Pages

Monday, December 27, 2010

நீங்க முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...


நாம பலநேரம்  ஏதார்த்தம் என்பதை தவறவிட்டுவிடுகிறோம். சகஜமான வாழ்வை தொலைத்துவிட்டு முட்டி மோதி கடைசியில் கைகாசு கூட மிஞ்சாமல் போகிறது.  நம் வயிறு பசிக்குது என்று உணவை நம் கை எடுத்து வாயில் ஊட்டிவிடுகிறது.  அவ்வுணவை பல் அரைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறது.  அதை உடலும் தேவையானது என்று ஏற்றுகொள்கிறது. ஆனா நாம் வாழும் வாழ்வில் பிடிக்கிறதோ, பிடிக்கலையோ கட்டாயத்தின் பேரில் சிரமப்பட்டுதான் வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட இடரான வழ்க்கை எதற்கு.? வயிறு பசித்து கை எடுத்து கொடுத்து சாப்பிடுவதை போல வாழ்வும் எதார்த்தமாக இருந்தால் நாம் வாழும் வாழ்வில் எந்த வேதனையும்  இல்லை அப்படியே இருந்தாலும் அது வேதனையாக இருப்பதில்லை. நீங்கள் அருவியில் கொட்டுகிற தண்ணீரை பார்த்திங்கனா ரொம்ப சலசலப்பா இருக்கும். அதன் பக்கத்தில் போகவே முடியாது. ஆனா அதே அருவி தண்ணீர் கொஞ்சம் தூரம் போன பின்னே அதன் நீரோட்டம் கவனித்தீர்கள் என்றால் அது எந்தவித சலனம் ஏற்படுத்தமால்   அமைதியாக போகும் அதில் எப்போதும் ஒரு அழகு இருக்கும். அதுபோலதான் நாம் வாழும் வாழ்வும்  நீரோட்டம் போன்றது.  அருவி போல் எப்போதும் சலலப்பு இருந்தாலும் அதன் தெளிந்த நீரோடையாக இருப்பது நமக்கு என்றும் நல்லதாக இருக்கும். அது நாம் வாழும் வாழ்வை எந்தவிதத்திலும் சிதைக்காமல் தொந்தரவு செய்யாமல் இருக்கும். நான் சொல்வது வாழ்வின் ஏதார்த்தத்தை இதை  புரிந்தவர்களுக்கு வாழ்வது ரொம்ப எளிதுதாக இருக்கும்.

நீங்கள் எரியாத மெழுகுவர்த்தியாய் இருந்துகொண்டு மற்றவரை எரியவைக்க முயற்சிப்பதில் என்ன பயன். முதலில் உங்கள் அனுபவங்களில் உங்களை தேடுங்கள். நம் பசிக்கு உணவு இல்லாதபோது பக்கம் பக்கமாக படித்து என்ன பலன் வேண்டிருக்கு. இது என் அனுபவத்தில் தேடிய வாக்கியம்...      

அறிவு சார்ந்த ஒன்றை தெரிந்துகொள்ள நாம் ஒரு அரங்குக்கு செல்வோம். அங்கு ஏற்கனவே பல பேரு இருப்பார்கள் நாம் கடைசியாக போய் அமர்வோம். இப்போது நாம் நினைப்போம் "ஐயோ நாம்தான் கடைசியா" என்று ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து நம் பின்னே பல பேர் வந்து அமர்வார்கள் இப்போது நாம் கடைசி இல்லை.  நமக்குதான் பிரச்சனை என்றால் பலபேர் பிரச்சனையுடதான் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.  "உனக்கு கிழே உள்ளவர் கோடி" என்று கண்ணதாசன் எழுதிய பாடல் போல் இருக்கிறது பிரச்சனைகள்.  எதுவும் நம் நினைப்பில்தான் உள்ளது.      

நம்மில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லா சிந்திகிறாங்க பேசசொன்ன மணிக்கணக்காக பேசுகிறார்கள். எழுத சொன்னால் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். ஆனால் செய்முறை பயிற்சி இருக்கா என்றால் இல்லை ஒழுக்கத்தை பற்றி ஓயாமல் பேசுவோர்களும் உண்டு ஆனால் சொன்ன ஒழுக்கத்தை ஒருநாளேனும் நினைத்தார்களா இல்லை கடைபிடித்தார்களா என்றால் இல்லை. இதில் அவர்களுக்கு செயல்முறை பயிற்சி இல்லை. எதையும் பழக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். எல்லோருக்கும் எல்லா திறமைகளும் உண்டு. அதை வெளிகொண்டுவரத்தான் யாரும் முயற்சிப்பதில்லை ஆசை என்னவோ எல்லோருக்கும்தான் இருக்கிறது ஆனா அதை சிலபேர்தான் அடைகிறார்கள். காரணம் ஆசையுடன் ஆர்வம் மட்டும் போதாது முயற்சி அதனுடன் இணைந்த பயற்சியும் அதை என்றும் நடைமுறைபடுத்தி இயல்பாக்கினால் கடின உழைப்பு என்று சொல்வது கூட  எளிமையாகிவிடும். ஆர்வத்துடன் போதிய முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்தான்.

நாம் வெற்றி, வெற்றி என்று சொல்வது ஒன்றுமில்லை ஆசையின் மறைபொருல்தான் வெற்றி. நாம் நினைக்கும் அடையும்  வெற்றி ஒரு எல்லைவரை வரையறுத்தது. அதை பார்பவர்களுக்கு வேண்டுமானால் நாம் வெற்றி அடைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அது வெற்றி இல்லை. ஒருவரின் எண்ணத்தின் பார்வைமட்டும் நம் வெற்றியை நிர்ணயப்பதில்லை. அதில் நம் எவ்வளவு மன உறுதியாய் பெற்றோம் என்பதில்தான் வெற்றி உள்ளது. ஏழை ஏழையாய் இருப்பதற்கு அவனிடம் இருந்து சுரண்டலுக்கு அடுத்து ஒரு சில காரணங்களும் உண்டு. அதை அவன் எப்போதும் அறியவில்லை அவன் ஏழ்மையின் எண்ணமும் ஒரு காரணம். ஏழ்மையில் இருப்பவன் எழ்மையைதான் நினைப்பான் அதனால் மேலும் அவன் ஏழையாகின்றான். பணக்காரன் மேலும் பணத்தையே நினைக்கின்றான் அதனால் மேலும்  பணக்காரனாகின்றான். இதில் ஏழ்மையை இருப்பதற்கும் பணகாரனாய் இருப்பதற்கும்  எண்ணமே விதையாக இருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை என்னத்தை விரித்த மனிதன்தான் அந்த எண்ணத்தை  உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் ரைட் சகோதரர்களால் உண்மையாக்கபட்டது. பறவைபோல கற்பனை செய்த மனிதனின் எண்ணம் நிறைவேறியது.     

பலதை கைகொள்ள என்றால் சிலது நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். புகை பிடிப்பதால் உடல் நலகேடு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் புகையின் தீமையை படித்து இன்னொன்று புகையை இழுத்து விடுவார்கள். நான் எதையும் செயல்முறையில் கொண்டுவர முயற்சிக்கிறேன். நான் 10 வருடமாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் இப்போது 3 வருடமாக புகையை நிறுத்திவிட்டேன் இதனால் என் உடலும், மனமும் சரியாக இருக்கிறது. தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் 2 வருடமாக செயல்படுத்துகிறேன். "இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா" என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் எனக்கு பல திட்டசெயல் முறைகளை நடைமுறைபடுத்த சிலதை கடைபிடித்துதான் ஆகவேண்டும். 

வாழ்வில் கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும் என்றால் சிலதை நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். அதனால் படிப்பதுடன் இருக்காமல் முடிவதை செயல்முறைபடுத்துங்கள். நீங்கள் காணும் எதிர்பார்ப்பும் நிச்சயம் நிறைவேறும். இது என்னால் நிரூபிக்கப்பட்ட வெற்றிமுறை...   என்றும் நட்புடன்:     

Saturday, December 25, 2010

கன்னித்தாய்க்கு குழந்தை ஏசு..?

 முதல் கதை:


வாழ்வில் சலிப்படைந்த ஒரு வாலிபன் விடுதியில் உள்ள பதினான்காவது மாடியின் ஜன்னலிலிருந்து குதித்து விடுவதாக மிரட்டினான் காவலர்கள் மிக அருகில் செல்ல முடிந்த இடம் ஒரு சில அடி கீழே உள்ள கட்டடத்தின் கூறையாகும் பாதுகாப்பாக திரும்பி வரும்படி கெஞ்சியது. எதுவும் பலனில்லை பக்கத்தில் இருந்த தலைமை சமய குரு அழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அன்பான முறையில் அவர் "மகனே , சிந்தனை செய், மகனே! உன்னை நேசிக்கும் உனது தாய், தந்தையை பற்றி சிந்தனை செய், என தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வாலிபனிடம் கூறினார்.

"அவர்கள் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன் என்றான்.

இல்லை மகனே!  நில்" என ஆழ்ந்த அன்போடு கூடிய குரலில் பாதிரியார் கூறினார்.  உன்னை நேசிக்கும் பெண்ணை பற்றி யோசி!

"யாரும் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன்." என பதில் வந்தது.

"ஆனால் நினைத்து பார் ஜீசஸ், மேரி, ஜோசப் உன்னை நேசிக்கும் இவர்களை சிந்தனை செய்! என பாதிரியார் கெஞ்சினார் .

"யார் அவர்கள் .? என அவன் கேட்டான்.

உடனே பாதிரியார் "குதி! யூத புறம்போக்கே குதி ! என்றார்.

எல்லாஅன்பும் உடனடியாக மறைந்து விடுகிறது. அன்பை பற்றிய எல்லா பேச்சுகளும் மேலோட்டமானவை பொருத்துகொள்ளுதலை பற்றிய எல்லா பேச்சுக்களும் அடி ஆழத்தில் பொருமையற்றவை.
  
இரண்டாவது கதை:

மனித இனம் வெற்றுவார்தைகளால் பிளவுபட்டுக் கிடக்கிறது. வெற்று வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். தம்மை இந்துக்கள் என்றும், யுதர்கள் என்றும், கிருஸ்தவர்கள் என்றும், முகமதியர்கள் என்றும் இன்னும், அவர்கள் இவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் வெற்று வார்தைகள் மேல் நம்பிக்கை வைத்திருபவர்கள். எல்லாமே இரவல் தான் சண்டை, சச்சரவு, விமர்சனம், என்று மனித சரித்திரத்தையே இரத்தம் தோய்ந்தாக்கி வைத்திருக்கிறார்கள் அதுவும் கடவுளின் பெயரால்

ஒரு யூத பெண் தனிப்பட்ட ஓரிடத்தில் ஒரு மாலை நேரம் தங்க வேண்டி வந்தது "தனிப்பட்ட" என்றால் யுதர்களுக்கு இடம் தராத என்று பொருள். ஊருக்குள் இருந்த ஒரு ஹோட்டலுக்கு போனாள் தங்குவதற்கு ஓர் அரை வேண்டும் என்று கேட்டாள்.

டெஸ்க் கிளார்க், ரூம் ஒன்னும் இல்லையே" என்றான் .

' பிறகு ஏன் ரூம்கள் கிடைக்கும்னு போர்டு வெச்ரிகிரிங்க?"

' யூதர்களுக்கு ரூம் தரதில்லே.'

'ஆனா இயேசு கூட ஒரு யூதர்தானே?'

' இயேசு யூதர்தானு உனக்கு எப்படி தெரியும்'

'அப்பா தொழிலுக்குதானே அவரும் போனாரு? அதுவுமில்லாம நான் கத்தோலிக்க மதத்துக்கு மாறிட்டேனே! கேள்வி எதாச்சும் கேட்டு பாரு. நான் பதில் சொல்றேன்.

சரிதான். இயேசு எப்படி பிறந்தாரு?'

'கன்னியிடமிருந்து பிறந்தாரு. அவரோட அம்மா பேரு மேரி, அப்பா பேரு புனித ஆவி.'

'சரிதான். இயேசு எங்கே பிறந்தாரு?'

'மாட்டுத் தொழுவத்தில்.'

'அதுவும் சரிதான். அவரு ஏன் அங்கே போயபிறந்தாறு?'

'உன்ன மாதிரி தேவிடியாப் பசங்க ஒரு யுத பொம்பளைக்கு ஒரு ராத்த்ரி தங்கறதுக்கு ஒரு ரூம் தரதிள்ளனுட்டுதாலே. அங்கே போய் பிறந்தாறு.'

ஆனால் இதை போன்ற தேவிடியா பசங்கதான் எல்லா இடத்திலையும் இருக்கிறார்கள். அவர்கள்தான் புசாரிகலாகவும், ராபிக்கலாகவும், பண்டிதர்கலாகவும், சங்கராச்சாரியர்கலாகவும், போப்புகலாகவும் இருக்கிறார்கள். இவர்கள் வெகு தந்தரசாளிகள் வெற்று வார்த்தைகளை வைத்துகொன்டு விளையாடுகிறார்கள், தர்க்க வெட்டிகள் சிகைமயிறை பிளகிறார்கள் பயனற்றவைகளை பற்றி முடிவில்லாமல் விவாதிக்கிறார்கள்.

கத்தோலிக்க போப் தன் கட்டுபாட்டில் பல லட்சம் பேர்களை கொண்டவர். இதில் ஒருவர் கூட கன்னிப் பெண் எப்படி குழந்தை பெற்றால்.? என்று கேள்வி எழுப்பியதில்லை "இயேசுதான் தேவமைந்தன் என்பதற்கு என்ன ஆதாரம்.? பலரை துயரத்தில் மீட்பவர்தான் இயேசு என்பதற்கு என்ன அத்தாட்சி.? அவர் தன்னையே காப்பாற்றி கொள்ளமுடியாதவராகத்தான் இருந்தார்.

:-osho

பல விஞ்ஜானதிர்க்கு சொந்தகாரர்களாக இருக்கும் மேற்கத்தியகார்கள் ஏசு எப்படி கன்னித்தாய்க்கு பிறந்தார் என்ற விஞ்ஜானத்தை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் இது ரொம்ப வேடிக்கையாகதான் இருக்கிறது. இப்பொழுது கன்னித்தாய்க்கு பிறந்த தேவமைந்தன் நான்தான் என்று யாரவது சொன்னால் கிறிஸ்துவர்கள் ஏற்றுகொள்வார்களா...?


"நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாய் இருப்பது அச்சமும் ஏக்கமும் ஆகும். ஒரு மததில் நம்பிக்கை கொள்ளாவிட்டால் பேரிழிப்பு எற்படுமென்ற அச்சமும், ஏக்கமும் மக்களை அச்சுருத்துகின்றன."

:-ஜே.கேஎன்றும் நட்புடன்:

Friday, December 10, 2010

ஆணும், பெண்ணும் சமகால தோழர்கள்...


சில பெண்ணியவாதிகளுக்கு ஆண்களை கண்டால் பாவக்காய் போல கசப்பாதான் பார்பார்கள். அவர்கள் சொல்லுவார்கள் "நீ என்னடா என்னை கற்பழிக்கிறது நான் உன்னை கற்பழிக்கிறேன் பார்" என்று. "ஆணாகிய நீ இறுக்கமான ஆடை போட்டால் நானும் அப்படியே போடுவேன் அது எனக்கு சரியா இருக்கா.? இல்லையா.? என்றேல்லாம் எனக்கு கவலை இல்லை,"நீ தம்பு(சிகெரேட்) பிடித்தால் நானும் பிடிப்பேன். நீ நின்றுகொண்டே சீறுநீர் கழித்தால் நானும் நின்று கொண்டே கழிப்பேன் பார் (என்று ஒரு வேலை கூறினால்) ஆணுக்கு நிகர் பெண் என்ற அடிப்படை வாதமே தவறாகி போய்விடுமே...

ஆணின் தைரியத்திற்க்கும், துணிவுக்கும் தோழமையுடன் போட்டி போடலமே அன்றி எதிர்ப்பு நிலை உண்டாக்கி "அவனை போல் நானும் செய்து காட்டுகிறேன் பார்" என்றால் சமுகத்திற்க்குதான் சீரழிவு. பெண்ணியவாதிகள், ஒரு விதத்தில் தாங்கள் ஆணை வென்று விட்டோம் என்று கூறிகொள்ளலாம். ஆனால் இவர்கள் பெண்களை அழிவு நிலைக்குதான் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். பெண்ணின் சுயசிந்தனையான, முற்போக்கு எண்ணங்கள் ஆணை எதிர்த்தோ அவனை காப்பி அடித்தோ இருக்க கூடாது. ஒரு அழிவு இன்னொரு அழிவுக்குதான்  இட்டுசெல்லலும். ஆணும் பெண்ணும் சமக்கால தோழர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால் ஆணும் பெண்ணும் ஒன்றோடு ஒன்று இணைந்த உறவு, தோழமை..இவை இல்லாமல் தனித்து எதிர்ப்பு நிலையில் செயல்பட்டால் அது ஒரு கசப்பான பிரிவைத்தான்  உண்டாகும். இதனால் நாளைய தலைமுறை பல இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிவரும். இப்போதே இதன் தாக்கம் அதிகரித்து விட்டது. அது மேலும் அதிகரித்து கேள்விகுறியில் நிற்கவேண்டாம்.

நாகரிகம் வளர்ந்த மேற்குலகில் கணவனும், மனைவியும் ஏதோ அற்ப காரணங்களுக்காக பிரிந்து செல்வதால் இதில் ஒன்றும் அறியாத குழந்தைகள்தான் பாதிக்கபடுகிறார்கள். அக்குழந்தைகள் பாதிக்கபடுவதால் பின்னாளில் அதுவும் பெற்றோர்கள் எடுத்த நிலையே எடுக்கும். இதில் மாற்றம் எதுவும் இருக்காது. அதனால் ஆணும், பெண்ணும் தோழமையுடன் இணைந்த சமுதாயம்தான் ஆரோக்கியமான சமுதாயமாக இருக்கும். ஆண் செய்த இழிவையே  பெண்ணும் செய்ய நினைத்தால் எதிர் விளைவுகள்தான் ஏற்படும். இது எப்படி என்றால் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணையும் தருவாயில் அவை அணையாமல் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றுவதற்க்கு ஈடானது. இந்த எண்ணெய் எதுபோல என்றால் "நீ என்னடா என்னை கற்பழிக்கிறது நான் உன்னை கற்பழிக்கிறேன் பார்" என்று சொல்வதை போல... 

என் எண்ணத்தின் எழுத்தை படித்த உங்களுக்கு என் நன்றிகள்...என்றும் நட்புடன்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி,  மற்றும் நம் குரல்  பதியவும்.....நன்றி.)

Wednesday, December 8, 2010

காதலுக்கு ஒரு சோதனை கதை...


ஒரு அரசன் தன் மகள் ஒரு எழ்மையானவனை காதலிக்கிறாள். என்று தெரிந்து தன் மகளிடம் பேசிபார்த்தார் ஆனால் மகள் பிடிவாதமாக"அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்" என்று மிரட்டினால்...'காதல் சாகவும் துணியும்' என்று எண்ணிய அரசன் மகளின் காதலின் உண்மை தன்மையை புரியவைக்கவேண்டும். என எண்ணி தன் மகளிடம் ஒரு நிபந்தனை வைத்தார். அதாவது "உங்களை ஒருநாள் 24 மணிநேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை  பார்க்க முழு நிர்வாணமாக கட்டி வைத்து விடுவோம்...நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து  அந்த 24 மணி நேரத்தை கடந்தால் உங்கள் காதலுக்கு எனக்கு முழுசம்மதம்" என்கிறார். இதற்கு காதலர்கள் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் அந்த காதல் பல கவிதைகள் எழுதி, பாடி, பேசி வாழ்ந்த காதல் அல்லவா.."இது என்ன பெரிய நிபந்தனை  நாங்க வெற்றிபெற்று காதலில் ஜெயித்து காட்டுகிறோம்" என்று காதலர்கள் சொல்ல...அரசன் இருவரையும் எதிர் எதிரே கட்டி போடா ஆணையிட்டான். இருவரையும் முழு நிர்வாணமாக ஒரு தூணில் நிற்கவைத்து கட்டி போட்டார்கள். அப்போது இருவருக்கும் கொஞ்சம் வெட்கி தலை குனிந்து ஒருவரை ஒருவர் ஓரக்கண்னால் பார்த்து தம் காதல் வெற்றியடையும் என்று எண்ணி பூரிப்பில் இருந்தார்கள். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது சில நேரம் சென்றுவிட்டது. காதலனுக்கு சிறுநீர் கழிக்கணும் போல ஒரு உணர்வு ஆனால் அதை அடக்கி கொண்டான். இதேபோன்று அந்த பெண்ணுக்கும்...இருவரும் அடக்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை வெளியேற்றி விட்டார்கள். இப்போது வெளியேறிவிட்டது. அந்த இடமே நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இருந்தும் முக சுளிப்புடன் சமாளித்தார்கள். ஆனால் காதலனின் வயிறு சாமாளிக்க முடியவில்லை அடுத்த மலகடனை வெளிற்ற நேரம் வந்து விட்டது. இந்த முறை அவன் முயற்சி செய்தும் பலன் இல்லை மலத்தை வெளியேற்றிவிட்டான். நாற்றம் முன்னரை விட இப்போது ரொம்ப அதிகமாகிவிட்டது. என்ன செய்வான்பாவம் அவன் முயற்சிக்கு இயற்கை உபாதைகள் கட்டுப்படவில்லை அந்தவேளையில் கட்டுபாட்டை மீறி கொண்டு வந்துவிட்டது. இப்போது காதலின் முகம் பல கோணல்களை வெளிபடுத்தி விட்டது. "என்னடா நம் காதலன் இப்படி ஒரு நிலையில் இருக்கிறானே..என்ன ஒரு அருவருப்பான நிலை" என்று மனதுக்குள் எண்ணி வெறுப்படைந்தால். இப்போது காதலர்கள் ஒரு முகத்தை ஒருவர் பார்க்கவே அருவருப்பாக இருந்த நிலை முகத்தை திருப்பி கொண்டு தங்களை விடுவித்தால் போதும் என்று எண்ணினார்கள். காதலர்களை விடுவித்தாகிவிட்டது. ஆனால் அவர்களுக்குள் முன்னே இருந்த காதல் இல்லை...

காதல் எனபது உணர்வில் ஏற்படுவதை விட கவர்சியில்தான் ஏற்படுகிறது. அது கவிதையாக, வசனமாக, வீரமாக எல்லாம்  ஒன்றன் பின் ஒன்றாக கொழுந்துவிட்டு எறியும் ஆனால் அவையெல்லாம் உடல் சூட்டின் வேகம் தணியும் வரை...நடைமுறையில் உள்ள காதலர்களை எது சொல்லியும் சமாதானபடுத்த முடியாத சூழ்நிலைதான்  இருக்கும். அவர்களே உண்மை தன்மை உணர்ந்துவிட்டால். உணர்ந்து ஒருவேளை கடந்துவிட்டால்  உண்மை காதலையும் அவர்கள் உணரலாம்...அதன்பின் அந்த காதலில் 'பிரிவு' என்றுமே இருப்பதில்லை. அதனால் உண்மை காதலை காதலியுங்கள். கவர்ச்சி ஒரு தேவைமட்டும்தான் அது என்றுமே காதலுடன் வருவதில்லை....

எனக்கு தெரிந்த கதையை உங்களுடன் பகிர்ந்துகொண்டு அதில் என் கருத்தையும் சொல்லிருக்கிறேன் பிடித்திருந்தால் பதிவை காதலியுங்கள்... என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, December 7, 2010

மார்கழிமாதம், புரட்டாசிமாதம் தமிழர்களை அதிகம் சுரண்டும் சாமிகள்...

பலபேரில் சிலபேரு, சிலபேரில் அதிகம் பேரு...கஞ்சா அடிக்கிறவன், துண்டுபீடி அடிக்கிறவன், சரக்கு அடிக்கிறவன், பொம்பளைகிட்ட போறவன், மொள்ளமாரித்தனம் பண்றவன், கந்துவட்டி விட்டு கட்ட பஞ்சாயத்து பண்றவன் எல்லாம் இந்த கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஒரு 48 நாள் ரொம்ப நல்லவனுங்கலா மாறிவிடுவானுங்க ஏன்னா எல்லோரும் சபரி மலைக்கு மாலை போட்டுபானுங்க....வணக்கம் சாமி, வாங்க சாமி, போங்க சாமி, சாப்பிடுங்க சாமி என்று ஒரே சாமி மயமா இருக்கும்.

தமிழர்களை  இரண்டு மாநிலத்தில் உள்ள சாமிகள்  பக்தி என்ற பேருல நம்ம கிட்ட இருக்கிற கைகாசு எல்லாத்தையும்  சுரண்டுது...கார்த்திகை, மார்கழி இரண்டு மாதத்தில் சபரிமலையில் தமிழனின் பக்தி என்ற பேரில் அவனின் ஆண்டு வருமானத்தை கரைக்குது...இன்னொன்று "ஏடுகுண்டல வாடா" வெங்கட்ரமணா கோவிந்தா என்ற கோஷத்துடன் வருடமுழுவதும் அதுவும் ஜனவரியில் இருந்து அக்டோபர் வரைக்கும் கோவிந்தவுக்கு ஒரே மஜ்ஜாதான் கல்லாவுக்கு பஞ்சமே இருக்காது...அதுவும் புரட்டாசி மாதம் என்றால்  தமிழர்களின் பக்தி வியாபாரம் அவர்களுக்கு படுஜோரா இருக்கும். ஏன்னா கோயிந்தாவுக்கு அது உகந்த மாதமாம்...நம் மாநிலத்தவனின் பக்தி வருமானம் இரண்டு மாநிலத்திற்க்கு போகுது...ஏன் தமிழர்களின் தமிழ் கடவுள் பழனியில் ஒரு பண்டாராம் ஆண்டியா நிக்குதே அங்கே போகலாமே..நான் சும்மா சொல்ல கூடாது தமிழர்கள் போறாங்க ஆனா வெங்கிக்கு இருக்கிற கல்லா ஆண்டிக்கு கிடைகிறதில்லை...ஆந்திராவின் பட்ஜெட்டே வெங்கியை நம்பித்தான் இருக்கு...பெரும்பான்மையான  தமிழர்களுக்கு என்ன பயம்ன்னா...கோவணம் கட்டி இருக்கும் ஆண்டிகிட்ட போனா நாமும் போன்டியாகிவிடுவோம் என்ற பயமும் இருக்கு...ஆனா இரண்டு ஆண் கடவுளுக்கு பிறந்த ஐயோ அப்பனும், முருகனின்  பட்டையை அழித்து இரவோடு இரவாக நாமத்தை போட்டு இதுதான் பெருமாள் சாமி என்று எல்லோரையும் நம்பவைத்த  வைணவ பாப்பானுங்க விழுந்து விழுந்து கும்பிடுற கோயிந்தா சாமியும் தமிழர்களாகிய  நீங்க  ஏன் போய் கும்மிடனும்...

தமிழர்களாகிய நீங்க பண்டாரம் ஆண்டியை வணங்கினால் தமிழக கஜானாவுக்கு ஏதோ பக்தி என்ற பேருல வருமானமும் வரும். ஏதோ மக்களுக்கு உங்களால் நல்ல காரியமும் நடக்கும். ஆனா நல்லது அரசியல்வாதி நினச்சாத்தான் நடக்கும் நீங்க நம்பலாம்....அப்படியும் இல்லனா பக்தி பணத்தை என்கிட்ட கொடுங்க... ஆதரவற்ற அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஏழை மாணவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் அமைப்புக்கள் போன்ற சமுக அமைப்புகளின் முகவரி எனக்கு தெரியும்...நீங்க என்கிட்ட கொடுத்தால் உங்க பெயரிலே அவர்களிடம் வழங்குகிறேன். உங்களுக்கு ரசிதும் கொடுக்கிறேன் அதற்கான கணக்கும் நீங்க கேட்டால் காட்டுகிறேன்.  அந்த அமைப்புகளுக்கு நல்லது செய்வதால் ஐயோ'அப்பா' , கோயிந்தா, ஆண்டிபண்டாரம் இந்த சாமிகளிடம் கிடைக்காத நிம்மதி நிச்சயம்  கிடைக்கும்...

மறுபடியும் சொல்றேன் திருந்துங்க பக்தி, நம்பிக்கை, வழிப்பாடு என்ற பேர்ல்ல தமிழர்களை முட்டாளாக்கி சுரண்டி கொண்டிருக்கிறது பல கூட்டம் அதுக்கு என்றும் பலியாகிவிடாதிங்க....உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லனா அந்த நம்பிக்கையை வேற எங்க தேட முடியும் அது முடியாது. அப்படி முடியும் என்றால் அது நம்பிக்கையாக இருக்காது. அது உங்களை ஏமாற்றும் வேலையாய் இருக்கும். உங்களுக்கு ஒன்று தெரியுமா பலவீனமானவன்தான் தன்னம்பிக்கை அற்றவன்தான் கோவிலுக்கு செல்வான்...."உன்னை நீ நம்பாமல் வெறும் கல்லை நம்புகிறாய்" என்றால் நீ எவ்வளவு பெரிய முட்டாளாய் இருக்கிறாய் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்க ..

ஓஷோ கூறியது போல "உண்மையான தேடுதல் கடவுளை தேடுவதாக இருக்காது அப்படி தேடினால் அது ஒரு சால்ஜாப்புதான்  ஏனென்றால் வியாதிக்காரன் மனத்தின் தேவைதான் கடவுள்..."


எண்ணத்தின் எழுத்தை வரவேற்றமைக்கு உங்களுக்கு நன்றி...எதிர்ப்பு இல்லேன்னா என் நன்றியை ஏத்துக்கலாம்...


என்றும் நட்புடன்:    


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)