகொள்கிறது.    

// முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஓஷோவின் ஓர் ஆன்மீக விவாதத்தில் பெண்குறி பற்றிய ஆபாச நகைச்சுவையை வாசிக்க நேர்ந்தபோது அடைந்த அதிர்ச்சியை நினைவுறுகிறேன்//  ஓஷோவை பற்றி நீங்கள் எழுதியது. அப்படி என்ன ஆபாசமாக பேசிவிட்டார் அதை குறிப்பிடவில்லையே படித்ததை சொன்னால்தானே புரிதலான விளக்கம் கொடுக்க முடியும். இப்படி அர்த்தமற்ற குற்றசாட்டுக்கள்தான் முன்வைக்கிறீர்கள்...

முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் இதை புரிந்துகொள்ள நான் ஒரு ஜென் கதை சொல்கிறேன் கேளுங்கள்.  ஒரு ஜென் துறவியிடம் அவ்வுரில் வாழும் மக்கள் குறிப்பிட்ட ஒருவனை சுட்டிகாட்டி அவன் ரொம்ப மோசமானவன் ரொம்ப அயோக்கியம் அவன் சகவாசமே சரியில்லை அவன் திருடன்"  என்று சொன்னார்கள் அதற்க்கு அந்த ஜென் துறவி, "ஆனால் அவன் மிக நல்லா புல்லாங்குழல் வாசிப்பான்"  என்றார். சில நாட்கள் போன பின் சில பேர் அவ்வுர்மக்கள் சொன்ன திருடன் புல்லாகுழல் வாசிப்பதை கேட்டிருந்தனர் இதை பற்றி ஜென் துறவியிடம் பேசும் போது அச்சிலபேர் அவனை புகழ்ந்து "அவன் ரொம்ப நல்லா புல்லாங்குழல் வாசிகின்றான் மிக பிரமாதமாக கலையுணர்வு உடையவனாக இருக்கின்றான்"  என்றார்கள் அதற்க்கு ஜென் துறவி, "அவன் ஒரு திருடன்" என்றார்.

இக்கதையில் இருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது. ஒருவரை பற்றிய மதீப்பீடு மனங்களுக்குத்தான் மனங்களை தாண்டிய உயிர்தன்மைக்கு கிடையாது ஞானியின் பார்வையில் திருடனும் ஒன்றுதான் நல்லவனும் ஒன்றுதான்.....

 //ஓஷோ என்ற போதே எனக்கு ஒரு முகச் சுளிப்பு, கல்லூரிப் பருவம் முதல் நாளெல்லாம் இவரின் கையாலாகாத வாசகர்களை , தன்னை ஆன்ம சாதகன் என விளம்பிக் கொள்ளும் துணுக்கு ஞானிகளை நிறைய சந்தித்து அவர்கள் மேலுள்ள வெறுப்பு நாளடைவில் எப்படியோ ஓஷோ மீது படிந்து விட்டது. அவரின் ஒன்றிரண்டு நூல்களையே படித்துள்ளேன், ஏற்காத மனச் சாய்விலேயே படித்ததால் எளிதில் புறக்கணித்து விட்டேன்.//

உங்கள் கடித வாசகனின் வரிகள் மிக நகைப்புக்குரியது.  ஓஷோ என்ற போதே எனக்கு ஒரு முக சுளிப்பு என்று சொல்கிறார் அப்போது புத்தகம் படிக்கும் முன்னையே  வெறுப்பை உமிழிந்துதான் இருக்கிறார் அந்த வெறுப்புடன் படிப்பவருக்கு ஒன்றிரண்டு புத்தகம் படித்தாலும்100 புத்தகம் படித்தாலும்  எந்த பயனும் இல்லை...எந்த புள்ளைகாவது தன அப்பன்ன பிடிக்கும்மா...எலியும் பூனைதான் இருப்பாங்க.. ஏதோ 100 இல் பத்துதான் புரிதலுடன் நடக்கிறது.

ஒருசில புத்தகம் படித்தே அவரை பற்றி நல்லா புரிந்துகொண்டார் என்று சொல்லும்போதே உங்கள் வாசகரை பற்றி நான் நல்லாவே புரிந்துகொண்டேன். "ஏற்காத மன சாய்விலே"  என்பதை சொல்கிறார் மனமற்ற நிலைதானே ஓஷோவின் நிலை அதில் மன சாவுடன் என்றால் ஏற்காமல்தான் போகும். மனம் சார்ந்தவன்தான் மனிதனாக இருக்கின்றான்  அவன் ஞானியின் உள்தன்மையை எப்படி புரிந்துகொள்ள முடியும் .

ஒரு ஜென் துறவியிடம் ஞானம் பற்றி சொல்லுங்கள் என்கிறார்கள் அவர் சொல்கிறார் "ஞானம் சொல்லில் அடங்காதது அப்படி சொன்னால் அது ஞானம் இல்லாதது"  என்கிறார்.  உங்கள் வாசகர் கிருஷ்ணன் ஓஷோவை பற்றிய ஒப்பாரி கூட்டத்தில் உங்களுடன் சேர்ந்து நன்றாகவே ஒப்பாரி வைப்பார் அவரை விட்டுவிடாதீர்கள்.

அடுத்த வாசகர் லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்...

எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள். ஒருவருடைய விருப்பு, வெறுப்பு மாறும்போதுதான் தாக்குதல் ஆரம்பமாகிறது. புலி குட்டி, நாயிடம் பால் குடிக்கலாம். அது புலியாகும்வரை...! இப்படிதான் மாறியிருக்கிறது லட்சின் தவறிய எண்ணம்...

கிருஷ்ணமூர்த்தி  புத்தருக்கு ஈடானவர் ஆனால் புத்தர் அல்ல...அவர் ஒரு குறிப்பிட்ட நிலையிலையே இருந்துவிட்டார்.  புத்தத்தின் உச்சநிலைக்கு அவர் போகவில்லை அவர் அறிவார்ந்த உச்சநிலையில்தான் இருந்தார். அண்ணிபெசன்ட் அம்மையார் அவரை புத்தராக காண விரும்பி அவரை பல்லாயிரகணக்கான மக்கள் முன்  நிறுத்தி கிருஷ்ணாவை  துறந்து புத்தரை வரவைக்க முயற்சி செய்தார்கள் ஆனால் அந்த முயற்சி அவரால் நிறைவேற்ற முடியவில்லை கிருஷ்ணா மறுத்துவிட்டார். அவர் புத்த நிலைக்கு உள்செல்ல விரும்பவில்லை. அவர் ஒரு சிறந்த தத்துவவாதி அதனால்தான் பெர்னாட்ஷா அவர் வாழ்நாளில் யாரையும் பாராட்டாமல் கிருஷ்ணமுர்த்தியை "அவர் ஒரு அழகான இளைஞன்" என்று பாராட்டினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை உள்ளது. அவரை நான் சந்தித்து பேசவேண்டும் என்று மிக ஆவலாக இருந்தேன் அதற்கான சந்தர்பம் அமையவில்லை." என்று ஓஷோ சொல்லிருக்கிறார் நான் படித்திருக்கிறேன்

பல வேலைகளின் அவரின் சொற்பொழிவில் கிருஷ்ணமூர்த்தியை பற்றி மிக உயர்வாக சொல்லிருக்கிறார். ரமண மகரிஷியை பற்றி ஓஷோ சொல்லும்போது ரமணர் அற்புதமான மெய்ஞானி ஆனால் அவரிடம் ஸ்ரீஅரவிந்தர் போல உச்சநிலை அறிவார்ந்தவராக இல்லை...அவரிடம் நீங்கள் அறிவார்ந்த நிலை பற்றி கேட்டால் அவர் மௌனத்தில் இருப்பார். ஆனால் அரவிந்தர் அதற்க்கு உரிய விளக்கம் அளிப்பார் ஆனால் அறிவிந்தரிடம் ரமண மகரிஷி போன்ற முதிர்பெற்ற சலனமற்ற மெய்ஞானம் இல்லை...அவர் அறிவின் ஊடாக ஞானத்தை கண்டார். ரமண மகரிஷி போன்றவர் போலத்தான் ராமகிருஷ்ண பரம்சரும் அவரிடம் அறிவார்த்தமான கேள்வி கேட்டால் அவர் உடனே எழுந்து ஆட ஆரம்பித்துவிடுவார் ஏனென்றால் அவரின் பதில் அதுவாகத்தான் இருக்கும்"

இவை போன்ற விமர்சனங்களைத்தான் கிருஷ்ணமூர்த்தி மீதும் ரமணர் மீதும் அரவிந்தர் மீதும் ராமகிருஷ்ண பரம்சர்  மீதும் வைத்திருந்தார் மற்றபடி அவர்களை ஒருபோது புரந்தள்ளியதில்லை...புரந்தல்லிருந்தால் நான் எப்போதே ஓஷோவை விட்டு வெளிவந்திருப்பேன். புரிதல்தான் ஒரு ஞானிக்கும் சீடனுக்கு உள்ளது. அதுதான் சீடனின் ஞானதேடலுக்கு மிக பெரிய பாலம்.

ஓஷோவை நான் பதினைந்து வருடங்களாக அவரின் ஒளியின் வெளிச்சத்தை பார்கிறேன். மெய்ஞானி ஆனேனோ இல்லையோ புரிதல் ஞானி ஆனேன் என் மனதை உணர்ந்தேன் என் எண்ணங்களை  உணர்ந்தேன். நன்றாகத்தான் ஒரு சராசரி மனிதனாகவே வாழ்கிறேன். என் குடும்பத்திற்கான தேவை என்னால் உள்ளத்தால் ஞானிக்கான தேடுதல் புரிதலுடன் செல்கிறது. மௌனமாக நாம்  எங்கிருந்தால் என்ன மௌனம்  மௌனம்தானே...

என்னால் முடிந்த உங்கள் கட்டுரைக்கான விளக்கத்தை கொடுத்தேன் இன்னும் அதிகம் தேவைபடுவாயின்  நீங்கள் ஓஷோவின் தலைமையிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்....யாரும் ஈகோ பார்க்கமாட்டார்கள். நீங்கள் கேட்பதற்கு ஈகோ பார்க்காமல் இருந்தால் நல்லது.

இன்னும் உங்களிடம் இருந்து ஓஷோவின் விமர்சனங்களை வரவேற்கின்றேன்...வாழ்த்துகள்    என்றும் நட்புடன்:

Sunday, May 13, 2012

கிறுக்கு பிடித்த எழுத்தாளன்...


(ஓஷோ பற்றிய சரிவர புரிதல் இல்லாமல் அவர் எழுதி பல பதிவுகளின் ஒரு பதிவுக்கு...என் பதில் பதிவு கிழே . அவர் தளத்தின் முகவரி http://www.jeyamohan.in/ )


 ஜெயமோகன் எழுதிய கட்டுரை அதன் முற்காலபட்ட நிகழ்வுகள் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் இதை ஓஷோவுடன் ஏன் இணைக்கிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். எம் எஸ் உதயமூர்த்தி தமிழின் சுயமுனேற்ற நூல்களை அதிகம் விற்பனை செய்வதற்கும்  பல பதிப்பாளருக்கு ஏணியாய் இருந்தவர்.

ஒரு நேரத்தில்  சுயமுன்னேற்ற நூல்களும் சக்கை போடு போட்டது. அதில் பலன் அடைந்தவர்கள் முக்கியமாக அப்புத்தகத்தை  படித்தவர்களும் விற்றவர்களும்தான்  ஆனால் இதில் இடையில் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒருசில பேர்கள் இருக்கிறார்கள் அவர்கள் யார்.? என்று எளிதாக நாம் யூகித்துவிடலாம் அவர்கள் இலக்கிய, புதுமை, புரட்சி என்று சொல்லிகொள்ளும் எழுத்தாளர்கள் அவர்களின் வரிசையில் மேல் வரிசையில் இருந்தவர்தான் ஜெயமோகன்.

ஜெயமோகனின் வியாபாரமே எழுத்துதான் வாழ்கையில் எழுதிதான் பிழைக்கவேண்டும். ஜெயமோகன் எழுதி கொண்டே இருந்தால் ஒருவேளை அவரின் படைப்புகள் எப்படி விற்பனை ஆவது.  இதில் விற்பதற்கும் ஒரு சந்தை வேண்டும் அல்லவா..அது பதிப்புலக சந்தை ஆனால் அதுபோல பதிப்புலக சந்தையில் சுயமுன்னேற்ற நூல்களும், ஆன்மிக நூல்களும் , ஓஷோ நூல்களும் அல்லவா தற்போது முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது அவைகள் பதிப்பாளருக்கு லாபத்தை அல்லவா அள்ளிகொடுக்கிறது.

பதிப்பாளர்கள் வரிசையில் முன்னணி  இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்தை அனுகினால் அவர்களிடம் கேட்டாலே தெரியும் "உங்கள் பதிப்பகத்தில் யாருடைய நூல்கள் அதிகம் விற்பனை யாகிறது" என்றால் "ஓஷோதான்" முதல் என்று சொல்வார்கள். ஜெயமோகன் ஒருவேளை கடைசியாக வேண்டும் என்றால் வரலாம்.

முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனை பார்த்தால் எப்போதும் கடைசி மதிப்பெண் எடுக்கும் மாணவன் கொஞ்சம் ஓரவஞ்சன பார்வையுடந்தான் பார்பான் அவ்வொரவஞ்சன  பார்வை ஒருசில நேரம் வன்முறை பார்வையாக கூட மாறலாம். அவ்வன்முறை பார்வைதான் ஜெயமோகனுக்கு   வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

காற்றின் திசையை மாற்றினாலும் காற்று எங்கும் அடித்துக்கொண்டுதான் இருக்கும் இது நாம் என்றும் புரிந்துகொள்ளும் இயற்க்கை.. ஓஷோ அதிகம் பேசுவது நாம் அறிந்தும் அறியாமல் இருக்கும் புத்தரை பற்றிதான். புத்தரை பேசும் ஒருவரை புறந்தள்ள வேண்டும் என்று நினைத்தால் அது நம் அறியாமையின் முட்டாள்தனம்தான். அது புத்தரையே தள்ளிவைத்து பார்ப்பது போலாகும். அப்படியும் மீறி பார்த்தால் அது தற்காலிகமானதுதான் இருக்கும். நிரந்தரம் என்றும் நம்மைவிட்டு போவதில்லை. அது என்றும் நம்முடனே இருக்கிறது. அதுவுடந்தான் நாம் பேசுகிறோம் அதன் மையத்தில்தான் இருக்கின்றோம். இது என் அனுபவத்தில் சொல்கின்றேன். உண்மை போதிக்கபடவேண்டியது இல்லை அது உணரபடவேண்டியது.   

ஆட்ட கடித்து மாட்ட கடித்து இப்போது புத்தரையே கடிக்க வந்துவிட்டது. இந்த பிற்போக்கு எழுத்தாளன்.             

Friday, December 16, 2011

சில பேர் கேட்கிறார்கள்...!?

"முல்லைப் பெரியாறில் மலையாளிகளோடும், காவிரி நதிநீரில் கன்னடர்களோடும் சண்டை. இந்த ஆறுகளால் பண்ணையார்களாய், நில உடமையாளர்களாய் இருக்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களுக்குத்தான் பாதிப்பு. நிலமற்ற தலித்துளுக்கு என்ன பாதிப்பு" என்று...


# கொஞ்சம் உங்கள் ஜாதிய பாகுபாடை தள்ளிவைத்து நம் தமிழ் இன உணர்வுடன் சிந்திப்போமே...அம்பேத்காருக்கு இந்தியாவில் உள்ள உயர் இந்துகளிடம் வெறுப்பு இருந்தாலும் அவர் ஒருபோது வெள்ளைகாரனை நேசித்ததில்லை. வெள்ளக்காரன் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று விரும்பியதில்லை. சொந்த வீட்டில் பகை எப்போதும் இருக்கும் அது எப்போது வேண்டுமானாலும் நீர்த்து போகும் அது கொஞ்சம் காலதாமதமாக ஆகும் அறிவியல் மாற்றத்தில் இந்த பகையை மாற்ற சாத்தியம் உண்டு. இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஆனால் தமிழன், மலையாளி என்ற இன உணர்வில் இது சாத்தியமே இல்லை. இது மக்களின் மொழி உணர்வுடன் கலந்தது. நாடு கடந்தும் தமிழக தொப்புள்கொடி மக்களான ஈழ மக்கள் இருந்தாலும் அவர்கள் தாய்தமிழ் மக்களை நேசிக்காதவர்கள் இல்லை அவர்கள் நேசிப்பதற்கு காரணம் அவர்களும் செந்தமிழ் பேசும் மக்கள். ஏன் நம் பக்கத்து யுனியன் பிரேதேசம் பாண்டிச்சேரியை பாருங்கள் அங்கே அரசியல் ரீதியில் பகைமை இருந்தாலும் அங்கு இருக்கும் மக்களுக்கு தமிழமாநில மக்கள் மேல் எந்த கோவமும் இல்லை ஏனென்றால் அது தமிழ் இன உணர்வுடன் அதிகபடியான தமிழ்மொழி உணர்வு கலந்தது. ஆனால் கேரளா, கர்நாடக, ஆந்திர இம்மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் நம்முடன் சேர்த்து திராவிட இன பாரம்பரியத்தை கொண்டவர்கள் இவர்கள் திராவிட இனம் என்று வரலாற்று ஆசிரியர்களும் அவர்களின் ஆய்வுகளும் கூறுகிறது. இப்படி ஒரு திராவிட இனமாக இருந்தும் ஏன் நமக்குள் பகைமை இருக்கிறது. இதை கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் இப்பகை ஒரு நாட்டின் மத, ஜாதி, இன உணர்வுடன் வருவதை விட, மொழி உணர்வுடன் வருவதுதான் அதிகம் இதுவே மக்கள் உணர்வுகளின் முதன்மையானதாக இருக்கிறது எனபது நன்றாக தெரியும்.

ஒரு இனத்தின் மொழி உணர்வை தகர்தெரிந்தால் மற்ற உணர்வுகள் எதுவும் மிஞ்சாது. உலக புகழ் பெற்ற இயக்குனர் சத்தியஜித்ரே தான் இயக்கிய வங்க மொழி படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தை பற்றி ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி கண்டார் "நீங்கள் ஏன் உங்கள் படங்களை வங்கமொழில் எடுகீரீர்கள் ஏன் இந்தியிலும் எடுக்கலாமே" என்றதுக்கு அவர், "என் மொழி உணர்வை என் மொழில்யிதான் வெளிபடுத்த முடியும் அதை வேறுஒரு மொழில் வெளிபடுத்தினால் அதன் உயிரோட்டம் போய்விடும் அது மரத்தில் இருந்து முறிந்த கிளைகலாகத்தான் இருக்கும்" என்றார். சத்தியஜித்ரே தன வங்க மொழிக்கு அதன் உணர்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் பாருங்கள். ஒரு நாட்டு மக்களின் மொழி உணர்வுதான் அந்நாட்டுக்கு மகத்தான ஒன்று. இவை அந்நாட்டின் தேசிய கீதம், தேசிய இறையாண்மையை விட வலிமையானது. அதன் மேல் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் கட்டமைப்பை ஏற்படுத்தலாம் அவ்வளவு உறுதியானது. அதனால் தமிழ் மக்களாகிய நாம் ஜாதி, மத பேதங்களை மறந்து தமிழ் மொழி உணர்வுடன் மட்டும் ஒன்றுபடுவோம்.


என்றும் நட்புடன்:

Saturday, November 12, 2011

போதிதர்மரை கொஞ்சமாவது தெரிந்துகொள்ளுங்கள்...


போதிதர்மர் ஒரு சென் துறவி. அவர் இன்னோர் புத்தர் என்று ஓஷோவே சொல்கிறார். அம்பேத்கார் பவுத்த மதத்திற்கு மாறினார். மாறினார் என்றால் புத்தத்தையும் புத்தரை ஏற்றுகொண்டார் என்றுதான் அர்த்தம். தாழ்த்தபட்டவர்களின் தலைவராக இருந்தவர் புத்தரை ஏற்கும் போது போதிதர்மரை ஏற்காதவரில்லை அவர் பாப்பான் என்று சொல்வதிற்கில்லை. அப்படி இருக்கும் போது ஒரு சென் துறவியை இனம் மொழி சாதி என்று ஒரு குறுகிய நோக்கத்தில் அடையாளபடுத்தி தற்குறியாய் நிருத்திவைப்பது அவரை பற்றிய சரியான புரிதலின்மையைதான் காட்டுகிறது. உண்மையில் அவரை பற்றி அவரின் விழிப்புணர்வை பற்றி யாரும் தெரிந்துகொள்ளவே முற்படவில்லை.

பிராமணர்கள் வசிக்கும் இடத்தில் போய் சுவாசித்தாலும் அதே காற்றுதான் , தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு போய் சுவாசித்தாலும் அதே காற்றுதான்...காற்றுக்கு நிறமும் இல்லை, வடிவமும் இல்லை. அதுபோல் போதிதர்மருக்கு இனமும் இல்லை மொழியும் இல்லை, சாதியையும் இல்லை 'இதுபோல' இருப்பவர் என்று சொல்லிலே அடங்காதவர். அவர் புத்தரானவர்.

நீங்கள் பசி எடுக்காத நேரத்திலும் சாப்பிடுவிங்க, தூக்கம் வராத பொழுதும் தூங்க முற்படுவிங்க, வாய் விட்டு சிரிக்கலாம் என்று இருந்தாலும் கவுருவம் என்ற போர்வையில் சிரிக்க மாட்டிங்க, அழுவலாம் என்றால் அழமாட்டிங்க, ஆனால் போதிதர்மர் நம்மிடம் மாறுபட்டு இருந்தார் அவர் விழிப்புடன் இருந்தார். அதுவே ஜென்.

ஒரு ஜென் துறவியிடம் ஞானத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர் சொல்கிறார் "ஞானம் சொல்லில் அடங்காதது அப்படியும் சொன்னால் அது ஞானமில்லாதது.

என்றும் நட்புடன்

Thursday, August 18, 2011

உணமையை விரும்புவர்கள் இதை படிக்கலாம்...


"தளர்வான நிலையில் கூட புத்த நிலையை காணலாம். பிஞ்சு குழந்தையை பார்க்கும் பார்வையிலும் தன்னை மறக்கலாம்." நாம் காணும் மனிதனை மனிதனாக அழைத்து வந்துவிடலாம் ஆனால் அதற்க்கு ஆன்மிக மூலாம் பூசப்பட்ட மதம்தான் தடையாக உள்ளது. உண்மை ஆன்மிகம் தனக்குளே தன்னை தேடிபெருவதில்தான் இருக்கிறது. இதைதான் புத்தரும் கடைசியாக சொன்னார். "அபோ திபோ பவ" -உனக்கு நியே ஒளியாக இரு என்று. இதற்காக தங்களை மகரிஷி என்று சொல்லிகொள்பவர்கள் தேவை இல்லை. உண்மை சொன்ன ஒரு புத்தரே போதும்.

இந்துமதம் ஒரு வாழ்கை நெறியாக சொல்லப்பட்டது என்று சொல்கிறார்கள் அப்படி இருக்கும்போது அதை ஏன் தவறாக புரிந்துகொள்கிறார்கள். அரச மரத்தை சுற்றிவந்தால் குழந்தை பிறக்காத பெண்களுக்கும் குழந்தை பிறக்கும் என்று இந்து வழிகாட்டி சொல்கிறது அது ஏன் அப்படி சொல்கிறது "காற்று அரச மரத்தின் மேல் பட்டு விசும் போது அக்காற்று பெண்கள் கர்ப்ப பைக்கு வலிமையை கொடுக்குமாம்" இதனை பகுத்தறிவுடன் விளக்கிருந்தால் மதத்தின் வாழ்கை நெறி வழுவாமல் போற்றபட்டிருக்கும். அதை விடுத்து மறைபொருள் போல் அரசமரத்தின் கிழ் ஒரு மத அடையாள பொம்மையை குட்காரவைத்து மக்களுக்கு மதம் சார்ந்த பயத்தை உண்டாக்கி சொல்லப்பட்டதால் அதன் பகுத்தறியும் உண்மைத்தன்மை காணமல் போய்விட்டது அப்பொழுது இருந்த மக்கள் அறிவற்ற, படிப்பறிவற்ற, நாகரிகம் இல்லாத மக்களாகத்தான் இருந்தனர் இதனால் அதன் உண்மை வடிவத்தை மதத்துடனே இணைத்துவிட்டார்கள் அதையே நடைமுறையும் படுத்திவிட்டார்கள். உதாரணமாக திருக்குறள் எடுத்துகொள்ளுங்கள் எத்தனை பேருக்கு அதன் விளக்க உரை தெரியும். தெரியவில்லை என்றால் விளக்க உரை எழுதியத்தை படித்து தெரிந்துகொள்கிறார்கள் அப்படி தெரிந்துகொள்ளவதில் பகுத்தறிவு இருக்கிறது ஆனால் அப்போது வாழ்ந்த கூட்டம் செவி வழி செய்தியே உண்மை என்று நம்பியது அதீத நம்பிக்கை முட நம்பிக்கையாய் மாறியது என்னை கேட்டால் நான் சொல்வேன் மதங்கள் தான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது. மதங்கள் இல்லாத மனிதன் சுதந்திரமானவன் ஆனால் மக்கள் சுதந்திரமாக இருக்க மதத்தலைவர்களும், அரசியல்வாதியும் என்றும் விடமாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயம்.

மதம் எனபது மக்களை நல்வழிபடுத்துகிறது என்று சொல்லி கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒரு வியாபார தந்திரம் அது மத பிரசங்கம் செய்வோராலும், அந்நிய படையெடுப்பாலும், தன் சுய பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்பாலும் பரப்பபட்டதே. இந்நாட்டில் உள்ள மதங்கள் இந்துமதம் உட்பட.."மதத்தின் அடிப்படையில் கைவைக்க கூடாது" என்றுதான் எல்லா மதங்களும் மறைமுகமாக சொல்கிறது. இதில்அடிப்படையில் கைவைத்தால் மதங்களே ஆட்டம் கண்டுவிடும். உதாரணமாக இந்துமத கடவுள்கள் எப்படி எப்படி தோன்றின என்று நீங்கள் கேட்கும்போதும், கிறிஸ்த்து எப்படி பிறந்தார் என்று கேட்கும்போதும், நபிகளுக்கு குரான் ஓதப்பட்ட போது யார் அவருடன் இருந்தார்கள் என்று கேட்கும்போதும் அதன் அடிப்படையே கொஞ்சம் அசைந்தாடத்தான் ஆரம்பிக்கும். ஜாதிகளுக்கு அடிப்படையே மதங்கள்தான். மதங்கள் ஒழிந்தால் ஜாதிகள் தானே ஒழியும்.இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லிகொள்கிறோம் ஆனால் அடிப்படை இந்திய சட்டத்தில் மதம், மாற்றம் அடையாமல்தான் இருக்கிறது.அச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும் ஆனால் மதத்தில் உள்ள தீண்டாமை அப்படியே அனுசரிக்கப்படும் என்று சொல்கிறது. இதுதான் மதசார்பற்ற நாடா..? ஜனநாயகம் எனபது ஜாதி மதம் இல்லாமல் சதர்மம் சமநிலை கொண்டது. ஒருவரின் விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டதல்ல...ஜாதி மதங்கள் உட்பட்டு வாரி வழுங்குபவன் எல்லாம் தலைவன் ஆகமுடியாது அவனே மக்களின் துன்பத்தை நீக்கும் இரச்சகராக இருக்க முடியாது. இருப்பதை பகிரிந்து கொடுப்பதுதான் உண்மை ஜனநாயகம் ஆனால் இதை ஜனநாயகத்தில் இருந்து காண்பதுதான் அதிசயமாக இருக்கிறது. சாதி மதம் பார்கிறவன்தான் சமதர்மம் பேசுகிறான்.

ஒருவருக்கு பகுத்தறிவு வளர்ந்தால் மனித நேயம் தானாய் வரும். உண்மையில் உண்மையோடு நடபவனுக்கு ஒழுக்கத்தை போதிக்கவேண்டிய அவசியமில்லை...அவன் ஒழுக்கம் மனித நேயத்துடனே செல்லும். உண்மை என்பதே பகுத்தறிவு. அது குருட்டு நம்பிக்கை அல்ல...!

குழந்தைக்கு புலப்படும் தவறேனும் உண்மை நமக்கு பொய்யாக தெரிவதேன். ஏனென்றால் அது பகுத்தறியும் பருவத்தில் இருக்கிறதால். நீங்கள் இல்லாத கடவுளை வணங்குகிரிங்க ஆனால் குழந்தையும் வணங்க கட்டாயபடுத்துரிங்க அது கேட்குது "எங்கே கடவுள்" என்று நீங்கள் கல்லை காட்டுகிரிங்க அக்குழந்தை அதை கல் என்கிறது நீங்கள் குழந்தை தலைலையே ஒரு குட்டு வைத்து "சாமியே அப்படி எல்லாம் சொல்ல கூடாது" என்று சொல்றிங்க...உண்மையில் குழந்தை கேட்டது உண்மைதான் என்ற உண்மை உங்களுக்கும் தெரியும் ஆனால் அதை தவறென சொல்றிங்க குழந்தைக்கு இருக்கும் பகுத்தறிவு கூட அப்பொழுது உங்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது

இன்றைய வளர்ந்த மீசை வைத்த குழந்தைகளுக்கு பிரார்த்தனை எனபது அவர்களை் அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு தேவையாகத்தான் இருக்கிறது. விவேகனந்தர் "சொல்கிறார் பசியோடு வருவோனிடன் வேதாந்தம் பேசாதே முதலில் அவனுக்கு சோறுபோடு பின்பு சவுகாசமாக வேதாந்தம் உபசரிக்கலாம்" அவர் சொல்வது உண்மைதான் எது தேவையோ அதைதான் முதலில் செய்தாகவேண்டும். பிரார்த்தனை எனபது உண்மையை அறியா பாடம் உண்மை அறிந்தால் பிரார்த்தனைக்கு வேலையே இல்லை நாம் எதற்காக அழுது ஆர்பாட்டம் செய்தோம்" என்ற நினைப்புத்தான் வரும். ஒவ்வொருத்ததுக்கு ஒவ்வொருவிதமான கருத்து இதில் ஆன்மிக பேசுவோருக்கு வாழ்வின் நம்பிக்கை சார்ந்த கருத்தாய் இருக்கிறது. மாடர்ன் சாமியார்களின் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. தேவைக்காக தேங்காய் உடைக்கிறது காரியம் ஆகுவதற்காக கற்பூரம் ஏற்றுவது இதெல்லாம் ஆன்மிக பேசுவோரிடம்தான் மலிந்து கிடக்கிறது. உண்மை ஆன்மிகம் பேசுவோர்ருக்கு தேவைகள் எதுவும் இருக்காது. பல புண்ணிய ஆத்மாக்கள் நம்மிடம் இருந்து நம்மை காக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்காது. இல்லாத ஒன்றை தேடி ஓடுவதை விட இருப்பதை பார்த்து மகிழ்வது நன்று...உயிரனங்களில் மனிதனின் மனம், அறிவு இயற்க்கை பரிமாணத்தில் படி படியாக எழுர்ச்சி பெற்றவை பெற்றுகொண்டிருப்பவை...இதில் கடவுள் என்ற இல்லாத ஒன்றை முன்னிளைபடுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆசைகொண்ட மக்களின் பயம்தான் கடவுளின் பொழப்பாக இருக்கிறது. கடவுள் மனிதன் தேவைக்கு உண்டாக்கப்பட்ட ஒரு வேடிக்கையான விளையாட்டு பொருள்...நாம் உண்டாக்கிய பொருளுடனே நாம் பிரார்த்தனை என்ற பெயரில் அதனிடம் கெஞ்சிகிறோம். இதுதான் மக்களின் இன்றைய ஆன்மிக பிரார்த்தனையாக இருக்கிறது.

மறுபடியும் நினைவுபடுத்துகிறேன் உண்மை ஆன்மிகம் தனக்குள்ளே தன்னை தேடிபெருவதில்தான் இருக்கிறது. இதைதான் புத்தரும் கடைசியாக சொன்னார். "அபோ திபோ பவ" -உனக்கு நியே ஒளியாக இரு என்று. இதற்காக தங்களை மகரிஷி என்று சொல்லிகொள்பவர்கள் தேவை இல்லை. உண்மை சொன்ன ஒரு புத்தரே போதும்.என்றும் நட்புடன்:

Saturday, June 18, 2011

அல்லோலபடும் சமச்சீர் கல்வி...


தமிழகத்தில் இப்போது நடக்கும் சமச்சீர் நாடகங்களை பார்த்தால் கேளிக்குரியதாகத்தான் இருக்கிறது அடிபடையில் தமிழக ஆட்சியில் இருக்கும் அம்மையார் எங்கே படித்தார் என்பதை நாம் எல்லோரும் மறந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். அம்மா ""சர்ச் பார்க் கான்வென்ட்" என்ற தனியார் பள்ளியில்தான் படித்தார். அப்பள்ளியில் படித்தவருக்கு தனியார் பள்ளி பாசம்தான் முழுவதும் இருக்கும். இதுவும் ஒருவித சாதி உணர்வுபோலத்தான். அதுவும் அம்மையாரின் சாதி எவ்வகை சாதி என்று உலகம் அறிந்தது அல்ல அப்படி இருக்கும் போது சமசீரை முடக்கும் வேலைதான் நடக்கும். இவர் கூட்டனி தோழர் விஜயராஜ் என்கிற விஜ்யகாந்த் சமசீர் கல்வியை பற்றி நல்ல தரமான கருத்தை உதித்தார். அது என்னவென்றால் "சமச்சீர் எனபது தனியார் பள்ளிகளில் என்ன என்ன வசதிகள் எல்லாம் கிடைக்கிறதோ அதுவெல்லாம் அரசு பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று கூவினார் அவர் கூவினது ஒருவிதத்தில் ஏற்றுகொண்டாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. வசதி வாய்ப்பு எனபது அவரவர் பொருளாதார அடிப்படையில் நிர்ணயக்கபடுவது ஆனால் அறிவில் ஏற்ற தாழ்வு இருக்கும்போதுதான் ஒருவரிடம் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது. உதாரணமாக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனும் அரசு பள்ளியில் படித்த மாணவனும் ஒரு நேர்முக தேர்வுக்கு போகிறார்கள் என்றால் அங்கு அறிவு அடிபடையில்தான் வேலை கிடைக்கிறது. அங்குதான் அரசு பள்ளி மாணவனின் தாழ்வு உணர்வு ஏற்படுகிறது. இது எனக்கும் ஏற்பட்ட உணர்வுதான்.

அறிவில் ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கிற அறிவு ஒன்று இருக்கிறது. தன் சுய முயற்சியினால் ஏற்படுகிற அறிவு ஒன்று இருக்கிறது. சுயமுயற்சி அறிவு இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் வருவது அப்தூல் கலாமுக்கு ஏற்பட்ட அறிவும் இப்படித்தான் ஆனால் அடிப்படை அறிவு எல்லா மாணவர்களுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டும் என்பதுதான் நம் எல்லோர் எண்ணம். வெள்ளையன் நம்மை ஆட்சி செய்ய வரும்போது வாணிப நோக்கத்துடன்தான் வந்தான் பின்பு மெல்ல மெல்ல உள்நாட்டு அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான் அதுபோலத்தான் உள்ளது இப்போது உள்ள தனியார் பள்ளிகளின் லட்சணங்களும் முதலில் இவர்கள் சொன்னது அரசால் தரமான கல்வியை கொடுக்க முடியவில்லை நாங்கள் அதை கொடுப்போம் என்றார்கள் பின்பு மெல்ல மெல்ல அதிகபடியான கட்டணத்தை நிர்ணயத்தார்கள் அதன் பின் சங்கம் ஏற்படுத்தினார்கள். அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தைக்கு நடத்தினால் அதை புறக்கணிக்கும் நிலைக்கு வந்தார்கள். வெள்ளையனின் அடிப்படை வாணிப கொள்கையும், தனியார் பள்ளிகளின் கொல்லைகாரர்களின் கொள்கைகளும் சுரண்டல் அடிப்படையில்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் இவர்களின் சுரண்டல் முடிவு மக்களால் அடித்து துரத்தும் நிலையில்தான் இருக்கும்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் மகளை ஊராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்திருக்கிறார். இவரையே எல்லோரும் முன்மாதிரியாய் எடுத்து அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளிலே சேர்க்கவேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளின் திமீர் தனம் அடக்கப்படும்.

அறிவில் உயர்வு தாழ்வு இல்லாமல் சமசீரான சமத்துவம் உண்டாகவேண்டும் என்பதுதான் நல்ல உள்ளங்களில் விருப்பமும் அது போராட்டம் என்னும் ஆயுதத்தால் கட்டாயம் நிறைவேறும்.

தோழமைக்கு நன்றி...


என்றும் நட்புடன்