Pages

Tuesday, August 31, 2010

நீங்க குற்றவாளி இல்லை என்றால் இதை படியுங்க...

 
"குற்றவாளிகள் உருவாவதில்லை உருவாக்கபடுகிறார்கள்" என்று சொல்வார்கள் இவை முற்றிலும்  உண்மை..குற்றம் உருவாவதற்கும் சமுகம் சார்ந்த காரணிகளும் அதில் நடக்கும் நிகழ்வுகள்களும் ஒரு காரணமாகவும் இருக்கிறது.

ஏசுநாதர், இருந்த ஊரில் ஒரு பெண் விபசாரம் செய்தால் என்று ஊர் மக்கள் அவளை கல்லால் அடித்து துரத்தி வந்தனர் அவள் எசுநாதரிடம் அடைக்கலாமானார். அப்போது ஏசுநாதர், "உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்" என்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவரும் கல்லெறிய வரவில்லை..ஆம், இதில் நாமும் குற்றவாளி மீது கல்லெறிய முடியாது ஏனென்றால் நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இச்சமூகத்தில் குற்றவாளிகள்தான். மக்களுக்கு சிறிய, பெரிய குற்றங்கள் தெரியாதவரை அவை குற்றமாக தெரிவதில்லை அவையே தெரியும்போது ஏற்கனவே அக்குற்றத்தை தெரிந்தவருக்கு கூட  மிக பெரிய குற்றவாளியாகதான் தெரியும் .தெரிந்தவர்களும் குற்றவளியாகத்தான் இருப்பான் அவன் குற்றம் வெளியே தெரியாதவரை...

கவுன்சிலரா இருந்தவன் அமைச்சரானால் எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் எனபது அவனுக்கு சொல்லிய தெரியவேண்டியதில்லை....உழல் செய்த பணத்தில் சட்டத்தில் அவன் தேவையான அளவுக்கு வளைத்து கொள்வான். இதில் அவன் செய்த குற்றம் எப்படி, எப்படியோ  நியாபடுத்தபடும்...ஜேப்படி திருடன் ஒருவன் திருடினான் என்பதற்காக கைதாகிறான்.  இவன் குற்றவாளி, குற்றவாளியாககூட ஆக்கபடுகிறான்..அதே பல கோடி உழல் செய்யும் அரசியல்'வியாதி' அவனும் மக்கள் பணத்தைதான் திருடுகிறான் அப்படியென்றால் அரசியல்'வியாதியும்' ஒரு ஜேப்படி திருடந்தானே...ஆனால் இவன் சமூகத்தால் மதிக்கபடுகிறான். அத்திருடன் மிதிகபடுகிறான் இதுதான் சமுகத்தின் பார்வையில் இருக்கும் குற்றத்தின் ஏற்ற இறக்கம்..

பெண்களின் பெருமையை  பற்றி மணிகணக்காக பேசுவார்கள் பெண்களை தாய் என்பார்கள் சகோதரி என்பார்கள் ஒரு படிமேலே போய் எங்கள் தெய்வங்களே பெண்கள்தான் என்பார்கள் ஆனால் திரைமறைவில் பெண்களிடம் அவர்கள்  செய்யும் லீலைகள் தெரிந்தால் நாறிவிடும்...வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான் வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்..

சமூக சுத்தத்தை பற்றி பேசுவார்கள் அரசாங்க எதையும் சுத்தமாக வைத்துகொல்வதில்லை என்று சொல்வார்கள் அது சரி இல்லை இது சரி இல்லை என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் அவர்கள்தான் அதில் வெற்றி பெருமளவுக்கு அவர்கள் வாதம் இருக்கும் ஆனால் அப்படி பேசிவிட்டு சாதாரணமா எச்சிலை கண்ட இடத்தில் துப்புவார்கள், கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவார்கள், இன்னும் செய்யகுடாத செயல் எல்லாம் செய்வார்கள். ஒவ்வொருவரின் உண்மை முகம் தெரிந்தால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். இந்த மாதிரி தவறுகள் எல்லாம் எப்படி வருகிறது. இதுவும் ஒரு குற்றமான ஒரு செய்யலதான்...
 
ஒவ்வொருவரின் வாழ்விலும் தினம்தோறும் அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான் நடக்கிறது. அதில் முக்கள்வாசி அருவருப்பாகதான் இருந்துகொண்டிருக்கிறது


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:   
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Thursday, August 26, 2010

கனவுகள் ஏன் வருகின்றன....ஓஷோவின் விளக்கத்துடன்


 "உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொல்வார்கள். ஆனால் ஒருவர் பழகும் நண்பர்கள் பலவிதம் அதில் ஒருவரை புரிந்துகொள்வது முடியாதது  அதனால் இவ்வாக்கியம் செல்லாதாக இருக்கும். அவையே "உன் கனவை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என மாற்றி அமைத்தால் புரிதலுக்கு மிக பொருத்தமாக இருக்கும் ஏனெனில் ஒருவரின் அடக்கப்பட்ட உணர்வுகளே கனவில் வருகிறது...

நான் உணவு உண்பதில் சுத்த சைவமாக மாறிவிட்டேன் ஆனால் என் மனைவி குழந்தைகள் அசைவ உண்பார்கள். அவர்களை நான் தடுப்பதில்லை சைவத்தை பற்றிய நல்லதை மட்டும் அவர்களுக்கு சொல்லிகொண்டே இருக்கிறேன். நான் மாறினது போல அவர்களும் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அன்று ஒரு நாள் வீட்டில் எனக்கு வெறும் ரசம் மட்டும் வைத்துவிட்டு அவர்கள் பிரியாணி செய்து சாப்பிட்டார்கள் ..அவர்கள் சாப்பிடும் போது என் மனம் சொன்னது "இந்த முறை சாப்பிடு அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ஆனால் சாப்பாடு என்றாலும் பிடித்த கொள்கையில் உறுதியாய் இருந்தேன். அந்த இரவு அதை மறந்து தூங்கிவிட்டேன் ஆனால் நினைவில் மறந்தது கனவில் உதயமாயிற்று "ஒரே பிரியானை வாடை அதை நான் ருசித்து சாப்பிடுவதுபோல் இருந்தது. அதன் பின்னே நான் யோசித்தேன் நினைவில் அடக்கப்படும் நிகழ்வுகள் கனவின் மூலம் வெளிபடுகிறது...அவைகள் கோவம், அழுகை, ஆனந்தம், நாவின் ருசி போன்றவை அடக்கப்படும் போது கனவின் மூலம்  காட்சிகளாக வருகிறது என்று உணர்ந்தேன். இதில்  ஒருவருக்கு செக்ஸ் சம்பந்தப்பட்ட கனவுகள்தான் அதிகமாக வரும் ஏனென்றால் உணர்வுகளை அடக்குவதில் செக்ஸ்தான் முதலிடம் பெறுகிறது...போதிய மட்டும் நாம்  உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். அப்படியில்லை என்றால் கனவின் மூலம் அவை கட்டாயம் வெளிப்படும் அதுவே நிராசையாக கூடும்.


ஓஷோ, கனவின் தன்மையை பற்றி விளக்குகிறார்:  

நாம் எப்போதும் இல்லாததை பற்றியே கனவு காண்கிறோம் ஒருநாள் பட்டினி கிடைந்தால் அந்த இரவு நாம் உணவைபற்றிய கனவு காண்கிறோம் . பிரம்மசாரியத்தை உன்மீது திணித்துக் கொண்டால் உனது கனவு காம சம்பந்தப்பட்டதாக இருக்கும். காம உணர்வு உள்ளதாக இருக்கும். அதனால்தான் மனோதத்துவர்கள் உன் கனவை ஆராய்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறார்கள். என்னெனில் அது நீ எதை அடைக்கிவைத்திக்கிறாய் என்பதை காட்டிவிடும் நீ மிகவும் பசியோடிருந்தால் நிச்சயமாக உணவை பற்றிய கனவு வரும். அதனால் தான் பலமதத் துறவிகளும் உறங்குவதற்கு  பயப்படுகிறார்கள். மகத்தா காந்தி கூட உறங்குவதற்கு பயப்பட்டார் அவர் எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு அதை குறைக்க முயற்சித்தார். மாகத்மா காந்தி "நான் விழித்துக் கொன்டிருக்கும் நிலையில் நான் பிரம்மசரியத்தை கடை பிடிக்கிறேன் ஆனால் என் கனவுகளில் நான் ஒரு  பிரம்மச்சாரியல்ல" என்று கூறினார். அவர் குறைந்தபட்சம் தன் கனவுகளில் தான் ஒரு பிரம்மச்சாரியல்ல என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.

பகல் நேரத்தில் நீ அடிக்கி வைப்பதை உனது கனவுகள வெளிபடுத்திவிடுகின்றன. ஒருவர் எதையும்  அடக்கி வைக்கவில்லையோ கனவுகள் வராமல் மறைந்துவிடும்.

ஒருமுறை ஒரு கிருஷ்ண பக்தர் என்னுடன் தங்கினார் அவர் "நான் எப்போதும் கிஷ்ணனை பற்றிய கனவு காண்பேன்" என்றார். நான் "உங்களால் எப்படி இதை செய்ய முடிந்தது.? கனவு எப்போதும் நாம் செய்யக்குடியது அல்ல எந்த முறையில நீங்கள் முயற்சிக்கிரீர்கள்  என்று கேட்டேன். அவர் " என்னுடைய குரு எனக்கு ஒரு வழி சொல்லிகொடுத்தார். அதன் படி ஒவ்வொரு நாள் இரவும் துங்கப் போகும்போது கிஷ்ணரை பற்றி  நினைத்துக் கொண்டு கற்பனை செய்து கொண்டிருப்பேன் மூன்று வருட இடைவிடாத கற்பனை பயிற்சி செய்து கொண்டே துங்கியதன் மூலம் ஒருநாள் அது நிகழ்ந்தது நான் என் கனவை பற்றிய என்ன கற்பனை செய்தேனோ அதுவே என் கனவாய்கிவிட்டது. அதிலிருந்து எனக்கு அற்புதமான ஆன்மிக கனவுகள் வருகின்றன "என்றார்.

நான் "விவரமாக சொல்லுங்கள் நீங்கள் இந்த கதை மூலம் சமாளித்துயிருக்கலாம் ஆனால் ஆழ்மனது இந்த கதையில் கூட செய்தியை அனுப்பும் ஆழ்மனது தனது செய்தியாய்   சொல்ல உங்களுடைய இந்த் கதையை கூட உபயோகிக்கும்" என்றேன்.

அவர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேட்டார். நான் "நீங்கள் உங்களது கனவை விளக்கமாக எனக்கு கூறுங்கள்" என்று கேட்டேன். அவர் என்னிடம் கனவை கூற ஆரம்பித்தார். அது முழுக்க முழுக்க காமவயபட்டது. கிஷ்ணர் இவருடைய காதலனாகிவிட்டார் இவர் ஒரு ஆண்கோபியாகவே ஆண் நண்பனாக மாறிவிட்டார் உள்ளர்த்தம் என்பது ஹெமோசெக்ஸ்-ஓரின சேர்க்கைதான் இவர்கள் இணைந்தது, நடனமாடியது, முத்தமிட்டது அணைத்து கொண்டது எல்லாம் ஓரின சேர்கையாகத்தான் நடந்தது.

நான் "நீங்கள் வெறும் உருவத்தை மட்டும் மாற்றி இருக்கிரீகள். ஆனால் உள்ளே உள்ளது அப்படியேதான் உள்ளது. நீங்கள் ஒரு ஒரின சேர்க்கையாளர் எனபது எனக்கு புரிகிறது" என்றேன். அவர் மிகவும் அதிர்சியடைந்து பாதிக்கபட்டார். அவர் "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கு எப்படி தெரியும் அது.? என்றார். நான் உங்களது கனவுதான் மிக தெளிவாக கூறுகிறதே என்றேன்.

இந்த ஓரின சேர்க்கை எண்ணம் அவரது மத கதையிலும் புகுந்துவிட்டது. கிஷ்ணா ஒரு  ஓரின சேர்கையாளராய் ஆக்கிவிட்டார். அவர் மிகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி அந்த இரவே அவர் கண்ட கனவு மறைந்துவிட்டது மிகவும் தெளிவாக ஓரினசேர்கை கனவு வந்தது. அவர் "என்னை என்ன செய்தீர்கள்" என்று கேட்டார். நான் எதையும் செய்யவில்லை நான் உங்களுது ஆழ்மனதில் செய்தி என்ன என்பதை உங்களுக்கு தெளிவு படுத்தினேன்.   இனிமேல் நீங்கள் என்ன கதை வேண்டுமானலும் கட்டலாம் அது பொருட்டே  அல்ல  ஆனால் உள்ளர்த்தம் அதுவாவே தான் உள்ளது. என்றேன்.
  

என் எண்ணத்தின் எழுத்துகளையும், ஓஷோ கூறிய விளக்கங்களையும் பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்: (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Monday, August 23, 2010

ஏன் காலில் விழுந்து வணங்குரிங்க...?


காலில் விழுந்து வணங்குவது.....

இந்த காலில் விழுந்து வணங்கும் பழக்கம் தொன்று தொட்டு வருகிறது.  நம்மைவிட மூத்தவங்க காலில் விழுந்து வணங்கினால் நல்லதாம் பல பேரு சொல்வார்கள்...சிலபேர் புண்ணியத்திர்காக சாமியார் காலில் விழுந்து சாமியாரே சரணம் என்று இருப்பாங்க...இந்த காலில் விழுவது என்ன நல்லது, புண்ணியம் என்று  தெரியல...கைபோல காலும் உடலில் உள்ள ஒரு உறுப்பு அது தொட்டா எப்படி நல்லது, புண்ணியம்...அதே தொட்ட காலு தொட்டவங்கல மேல தெரியாமல் பட்டுடுச்சுனா...அவங்களுக்கு ஒரே மொரப்புதான், கோவம்தான் அவர் ஒரு சாரி சொல்லிட்டாருணா சரி இல்லனா கால் பட்டவரு முகம் எல்லாம் மாறிவிடும்...தெரியாமல் பட்டாலோ அல்லது எட்டி உதைத்சாலோ காலில் விழுபவர்களுக்கு ஏன் கோவம் வருது...அந்த காலுதானே உதைக்கிறது, படுகிறது அது புண்ணியம் என்று இருக்கலாமே அது எப்படி தப்பாகும். ஓ...நாமே தொடவேண்டும். அதுவேபட்டால் குற்றம்...!

ஐந்தறிவு சொல்ற விளங்குகெல்லாம் எந்த விலங்கிடம் காலில் விழுந்து வணங்குது...இந்த மனிதன் மட்டும் எதுக்கு சக மனிதனிடம் சரனாகதியாகிறான்...அதுவும் நம்ம இந்திய, தமிழக அரசியல்'வியாதிகாரனுங்க' சொல்லவே வேணாம் விழு என்று ஒரு ஜாடை காட்டினால்  போதும் காலையே நக்கி எடுத்துடுவானுங்க...அதே நேரத்தில் காலை வாரி விடுவதும் இவனுங்கல்தான்.

காலில் விழுவது இந்திய மக்கள் கலாச்சாரத்தில் குறிப்பாக தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் எடுக்க, பிரிக்கப்பட முடியாத ஒன்று...


சக மனிதனை மனிதனாக மதிக்கலாம் அதற்காக காலில் விழுந்து அவன் ஆணவத்திற்கு தீனி போடவேண்டாம்.               என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Friday, August 20, 2010

ஓஷோவின் அன்பின் ஞான கதை...

  
முதல் கதை:


வாழ்வில் சலிப்படைந்த ஒரு வாலிபன் விடுதியில் உள்ள பதினான்காவது மாடியின் ஜன்னலிலிருந்து குதித்து விடுவதாக மிரட்டினான் காவலர்கள் மிக அருகில் செல்ல முடிந்த இடம் ஒரு சில அடி கீழே உள்ள கட்டடத்தின் கூறையாகும் பாதுகாப்பாக திரும்பி வரும்படி கெஞ்சியது. எதுவும் பலனில்லை பக்கத்தில் இருந்த தலைமை சமய குரு அழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அன்பான முறையில் அவர் "மகனே , சிந்தனை செய், மகனே! உன்னை நேசிக்கும் உனது தாய், தந்தையை பற்றி சிந்தனை செய், என தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வாலிபனிடம் கூறினார்.

"அவர்கள் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன் என்றான்.

இல்லை மகனே!  நில்" என ஆழ்ந்த அன்போடு கூடிய குரலில் பாதிரியார் கூறினார்.  உன்னை நேசிக்கும் பெண்ணை பற்றி யோசி!

"யாரும் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன்." என பதில் வந்தது.

"ஆனால் நினைத்து பார் ஜீசஸ், மேரி, ஜோசப் உன்னை நேசிக்கும் இவர்களை சிந்தனை செய்! என பாதிரியார் கெஞ்சினார் .

"யார் அவர்கள் .? என அவன் கேட்டான்.

உடனே பாதிரியார் "குதி! யூத புறம்போக்கே குதி ! என்றார்.

எல்லாஅன்பும் உடனடியாக மறைந்து விடுகிறது. அன்பை பற்றிய எல்லா பேச்சுகளும் மேலோட்டமானவை பொருத்துகொள்ளுதலை பற்றிய எல்லா பேச்சுக்களும் அடி ஆழத்தில் பொருமையற்றவை.
  
இரண்டாவது கதை:

மனித இனம் வெற்றுவார்தைகளால் பிளவுபட்டுக் கிடக்கிறது. வெற்று வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். தம்மை இந்துக்கள் என்றும், யுதர்கள் என்றும், கிருஸ்தவர்கள் என்றும், முகமதியர்கள் என்றும் இன்னும், அவர்கள் இவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் வெற்று வார்தைகள் மேல் நம்பிக்கை வைத்திருபவர்கள். எல்லாமே இரவல் தான் சண்டை, சச்சரவு, விமர்சனம், என்று மனித சரித்திரத்தையே இரத்தம் தோய்ந்தாக்கி வைத்திருக்கிறார்கள் அதுவும் கடவுளின் பெயரால்

ஒரு யூத பெண் தனிப்பட்ட ஓரிடத்தில் ஒரு மாலை நேரம் தங்க வேண்டி வந்தது "தனிப்பட்ட" என்றால் யுதர்களுக்கு இடம் தராத என்று பொருள். ஊருக்குள் இருந்த ஒரு ஹோட்டலுக்கு போனாள் தங்குவதற்கு ஓர் அரை வேண்டும் என்று கேட்டாள்.

டெஸ்க் கிளார்க், ரூம் ஒன்னும் இல்லையே" என்றான் .

' பிறகு ஏன் ரூம்கள் கிடைக்கும்னு போர்டு வெச்ரிகிரிங்க?"

' யூதர்களுக்கு ரூம் தரதில்லே.'

'ஆனா இயேசு கூட ஒரு யூதர்தானே?'

' இயேசு யூதர்தானு உனக்கு எப்படி தெரியும்'

'அப்பா தொழிலுக்குதானே அவரும் போனாரு? அதுவுமில்லாம நான் கத்தோலிக்க மதத்துக்கு மாறிட்டேனே! கேள்வி எதாச்சும் கேட்டு பாரு. நான் பதில் சொல்றேன்.

சரிதான். இயேசு எப்படி பிறந்தாரு?'

'கன்னியிடமிருந்து பிறந்தாரு. அவரோட அம்மா பேரு மேரி, அப்பா பேரு புனித ஆவி.'

'சரிதான். இயேசு எங்கே பிறந்தாரு?'

'மாட்டுத் தொழுவத்தில்.'

'அதுவும் சரிதான். அவரு ஏன் அங்கே போயபிறந்தாறு?'

'உன்ன மாதிரி தேவிடியாப் பசங்க ஒரு யுத பொம்பளைக்கு ஒரு ராத்த்ரி தங்கறதுக்கு ஒரு ரூம் தரதிள்ளனுட்டுதாலே. அங்கே போய் பிறந்தாறு.'

ஆனால் இதை போன்ற தேவிடியா பசங்கதான் எல்லா இடத்திலையும் இருக்கிறார்கள். அவர்கள்தான் புசாரிகலாகவும், ராபிக்கலாகவும், பண்டிதர்கலாகவும், சங்கராச்சாரியர்கலாகவும், போப்புகலாகவும் இருக்கிறார்கள். இவர்கள் வெகு தந்தரசாளிகள் வெற்று வார்த்தைகளை வைத்துகொன்டு விளையாடுகிறார்கள், தர்க்க வெட்டிகள் சிகைமயிறை பிளகிறார்கள் பயனற்றவைகளை பற்றி முடிவில்லாமல் விவாதிக்கிறார்கள்.


 ஓஷோவின் கதையை பொறுமையாய் படித்தற்கு என் நன்றிகள்...உங்கள் அன்பான கருத்தையும் தெரிவியுங்கள்...நன்றி
என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Wednesday, August 18, 2010

'உமாசங்கரை' பழிவாங்கிய அராஜ அரசு...


"ஒரு அரசு இயந்திரம் நல்ல முறையில் இயங்குவதற்கு காரணம் அவ்வரசு உழியர்கலே" என்று அறிஞர் அண்ணா அவர்களே கூறியிருக்கிறார் ஆனால் அண்ணாவின் தம்பிகள் என்று சொல்லிகொண்டு ஆட்சியில் அமர்ந்த அல்ப பன்னாடைகள்...இயந்திரத்தை, இயந்திரத்தை நிர்வகிப்பவரை(உமாசங்கர்.IAS) ஒழுங்காக இயங்கவிட்டார்களா... அரசு சலுகை என்ற பெயரில் உழியர்களுக்கு அவர்கள் கேட்கும் முன்னே பல சலுகைகளை வாரி இறைத்து தேர்தலுக்காக அவ்வுழியர்களை தன் கைவசமே வைத்துகொண்டு செயல் புரியும் அரசு..கையில் சிக்காமல் இருக்கும் நேர்மையான அதிகாரிகளை  பழிவாங்குகிறது.

அரசு உழியர்கள் லஞ்சம் வாங்க கூடாது என்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறை ஒன்று உள்ளது. இதில் கடைநிலை, இடைநிலை உழியர்கள் அப்ப அப்ப லஞ்சம் வாங்கி மாட்டுவது உண்டு. ஒரு குடும்பத்தில் அப்பன் ஒழுக்கமாக இருந்தால்தானே பிள்ளையை ஒழுக்கமாக வளர்க்க முடியும். அப்பன்  அயோக்கியனாக இருந்தால் பிள்ளை எப்படி வளரும். அப்பனை பார்த்துதான் பிள்ளை வளரும். அரசு ஊழல் இல்லாத ஆட்சி செய்தால் உழியர்களும் கையுட்டல் வாங்காமல் இருப்பார்கள் ஆனால்...."'நான் எப்படி வேணுன்னாலும் இருப்பேன் ஆனா நீ யோக்கியனா இரு' ஏன்னா, நான் பண்ற ஊழல் எனக்கு மட்டும்தான் ஆனா நான் அப்போ, அப்போ ஊழலில் இருந்து உனக்கு பல சலுகைகளை அறிவிப்பேன் அதுவரை நீ வாய்திருக்காமல் வேலைய பாரு" என்றால் அது எதுமாதிரி அரசு..இந்தியாவில் 'எந்த அரசியல்வாதி ஊழல் செய்தான்' என்று தண்டிக்கபட்டிருக்கான் இதை எண்ணி பார்த்தால் யாரும் இல்லை என்றுதான் என் எண்ணம். அப்படிப்பட்ட ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை  வெளிச்சத்திற்க்கு கொண்டுவரும் நேர்மையான அதிகாரி தடாலடியாக ஏதோ மொக்க(அல்ப) காரணம் சொல்லி மாற்றபடுகிறார் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்யபடுகிறார்.

இதில் தற்பொழுது உமாசங்கர் என்ற IAS அதிகாரி அராஜக அரசால் பழிவாங்கப்பட்டார். இவர் வாங்கும் சம்பலத்திற்கும் மட்டும், மக்கள் நலனுக்கும் மட்டுமே பணி புரிந்துவந்த இவரை ஏதோ அல்ப காரணம் கூறி பணி இடை நீக்கம் செய்தது. எந்த வகையில் நியாயம். அரசியல்வாதி குடும்பம் நினச்சா முட்டிக்கும், இல்லனா ஒட்டிக்கும்...முட்டிக்கும் போது இன்னும் நல்லா முட்டவேண்டும் என்று அவ்வதிகாரி பயன்படுத்தப்பட்டார். இவ்வுண்மை தெரிந்தும் தன்பணியை நியாயமாக செய்து பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் வேலையில் முட்டிகனுவங்க மறுபடியும் ஒட்டிகனாங்க..ஒட்டிகுனதுக்கு தன்மானம் இல்லாத தமிழனுக்கு கவிதை வேற சொன்னாரு...அது என்ன கன்றாவி கவிதையோ எனக்கு மறந்துபோச்சு...இதன் பிறகுதான் உமாசங்கர் முழமையாக பழிவாங்கப்பட்டார். இவர் மேல் அரசு சுமத்திய  குற்ற சாட்டை நீதி மன்றம் புரகணித்தது.  (பராவில்லை நீதித்துறை சிலநேரத்தில் தன் கடமையை தவறாமல்தான் செய்கிறது...நீதித்துறைக்கு எங்கள் பாராட்டுகள்)  உமாசங்கர் சங்கதி, எதிர்கட்சிகள், பத்திரிகை துறை, மனித உரிமை போன்ற பல்வேறு அமைப்புகள் அவருக்கு ஆதரவாக அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் வரை போய்விட்டது. அப்போதுதான் அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும்  எடுக்காமல் கைய பிசைந்து கொண்டு, விழித்துக்கொண்டு இருக்கிறது.

இப்போது இணைய பதியுலகம் ஊடாக நாங்கள் கேட்பது. அவருக்கு மீண்டும் பணி உறுதி செய்யப்படவேண்டும். உமா சங்கரை சுதந்திரமாக பணி செய்யவிடவேண்டும். அவரின் கோரிக்கைகள் நிறைவேற்றபடவேண்டும். அவரை பழிவாங்கும் போக்கை இவ்வரசு கைவிடவேண்டும்...

நல்ல நேர்மையான அதிகாரிகளை பகைத்துக்கொண்டு ஒரு அரசால் நீண்ட நாள் இருக்கமுடியாது. அப்படியிருந்தால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது அதற்கு பதில் சொல்லுவார்கள்...


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:    


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Sunday, August 15, 2010

நமக்கு தேவையா இந்த சுத'தந்திரம்'


இந்த சுதந்திராத்தால் யார் பலன் அடைந்தார்கள். அரசியல்'வியாதிகாரனுங்க' மட்டுமே...

ஒரு இனத்தை அழிக்க முக்கிய காரணமாக இருந்த இந்த சுதந்திரம் நமக்கு தேவையா..சுற்றி முள்வேலி அமைத்து ஜன்மயிருநாயகம் என்ற போர்வையில் நம் அடிப்படை உரிமைகள் தட்டிபரித்தால் இது எதுமாதிரி சுதந்திரம்..இதில் நாம் எப்படி சுதந்திரமாக இருக்குமுடியும். சுதந்திர நாடு என்று சொல்ற நாட்டுல ஒரு சுதந்திர கருத்த சுதந்திரமாக சொல்ல கூட உரிமையில்லை என்றால் அது என்ன சுதந்திர நாடு அதுக்கு எதுக்கு ஒரு தேசிய அடையாளம்..இறையாண்மை பாதிக்கபடுகிறது என்று அலறும் அரசியல்'வியாதிகாருனுங்க'..மக்களை அரசியல்வாதிகளுக்கு எதிராக சிந்திக்க விட்டால் அவங்க ஓட்டு வங்கி பாதிக்கப்படும். அப்போது பாதிக்கபடாமல் இருக்கத்தான் எதிராளின் மேல் அரசியல்'வியாதிகாருனுங்க' பயன்படுத்தும் வார்த்தை இறையாண்மை பாதிக்கபடுகிறது...

ஒரு சனமயிறுநாயகத்தில் சாப்பிடுவதற்கு சோறையும் கொடுத்துவிட்டு சாப்பிடும் போது  தட்ட பிடிங்குனதுபோல..பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று சொல்ற சனமயிறுநாயகம் நாட்டுல..சுதந்திரமா எழுதினாலோ, கருத்து சொன்னாலோ, பேசினாலோ..அரசியல் 'வியாதிகாருன்ங்க'  தன நலன் பாதிக்கபடாமல் இருக்க பயன்படுத்தும் சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டம். கைதுக்கு காரணம்: இறையாண்மைக்கு எதிராக குந்தகம் விளைவித்தல்..நாங்க முட்டாளாக்கி வச்சுருக்குற மக்களை எங்களுக்கு எதிராக சிந்திக்கவிடுதல், எங்க தலைமுறை குடும்ப பொழப்புல மண்ண அள்ளி கொட்டுதல்....

அறிஞசர் பெருமக்களே சிந்தியுங்கள் உங்கள் புரட்சிகரமாக கருத்துக்களால்தான் இந்த அரசியல்'வியாதிகாரனுங்களிடம் இருந்து இந்நாட்டை முழுமையான சுதந்திர நாடாக மாற்றமுடியும்.

உலக அரசியல் வியாதிகாரனுங்களுக்கு பைத்தியம் பிடித்தால் உலகம் அழித்துவிடும் நாம் மயிரிழைலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். படித்த, படிக்காத அறிவுள்ள அறிஞசர்களே சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை புதிய உலகை படைக்கட்டும். உங்களால் முடியும்...

செத்த பிணங்களின் மேல் சுதந்திர கொடியை நட்டுவைத்து ஆனந்த கூத்தாடும் எம்மக்களே...'ஈழபடுகொலைகளை' மறந்துவிடீர்களா..எப்படி மறந்தீர்கள் அரசியல்வியாதி பணம் கொடுத்தானா...உன் தன்மானம் எங்கே போனது கோபாலபுரம் சென்று பதுங்கிவிட்டதா....                     

ஈழம் மலர்வதே எங்கள் சுதந்திரம்...அதுவே எம்மக்களுக்கும், தமிழுக்கும் கிடைக்கும் சுதந்திரம்...அதுவே தமிழனின் தாகம்...!
என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, August 14, 2010

எழுத்து, ஒளி, ஒலி எந்த பதிவு மக்களுக்கு சிறந்தது....

நாம் பார்க்கும் காட்சிகள் எதுபோலா இருக்கவேண்டும் எழுத்து வடிவிலா இல்லை ஒளி வடிவிலா இல்லை ஒலி வடிவிலா ஆனால் இதில் மூன்று வடிவில்தான் செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கபடுகிறது. சென்ற நுற்றாண்டுகள்வரை ஒளி, ஒலி வடிவம் வராதபோது எழுத்து வடிவமே சிறந்ததாக இருந்தது. தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளின் பிறகு ஒலி, ஒளி வடிவத்திற்கு புது மெருகூட்டபட்டது. மக்கள் முன்னே செய்திகளையும், நல்ல கருத்துகளையும், தகவல்களையும் எடுத்து செல்வது எது சிறந்ததாக இருக்கிறது. அது காலத்தால் நிலைகொள்ளுமா...இல்லை தற்காலிகமாக வந்து சென்றுவிடுமா..இதில் எது நிலைபெரும் என்பதே என்கேள்வி...?

எழுத்து பதிவு: இவை நாம் பார்த்த நிகழ்வுகளை நம் சிந்தனையில் ஏற்றி காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு கருத்துகளை பிரித்து எழுத்து வடிவிலே கொண்டுவருகிறோம். இவை நமக்கு என்றும் பயன்படும் புத்தகங்களாக இருக்கின்றது. புத்தகத்தில் பதிய படும் நல்ல கருத்துகள் கல்லில் செதுக்கிய ஓவியங்களாக என்றும் நம்மனதில் நீங்க இடம் பெறுகிறது. அது அழகுக்கும், பல புரட்சி விதைக்கும் வித்திட்டுயிருக்கின்றது. கம்யூனிச சித்தாந்தம் உருவாவதற்கு  காரணமாக இருந்த காரல் மார்க்சின் மூலதனம் (capital ) என்ற புத்தகமே...அது எந்த ஒலியிலோ, ஒளியிலோ வரவில்லை...அது எழுத்து  வடிவில்தான் வந்தது.  உலகத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான மாற்று நிலையை கொண்டுவந்தது. ஏன் நாம் தினசரி  படிக்கும் செய்திதாள்கள் எழுத்து வடிவில் தானே பார்க்கிறோம், படிக்கிறோம் பின்பு  தகவல்களை எளிதாக உள்வாங்குகிறோம். இதில் எழுத்துதானே முதன்மையாக இருக்கிறது.  ஒவ்வொரு எழுத்தாளனின் வார்த்தைகளின் எழுத்துகள் அவனவனுக்கு சொந்தம் அவன் அதை தேவை கேற்றார்போல் மாற்றி அமைத்து அழகுபடுத்துவான் அதை மேலும் செம்மைபடுத்துவான். அது என்றும் 'ஆறஅமர  உட்கார்ந்து சாப்பிடுவதுபோல....' விரைவு சிற்றுண்டி (fast food) என்று சொல்கிறார்களே அது போல இல்லை....எழுத்தில் உள்ள வசதி வேறு எதிலும் வாராது. இப்போது நான் எழுத்தும் இந்த பதிவும் முன்னரே தீர்மானிக்கப்பட்டது இல்லை காட்சி வடிவிலோ பேசி பழகனது இல்லை ஒவ்வொரு எழுத்தை நான் தட்டச்சு செய்யும் போது சொல்லவேண்டிய கருத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது இதை நான் காட்சி வடிவில் தரமுடியாது. நாம் எழுத்தில் பதிய படும் எழுத்துகள் அதில் உண்டாகும் மாற்றம் சமுகத்தின் பெரிய எழுற்சியை உண்டுபண்ணும் ஆற்றல் உடையது. ஆனால் அது உடனடியாக நடக்காது சில, பல காலங்கள் கூட ஆகலாம். அவை எழுத்தாளனின் கட்டுரைகளாகவோ, கவிஞசர்களின் பாடலாகவோ, அறிஞசர்களின் பொன்மொழிகலாகவோ, புரட்சி வித்திடுவோரின் புரட்சி எழுத்துகலாகவோ வெளிபட்டுகொண்டே என்றும் நிலைத்திருக்கும்.... நல்ல எழுத்து பதிவை காலத்தின் ஒரு பொக்கிஷமாக கொள்ளலாம். அதனால் எழுத்து பதிவு எனபது நம்பிக்கையின் ஆதாரம் சிந்தனையின் தொகுக்கப்பட்ட தொகுப்பு. அது என்றும் விரயமாகாது.

ஒளி பதிவு : சில சமாட்சாரங்களை எழுத்தை விட காட்சியின் மூலம் மக்களுக்கு எளிதாக தெளிவுபடுத்தலாம், நல்ல விழுப்புணர்வையும் உண்டாகலாம் உதாரணத்திற்கு (HIV) எயிட்ஸ் விளம்பரங்கள், பல நித்தய 'ஆனந்தாகளின்' சமாச்சாரங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்து போலி பிரமச்சரியம் பேசுவோரை உடைத்தது. இதில் நாம் சமூக நீதி அவலங்களை எழுத்தில் சொல்வதை விட காட்சி மூலம் பார்க்கும் போது கேள்விகள் ஆயிரம் பிறக்கும். மேல் மட்டத்தில் நடக்கும் அநியாயங்கள் அதை மறைமுகமாக எடுக்கபட்ட காட்சிகள் மக்கள் முன் கொண்டுவராமல் இன்னும் அதிகம் இருக்கின்றன ஆனால் லாப நோக்கில் வெளிப்படாமல் ஆளும் அரசுக்கு அடிபணிந்து இருகின்றது. அதில் சில காட்சிகள் போதும் பல ஆளும் அதிகாரங்கள் தரைமட்டம் ஆக்க ஆட்சிகளே கவரும் நிலைக்கு கொண்டு செல்லும் . ஒருவன் கையும் களவுமாக பிடிபட்டபோது ஒளிபதிவில்  பதிவாகினால் அப்போது குற்றவாளி, குற்றத்தை  ஒப்பு கொள்வதை தவிர வேற வழி இல்லை. ஒளி வடிவம் சென்ற நூற்றாண்டின் முடிவிலும், இந்த நுற்றாண்டின் தொடக்கத்திலும் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. திரைப்பட  படைப்புகளின் படைப்புகள் சமூகத்திற்கு நல்ல சிந்தனையும் உண்டாக்கிருக்கிறது, சீர்கெட்ட நிலையும் கொடுத்திருக்கிறது. ஒரு நல்லது செய்யும் போது கெட்டதும் கூடவே வரும் என்பார்கள் அதுபோலதான் திரைப்படமும்...அந்த காலத்தில் மூட நம்பிக்கை வளர்ப்பது ரொம்ப எளிமையாக இருந்தது ஆனால் இப்போது ஒளிவடிவத்தால் சாத்தியமே இல்லை மூட நம்பிக்கைகள் ஒரு சில மணிநேரத்தில் எளிதில் உடைக்கப்படும். உதாரணம் பிள்ளையார் பால் குடித்தது.  தமிழ்நாட்டுல பால் குடித்த பிள்ளையார் ஒரே இரவில் கடல்கடந்து அமெரிக்க வரை போய்ட்டார். அந்த அளவுக்கு மூடநம்பிக்கைகள் மக்கள் எளிதில் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள். பிள்ளையார் பால்  குடித்ததை விஞ்சானிகள் விஞ்சான பூர்வமாக ஆராய்ந்து ஒளி வடிவில் விளக்கம் கொடுத்தார்கள். அப்புறம்தான் அம்மூடநம்பிக்கை மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல அமிழ்ந்தது போனது. நாம் பழைய நினைவுகளை காட்சி வடிவில்தான் பார்க்கவேண்டும் என்று நினைப்போம் நாம் குழந்தையாக இருந்தபோது எடுத்த ஒளிதொகுப்பு, நம் தாத்தா, பாட்டி கலந்துகொண்ட நிகழ்சிகள், நம் நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு சென்ற இனிய நாட்களின் தொகுப்புகள், இனிய திருமண நாளின் ஒளி தொகுப்பு..என்று இதுபோல சொல்லிகொண்டே போகலாம் இவையாவும் காட்சிகளாக பார்க்கும் போது நம் மனதில் உணர்வின் ஆனந்தம், கொந்தளிப்பு, பரிதவிப்பு, கோவம், படபடப்பு போன்ற உணர்வுகள் எல்லாம் வந்துவிட்டு போகும் நம் மனம் அதற்கு உடனடி தீர்வை நோக்கி அழைத்து செல்லும். ஒளி வடிவம் எனபது உடனடி செய்தி பரிமாறிகொள்வது புரிந்துகொள்வதை எளிமையாக்கி படிகாதவங்களுக்கும் புரியவைப்பது, சமூகத்தின் அடுத்த பரிமாணத்திற்கு கொண்டுசெல்வது... அதனால் நவீன செம்மைபடுத்தப்படும் சமூகத்திற்கு காட்சி வடிவம் தேவையானதாக இருக்கிறது.

ஒலி பதிவு : இது முழுக்க முழுக்க செவி சம்பந்தப்பட்டது...காது ஓட்டையானால் ஒலி பதிவே ஓட்டைதான்..ஆமாம் முழுசா கண்ணு தெரியாதவனுக்கு எதுக்கு கண்ணாடி அதுபோலதான்  ஒலிபதிவு தேவையற்றதாகிவிடும். நாம் கேட்கும்வரை எல்லா திசைகளிருந்தும் ஒலிகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஒலியை பதிவாய் சேமித்து கேட்கும்போதுதான் புதிதாக ஒரு உயிர் வந்தது போல இருக்கும். காதலன் காதலியிடம் தொலைபேசியில் கொஞ்சி பேசுதல் எனபது ஒலியின் மூலம்தான் சாத்தியம். அங்கே எழுத்துக்கோ, ஒளிக்கோ வேலை இல்லை மின்னலை விட இடி ஆபத்து குறைவுதான்... காதலர்களை விட காதல் ஆழமானதுதான். அதனால்தான் காதல் வாழ்கிறது. அது என்றும் ஒலிபோல் உயிர்தன்மையானது ..அந்த காலத்தில் ஊமை படம்  பார்த்தவர்கள் ஒன்றும் ரசனை இல்லாமல்தான் பார்த்தனர். அதுவே ஒலி சேர்க்கும் போது உயிரின் உணர்வுடன் ரசித்து பார்த்தனர். அண்ணாவின் மேடை பேச்சியின் ஒலிபேழை இன்றும் கேட்பவர் நெஞ்சினிலே தமிழ் உணர்வையுயம், சிந்திக்கும் திறமையும் வளர்த்துவிடும்...ஏன் இன்று உலகத்தின் பெரும் புரட்சி புயலாக மாறி இருக்கும் தொலைபேசி என்கின்ற தொல்லைபேசி அனைத்து மக்களாலும் ஏற்று கொண்ட ஒரு சாதனம்...சட்டையில எழுதுகோல் (pen) இல்லாமல் கூட இருப்பாங்க ஆனா தொல்லைபேசி இருக்காமல் இருக்க மாட்டாங்க அப்படி மக்களிடம்  ஊடுருவிட்டது. ஒலியை தாங்கிய இந்த அலைபேசிக்கு ஒலி இருந்தால்தான் சாத்தியம் இல்லை என்றால் இந்த சாதனமே பயனற்றதாகிவிடும்.  நம் தானை தமிழர் கருணாநிதியை, அம்மையார் ஆட்சியில் ஏதோ  உழல் செய்தார் என்று கைது பண்ணி அழைத்து சொல்லும்போது அதை ஐயாவின் முன்னே இருந்த குடும்ப தொலைக்காட்சி எடுத்த ஒலி பதிவில் "ஐயோ என்ன கொல்றானுங்கப்பா, கொல்றனுங்க...." என்ற  ஒலி பதிவு சேர்த்தால்தான் அவங்க தொண்டர்களால் மட்டும்  மிகவும் பரப்பாக பேசப்பட்டது. இது ஒலி வடிவம் இருந்ததால்தான் சாத்தியமானது. அதனால் ஒலிவடிவம் ஓளிக்கு உயிர் கொடுப்பது..இவை இரண்டும் இருந்தால்தான் காட்சி அமைப்பு சிறந்ததாக இருக்கும்.
                                       
எழுத்து, ஓளி, ஒலி வடிவத்தில் எந்த பதிவு சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கும்போது. நாம் எந்த பதிவும் சீக்கிரமாக கிடைக்கவேண்டும் என்றுதான் நினைப்போம் ஆனால் அப்பதிவுகள் ஐந்து வருடம் பல கொடுமைகளை பார்த்து, அனுபவித்து இருந்தாலும் கடைசி நேரம் தேர்தலின் போது பிரியாணி பொட்டலத்துக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு வாக்களிபபதுபோல எல்லாம் மறந்துவிடும் நம் மனதில் தங்காமல் அழிந்துவிடும். ஒவ்வொரு ஆட்சி நடக்கும்போதும் இப்படிதான் நடக்கிறது. நம் மக்களுக்கு மறக்குற நல்ல குணம் ரொம்ப அதிகம் என்னதான் விடிய விடிய கதை கேட்டாலும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றுதான்  சொல்லுவாங்க... அதனால் ஒலிவடிவம் அப்ப அப்ப சூழ்நிலைக்கு ஒளியுடன் சேர்ந்து வரும்போதுதான் இரண்டுக்கும் அழகு..அதை நாம் மறக்காமல் இருந்தால்...ஆனால் எழுத்து அப்படி இல்லை அது ஒரு சிற்பியின் ஓவியம் போல் அதன் அழகு, அற்புதம், அதிசயம், எல்லாம் அதன் உயிர் ஓட்டத்தில் உள்ளடங்கியவை. இந்த பதிவையே நான் உங்களுக்கு தெரிவித்தது இந்த எழுத்துகள்தானே...இவை என்றும் எனக்கு உற்ற நண்பன்...லாவகமிக்கவன் வளைந்து கொடுப்பவன், தவறுகளை திருத்தி மறுவடிவம் கொடுப்பவன், ஏற்ற இறக்கங்களை அறிபவன், மனம் புன்படும் வார்த்தைகளை தவிர்த்து இனிய சொற்களை பயன்படுத்துபவன் அதுவும் நம் தாய் தமிழின் எழுத்துகளின் வரும் நளினம் வேற எதிலும் வராது. அதனால் என் தீர்ப்பு "எழுத்துகளுக்கு" உங்கள் தீர்ப்பு உங்கள் முடிவுகளுக்கே....விட்டுவிடுகிறேன்.

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, August 10, 2010

வாழ்வில் உண்டாகும் கசப்பான அனுவங்கள்....


நாம் ஒன்றை அடையாள படுத்திய பிறகுதான் அதற்கு வடிவம் கொடுக்கவேண்டும். அடையாள படுத்துவதற்கு முன்னரே வடிவம் கொடுத்தால் அதில் எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்திருக்கவேண்டும். இல்லை அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வைந்திருக்க வேண்டும். தேவையில்லாமல் நானும் அதீத முயற்சி (Risk) எடுக்கிறேன் என்று கூறி விழி பிதுங்கி, கைய பிசைந்து  இருக்கவேண்டாம் . நமக்கு எதிலும் ஒரு முன்னேற்பாடு, மாற்று வழி(Alternative) இருக்கவேண்டும்.  இவை நாம் செய்யும் தொழில், வேலை, வாழும் வாழ்கை என்று  இன்னும் பிற நிலைகளுக்கும் பொருந்து.  இவைகள் எதுவும் இல்லாமல் இருந்தால் நம்  நம்பிக்கையின் பிடி ஆட்டம் கண்டுவிடும். நம்பிக்கையின்  தளர்வு வாழ்கையின் நம்பதன்மையே கேள்வி குறியாக்கிவிடும். அதாவது இது எப்படி என்றால் நாம் ஏதோ ஒன்றில் ஈடுபடும்போது. அது விளயாட்டு ஆகட்டும், வேலையாகட்டும், வாழும் வாழ்கையாகட்டும் அதில் நாம் முன்னேறி விடுவோம் என்று நினைக்கும் போது அதில் ஏற்படும் சறுக்கல் நம்மை நிலை குலைய வைத்து விடும். அவை சலிப்பு, வெரக்தி, கோவம், துடிப்பு, பரிதவிப்பு போன்ற உணர்வுகள் எல்லாம் வெளிபடுத்தும்.  இதற்கு முழுக்க முழுக்க காரணம்  மனம் அதில் லயத்திருந்த்ததாலும், பயம், பதற்றம் போன்றவற்றாலும் ஏற்பட்டிருக்கும்.

இதனை சில உதாரணங்கள் முலம் சொல்லலாம் அவை நாம் முக்கியமான விசயம் கணிபொறியில் (computer) தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது மின் தொடர்பு துண்டித்தல் (power cut) தட்டுச்சு செய்த முக்கிய தகவல் சேமிக்காததால் எல்லாம் போதல்,  நண்பர்களுடன் இணையத்தில் இருக்கும் போது  இணையம் தொடர்பு துண்டித்தல், கணிபொறி திடிர்னு பழுதடையுதல், நம் கண்முன்னே திடீர் ஏற்படும் அசம்பாவிதம், நம்மை யாராவது அடிக்கும் போது ஏற்படும் மன பதற்றம் (அது போலீசா கூட இருக்கலாம்..), திடிர்ன்னு வருமான வரித்துறை வருதல்...(இது பணகாரனுங்களுக்கு வயத்துல ஒரு பூகம்பத்தையே உண்டுபண்ணி விடும்) இவை போன்ற பெரிய, சின்ன விசயங்கள் நம் மனத்தில் ஒரு பெரிய மனசஞ்சலத்தையே உண்டாக்கும்.

'நிலைகுலைந்து போகுதல்' என்ற வார்த்தை  நம் வாழ்வில் உண்டல்லவா...அது எப்படி ஏற்படும் என்றால் நாம் மிகவும் பாசம் வைத்த நபர் அகால மரணம் அடையும் போதும் , நாம் நம்பிக்கை வைத்த நபர் நம்மை ஏமாற்றும் போதும், நம்மை ஏளனமாக பேசும்போதும், உற்ற உறவுகள் வெறுக்கும் போதும் கண்டிப்பாக நிலைகுலைந்துதான் போவோம். அது சிறிது காலம் என்றாலும் அது ஏற்படுத்திட்டு போற வலியின் காயம் பல வருடங்களை கடந்து அனுபவமாக வரும். அது ஒரு கசப்பான அனுபவமாக கூட இருக்கும். அதை மறக்க நினைக்க முடியாத அளவுக்கு மனதை நிலைகுலைய செய்து விட்டு போயிருக்கும். இதுதான் பல பேருக்கு தற்கொலை உணர்வை தூண்டி விடுவது. பலர்பேர் இறப்பதும் இப்படிதான்... "நல்லா இருந்த மனுசன் நேற்று வரை நல்லாதான்  பேசின்னு இருந்தவரு இப்படி பட்டுன்னு போயிட்டாரே..." என்று சொல்வதும் இதுபோலகாரணகலாகத்தான்.

அதனால வாழ்வில் நாம் எந்த ஒரு நிலையை தேர்தெடுக்கும் போதும் அதற்கு முன்னேற்பாடு,  மாற்றுவழி வாய்ப்புகள், பிரச்சனைகள் என்று வந்தால் முன்னரே எதிர்கொள்ளும் மனநிலையை பெற்றுகொள்வது, நம்பிக்கையானவர்களின் ஆலோசனைகளை பிரச்சனை ஏற்படுவதற்கு முன்னும், அப்படி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பின்னும் தேவையான ஆலோசனை பெறுவது, ஊகத்தின் அடிப்படையில் செயல்படாமல் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தி கொள்வது. இது போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு செயல்பட்டால் எதிர்வரும் பிரச்சனைகள், மனசங்கடங்கள் என்று எதுவுமே இல்லாமல் போய்விடும். நமக்கு பெருத்த வலியின் ரணங்களை உண்டாக்காது. இது ஒரு கசப்பில்லாத இனிய அனுபவமாகக்கூட மாறி போகும்..என்றும்..!

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Sunday, August 8, 2010

உன்னை பற்றி தெரிந்து கொள்...


நம் உலகில் எல்லாமே விரும்பகுடியதுதான் வெருக்கரதா இருந்தால் இயற்கை நமக்கு எதுவும் படைத்திருக்காது எல்லாமே ஏற்றுகொள்ளகுடியதுதான். அது அன்பை மட்டும் இல்லை வெறுப்பையும். பலபேர் சினிமாவில் சோகமான காட்சி வந்தாலே கண்ணீர் விட்டு அழுவாங்க அந்த காட்சியில் வரும் சோகம் தன்னை பற்றியதாக இருகிறதே என்ற நினைப்பு. அது படம் தான் அவை பொய் தான் என்று தெரியும் ஆனால் மனம் அதை உண்மை என நம்பி அழும். இப்படி பட்ட மனதுடன்தான் நாம் வாழ்கிறோம் பின் அது எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்குமா...?

மனசுடைய உணர்ச்சி வேகத்தில் உண்டாகும் அனுபவமே அறிவாக கொள்கிறோம்...மறுபடியும் அந்த உணர்வு ஏற்படும் போது அறிவு அதன் வேகத்தை கட்டுபடுத்துகிறது. ஆனால் பல நேரங்களில் கட்டுபடாமல்தான் போகிறது. இறுதியில் மனமே வெற்றிகொள்கிறது. இவற்றில் மனதுக்கு மந்திரம், ஜபம் வேற தனியாக செய்கிறார்கள் அவை ஒரு கட்டுபடுத்த ஒரு பயற்சி தான் அன்றி வேறல்ல ஓம் நாமோ நாராயண..! என்றுதான் சொல்ல வேண்டு என்றில்லை பெப்சி. கோகோ கோலா, என்று சொன்னால் கூட மனம் கட்டுப்படும்.என்ன வார்த்தைகள் என்று மனதுக்கு கூறுகிறோமோ அதைதான் ஏற்றுகொள்கிறது.

உடலும், மனமும் இருக்கும் போது மரணம் வருவதில்லை. மரணம் வரும் போது அவை இருப்பதில்லை. செத்த பிணத்தை நினைத்து சாகபோற பிணங்கள் அழுமாம் தானும் ஒரு நாள் சாகபோறோம் என்று அறியாமல். தூக்கம் என்பதும் தற்காலிக மரணம்...! யாருக்காவது தெரியுமா...? மரண ஞானம் ஒன்று உண்டு அது எப்போது வரும் எனபது யாருக்காவது தெரியுமா..? அவை மரணிக்கும் போது வரும். மரணத்தை நாம் பார்க்கும் போதும் வரும். அது தற்காலிமாக இருக்கும். பின் நாம் வீட்டிற்கு வந்தவுடன் அது போய்விடும்.

மறுபடியும் நாம் சுயநலம், பொறமை என்ற சுழல் உள்ள வாழ்க்கையில் மரணிக்கும் வரை முடிவில்லாமல் சுழல்வோம். இவ்வாறு இருக்கும் போது நம்மிடம் பெரு ஒளி(ஞானம்) வந்தவுடன் சிறுஒளி(மனம்) தேவையில்லாமல் போய்விடும். நாம் எப்படி தனிமையில வந்தமோ...அப்படியியே தனிமையில போகபோறோம். நடுவில் ஏன் இந்த ஆர்பாட்டம்....


இந்த நாளும், எந்த நாளும் இனிய நாளாக இருக்க அந்த இயற்கையை வணங்குவோம்...

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
நட்புடன் உங்கள்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Thursday, August 5, 2010

இந்திய தண்டனை சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள்....

ந்திய விசாரணை சட்டத்தில் ஒருவர் விசாரணை என்ற பேரில் கைதாகினால் அவரை 15 நாள் சிறையில் வைக்கின்றனர் பின்பு போலிஸ் கஸ்டடிக்கு மனு செய்து விசாரணை கைதியை போலிஸ், உரி, உரி என்று உரித்து சில உண்மைகளை நிருபித்து பல பொய்களை சொடித்து விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறல் அதிகமாவே ஏற்பட்டு உள்ளே தள்ளுகின்றனர். 15 நாள் விசாரணை காலம் முடிந்து ஜாமீனில் வெளிவருகிறார். பின் ஒரு  வழக்கறிஞ்சரை வைத்து வழக்கை நடத்துகின்றார். இதில் அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் நிருபிக்கபட்டால் விசாரணை என்ற பெயரில் 15 நாள் ரிமான்ட் வைத்து பின்பு போலீஸ் கஸ்டடியில் வைத்து ஒருவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தல் அடைந்தவரானால் அவருக்கு இழப்பீடு யார் தருவது...குற்றம் அற்ற ஒருவருக்கு எப்படி 15 நாள் சிறை தண்டனை கொடுத்தார்கள். இத்தண்டனையால் அவங்க குடும்ப உறவுகள் எப்படியெல்லாம் பாதிக்கபட்டிருப்பார்கள். இது என்ன நியாயம் ...இது எதுவகையான சட்ட வடிவம் அப்போ விசாரணை என்ற பெயரில் யாரைவேண்டுமானாலும்  பிடிச்சு 15 நாள் ரிமான்ட் பண்ணலாமா, உள்ள தள்ளலாமா...இதற்கு இழப்பீடோ, நீதிமன்றம் மன்னிப்போ கிடையாதா...நீதிபதிகளெல்லாம் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா...அவர்களை விமர்சனம் செய்யகூடாதா...

தமிழ்நாட்டில் நெல்லையில் கல்லூரி வைத்து நடத்திய ராஜா போன்ற வாழ்கை வாழுகின்ற ஒரு கல்வி வியாபாரி ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார். அவரை கைது செய்து கீழ் கோர்ட்டில்  ஆஜர்செய்து போலிசாரால் குற்றபத்திரிகை தாக்கல் செய்து வழக்கு சில காலம் நடந்து அவர் குற்றம் அற்றவர் என்று தீர்ப்பு வருகிறது. பின்பு எதிர் சம்பந்தப்பட்டவர் ஐகோர்ட்டில் அப்பில் செய்து தண்டனை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை அடைகிறார். அதன் பின் இந்த கல்வி வியாபாரி உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கிலிருந்து எளிதாக விடுதலையாகிறார். கீழ் கோர்ட்டில்  தப்பித்து, மேல்கோர்ட்டில் தண்டனையாகி, உச்ச நீதிமன்றத்தால்  விடுதலையாகிறான். இது எதுவகையான சட்டம் என்று புரியலா... ஆட்சி அதிகாரம்  உள்ளவருக்கும், பணம் பலம்  பொருந்தியவருக்குமே  நீதி தலைசாய்த்திருக்கிறது. சந்தேகமே கொள்ளவேண்டாம்  நீதி அப்படிதான் இருக்கிறது.  சாமான்ய மக்களுக்கு நீதி என்றும் துரோகம் இழைக்கப்பட்டதாகதான் இருக்கிறது. இந்தியாவில் எனக்கு தெரிந்து எந்த அரசியல்வாதியும் ஒரு ஆயுள் தண்டனை கைதியாகவும், தூக்கு தண்டனை கைதியாகவும்  இருந்ததில்லை. இது அதிக பணம் படைத்தவனுக்கும் பொருந்தும். பணம் படைத்தவன் தேவை  அரசியல்வாதிக்கு தேவையாய்  இருக்கிறது.  அதனால இரண்டு பேருமே கூட்டு கலவாணிகலாகத்தான் இருக்கானுங்க....இவனுங்களுக்கு நீதிபொம்மை ஒரு தலையாட்டி பொம்மைதான்.

நீதி மன்றம் வெறும் சாட்சிகள் அடிப்படையிலும், அரசு தரும் தகவல் அடிபடையிலே இயங்குகிறது. ஆளும் அரசு அராஜ  அரசாக இருந்தால் நீதி எப்படி நேர்மையாக இருக்கும். "ஆயிரம்  குற்றவாளிகள்  தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது" என்று சொல்வார்கள் இது சரியான வாக்கியமா...? ஆயிரம் குற்றவாளி தப்பிகபடலாம் என்றால் அக்குற்றவாளிகள் என்ன நாட்டுகாக பாடுபட்டவர்களா...திருட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு எல்லாம் அரங்கேற்றிதான் குற்றவாளியாகிறான் அவன் தப்பித்தால் நீதி இழைக்க பட்டவருக்கு அது அநீதியாகதானே இருக்கும். ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதற்காக பல கேடி கிறீமினல்களை தப்பவிடலாம என்றால் இது என்ன ஒரு முட்டாள்தனமான வாக்கியமாக இருக்கிறது பாருங்கள்...ஆனால் இங்கே இவ்வாக்கியத்திற்கு பொய்யாக சில குற்றவாளிகளும்  பல நிரபராதிகள்தான் தண்டிக்கபடுகிறார்கள். இதில் "வாய்மையே வெல்லும்" என்று வசபாட்டு வேற...எங்க ஊர் பக்கம் நீதிமன்ற லட்சணத்தை பற்றி சொல்வார்கள். "ஆடு காணோம் என்று கோர்டுக்கு போனா மாடு  வித்துதான் கேசு முடிக்குனும்"  இந்த நிலையில்தான்  இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் உள்ளது.  நீதிமன்றங்கள் முழுக்க முழுக்க ஆளும் அரசுக்கும், பணம் படைத்த முதலைகளுக்கும் ஆதரவாகவே மறைமுகமாக செயல்படுகிறது....இதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதுதான் உண்மை. தினமும் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வையும், நீதிமன்ற  நிகழ்வையும் பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும். 

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, August 3, 2010

இதுதான் என் புத்தியின் அறிவு.....!

ன்று உலகத்தில் படிக்காதவன் கண்டுபிடித்ததைதான் பல பல்கலைகழகங்களில் ஆய்வக படிப்பாய் இருக்கிறது. இதில் அறிவாளியை விட புத்திசாலி சிறந்தவனாக என்றும் இருக்கிறான்....சினிமா படம் பார்க்க அதிகம் பேரு வருவாங்க ஆனா நல்ல தரமான படம் எடுக்க படைப்பாளிகள்தான் குறைவு...பள்ளி படிப்பு சரியாக படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்ப கண்டுபிடிச்சாரு ஆனா அவருக்கு பின்னாடி வந்தவங்க ஏற்கனவே கண்டுபிடிச்ச பல்ப இன்னும் கண்டுபிடிச்சு அதை பிரகாச படுத்தினாங்களே தவிர கண்டுபிடிப்பு என்று ஒன்றும் இல்லை....அதை மெருகூட்டுவது ஒன்றும் பெரிய சாமர்த்தியம் இல்லை. படைப்பதே என்றும் நிலைக்கும்.

முதலில் அடித்தளம் யார் இட்டார்கள் என்பதே பார்க்கவேண்டும். அதனால நான் ரொம்ப படித்தவன் ph.d முடித்தவன் B.E எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்தவன் என்று சொல்லிகொள்வதில் என்ன பெருமை வேண்டிருக்கு அடித்தளம் இட்டவன் உனக்கு முன்னே இருக்கிறான். அதற்கு நீ ஒரு மேலும் வடிவம் கொடுத்தாய்  அவ்வளவே..!

படிக்காத காமராஜ் நாட்டுக்கு அதிகம் செய்தார் என்று சொல்றாங்க ஆனா அவரு படித்திருந்தால் இன்னும் அதிகமா செய்துருப்பாரு என்று பல பேரு சொல்றாங்க அவரு படித்திருந்தாலும் செயரதான் செய்திருப்பாரு இதில் ஒன்றும் பெரிய அற்புதமோ,  அதிசையமோ நடந்திருக்காது..

நான் கேட்கிறேன், ரொம்ப படித்த அறிவாளிகளெல்லாம் நாட்டுக்கு அப்படி என்ன பெருசா சாதனை பண்ணிடாங்க, சமுதாயத்தில் என்ன ஒரு பெரிய விழிப்புணர்வா உண்டாக்கிட்டாங்க...ஆராய்ந்து பார்த்தால் ஒன்றும்மில்லை...அப்படி அவர்கள் ஏதும் செய்திருந்தால் ஏற்கனவே செயததுடைய மிச்சமாகத்தான் அச்சாதனை இருந்திருக்கும்..

படைப்பாளி என்றும் படைப்பாளிதான். அவன் புத்தி, அறிவுக்கு என்றும் ஈடாகாது..அதனால் ஒருவருடைய படிப்பை மட்டும் வைத்து புத்தியின் திறமையை தவறா எடைபோடகூடாது.

நம் பலகலைகழகங்களில், நாலு பேரு உட்கார்ந்து மார்க்கு போட்டு நீ நல்லா படித்த அறிவாளி என்று சொல்லி, கைல ஒரு பட்டத்தை கொடுத்தால் நாம் அறிவாளியா..நம்ம அறிவு நமக்கு தெரியாத

அறிவு எனபது ஏற்கனவே அறிந்ததை அறிவது..ஆனால் புத்தி எனபது அறியாததை அறிவது..

இதுதான் என் புத்தியின் அறிவு...!


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல..!என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...." இது உண்மையா...


"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...." இது உண்மையா... மனைவியோ அல்லது கணவனோ அமைவது நம்ம வீட்டு பேருசுங்க பண்ற வேலை.. இதுல இல்லாத இறைவன் எப்படி join பண்றார் என்று தெரியல.. அப்ப, மனைவியும் கட்டிக்கொண்டு சின்ன வீடும் செட் பண்ராங்கலே இது எந்த இறைவன் கொடுத்த வரம்... ஒருவேளை இறைவனின் செட்டப் கொடுத்த வரமா இருக்குமோ...

மனைவி அமைவது ஒரு மறைமுக வாழ்கை ஒப்பந்தம். உனக்கு தெரியாமல் நானும் எனக்கு தெரியாமல் நீயும் ஒளிவு மறைவு இல்ல்லாமல் ஒரு வாழ்கை வாழ்வோம் எனபது....25 வயதில்  ஒருத்தருக்கு கல்யாணம் ஆகிறது என்று வைத்துகொள்வோம் அவரு அந்த மனைவியுடன் அல்லது கணவனுடன் எத்தனை வருடம் வாழ்வார் என்று நினைகிரிங்க ஒரு 50 , 60 , 70 ....இதுக்கு மேல யாரும் வாழ் முடியாது அப்ப ஒரு 70  வருடம் ஒருவருடன்  வாழ்தால் அது ஒரு மறைமுக ஒப்பந்தம் தானே....

நாம்  ஒருவரிடம் நண்பனாய் இருப்போம் சில காலம் பிரிவோம், பேசாமல் இருப்போம் மறுபடியும் பேசுவோம்  ஆனால் மனைவி அல்லது கணவனோ நட்புபோலதானே... இங்கே பிரிவதற்கு இடம்மில்லாமல் மன சங்கடம்  வந்தாலும் சகிப்பு தன்மையுடன் வாழ்வோம்..இது இல்லாதவங்க விவாகரத்து வரை போயிடறாங்க...

மறுபடியும் சொல்றேன் மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் இல்லை நமக்கு நாமாகவும், சமுதாயத்தாலும் மறைமுகமாக போடப்படும் ஒரு ஒப்பந்தம்.  ஒருத்தர், ஒருத்தர் புரிந்து கொள்ளாமல் கட்டாய படுத்தி இணைக்கும் முயற்சி.....இவர்களை இணைத்த பிறகு போய்விடுவார்கள் அப்புறம் இணைப்பு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொண்டுதான்  வாழ்ந்து ஆகணும்.. இல்லையென்றால் பிரியனும்...

இதில் கட்டாய கல்யாணத்தை விட காதல் கல்யாணம் இவ்வளவோ மேல் அல்லவா...அதில் முதலில் பார்த்து பழகி, பேசி வாழ்கை என்ற ஒப்பந்தத்தை ஆரம்பிக்கிறோம்....இதில் காதலும் முதலில் புரிதல் இல்லாமல் காமத்தில் ஆரம்பிக்கிறது அக்காமம் தணிந்ததும் அவர்களுக்குள் வாழ்கை புரியவில்லை என்றால் பிரச்சனைதான்...

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்...! இது தான் எல்லோர் வாழ்விலும் நடக்கிறது சும்மா அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னாலும் பல பேருக்கு இதுதான் உணமையாக  இருக்கிறது.

எனக்கு இதெல்லாம்  புரிந்ததால் என் வாழ்கை ஒப்பந்தம் முறியாமல் இருக்கிறது... வணக்கம்..!
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!


என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.)