கட்டயமாக நீங்க எந்திரன் படம் பார்க்க போறிங்களா....ஒரு நிமிடம் உங்களை நீங்கள் கொஞ்சம் கிள்ளிகொள்ளுங்கள் வலிக்கவில்லை என்றால் போய் பாருங்கள். கிள்ளி வலித்தால் உங்களுக்கு சுரணை இருக்கிறது என்று நினைக்கலாம்....ஏனென்றால் எனக்கு கிள்ளினால் வலிக்குது
கொள்ளை அடித்து கோடி கோடியாய் சம்பாதித்த கொள்ளை கூட்டம் நம்மை வரிசையாய் படுககவைத்து நம்மீதே ஏறி நம்மேலேயே காரி உமிழ போகிறது....தன்மான தமிழனே தரங்கெட்டு போய்விட்டதா உன் தன்மானம்...
ரொம்ப வருமையில் வாழுகின்ற நடிகர் படம் 'எந்திரன்' இப்படம் நல்லா ஓடவேண்டும் என்று இவர் ரசிகர்கள் கோவில் 1000 படிக்கட்டு மேலே முட்டிபோட்டே நடந்தார்கலாம்....தந்தை பெரியார் கண்ட, காணும் தமிழ் நாடு எங்கே போகிறது. கோவில் படிக்கட்டு மேலேயா...?
தமிழ் உணர்வுகொண்ட உணர்வாளர்களே கொஞ்சம் உணர்ந்துபாருங்களேன்.."நமக்கு இந்தியாவில் தமிழன் என்ற மரியாதை இருக்கிறதா, தமிழ்நாட்டில் பணம் அதிகாரம் படைத்தவனிடம் மரியாதை இருக்கிறதா.."என்று. ஒருநிமிடம் சிந்தித்தால் நீ உண்மை தமிழனாய் இருப்பாய். உறுதியாய் இருப்பாய்...அப்படிருந்தால் உனக்கு மேலும் விளக்கம் தேவையில்லை...என்றே நான் நினைப்பேன்.
என்றும் நட்புடன்:

16 comments:
superb...
தொழிநுட்பத்தில் இப்படியும் சிந்திக்க முடியும் என தமிழ் சினிமாவையும் , சுஜாதாவையும் பிரமித்து மற்றவர்கள் பார்க்கும் நேரம் இது .. என்ன தான் சொன்னாலும் இப்படியும் எடுக்க முடியும் என உயர்த்தி இருப்பது பாராட்ட தக்கது .. பெருமைப்பட கூடியதும் கூட .. ஹிந்தி சினிமாவுக்கு நிற்கும் வரிசையை இந்த படம் உடைக்கும் தோழரே..
@S.Sudharshan
உங்க ப்ளாக் http://ethamil.blogspot.com/2010/09/blog-post_22.html போய் பார்த்தாலே தெரியுது உங்களுக்கு கிள்ளினால் வலிக்காது போல....அப்படியே இருங்கள் சுரணை வரும்போது வரட்டும்....விடிய விடிய கதை கேட்டாலும் சிதைக்கு ராமன் சித்தப்பா என்பார்களாம்....ஆனால் விடிந்தபின்னும் உறங்குபர்களை என்ன செய்வது...
//ரசிகர்கள் கோவில் 1000 படிக்கட்டு மேலே முட்டிபோட்டே நடந்தார்கலாம்.//
அப்படி என்னதான் பக்தியோ தெரியல மக்கா..!! தெரியாதவங்களை திருத்தலாம் ..தெரிஞ்சே செய்வோமுன்னு செய்யறவங்களை என்ன சொல்லி திருத்துவது வளர்பு சரியில்லைன்னு சொல்லியா..!!!!!!!
மரமண்டைகளுக்கு காலில் சுளுக்கு வந்தா அந்த கபோதியா வந்து சுளுக்கு எடுப்பானுங்க ..
இதுக்கு மேல திட்ட என்னாலா முடியாது.அவ்வளவுதான்..!!
தமிழா வாழ்க வளமுடன்..இப்பிடி முட்டி தேய்ந்து...:-)))
///விடிய விடிய கதை கேட்டாலும் சிதைக்கு ராமன் சித்தப்பா என்பார்களாம்....ஆனால் விடிந்தபின்னும் உறங்குபர்களை என்ன செய்வது///
இது என்ன புது கதையா இருக்கு இதுவும் நால்லாதான் இருக்கு.
கதையில்தான் பிரமாண்டம் இருந்தா போதும்.எந்திரன் மாதிரியான படங்கள் எல்லாம் அவர்களாக ஒரு போலியான தரத்தை உருவாக்கி அதை பார்க்கும் மக்கள் எல்லாம் நவீன தரமான மனிதர்கள் என ஒரு போலி மாயை உருவாக்கி ஊரை ஏமாற்றும் வேலை.
urupadiyana velai illai endral ippadi kovilgalil muddiyum poduvargal,antha ponnana nerathai nalla muraiyil ubayogam pannalame,
thambi,
thavakkalai enru oru nadikar munthaanai mudichula arimugmaanaarla. avarukku rasikar manram maduraiyila irunthathu.Thuklak pathirikkaila irunthu nirubar kettatharku, oorula ennai ellorum thalaivar enru sollukiraarkal enraaram rasigar manra thalaivar. m mmmmm intha situationla naamba enna kaththinaalum paal abishekam, ticketukku 1000/- 500/- kuduththu vaankuvathai thadukka mudiyaathu.thalaiyezhuththu.
எனக்கு இது பற்றி சொல்லத் தெரியல்....
Nammalaala solla dhan mudiyum.... First show ku ticket eduthadhaye IAS exam pass panna effect kodukkaraanunga... Ivaingala laam solli thirutha mudiyaadhu boss! Epdiyaadhu pattaa dhan puriyum
முழங்காலுக்கும் மொட்டை தலைக்கு முடிச்சு போட்றதுங்கறது இதுதான்
//கட்டயமாக நீங்க எந்திரன் படம் பார்க்க போறிங்களா....ஒரு நிமிடம் உங்களை நீங்கள் கொஞ்சம் கிள்ளிகொள்ளுங்கள் வலிக்கவில்லை என்றால் போய் பாருங்கள்.//
நீங்க சன் டிவி பாப்பீங்களா?
ஒரு ஜெனரல் நாலெட்ஜுக்காக கேட்டேன்..
கருத்து பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
@முகிலன்
வீட்டில் டிவி இருக்கிறது ஆனால் சன் டிவி இல்லை ஏனென்றால் அது big டிவி அதில் சன் டிவி வரவில்லை வரவேண்டாம் என்று big டிவியிடம் சொல்லிவிட்டேன்.
சிலருடைய அறியாமையில் ,ஆயிரம் கோடிகள் குவிகின்றன, பலருடைய பெட்டியில்.
போட்ட பணமெல்லாம் விளம்பரத்திலும்,விழாக்களிலும் ,தொலைக்காட்சி அலசலிலும் எடுத்திருப்பார்கள்....இனி வருவது லாபக் கணக்கு.
தல ,
இப்படி எல்லாம் பார்த்தா தமிழ் நாட்டுல வாழ முடியாது .....
சில விசயத்துல "கோவிந்தோம் ,கசகோவிந்தோம்" போட்டு தான் ஆகணும் ....
தமிழ் நாட்ட ஆட்சி செய்வதே இவனுகதான் ....அதற்காக தமிழ் நாட்ட விட்டு கெளம்பிற முடியுமா என்ன ?
முதன் முதலாக ஒரு புத்திசாலித்தனமான கருத்தை பார்த்து மகிழ்வுற்றேன்.
உங்கள் பதிவுகள் சிந்திக்க வைக்கின்றன்.
நன்றி.
Post a Comment