Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, September 12, 2010

"ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று ஏன் சொன்னார் புத்தர்....

 

ஞானிகளின் பல உண்மைகள் பல கருத்துகளை உள்ளடக்கிதான் வரும்....வார்த்தைகளின் பொருளை மேலோட்டமாக பார்ககும்போது . அதன் ஆழத்தை உணராமல் போய்விடுகிறோம்.....தண்ணிரீலே எண்ணெய் கலக்கும் போது எண்ணெய் கலக்காமல்தான் இருக்கும். அதுபோல் ஆசைபட்டாலும் அந்த ஆசை ஆசையாகவே இருக்கவேண்டும். நம் வாழ்...வை ஆசை என்றும் சீர்குளைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

தாமரை இலையில் என்றுமே ஒட்டாத தண்ணீர் போல் இருக்கவேண்டும். அப்படி நம் வாழ்வில் ஓட்டினால் புத்தர் சொன்னதுபோல் "ஆசையே துன்பம் ஆகிவிடும்". அப்படி ஒட்டாமல் இருப்பது நமக்கு கஷ்டம்தான்...முயற்சி செய்தால் முடியும் அதற்கு நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யும் போதும் விழிப்புணர்வுடன் கவனித்தால் ஆசை ஒட்டாமல் இருக்கும். இதற்கு உங்களுக்கு தியானம் மிகவும் துணைபுரியும்...தினமும் 20 நிமிடம் தனியாக அமர்ந்து கண்ணை மூடி உங்கள் மனதில் உண்டாகும் எண்ணங்களை விழிப்புடன் கவனித்தலே போதும்....உங்கள் கேள்விக்கான விடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தெரியவரும்....ஒருநேரத்தில் கேள்விகள் எல்லாம் சென்று வெறும் மௌனம் ஒன்றே உங்களிடம் இருக்கும்...அதுவே இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியின் மூலாதாரம்...அதுவே ஓங்காரம்....அதுவே நீங்கள்.

இந்த பிண்டத்தில் உள்ளதே அண்டம்....!


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:   


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

3 comments:

sankaramoorthi said...

sir ldu matiri ingu eluda aal illai thodarntu eludungal sila varataigal balakumaranai remember pannugiratu

சசிகுமார் said...

அருமை நண்பா சரியான விளக்கம்

தனி காட்டு ராஜா said...

நல்ல பதிவு தல ...