Pages

Saturday, January 30, 2016

ஒரு ஆசைக்கொண்ட எண்ணம்...!?  வலைபதிவு எழுதி ரொம்ப நாளாச்சு, சரி எழுதலாம் என்று நினைக்கும் போது என்ன எழுதலாம் என்ற கேள்வி வந்தது அதற்கு விடை மனமே என் முன் வந்து, “என்னைபற்றி எழுது” என்றது. மனம்தானே நம்மிடம் எப்போதும் அருகில், பல அனுபவம் கொண்டு இருக்கிறது.  என் மனது என்று நான் எழுதும் போது அது உங்கள் மனதின் இயல்புகள் சார்ந்துதான் வரும் ஏனென்றால் மனதில் இயல்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் அதன் அனுபவங்கள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். சரி பதிவு எழுதுகிறேன் உங்கள் அனுபவங்களுடன் வாசியுங்கள்..
  ஒரு ஆசைக்கொண்ட எண்ணம் நடைபெற வேண்டும் என்று நினைகிறோம் ஆனால் அதற்கு சரியான வழிகாட்டல் இல்லை, முயற்சி இல்லை மற்றும் அவ்வெண்ணத்தின் தீவிரம் இல்லை ஆனால் மனதில், நீங்கா விரக்தி மட்டும் இருந்துகொண்டிருகிறது. இப்படி விரக்தியுடன் சென்றுகொண்டிருக்கும் போது, “இது நமக்கு சரிபட்டு வராது..” என எண்ணி நாம் விலகும் சமயம், தீடிர் என்று வேண்டாம் என்று விட்ட செயலுக்கு ஒரு வாய்ப்பு பிரமாதமாக வரும் அப்போது நமக்கு எங்கிருந்துதான் ஒரு பதற்றம் வரும் என்று தெரியாது,? அது நம்மிடம் அமிழ்ந்த ஆசைகளின் ஒட்டுமொத்தமாக, வீறுகொண்டு கிளர்ந்தெழும் பதற்றமாக இருக்கும். அப்போது அதை  தடுத்து அணைபோட போதிய சக்தி இல்லாமல் நாம் திணர்வோம். சக்தி இழந்தவராகவே இருப்போம். அப்படி அந்த  நிறைவேறா ஆசையுடன் பின் தொடரும் நிழல்போலவே கூடவே ஒன்று வரும் அதுதான், சந்தேகம், “ஒரு வேளை நடக்காமல் போய்விட்டால்...” என்ற சந்தேகம் என்ற நிழலும் கூடவே இருக்கும். எதிர்மறை எண்ணமாய் நம்மை சுற்றியே அது வட்டமிடும்..

இங்குதான் ஒருவர் அறிவின் சுயநிலையை இழக்கிறார். ஆமாம், ஆசை அதிகமாகும்போது அதை அடைய வேண்டும் என்ற உடல் இச்சை அதிகமாகும், உணர்ச்சி கொந்தளிக்கும், அறிவு துடைத்துவைத்த தறையைபோல் சுத்தமாக இருக்கும். அறிவு வேளையே செய்யாது, அப்படியே வேலை செய்தாலும் அது பிற பொருள் அபகரிப்பு தன்மை கொண்டதாகதான் இருக்கும். பின் மனதின் இறுக்கும் அதிகமாகும், இயல்பான பேக்சு இருக்காது, கோவபடாத சாதாரண  வியசதிற்கெல்லாம் கோவப்படுவோம். தன்னிலை இழப்போம். கண்டிப்பாக இவை எல்லாம் நடக்கும். 

இவையாவும் அந்த நிறைவேறாத அந்த ஆசைக்காக அந்த ஆசை எதுவேண்டுமானாலும் இருக்கலாம், பொன், பொருள், வீடு, வாகனம், வேலை, பொண்ணுக்கு அல்லது மகனுக்கு தேடும் வரன் இப்படி எதுவேண்டுமானலும் இருக்கலாம். அது ஆசைகளின் தீவிரம், எண்ண அலைகள் பொறுத்து வரும். 

மனோவியலாளர்கள் அதீத ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடித்திருகிறார்கள், அது நம் மீது அடிச்ச சாணியே வழித்து, அடித்தவன் மேலயே அடிப்பது, இது கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போல, மனோவியலாளர்கள் எல்லாம் யூத சிந்தனை உள்ளவர்கள். மனோவியலாளர்களின் தந்தை என்று சொல்லப்படும் சிக்கமன்ட் பிராய்டே, ஒரு யூத இனத்தவர்தான். அவர்தான் மனிதனுக்கு ஆழ்நிலை மனம் (சப் கான்சியஸ் மைன்ட்) உள்ளது என்று உலகுக்கு விஞ்சான அடிபடையில் சொன்னவர். அவர் சொன்னதை தழுவியே ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் எல்லாம் வந்தது. ஆனால் நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான வருடம் முன்பே சித்தர்கள் இந்த ஆழ்நிலை மனதில் பல சித்துவேலைகள் எல்லாம் நிகழ்திருக்கிறார்கள். இப்படி சித்தர்கள் நமக்கு முன்னையும் யூத சிந்தனைவாதிகள் பின்னரும் தோன்றிய மனோவியல் ஒரளவுக்கு வெற்றி பெற்றிருக்கே என்று கூறலாம் ஆனால் நம்மிடம் ஆசையின் தாக்கம், என்னமோ குறைந்ததுபோல் தெரியவில்லை. அது இன்னும் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆசை இருக்கும் வரை அல்லோலபடும் பிரச்சனையும் நம்மிடம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 

        மனோவியலின் கண்டுபிடிப்பு மனதின் ஆசைக்கு மருந்திடும் மற்றும் ஆசைகொண்ட எண்ணத்தின்  தேவையை அது பூர்த்தி செய்யும் ஆனால் ஆசை மட்டும் மனதில் அப்படியே வேர்கொண்டு வேற வடிவத்தில் மாறுபட்டு இருக்கும். அது மனதிற்கு ஆசையை இன்னும் அதிகப்படுத்திதான் தரும். 

பிரச்சனைக்கு நாம் மாற்று வழிகண்டுபிடித்தால்!? பிரச்சனை என்ன தீர்ந்துவிடவா போகிறது.? அது முன்பைவிட இன்னும் அதிகமாகதான் இருக்கும். 
 

 அது என்ன மனோவியலாளர்கள் சொன்ன கண்டுபிடிப்பு என்று கேட்டால், “ஒரு எண்ணத்தின் தேவை இருக்குமானால் அதற்கு எதிர்மறை எண்ணத்தை மனதிடம் சொல்லவேண்டும்” இதை எதிர்மறை விசை என்கிறார்கள். உதாரணமாக நீங்கள் ஒரு உயிருள்ளதோ, உயிரற்ற ஒன்றின் மேல் தீவிர ஆசைவைத்துவிட்டீர்கள் ஆனால் கிடைப்பது கிடைக்காமல் தள்ளிபோய்கொண்டிருக்கிறது எல்லா முயற்சியும் செய்தாகிவிட்டது ஆனால் முடியவில்லை, என்ன செய்யலாம்.? ஆம், இங்குதான் எதிர்மறை விசை செய்துபார்கலாம்  எந்த பொருள் எனக்கு கிடைக்காது போனதோ.. அப்பொருளின் எதிர்மறை எண்ணத்தை மனதில்  சொல்லிகொள்ளுங்கள். எப்போதுமே மனதின் சைக்காலாஜிக் எதுவென்றால், முடியும் என்று போராடினால் “உன்னால் முடியாது” என்று சொல்லும். அவ்வார்தை நிழலாய் மனதில் தொங்கி நிற்கும், முடியாது என்ற எதிர்மறை எண்ணமே கிளர்ந்துதெழுந்து பின் நம்மை இழுத்து கீழே சாய்த்துவிடும். 

இதே எதிர்மறை விசை எப்படி செயலாற்றுகிறது என்றால் முடியும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறது ஆனால் முயற்சி வீணாகிறது இப்போது மனதை, நாம் சிறிதே மாற்றி ஆகனும். இப்போது மனதிடம் ‘முடியாது’ என்று சொல்லிபாருங்கள் முடியாது என்று மனதில் நீங்கள் சொல்லும்போது, முடியும் என்ற நேர்மறை விசை பின்னால் தொங்கி நிற்கும். எது தொங்கி நிற்கிறதோ அதுவே மனதின் தேவை அதுவே ஆழ்நிலை மனதின் உணவு, அதை ஆழ்நிலை மனது ஏற்றுகொள்ளும். அதுவே இயக்க ஆற்றலாக உருபெரும். வெற்றி நிச்சயம். இவையாவும் நடைபெறுவதற்கு உங்கள் எண்ணத்தின் தீவிர ஆசை பொருத்துதான் உள்ளது. வேண்டாவெருப்பாக, பார்பதை எல்லாம் ஆசை வைத்து, ‘எதிமறை விசை’ கொண்டு செயல்படுத்தினால் நடப்பது சிரமமே, ஆசையின் தீவிரம் பொருத்தே எதிர்மறை விசை நடக்கும். 

இப்படிதான் உருவழிப்பாட்டில், பக்தியில், பிரார்தனையில் மற்றும் மந்திரம் உச்சரிப்பதில் ஆசையின் செயல்கள் நடக்கிறது. இது மனத்திற்கு நாமே ஏற்படுத்தி கொள்ளும் சுயமனோவசியம். ஏதோ ஒன்றை குறித்து ஒன்றை நோக்கி வேண்டும் போது அது மீண்டும் நம்மிடமே வசியம் கொண்டு வருகிறது இது எந்த சாமிகளுக்கும், ஆசாமிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது முழுக்க முழுக்க ஆசையின் தேவை பொருத்து மனதை வசியப்படுத்துவது மீண்டும் சொல்கிறேன் இதற்கும் கடவுள் அருளுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. கடவுள் அருள் என்பது மனதில் எந்தவித எதிர்மறையோ, நேர்மறையோ இல்லாமல் இருக்கும் சூழலில் வந்தடைகிறது. 

அந்த சத்திய ஜீவித ஒளியை உணரவேண்டும் என்றால் எண்ணங்கள் இல்லாத சூன்னிய நிலைக்கு வந்தாகனும். அது ஒரு சாதகனுக்கு தியானம், விடாமுயற்சி, நம்பிக்கையிலே அவை சாத்தியம்.   

மனதை பற்றி பற்றி எழுதுனும் என்றால் அதைபற்றிய ஆழ்ந்த புரிதல் மற்றும் கூர்ந்து கவனிக்கும் திறன் இருந்தால் மட்டுமே எழுதமுடியும். ஏனென்றால் மனதின் சுழன்றடிக்கும் காற்றில் சிக்காமல் ஒதுங்கி நின்று அதன் அசைவுகளை கவனிக்க புதிய விழிப்புணர்வு பார்வை வேண்டும். அது ஆன்மிகத்தில் சில குறிபிட்ட வளர்ச்சி கண்டவர்களாலே முடியும். என்னால் முடியும் இதை மனதை கவனித்து கொண்டே எழுதுகிறேன். 

இங்கு எழுதியவை யாவும் என் அனுபவ வார்தைகள்..

வரும் பதிவுகளில் மனதை பற்றி மற்றும் மனம் இல்லா நிலை பற்றி என் அனுபவம் கொண்டே எழுதுகிறேன். படியுங்கள். நன்றி!நட்புடன்: