Pages

Thursday, September 30, 2010

ஏன், உங்க சிந்தனை கருத்துக்கு பஞ்சமா....வந்துவிட்டது


வலைபதிவில் மற்றும் மூகநூலில், மொக்கையா ஒரு மேட்டர் போட்டா அதிகம் பேர் லைக் போட்டு  கருத்து வேற சொல்றிங்க....ஆனால் கருத்துள்ள மேட்டர் போட்ட லைக், கருத்து எதுவும் இல்லாமே போய்டுது.... ஏன் உங்கள் கருத்துக்கு பஞ்சமா....இல்லை உங்கள் சிந்தனைக்கு பஞ்சமா....

ஆனால் வார்த்தைகளிலும், செயல்களிலும்   பொழுதுபோக்கு,கவர்ச்சி, போதை இவைகள் மட்டும்  இருந்தால் மக்கள் என்கிற நண்பர்கள் எங்க இருந்தாலும் வந்துவிட்டு போவார்கள்போல...ஏனென்றால் இதன் மவுசு மக்கள் மனதில்  என்றும் நீங்காமல், குறையமால் இருக்கிறது.... டாஸ்மார்க் கடை  சந்து போந்துல எங்க இருந்தால் தேடி பிடிச்சு போய் தண்ணி அடிக்கிறான். நல்ல உணவு பொருட்களை பார்க்கும் படி விற்றால் வாங்க மறுக்கிறான்.

அடுத்து சினிமா, இது ஒரு பொழுதுபோக்கு எனபது போய் பலபேருடையா வாழும் கனவாகவே மாறிவிட்டது....ஒரு 80  வருஷம் முன்னே நாடு, நாடாயாய் திரிந்து நாடகம் நடத்தி ஏதோ சொற்ப வருமானத்தில் வாழ்ந்த  கூத்தாடிகள். இன்று இருந்த இடத்தில் ஆடி பார்பவர்களை கூத்தாடியாக்குகிறான், பின் முட்டாலாக்குகிறான்.  நாட்டின் ஆட்சி, அதிகாரம் எல்லாம் மறைமுகமாக கூத்தாடி கைகளுக்கே போய்விட்டது. பொழுதுபோக்காக பார்க்கும் சினிமா மக்களின் வாழ்வில்  பொழுதுவிடிய விடாமல் கபளீகரம் செய்கிறது. இது ஒரு வகை போதை ஆனால் இது போதைல பெரியா போதைதான் இருக்கு.  அடுத்து கவர்ச்சி...இது சொல்லவே வேண்டாம் லைட் போஸ்ட்கம்பத்திற்கு போடவை கட்டினாலும் , வறட்சி, விரட்சியோடு பார்பவனுங்கதான் நாட்டில் பலபேரு இருக்கானுங்க....இந்த சினிமா கூத்தாடிகள் இதை புரிந்துகொண்டு  படம் என்ற பேர்ல ஒரே பிட்டு படமா எடுத்து தல்றானுங்க...அந்த பிட்டுள இவன் மயங்கிறான்...மயங்கியவன் வெளிய வந்து மக்களுக்கு என்ன  ஞான உபசேமா பண்ண போறான். பார்க்குற பெண்களை ஒரு மாதிரியாய் பார்ப்பான் இதில் போதை அதிகமா ஆயடுட்சுனா பெண்ணை கைய பிடிச்சு இழுப்பான், அடுத்த காட்சி  கற்பழிப்பு....இதில் பாதிக்கப்படும் பெண்ணுக்கு நீதி. "கோர்ட், கேசு, வாய்தா.... என்று நீண்டு கொண்டே போகும். அவளின் மறுக்கப்பட்ட நீதி....

அதனால் மனிசனுங்க  அடிமையாகறது கூத்தாடி ஆடும் சினிமா, டாஸ்மார்க் சரக்கு, பாலியல் இன கவர்ச்சி.

இதுபோல மயக்கங்கள் எதுவும் இல்லாமல். பார்க்கும் நிகழ்வையும், கேட்கும் வார்த்தைகளையும், பேசும் சொற்கள்களையும்  நம் சிந்தனையில் ஏற்றி சரியா, தவறா என கொஞ்ச நேரம் அலசி சிந்தித்தாலே பல உண்மைகள் வந்து விழும். நம் வாழ்வின் இருண்ட பொழுதும் விடியும்...   
                                        

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:  


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Monday, September 27, 2010

ஓஷோ சொன்ன கதை....

 

ஒரு ஊரின் பாதை வழியே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது. அவ்வழியே இருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்துவிடுகிறான். விழுந்தவன் மேல ஏற முடியாமல் கத்துகிறான்...யாரும் வரவில்லை சிறிது நேரம் போனதும் அந்த வழியே இந்து மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் வருகிறான். அவன், கூக்குரல் கேட்டு கிணற்றில் எட்டி பார்கிறான்...... "அட பாதாக இப்படி விழுந்துவிட்டாய்யே போன பிறவியில் நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பிறவியில் சாவ போகிறாய் உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான். இன்னும் கொஞ்சம் நேரம் போனபின் சீனன் ஒருவன் வருகிறான். அவன், "நான் கன்பூயுசத்தை பின்பற்றுபவன். இந்த கிணற்றை சுற்றி சுவர் எழுப்பவேண்டும் எழுப்பாமல் விட்டது மனிதனின் தவறு அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அதன் பின் அவன் அழுகுரல் கேட்டு ஒரு பாதிரியார் வருகிறார். அவர் கிணற்றில் விழைந்தவன் அழுகுரல் கேட்டு மிகவும் பதற்றம் அடைகிறார். "நான் காப்பாற்றுகிறேன் அன்பரே கவலை அடையாதே" என்று சொல்லி ஒரு கயிர விட்டு விழுந்தவனை காப்பாற்றுகிறார். அவன், "நான் உயிர் பிழைத்தேன் யாருமே என்னை காப்பாற்றவில்லை நீங்கள் தான் என்னை பிழைக்க வைத்தீர்கள் இந்த நன்றியை நான் மறக்கமாட்டேன்" என்றான். அதற்கு பாதிரியார், "இது எங்கள் மதத்து கடமை அப்பா யார் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீ காப்பாற்றுவாயாக அப்போதே உனக்கு புண்ணியம் ஏற்படும். என் இராச்சியத்தில் சீக்கிரம் புகுவாய்" என்று பைபிளில் வாசகம் உள்ளது. அதனால் காப்பாற்றினேன். "இனிமேல் நீ எப்போதெல்லாம் விழுவாய் என்று எனக்கு முன்பே சொல்லிவிடு நான் வந்து உன்னை காப்பாற்றுகிறேன். பின்பு எனக்கு புண்ணியம் அதிகரித்து இறைவன் இராட்சியத்தில் சீக்கிரம் இடம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

மக்கள் புண்ணியம் அடைவதற்குதான் மற்றவர்களுக்கு பல உதவிகள் செய்யபடுகிறது. எல்லா உதவிகளும் சுயதேவையை பொறுத்தே அமைகிறது..
ஓஷோ கதையை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!

என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Sunday, September 26, 2010

நீங்க கேள்வி கேட்டா...என் பதில் எப்படி இருக்கும்...? படியுங்க...

 
அஹிம்சையை இம்சை என நினைக்கலாமா.. அப்படி நினைத்தால் அதற்கு மாற்றுவழி உண்டா...?

புத்தர், அஹிம்சையை இம்சை என நினைத்ததில்லை.. அஹிம்சை, காந்தி வழி தோன்றுதல் என்று பல பேர் நினைப்பதால் காந்தியை பிடிக்கததால் அஹிம்சையும் எனக்கு பிடிக்காது என்பதுபோல் ஆகிவிட்டது. பலபேருக்கு திருடியவனை பிடிக்கவில்லை என்றால் திருடப்பட்ட பொருளும் பிடிக்காமல் போகுகிறது.  பயன்படுத்தும் பொருளை யாரும் பயன்படுத்தலாம்..திருடன் பயன்படுத்தியதால் அது திருட்டு பொருள் ஆகாது...அறிவாளியிடம் இருந்துதான் முட்டாள் பாடம் கற்கவேண்டும்...முட்டாளிடம் கற்றால் அவன் மேலும் முட்டளாவான்...எதிர்தாக்குதளைவிட தற்காப்பு தாக்குதல் உகந்தது...இதில் வன்முறை தவிர்த்து அஹிம்சையும் உட்பட்டே இருக்கிறது. ஆனால் நமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள சூழ்ச்சி, பொறுத்திருந்து எப்பவும் எழுந்திருக்கமுடியாத தாக்குதல், தொலைநோக்கோடு எவற்றையும் அலசுதல், எதிரிக்கு மறைமுகமாக  இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குதல், தேவைக்காக எதிரியும் நண்பனாக்கி கொள்ளுதல்...இவையெல்லாம் நம் எதை பெறவேண்டும் என்று சுயதேவை பொறுத்தே அமையவேண்டும். பழைய கருத்துகளும் பழையதாகவே இருக்கும் அந்த சூழ்நிலைக்கு அது ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால்  நடைமுறை சூழலுக்கு எவை பொருந்த குடியது என்பதை அறியவேண்டும். ஏற்கனவே புரட்சில்  நடந்ததை தொடர்வதைவிட புதியதை கைக்கொள்ளவேண்டும். பலது பெறவேண்டுமானால் சில வழிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவது நல்லது என்றே நினைக்கிறேன். நான் சொல்வது பலது உங்களுக்கு உடன்பாடு இல்லாமல்  இருக்கலாம்..." எதையும் மாற்றி யோசி..." என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.


மனம் எங்கே இறுகிய நிலைக்கு தள்ளபடுகிறது...?

போராட்டம், புரட்சி என்றாலே அங்கே மனம் ஒரு இறுகிய நிலைக்கே தள்ளபடுகிறது... பிறர் புன்னைகைக்காக தன் புன்னகை வெறும் செல்லா காசாகிறது....அப்படியும் புன்னகைத்தால் அப்புன்னகையில் அன்பைவிட அனல்தான் தெறிக்கிறது.


மனம் இரண்டுபக்கத்தை பார்க்குமா...?

இயல்பில் எல்லாமே ஏற்ககுடியதுதான் எரிச்சல் பட எதுவுமில்லை...எதுவும் எரிச்சலாக இருந்தால் உலகில் படைக்கப்பட்டது படைக்கபடாமலே போயிருக்கும். அன்பு ஏதுபோல உள்ளதோ அதுபோல்தான் கோவமும்...இரண்டும் வேற வேற பக்கங்கள்..ஒருபக்கத்தை பார்க்கும் மனசு மறுபக்கத்தை மறுக்கிறது...என் மனம் எதையும் ஏற்கும் நிலையில்தான் இருக்கிறது...விருப்பு ஏதோ போலவோ அதுபோல் பிறர் என் மேல் காட்டும் வெறுப்பையும்...


எந்த பணி வேகமானது, விவேகமானது...?


கலபணியை விட எழுத்து பணி ரொம்ப விவேகமானது...ரொம்ப வேகமானது. காரல் மார்க்ஸ் எந்த போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் பங்கேடுத்துகொண்டார். ஆனால் அவரின் மூலதன எழுத்துகள் ஒரு பெரிய முதலாளித்துவ சாம்ராஜியத்தையே...புரங்காட்ட ஓட செய்தது இன்னும் இதன் எதிரே நிற்க தைரியம் இல்லாமல்தான் அது இருக்கிறது. இவை எப்படி ஏற்பட்டது உங்களுக்கு தெரியாததா..ஒரு அரசு கல்விக்காக செலவிடும் பணம் லாபம் இல்லாமல் தான் இருக்கிறது. ஆனால் அக்கல்வி கொடுப்பதால் அவ்வரசுக்கு எதுமாதிரி பயன்கள் அமையும் எனபது உங்களுக்கும் தெரியும். இதில் அக்கல்விக்கு செலவிடும் பணம் விரையம் என்றால் பின் அவ்வரசு லாபல் எப்படி ஈட்டுவது....


நாம் பார்க்கும் பார்வை எத்தகையது...?

நாம் பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வை வித்தியாசமகத்தான் இருக்கிறது போல..."மலரை, பெண்கள் கண்டால் அவர்களுக்கு சூடிக்கொள்ள ஆசைவரும், என்போன்றவர்கள் கண்டால் பார்த்து ரசிக்க ஆவல் வரும், கவிஞ்சர்களிடம் கண்டால் கவிதையாய் வரும் , ஓவியன் கண்டால் ஓவியம் வரும், பையத்தியகாரன் கண்டால் கசங்கிவிடும்....


உளவியல் முலமாக பிரச்சனையை அனுகலாகமா...?


எந்த பிரச்சனையும் மேலோட்டமாக ஆராயும்போது அதற்கு தற்காலிக தீர்வுதான் கிடைக்கும் ஆனால் அதன் பிரச்சனையின் புகைச்சல் எப்போதும் இருக்கத்தான் செய்யும்....அதே அப்பிரச்சனையை உளவியல் பூர்வமாக ஆராயும் போது பிரச்சனையின் அடிவேர்வரை சென்று தீர்க்கலாம்...இது ஒரு நிரந்தர தீர்வாக கூட அமையும்...ஆனால் நம் நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தற்காலிக... தீர்வுதான் நிரந்தர தீர்வாய் இருக்கிறது. மாற்றபடுகிறது ...நாம் வாழும் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் உளவியல் பூர்வமாக அணுகினால் நம் மனம் சார்ந்த பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்க்கலாம்....இதில் நான் பிரச்சனைகளை எப்போதும் கொஞ்சம் அழமாகதான் பார்ப்பேன். பிறர் பிரச்சனை எனக்கு ஏற்பட்டால் அதன் விரியம் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் அணுகுவேன். இது எனக்கு கசப்பான நிலையிளும் நல்ல அனுவத்தை தரும். அதனால் "உளவியல் பூர்வமாக" என்ற வார்த்தை வாழ்கைக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது...நீங்களும் முயற்சிசெய்யலாம்....! என் குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றாலும் நான் என் குழந்தை நிலையில் இருந்ததுதான் பார்பேன்....குழந்தையின் வயதுக்கு அவன் நிலைக்கு சென்றுதான் பார்பேன்...பார்க்கவேண்டும்...


எவை சமுகத்தில் மாற்றத்தை கொண்டுவரும்...?

"எதேச்சையாக சிந்திக்கும் சிந்தனைகள்தான் சமுகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும்..."இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.


பெண்கள் அலங்காரத்தி துறந்துதான் வாழவேண்டுமா...?

ஆண்களின் அடிமை மனப்பான்மை நீங்கவேண்டும் என்பதற்காக பெண்கள் அவர்களுக்கு பிடித்த அலங்காரத்தை  துறந்து  ஆண்கள் மாதிரி ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று நினைக்கிறன். இதில் பெண்கள் பற்றிய  பெரியார் கருத்துக்கும், உங்கள் கருத்துக்கும் எனக்கு  உடன்படவில்லை...பெண்கள் பெண்களாய் இருக்கலாம். அவள் ஆணை சார்ந்திருக்காமல் இருக்கலாம் ஆண்களுக்கு நிகரான சமவாய்ப்பு கொடுக்கலாம். ஒரு பெண் இப்படி இருக்க விரும்பினால் அப்படி இருக்க அவளை அனுமதிக்கலாம் இதில் ஆணிடம் அனுமதி பெறகூட தேவையில்லை அவளே அவள் வாழ்வை தேர்ந்தேடுத்துகலாம்....இதில்லாமல் ஆண்கள் மனோபாவம் மாறவேண்டும் என்று நினைத்து ஆண்கள் மாதிரி இருக்கவேண்டும் நினைத்தால் இதில்  பாலினமே மாறிவிடும்....ஏதோ ஒரு பழமொழி சொல்வார்கள் கிணறு வெட்டபோய் பூதம் கிளம்பினதுபோல....

பெண்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் கோவபடமாடிங்கனா ஓஷோவின் கருத்தை மேற்கொள்காட்டுகிறேன்:

"பெண்கள் சிகரெட் பிடிப்பதை என் கண்ணால் நம்பவே முடிவதில்லை....ஆண்கள் செய்வதையே பெண்கள் செய்தால் இதன் எதிர்விளைவு உலகத்தில் எப்படி அமையும்.. மோசமாகத்தான் இருக்கும். ஆண்கள்தான் அறிவு கெட்டவன் தன் தவறை மெல்ல மெல்ல உணர்ந்து, திருந்தி கொண்டிருக்கிறான். அப்போதும், இப்போதும்  அவன் செய்த  தவறுகளையே பெண்களும் செய்தால் இது வேறு ஒரு  மாதிரி அமைந்துவிடும். இவள் அடுத்து என்ன செய்வாள் ஆண்கள் மாதிரி நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கபோறால... " இப்படி சொல்வதால் ஓஷோவுக்கு  பெண்களைபற்றிய மதிப்பீடு தவறாக கொள்ளவேண்டாம். "பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்"  என்ற தலைப்பில் முழுக்க, முழுக்க ஆணிடம் இருந்து பெண்கள் விடுதலைகளை மற்றும் அவளின் பெருமைகளை பற்றியே  சொல்லிருக்கிறார். இப்புத்தகம் சென்னையில் உள்ள கவிதா பதிப்பகத்தில் கிடைகிறது. 


நாத்திகம் யாருக்கு சொந்தமானது...?

நாத்திகம் எனபது பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல அது புத்தர் காலத்தின் முன்பிருந்தே வருகிறது...எல்லார் மனதிலும் ஏற்புடையது, விருப்பமில்லாதது என்று ஒவ்வொன்று  உள்ளது. நம் மனது ஏற்பதை கேள்வி கேட்காமல் எதையும் எளிதாக ஏற்கும் ஆனால் விருபம்மில்லாதது  சிலதை மட்டும் மனது வெறுக்கும். அவ்வெறுப்பு அறிவின் துணைகொண்டு  சிந்தனையுடன்  இருந்தால் அது நியாமானதே அதை விடுத்து நாத்திகம் உட்பட எல்லாத்தையும் வெறுத்தால் அது ஏற்புடையதாக இருக்காது. அப்படி இருந்தால் சிந்தனை எங்கோ தடைபட்டுவிட்டது என்று பொருளாகும்...


வரலாற்று நாயகர்கள் சாதனைகள் எவ்வாறு...?

வரலாற்று சாதனையாளர்கள் உடலில் வீசும் வியர்வை கூட சந்தன மணமாக கூட மாறும் போல....இலங்கையில் புத்தம் கூறியதை விட்டுவிட்டு புத்தரின் பல்லை பாதுகாப்பதுபோல்...எல்லாமே பாதுகாக்கபடவேண்டியதாகிறது...


உலகத்தில் கண்டுபிடிப்பு எல்லாம் எப்படி கண்டுபிடிக்கபட்டது.....?

ஒரு நிகழ்வின் உண்டாகும் அனுபவம், அறிவு தேடுதலின் அடுத்த நகர்வு...ஆர்வம், எளிமை படுத்தவேண்டும் என்ற வழிமுறை பின் லாப நோக்கம் இதன் அடிப்படையில் பல கண்டுபிடிப்புகள் உருவாயின...ஆனால் எல்லோரும் கண்டுபிடிபளாராய் இருப்பதில்லை ஒரு சிலரே மாறுகிறார்கள் மாற்றிகொள்கிறார்கள். இருள் அடைந்த பொழுதை நி...த்தமும் கண்டு எடிசனின் கண்டுபிடிப்பு அமைந்தது.


யார் நாளைய சரித்திர நாயகன்....?

உங்களால் முடியாது என்று விட்டதை உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஒருவன் முயற்சித்து கொண்டிருப்பான். அவனே நாளை சரித்திர நாயகனாகிறான்.


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்: 
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, September 25, 2010

எந்திரன் தோல்வி படமா...?

 
கட்டயமாக நீங்க எந்திரன் படம் பார்க்க போறிங்களா....ஒரு நிமிடம் உங்களை நீங்கள் கொஞ்சம் கிள்ளிகொள்ளுங்கள் வலிக்கவில்லை என்றால் போய் பாருங்கள். கிள்ளி வலித்தால் உங்களுக்கு சுரணை இருக்கிறது என்று நினைக்கலாம்....ஏனென்றால் எனக்கு கிள்ளினால் வலிக்குது

கொள்ளை அடித்து கோடி கோடியாய் சம்பாதித்த கொள்ளை கூட்டம் நம்மை வரிசையாய் படுககவைத்து நம்மீதே ஏறி நம்மேலேயே காரி உமிழ போகிறது....தன்மான தமிழனே தரங்கெட்டு போய்விட்டதா உன் தன்மானம்...

ரொம்ப வருமையில் வாழுகின்ற நடிகர் படம் 'எந்திரன்' இப்படம் நல்லா ஓடவேண்டும் என்று இவர் ரசிகர்கள் கோவில் 1000 படிக்கட்டு மேலே முட்டிபோட்டே நடந்தார்கலாம்....தந்தை பெரியார் கண்ட, காணும் தமிழ் நாடு எங்கே போகிறது. கோவில் படிக்கட்டு மேலேயா...?

தமிழ் உணர்வுகொண்ட உணர்வாளர்களே கொஞ்சம் உணர்ந்துபாருங்களேன்.."நமக்கு இந்தியாவில் தமிழன் என்ற மரியாதை இருக்கிறதா, தமிழ்நாட்டில் பணம் அதிகாரம் படைத்தவனிடம் மரியாதை இருக்கிறதா.."என்று.  ஒருநிமிடம் சிந்தித்தால் நீ உண்மை தமிழனாய் இருப்பாய். உறுதியாய் இருப்பாய்...அப்படிருந்தால் உனக்கு மேலும் விளக்கம் தேவையில்லை...என்றே நான் நினைப்பேன்.என்றும் நட்புடன்:

Wednesday, September 22, 2010

பிரான்சை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்....


எனக்கு இப்போது பிறநாட்டு இலக்கியம் அதன் வரலாறு பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் வருகிறது. இதற்கு காரணம் நமக்கு ஏற்கனேவே அந்நாட்டின் பற்றி ஏதோ தெரிந்த சரித்திர நாயகர்கள். நெப்போலியன் போன்றவர்களை பற்றிய வரலாறுகள் இதில் அவர்களுடைய சிந்தனை, பேச்சு இவைவாவும் நாம் ஏற்கனவே படித்ததால் தொடர்ந்த அதன் தொடர்ச்சி அந்நாட்டினை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலை கொடுக்கும். இவையில்லாமல்  நமக்கு பிடித்த நண்பர்களும் அந்நாட்டில் இருப்பதால் கூட அந்நாட்டினை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தை கொடுக்கும்.        

ஒரு நாட்டின் இலக்கியங்கள், அதன் வரலாறு அந்நாட்டின் தொன்மையும் மக்களின் உணர்வையும் நன்கு தெளிவுபடுத்தும். இதில் இலக்கியம் அம்மக்களின் உணர்வுகளை பிரிதிபலிக்கும் காலக்  கண்ணாடிபோன்றது. அது என்றும் பிரிதிபளித்துகொன்டே இருக்கும். இதில் பிரான்சின் இலக்கிய சார்ந்த அந்நாட்டின் வரலாறு அருமையானது, அழகானது...

பிரான்ஸ் 2500 ஆண்டுக்குமுன் இதன் பெயர் கோல்(Gaule), மேற்கு ஐரோப்பாவில் இருந்த ஒரு இனம் சேலத்(celtes) இனம் என அழைக்கப்பட்டது. இந்த சேலத் இனம் கோல் நாட்டில் இருந்ததால் கொலுவா என்று சொல்வார்களாம்...அப்போது வாழ்ந்த கொலுவா மக்களில் துருய்த் என்றழைக்கப்பட்ட குருமார்கள் வீரத்திலும், மதிப்பிலும் புகழ்வாய்ந்தவர்களாக இருந்திருகிறார்கள். கி.மு 390 கொலுவா என்றழைபட்ட  பிரான்ஸ், ரோம பேரசுடன் போரிட்டு ரோம் நகரை கைபற்றியது. கி.மு 50 ஆம் ஆண்டு  ரோம சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசர் ஆல்ப்ஸ் மலையை கடந்து கோல் நாட்டை கைபற்றினான்.  கொலுவா மக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். ஒரு நாடு இன்னோர் நாட்டை கைபற்றினாள் அந்நாட்டு மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அடிமைகளாகவே இருந்தனர். பெண் அடிமைகள் காம லீலைக்கும், ஆண் அடிமைகள் மற்ற வேலைக்கும் ஈடுபடுத்தினார்கள். ஒவ்வொரு செல்வந்தனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையை பொறுத்தே அவன் மதிப்புடைய செல்வந்தனாக கருதப்பட்ட காலம்...ஜூலியஸ் சீசர், கொலுவா நாட்டை போரிட்டு உடனேயே   பிடிக்கமுடியவில்லையாம்  பல வருடங்களுக்கு பிறகே இந்நாட்டை கைபற்றினான். இவனின் பிரிசிதிபெற்ற வாக்கியம். "வந்தேன், கண்டேன், வென்றேன்" எனபது.

சுமார் 400 வருடம் இருந்த இந்த ரோம பேரரசு பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் வடக்கு ஐரோப்பா வரை அடக்கி ஆட்சி செய்தது. 4ஆம் நூற்றாண்டில் இருந்த ரோம பேரரசு விழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது அதன் ஏதோ சதிகாரம், மக்களை அடிமைகளாக வைத்திருந்தது, குடி, பெண்களுடன் சல்லாபம் போன்ற என்னற்ற காரணங்களால் தன சாம்ராட்சியத்தை மெல்ல மெல்ல இழந்தது. இதில் இயேசு பிறந்தவுடன் மக்களிடம் ஒரு புதிய எழுர்ச்சி கண்டது . மக்கள் தங்களை உணர ஆரம்பித்தார்கள். ஒரு மதத்தின் குடையின் கீழ் கொலுவா  நாடு வந்தது. மக்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்ப திவரமாக முனைந்தனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்துவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. 8 முதல் 12 ஆம் நூற்றண்டு வரை இஸ்லாம் மதம் ஐரோப்பா முழுவதும் பரவ தொடங்கியது. இம்மதம் பரவவிடாமல் கிருஸ்துவ மன்னர்கள், நிலபிரபுக்கள், மத அமைப்புகள் தடுத்திட முனைந்தனர். இதன் விளைவாலே ஏற்பட்டது "புனித சிலுவை போர்" இது பல வருடங்களாக நடந்தது. புனித சிலுவை போர் 1095 முதல் 1270 வரை நடந்தது. அதன் எதிரொலி இப்போது வரை அந்நாட்டில் மறைமுகமாக தொடர்கிறது. தற்போது பிரான்சில் வாழும் இஸ்லாம்
பெண்கள் பார்தா போட தடை விதித்திருக்கிறது. 400 வருடம் இருந்த ரோம ஆட்சியில் அவர்களின் செல்திக் மொழி மறைந்து போயிட்டு இப்போது சில உதிரி வார்த்தைகளே இருக்கிறதாம்..பிரான்ஸ் மொழியில் அதிகமாக லத்தின் மொழின் ஆதிக்கமே இருந்திருக்கிறது. பல்வேறு இலக்கிய நூல்களும் லத்தின் மொழியிலே வந்திருக்கிறது.  இம்மொழியில் தொடர்ந்து அக்கால ஸ்பெயின், கோல் வழங்கிய பிரான்சிஸ்யர் என்ற மொழியும் அடங்கி பிரான்ச் மொழியையானதாம். மார்கோபோலோ என்ற வெனிஸ் நகர யாத்திரிகன் சீனா போன்ற கிழக்கு நாடுகளில் பயணம் செய்து இந்நாடுகளின் பெருமைகளை கட்டுரையாக "அதிசையங்களின் புத்தகம்" என்ற தலைப்பில் பிரஞ்சு மொழிலே எழுதினானாம்.     
  
ரூசோ, வால்டேர் போன்ற அறிஞசர்களின் சிந்தனையால், ஏழுர்ச்சி மிகு பேச்சுகளால்  மக்கள் புரட்சிக்கு   அடிகோலிட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் உலக சரித்திர நிகழ்வான பிரான்சுப் புரட்சி வெடித்தது அப்புரட்சி மக்களிடம் ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது. நெப்போலியன் தலைமையில் புதிய வரலாற்றை படைத்தது. இந்த புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. ஆண்டான், அடிமை  நிலைமை மாறி மக்களாட்சிக்கு கொண்டுசென்றது. மன்னர், நிலபிரபுகள், செல்வந்தர்களுக்கு புதிய ஆட்டத்தை காண செய்தது. நெப்போலியனின் படையெடுப்பு, அவன் ஆட்சி முறை மக்களுக்கு துணிவை தந்தது.  இங்கிலாந்துக்கு எதிராக 14 ஆம் நூற்றாண்டில் 100 வருட போர் நடந்தது.  இது ஒரு நூற்றாண்டு போர் என வரலாட்டு அறிஞசர்களால் சொல்லப்படுகிறது. இறுதியில் "ழான தார்க்" என்ற ஆயர்குல பெண் போர்படைக்கு தலைமையேற்று ஆங்கிலரை எதிர்த்து போரிட்டால். அப்போரின் விளைவில் அவள் 1431 ஆம் ஆண்டு உயிருடன் எரிக்கபட்டாள். அதன்பின்னரே இப்போர் முடிவுக்கு வந்தது.

பிரான்ஸ் மொழியை மேன்மை படுத்தும் நோக்கத்தால் 1626 ஆண்டு பல அறிஞ்சர்கள் தலைமையில்  லத்தின் மொழி ஆதிக்கம் தவிர்த்து பிரன்ச் மொழியை வளர்க்க வாரம் ஒரு முறை ஒன்றுகூடி மொழி வளர்ச்சியை பற்றி விவாதித்தனர். இவை அந்நாட்டு மந்திரிக்கு தெரிந்து 1636 அரசரின் அனுமதியுடன் பிரஞ்ச அகடெமியாக  அங்கீகரிக்கப்பட்டது. பிரஞ்ச அகடெமி 40 உறுபினர்களுடன் செயல்பட்டது. பின்னர் பல துறைகள்களும் இணைந்தன..அப்போது மகளிர் மேம்பாடு உயர்வுநிலை பெற்றிருந்தது மகளிர் மாமன்றங்கள் அதிகம் இருந்தன ஆனால் 1635 ஆண்டில் இருந்து 1980 வரை அகடெமிக்கு பெண்கள் எவரும் உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தது. 345 ஆண்டுகள் பெண்வாடையே இல்லாமல் இருந்த பிரஞ்ச அகடெமி 1980 ஆண்டு, முதல் பெண் உறுப்பினர் "மர்கரீத் யூர்ஸ்னார்" நியமிக்கப்பட்டார். இன்றுவரை அகதெமி சிறப்புடனே நடக்கிறது. தற்போது பிரான்ஸ் உலக அரங்கில் தன்னிறைவு பெற்ற நாடக திகழ்கிறது. அதன் பொருளாதாரம் வளர்ச்சி மேம்பட்ட நிலையில்தான் இருக்கிறது. பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் சபையில் ஜி8 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று.  பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.


பிரான்சை பற்றிய நான் சேகரித்து எழுதிய எழுத்துகளை வரவேற்றதற்கும், பதிவை பொறுமையாக படித்தற்கு மிக்க நன்றி...!என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Wednesday, September 15, 2010

என் கேள்விக்கான பதில் என் எண்ணத்தில் இருந்தே.....

 
நம் தமிழ் மொழியில் நிறைவு பெற்ற நிலை உள்ளதா...?

இது தமிழ் மொழியில மட்டும் இல்லை எல்லா மொழியிலும் நிறைவு எனபது இல்லை மற்ற மொழி அப்படியெல்லாம் இல்லையென்று நாம் மறுந்தாலும் அப்படிதான்  "உள்ளூர் மாடு வெளியூர் சந்தையில்தான் அதிக விலை போகும்....." எதுவும் நம் அருகில்  இருக்கும் போது அதன் அருமை தெரியாது அது தொலைவில் இருக்கும் போதுதான் அதனை நினைத்து ஏங்கும் மனம்.....இவை மொழிக்கும் பொருந்தும் இது மொழியுணர்வு சார்ந்தது என்று சொல்வதைவிட மனஉணர்வு சார்ந்தது என்று நினைக்கலாம். நம் தாய் படிக்கவில்லையே என்பதற்காக அவளை மாற்றாந்தாய்யாக்க முடியுமா...இவள் பெற்ற மக்கள் படிக்கவில்லை, தெரியவில்லை என்றாலும் நம் தாய் இவள் அல்லவா அதுவும் நமக்கு தமிழ் பாலூட்டிய தமிழ்தாய் அல்லவா... அவளை பழிக்கலாமா...மாற்றம் எனபது மாறாமல் இருப்பது...இதுவும் கடந்துபோகும்...தமிழ் மொழியின் நிறைகளை பாராட்டி குறைகளை சுட்டிகாட்டினால் தமிழ் மொழின் குறையும் கடந்துபோகும்....எல்லாம் நிறைவடைந்த சமுதாயம் எனபது உலகத்தில் எதுவும் இல்லை


வருடத்தின் கொண்டாட ஒவ்வொரு தினம் வருகிறது இவை எதற்கு....? 

உலகத்தில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தினம் வைக்கலாம் போல.அம்மக்கள் தினம் ஒன்று உள்ளது. எல்லா அம்மாவுக்கும் வாழ்த்து சொல்லணும் என்று இருக்கும். எனக்கு தெரிஞ்ச ஒருவர் அவர் அம்மாவுக்கு வாழ்த்து சொல்ல சென்றார் முதியார் இல்லம் நோக்கி ...! இப்படிதான் இருக்கிறது வருடத்தின் பல பல தினங்கள்...அதுபோல புத்தாண்டு தினம் 12 மணி வரவரைக்கும் மக்களுக்கு ஒரே சந்தோசம் எல்லோருக்கும் ஏதோ புது உலகில் நுழைந்தது போல பிரம்மை ஒரே ஆட்டம், பாட்டம்தான் அந்த ஒரு நாள் மட்டும் சென்று வருடம் பூராவும் அவர்கள் களையிழந்து இருப்பாங்க.. இது போன்ற கலையிழந்த தினங்களெல்லாம் நமக்கு தேவையா...?


நம்மை காப்பாத்துமா கடவுள்...?

பலர் என்னை காப்பது என்று கடவுள் கிட்ட முறையிடுவாங்க இதில் அந்த  சாமி எப்படி காப்பாத்தும் அதுக்கே பாதுகாப்பு இல்லாமல்தான் கதவு அதுக்கொரு பூட்டு, சாமி சேத்து வச்சிருக்கும் உண்டியலுக்கு ஒரு பூட்டு, பின்பு கோவில் பாதுகாப்புக்கு ஒரு காவலாளி என்று சாமி பயத்துடனே இருக்க  அதுகிட்ட போய் ஆத்தா மகமாயி என்ன காப்பாத்து என்று கத்தி கதரனா எப்படி ஆத்தா வருவா, அருள் தருவா...


பலபேர் குற்றத்தின் பார்வை எது மாதிரி...?

ஒரு குற்றம் வெளி உலகத்திற்கு தெரியாதவரை அது ஒரு குற்றமாக தெரியாது. அந்த குற்றம் தன நண்பர்களிடம் சொல்லும்போது நண்பர்கள் சொல்லுவார்கள் நீ கில்லாடிடா....உன் திறமை உனக்குத்தான் என்று சொல்லுவாங்க...அதே அவன் மாட்டிகினா கில்லாடி என்று சொன்ன நண்பர்கள் பார்வை அவனை வேறுவிதமாக பார்ப்பார்கள் எனக்கு அப்பவே தெரியும் இவன் எப்படியும் மாட்டிப்பான் என்று சொல்லுவாங்க...         


மனித உறவுகளை கட்டுபடுத்துவது நல்லதா....?

மனித உறவுகளை ஏன் கட்டுபடுத்தவேண்டும்...முதலில் மனித உறவு எனபது எதை மையபடுத்தி இயங்குகின்றது. உறவுகளை சமூக சுழலளிலும், குடும்ப சுழலளிலும் கட்டுபடுத்தலாம் ஆனால் மனித மனங்களை யார் கட்டுபடுத்துவது. கட்டுப்பாடு என்பதே கட்டுபோடுவதுதானே...  கணவனுக்கு மனைவியை மறைமுகமாக கட்டிபோடுவது.... சட்டம் என்ற பொய்மையை காட்டி மக்களை கட்டிபோடுவது இவையாவும் கட்டுபடுத்துதல் என்ற விதியின் கிழ்தானே வருகிறது. காதலன், காதலியாய் இருக்கும் வரை காதல் உறவில் கட்டுபடுத்துதல் இல்லை ஆனால் கல்யாண உறவில் கட்டுபடுத்துதால்தான் மேலோங்கி இருக்கிறது. ஆதலால் கட்டுபாடுகள் இல்லாத மனித உறவுகள்தான் சாத்தியமானது. முதலில் மனிதன் என்பவன் சுதந்திர உணர்வு கொண்டவன். அவனுடைய பேச்சு, சிந்தனை, கருத்து எல்லாம் சுதந்திரம் மிக்கவை. ஆட்டு மந்தைபோல் பின் செல்பவனால் எந்த முன்னேறத்தையும் சமுகம் காணமுடியாது. சுதந்திர உணர்வு கொண்டு தனித்து இயங்குபவனாலே மாற்று கருத்தை சொல்லமுடியும். என் அப்பன் எனக்கு நுழைவதற்கு  வாசற்படிதான். அதில் நுழைந்து வெளி உலகை கண்டு அனுபவித்தது என் உயிர் தன்மை அது எதையும் கட்டுபடுத்துவதில்லை பார்க்கும் இயற்கையே நானாகி போகும் போது இதில் எதை கட்டுபடுத்துவது, எவற்றை கட்டுபடுத்துவது....


நமக்கு யார் உதவி புரிகிறார்கள்...?

புகழ்பவனை விட இகழ்பவன்தான் நமக்கு உதவி புரிகிறான். நம் சிந்தனையை சீண்டி விடுகிறான். சொற்களை வாங்குகிறான். "மலர்ப்பாதையில் நடபதைவிட மலைபாதையில் நடப்பது புதிரானது, புரட்சிமிக்கது."விமர்சனம் செய்பவர்களுக்கு விளக்கம் போதவில்லை என்றால் நாம்... விலகிவிடலாம்....அஞ்சவேண்டியதில்லை. 


மனிதர்கள் அன்பை எப்படி பார்கிறார்கள்....?

எல்லா உயிரினத்திர்க்கும் அன்பு பொதுவானதுதான்...அது முழுமையாக வெளிப்படும்போதுதான் அதன் அழகே வெளிபடுகிறது.  மனிதர்கள் அன்பை பூட்டிய வீட்டிற்குள்ளே இருந்து பார்கின்றனர்.   


நம்மிடம் கேள்விகள் எப்படி வரும்......?

"கேள்விகள் கேட்கும்போதுதான் தேடுதல் தொடங்குகிறது" அதுவரை மனது எதாவது வெந்தது வேகாததை அசைபோட்டுக்கொண்டுதான்  இருக்கும். கேள்வின்னு வரும் போதுதான் சிந்தனை மனத்தால் துண்டபடுகிறது...


மரணம் எப்படி நிகழும்.....?

உடலில் தினமும் ஆயிரகனக்கான செல்கள் சாகின்றன, புதிய செல்கள் பிறக்கின்றன. உடலறுவு கொள்ளும்போது விந்து வெளியேற்றத்தில் சாகிறோம் அங்கு ஆற்றல் இழந்து விருப்பு, வெறுபற்ற நிலையில்  வெறுமையாகிறோம் அது ஒரு மரணத்திற்கு ஒப்பானது...மரணம் எனபது உடலில் இயக்கப்படும் ஆற்றல் நின்றுபோதல். என கொள்ளலாம்... இன்னும் இதை சிறப்பித்து கூறவேண்டும் என்றால்....ஒருவருக்கு மரணம் நிகழ்வது....மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுவது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது விழுவது மரமும் அறியாது, இலையும் அறியாது....மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி விழும்....மரண காயத்தை ஏற்படுத்தாமல்...!                        


கசப்பான நிகழ்வுகளை மறகடிகலாமா....?

நடக்கும் நிகழ்வின் முலம் உண்டாகும்  உணர்சிகளை விழிப்புணர்வுடன் உன்னிப்பாக பார்த்தாலே... மரத்து போவதற்கு பதில் அது இல்லாமலே போகும் அதையும் தாண்டிபோகும் இதற்கு எந்த  செயளையும்  விழிப்புடன் பார்க்கும் பயிற்சி வேண்டும்....நம் இன்பத்திற்கும்,  துன்பத்திற்கும் நூலிழை வித்தியாசம்தான்... கஷ்டம் என்று சொல்ற வேலையும் சுயதேவையான வேலையாக கூட மாற்றலாம்...சிலபேருக்கு படிக்கட்டு ஏறுவதற்கே சிரமம் என்பார்கள் அதையே உடலுக்கு தேவையான பயிற்சி என்று நினைத்தால் துன்பம் எனபது தேவையான இன்பமாக மாறும்...


மனம் எதன் அடிப்படையில் இருக்கிறது.....?

உணர்வுகளில் உண்டாகும் உணர்சிகள் எல்லாமே மனம் சார்ந்தே வருகிறது...மனம் எண்ணத்தை தாங்கி நிற்கிறது எண்ணம் எனபது நடந்தது, நடகின்றது, நடப்பது இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது.... எண்ணத்தை விழிப்புடன் கவனித்தாலே எல்லாமே அடங்கிவிடும்....வேதனை உண்டாக்கும் உணர்ச்சியும் ஒரு கனவுபோல் வந்து மறைந்துவிடும் அது எந்த காயத்தையும் ஏற்படுத்தாமல் சென்றுவிடும்....எதையும் பயிற்சி மூலமே சாத்தியம் அதற்கு பொறுமை ரொம்ப முக்கியம் சகிப்பு தன்மையும் வேண்டும்...நடிகர் கமஹாசன் கூறியது: "ஒத்திகை இல்லாத நாடகமும்; பயிற்சி இல்லாத போரும் கேளிக்குத்தாகும்" எதுவும் எளிமையாக கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பில்லாமல் போகும்...  


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!

என்றும் நட்புடன்:  (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Sunday, September 12, 2010

"ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று ஏன் சொன்னார் புத்தர்....

 

ஞானிகளின் பல உண்மைகள் பல கருத்துகளை உள்ளடக்கிதான் வரும்....வார்த்தைகளின் பொருளை மேலோட்டமாக பார்ககும்போது . அதன் ஆழத்தை உணராமல் போய்விடுகிறோம்.....தண்ணிரீலே எண்ணெய் கலக்கும் போது எண்ணெய் கலக்காமல்தான் இருக்கும். அதுபோல் ஆசைபட்டாலும் அந்த ஆசை ஆசையாகவே இருக்கவேண்டும். நம் வாழ்...வை ஆசை என்றும் சீர்குளைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

தாமரை இலையில் என்றுமே ஒட்டாத தண்ணீர் போல் இருக்கவேண்டும். அப்படி நம் வாழ்வில் ஓட்டினால் புத்தர் சொன்னதுபோல் "ஆசையே துன்பம் ஆகிவிடும்". அப்படி ஒட்டாமல் இருப்பது நமக்கு கஷ்டம்தான்...முயற்சி செய்தால் முடியும் அதற்கு நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யும் போதும் விழிப்புணர்வுடன் கவனித்தால் ஆசை ஒட்டாமல் இருக்கும். இதற்கு உங்களுக்கு தியானம் மிகவும் துணைபுரியும்...தினமும் 20 நிமிடம் தனியாக அமர்ந்து கண்ணை மூடி உங்கள் மனதில் உண்டாகும் எண்ணங்களை விழிப்புடன் கவனித்தலே போதும்....உங்கள் கேள்விக்கான விடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தெரியவரும்....ஒருநேரத்தில் கேள்விகள் எல்லாம் சென்று வெறும் மௌனம் ஒன்றே உங்களிடம் இருக்கும்...அதுவே இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியின் மூலாதாரம்...அதுவே ஓங்காரம்....அதுவே நீங்கள்.

இந்த பிண்டத்தில் உள்ளதே அண்டம்....!


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:   


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Monday, September 6, 2010

ரஷ்யாவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....


ஒரு நாட்டின் வரலாறை தெரிந்து கொண்டு அந்த நாட்டிற்கு செல்வது நல்லது. இது நாட்டிற்கு மட்டும் இல்லாமல் இருக்கும் நாட்டில் உள்ள பகுதிக்கும் பொருந்தும்...அப்போதுதான் அந்த  நாட்டின் மக்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் தெரியவரும் பழகுவதற்கும் இனிமையாக இருக்கும்...      

பரந்த நிலையில் பார்வை இருக்கும் போது குறுகிய பார்வை இல்லாமல் போகிறது...எண்ணமும் பெரிதாக விரிகிறது சிந்தனையுடன் சேர்ந்து....

ரஷ்யாவின் வரலாறை  இன்றுதான் படிக்கநேர்ந்தது. இந்த வரலாறு 10 நூற்றண்டிளிருந்தே தொடங்குகிறது...என்ன ஒரு புரட்சிகள் , அடக்குமுறைகளை, பசி, பஞ்சங்களை சந்தித்த நாடு, மக்களின்  எழுர்ச்சி, ஐரோப்பிய நாகரிகத்தை முழுமையாக ஏற்றது. ரஷ்யாமீது நெப்போலியனின் படையெடுப்பு,அலேசண்டர் பிற நாட்டின் மீது   படையெடுப்பு பின்பு பௌத்தத்தை ஏற்று துறவறம் கொண்டது. கம்யுனிசம் வந்தவுடன்  ஜார் மன்னராட்சியை ஒழித்தது, மார்க்சை தழுவி லெனின் எழுர்ச்சி, ஸ்டாலினின் இரும்புத்திரை அரசாட்சி, கோர்போசெவின் ஆட்சிகாலம் இப்போது இருக்கிற நிகழ்கால ஆட்சிவரை படித்தது ரஷ்யாவையே முழுசா சுற்றிவந்ததுபோல் இருந்தது.

கம்யுனிச சித்தாந்தம் ஆயுத்தமானவுடன்  ஜார் மான்னரின் குடும்பத்தில் இருந்த 5 வயது குழந்தை முதல் 90 வயது கிழவன் வரை  19 பேர்களை ஒரே நாளில் வெட்டி விசிஎறிந்தார்கள். பல நூற்றாண்டுகளாக கோலாட்சி செய்த குடும்பம் ஒரே நாளில் வெட்டி விழ்த்தபட்டது. அப்போது "என்னால் பல நூற்றாண்டுகளாக  ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தை என்ன செய்கிறீர்கள்" என்று எந்த கடவுளும் முன்வந்து காப்பாற்றவில்லை...அடக்குமுறையால் ஏற்பட்ட விளைவு இது...

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்..."காப்பற்றுதளுக்கும், கடவுளுக்கும் எந்த சம்பந்தமில்லை"...அநியாயங்கள் அடிபடையிலே நியாங்கள் கற்பிக்கபடுகிறது. ஜார் மன்னருக்கு கொடுத்தது போல்.என்றும் நட்புடன்:   


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Sunday, September 5, 2010

மாணவர்களை முட்டாளாக்கும் ஆசிரியர் தினம்...முன்னால் ஆசிரியராக இருந்து இந்தியாவின் ஜனாதிபதியான  டாக்டர். இராதாகிருஷ்ணனன் பிறந்தநாள் நினைவாக இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினம் நாடுமுழுவதும் கொண்டாடபடுகிறது. இந்தியாவில் 68% கல்வியறிவு பெற்றுள்ளது. முழு கல்வி அறிவு பெற போராடி கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாடு 75% கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரி கல்வியறிவை விட அதிகம். பாராட்டபடவேண்டியவை...


ஒரு நாட்டின் முட்டாள்கள் எங்கு உற்பத்தி பண்ணி அனுப்படுகிறார்கள் என்றால் அது  பள்ளிகளிலும், பல்கலைகழங்களிளும்தான் என்று கூறலாம். ஜாதி, மதம் இங்கிருந்தே துற்றபடுகிறது. பிள்ளையை பள்ளியில் சேர்க்கும் போதே ஜாதி இணைப்பு நுழைகிறது. பின்பு ஜாதி பிரிவு அடிப்படையில் தரம் பிரிக்கபடுகிறது. அதன்பின் என்ன மதத்தை சார்ந்தவன் எனபது வருகிறது.

இன்று அரசின் கல்விகொள்கை ஒரு விதமாக இருந்தாலும் தனியாக நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் முழுக்க முழுக்க ஜாதி, மத அடிபடையில்தான் இயங்குகிறது. ஒரு இந்து நிர்வாகியால் நடத்தப்படும் பள்ளி அதில் இயங்கும் நிலைகள் இந்து மதம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது...உதாரணமாக என் நண்பரின் மகன் ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறான். அங்கே காலை தேசிய கீத வாழ்த்துப்பாடல் எல்லாம் முடிந்தவுடன் கடைசியாக ஓம் விஷ்ணு, ஓம் நாராயண...என்று மந்திர பாடல் பாடவைக்கிறார்கள். அப்பள்ளியில் இந்து குழந்தைகள் தவிர கிறிஸ்டின், இஸ்லாமிய குழந்தைகளும் படிகின்றன...அக்குழந்தைகள் அதை பாடவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை...ஆனால் மறைமுகமாக பின்பற்ற வைக்கிறார்கள். இந்த இந்து பள்ளிபோலதான் பல கிறிஸ்டியன், இஸ்லாமிய பள்ளியிலும் குழந்தைகளுக்கு மறைமுகமாக மதம் வளர்ப்பு ஆரம்பகட்டமாக  நடக்கபடுகிறது. "பிஞ்சு மனதில் நஞ்சை வளர்கிறார்கள். இவர்கள் சுயநலத்திற்கு...இவர்கள்தான் நல்லாசிரியர் ஆகிறார்கள். விருதுகள் வாங்கும் தகுதியை  பெறுகிறார்கள்.                   

"சொல்வதை சொல்லுமாம் கிளி பிள்ளை" இதுபோலதான் உள்ளது.  மாணவர்களை சுதந்திரமாக சிந்திக்ககுடியதாக இல்லை இன்றைய கல்வியறிவு புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து பரிட்சையில் படித்ததை வாந்தி எடுக்கும் நிலையில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். புரியவைத்து கல்வி புகட்டபடுவதில்லை...இன்று சமசீர் கல்வி தமிழகத்தில் கொண்டுவந்துதிருகிறார்கள் இவை எவ்வாறு செயல்படும் எனபது போகபோகதான் தெரியும்.

காலையில் செய்திதாளில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. அது சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும்  மாணவர்கள் இன்று ஆசிரியார் தினம் என்பதால்  ஆசிரியர் கால்களுக்கு பாத பூஜை செய்தார்களாம். பாத பூஜை எனபது இந்து மதத்தை தவிர எந்த மதத்தில் செய்யபடுகிறது. என்று எனக்கு தெரியவில்லை. இதில் அந்த பள்ளியில் மற்ற மதத்து பிள்ளைகளும் இருக்கும் அல்லவா...இது மறைமுக மத புகுத்தல் வேலைதானே..அதுவும் இல்லாமல் இந்த காலில் விழும் வழக்கத்தை பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதைனையாக இருக்கிறது. இதுபோலதான் நமது கல்வின் தரம் சுயசிந்தனை அற்று, சுயமரியாதை இழந்த   நிலையில் செயல்படுகிறது. அதனால் மறுபடியும் சொல்கிறேன்.  "ஒரு நாட்டின் முட்டாள்கள், அதிமேதாவி முட்டாள்கள்  பள்ளிகளிலும், பல்கலைகழங்களிடமிருந்தான்  உற்பத்தி செய்து  அனுப்படுகிறார்கள்...உற்பத்தி என்றும் நிற்காமல்...!


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, September 4, 2010

உங்களுக்கு ஏன் இந்த அழிவு சிந்தனை....

 
சில பேரிடம் இந்த உலகம் அழிபோகுதாமே என்றால் அது சீக்கிரம் அழியட்டும் ஒருத்தனும் இருக்க கூடாது என்று சொல்வாங்க...ஏன் இந்த கொலை வெறில இருக்காங்க என்று தெரியலா இதில் ஒரு காமெடி என்னவென்றால்   அவங்க போல இருப்பவர்கள்தான் அமைதியை பற்றி பேசுவாங்க, போதனை செய்வாங்க..உள்ளுக்குள் வன்முறை, அழிவு சிந்தனை வெளியே அமைதியான தோற்றத்துடன்....

வளரும் குழந்தைகளுக்கு பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்து "உங்க அப்பாவா சுடுடா" என்று சொல்லும் அம்மாக்கள் அதிகம்...சுடுபடும் அப்பாவும் "ஏன் புள்ள என்னமா சுடுறான்" என்று மெச்சிபார். அதே புள்ள வளந்து நிஜ துப்பாக்கியில் பிறரை சுடும் போது "ஐயோ, ஏன் புள்ள இப்படி தீவரவாதியா ஆயட்டானே" என்று அழுது புலம்பல்...அவன் துப்பாக்கி எடுக்க யார் காரணம்...இதுபோல் வளரும் வன்முறை பல குடும்பங்களை தாங்கி நிற்கும் சமுதாயத்தில் அடிப்படை காரணமாய்  மறைக்கபட்டிருக்கு. வன்முறை அழிவு சிந்தனை வளரும் பருவத்தில் இருந்தே வளர்க்கபடுகிறது

நாம் பார்க்கும் திரைப்படங்கள் கூட நாட்டில் வாழும் மக்கள் அமைதியாக வாழுகிறார்கள். என்று வருவதில்லை 2012 இல் உலகம் அழிந்துவிடும், சுனாமி வந்து எல்லாரும் போய்டுவோம், பெரிய விண்வெளிகல் பூமியில் வந்து விழும், வேற்று கிரக மனிதன் பூமியில் உள்ள மனிதர்களை அழித்துவிடுவான் என்ற கதையை தாங்கிய படங்கள்தான் வருகிறது. இவையெல்லாம் எதை அடையாலபடுத்துகிறது. "மனிதர்களான எங்களுக்கு என்றும் அமைதி வேண்டாம் அழிவுதான் வேண்டும்..அழிவு முடிந்த பின் அமைதி வேண்டும்..அதில் ஒரு ஆறுதல் வேண்டும்" என்றுதான்  நினைகின்றார்கள். மனிதனால் மட்டும் அழிவு இல்லாமல்  படைக்கப்பட்ட இயற்கையால் உலகத்திற்கு  ஒட்டு மொத்த அழிவு என்றும் உண்டாகாது. அது உயிரினகள் வாழும் தடயத்தை விட்டு செல்லும்..ஆனால் அணுகுண்டுகள் தாங்கி நிற்கும் மனிதனால் அது முடியாது. இந்த பூமிக்கு ஒட்டுமொத்த அழிவு இவனாலே சாத்தியம்....

வெளியே அமைதியை பற்றி நினைக்கும் முன் உங்கள் உள்ளுக்குள் உணமையிலே அமைதியாக இருகிறீர்களா என்பதை பாருங்கள்....உள்ளொன்று வைத்து புறமொன்று பேசவேண்டுமே...! 


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:   
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Friday, September 3, 2010

ஓஷோ சொன்ன கதை...


 ஓஷோ சொன்ன கதையின் உள்ளாழம்...

ஒரு பாதிரியார் இரண்டு கிளிகளை வாங்கி அவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு கிறிஸ்துவைப் பற்றிய அழகிய ஸ்தோதிரங்களை சொல்லிக் கொடுத்தார். அவைகளுக்கு அப்படியே சரியாகத் திருப்பி  சொல்லியதை கண்டு எல்லோருக்கும் மிகவும் ஆச்சரியம். அவைகளுக்கு என சிறிய மணி மாலையை  தயாரித்துக் கொடுத்தார். அவைகளை அந்தக் கிளிகள் உருட்டிக் கொண்டே பிராத்தனை செய்யவும் அவைகளுக்கேனே மிகச் சிறிய பைபிளை  தயாரித்து கொடுத்தார். அவைகள் அந்த பைபிளை திறந்து வைத்துக் கொண்டு படிப்பதுபோல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டுவதற்க்கு பயிற்சியும் அளித்தார். அவைகளுக்குப் படிக்கத் தெரியாவிட்டாலும் இன்ன பக்கத்தில் இன்ன செய்தி இருக்கிறது என்று ஏற்கெனவே அந்த பாதிரியார் அவைகளுடைய மூளைக்குள் திணித்துவிட்டார். அந்த பாதிரியார் அந்த பைபிளை புரட்டி பனிரெண்டாவது பக்கம் என்று சொன்னால் அவைகள் அந்த பக்கத்தில் உள்ளவைகளை மனப்பாடமாக ஒப்புவிக்கும்.

அந்த பாதிரியாருக்கு முழு திருப்தி ஆனால் இன்னொரு கிளியை வேறு முறையில் பயிற்றுவிக்க நினைத்தார்.அதாவது பைபிளை புரட்டி பக்கத்தை சொல்லி அவைகள் அதில் உள்ளவை சொல்வதைவிட தானே முழு ஸ்தோத்திரங்களை சொல்லும் படியாக கற்றுக்கொடுக்க  நினைத்தார். கடைக்கு சென்று ஒரு கிளியைத் தேர்ந்தெடுத்தார். அப்பொழுது அந்த கடைக்காரன் உங்களுடைய  ஆசை கண்டிப்பாக நிறைவு பெரும் இந்த கிளி மிகவும் புத்தி கூர்மையுடையது என்று புகழ்ந்தார் .

அவரும் அதை வாங்கி வந்து அந்த இரண்டு கிளிகளோடு சேர்த்து விட்டார். முதலில் உள்ள இரண்டு கிளிகளும் ஆண்கிளிகள் இப்பொழுது வாங்கியது பெண் கிளி இது பாதிரியாருக்கு தெரியாது. அப்பொழுது அந்த இரண்டு ஆண் கிளிகளும் பைபிளை வைத்து கொண்டு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டுயிருந்தது.  இந்த பெண் கிளியை பார்த்த ஒரு ஆண் கிளி மற்றோன்று  ஆண் கிளியிடம் சொன்னது "ஜார்ஜ் முதலில் அந்த மணிமாளையை  தூக்கி ஏறி நாம் கடவுளிடம் வேண்டின பிராத்தனை கடவுளுக்கு கேட்கப்பட்டது" என்று.  

உங்கள் பாதிரிமார்கள் இந்த கிளிகளுக்கு மேல் திறமையுடைவர்கள் இல்லை அவர்களுடைய பிராத்தனை பணம் அதிகாரம் மற்றும் அந்தஸ்துகாகவேதான் அவர்கள் முக  மூடி அணிந்த  அரசியல்வாதிகள்தான் அவர்கள் கடவுளின் பெயரால் அரசியல்தான்  நடத்துகிறார்கள் அரசியல் எப்படி எண்ணிக்கையின் அடிபடையில் இருக்கிறதோ அதைப் போல மதமும் எண்ணிக்கையின் அடிபடையில் சக்தி வாய்ந்ததாக கருதபடுகிறது. இன்றைக்கு 700 மில்லியின் கத்தோலிக்கர்கள்  இருக்கிறார்கள். ஆகவேதான் போப் இன்று மிகவும் மதிப்புவாய்ந்தவராக கருதபடுகிறார்.

ஒவ்வொரு மதமும் இப்படி பல வழிகளில் தங்கள் மத உறுபினர்களது எண்ணிகையை அதிகபடுத்தி கொள்ளவே நினைக்கின்றன. ஒரு முகமதியன் நான்கு பெண்களை மணந்துகொள்ளலாம் இதனால்  வருடத்திக்கு 4 குழந்தைகளை அவனால் உண்டாக்க முடியும். இந்த முறை மிகவும் வெற்றியடைந்தது இவர்கள்தான் இன்று உலகத்திலே கிருஸ்தவ மதத்திற்கு அடுத்ததாக  இருக்கிறார்கள்

ஓஷோவின் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!நன்றி: கவிதா பதிப்பகம், சென்னை
என்றும் நட்புடன்:   
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

ஏதோ, நம்மால் கொடுக்கும் அன்பளிப்பு மதிப்பான மொய்யாய் மாறியது ஏனோ..


தமிழக குடும்ப விசேசங்களில் விசேசத்திற்கு வருபவர்கள் நிகழ்சிகளை பார்த்துவிட்டு சாப்பிட்டு கடைசியா மொய் ஒன்று எழுதுவாங்க இது ஒரு அன்பளிப்பு என்பார்கள். ஆனால் இந்த மொய் என்கிற அன்பளிப்பு இன்று மறைமுக கட்டாய தேவையாக மாறிவிட்டது. "எல்லோரும் விசேசத்திற்கு வந்தார்கள் ரொம்ப சந்தோசமா இருந்தது"  எனபது போய் வந்தவர்கள் எவ்வளவு மொய் எழுதினார்கள். என்று பார்க்கும், கேட்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். வந்தவர்கள் ஏதோ அவர்களிடம் இருந்தத பணத்தை மொயயாக கொடுத்துவிட்டு போவார்கள். ஆனால் வாங்கியவர்கள் "படுபாவி போயபோயும் 101 ரூபா எழுதுறான இவன் பொண்ணு, பையன் கல்யாணத்துக்கு விழுந்து விழுந்து செய்தேன் இந்த மொய் எழுதறத்துக்கு இவன் கலயாணத்துக்கு வராமலே இருக்கலாம்" என்று சொல்வார்கள்.

பிறருக்கு பத்திரிகை வைக்கும் போதே நாம்  "இவனுக்கு இவ்வளவு செய்தோம். நமக்கு அதைவிட  செய்வான்"என்று  நினைப்பில்தான் பலபேர் பத்திரிகை வைக்கிறார்கள். ஆனால் அவங்க ஏதோ ஒரு சூழ்நிலையில் மொய் எழுத முடியாவிட்டாலும், வரமுடியாவிட்டாலும் அவங்கள வார்த்தையால வறுத்து எடுப்பது அடுத்த கட்ட காட்சி..இப்படி இதுபோல இருப்பதால் கல்யாணம் மற்றும் மற்ற நிகழ்சிகளுக்கு மொய் எழுதுவது தனி நபர் கௌருவம், மதிப்பு  சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதனால் முடியாதவங்க யாரிடமாவது கடனாகவோ, இல்லை போட்டுக்கிற நகையை அடமானம் வைத்தோ மொய் எழுதுகிறார்கள்.

சிலபேர் சந்தோசத்திற்கு பலபேர் வேதனைகள் மறைமுகமாக உரிஞ்சபடுகிறது... நான், இது எல்லாம் யோசித்துதான் விசேசம் என்று
செய்தால் யாரிடமும் மொய் வாங்குவதில்லை. மொய்யை யாருக்கும் எழுதுவதுமில்லை. கொடுக்கும் பத்திரிக்கையிலே "நீங்கள் வழங்கும் அன்பளிப்பு, மொய்யை தவிர்க்கவும்...உங்கள் வருகையே எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தரும். நன்றி..! என்று இருக்கும். பல பேர் வரதட்சணை வாங்கமாட்டேன், கொடுக்கமாட்டேன் என்று கொள்கையுடன் இருப்பவர்கள் மொய்யும் வாங்கமாட்டேன் என்று இதையும் இணைத்து  கொள்ளலாம்...வேதனையான உள்ளங்களை நினைத்து...!                  


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:  
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Thursday, September 2, 2010

நீங்கள் எவ்வளவு காலம் வாழவேண்டும்...


மரணத்தை பற்றிய நினைப்பு பல பேரிடம் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது....சிலபேர் சொல்லுவாங்க "நான் இனிமேல் வாழ்ந்து என்ன சாதிக்கபோறேன் ஒரு 60,70 வருஷம் இருந்தாலே போதும் அதுக்கு மேல இருந்தா மரியாதை இருக்காது" என்பார்கள். ஒரு மனிதனின் சராசரி வயதே 100 வருடம் இதையே யாரும் ஒழுங்கா வாழமுடியல, வாழவேண்டும் என்ற நினைப்பும் இல்லை...

பலபேருக்கு வாழ்வதை விட சாவதே விரும்புகின்றனர்...ஏன் இப்படி.? இந்தியா போன்ற கிழகத்திய நாடுகளில்தான் இந்த நினைப்பு இருக்கிறது. மேற்கத்திய நாட்டில் சாவதை விட  வாழ்வதில்தான் முனைப்பு காட்டுகிறார்கள். அவர்களுக்கு மரணம் ஒரு அருவருப்பான செய்தி ஆனால் ஆசியா நாட்டில் உள்ளவர்களுக்கு வாழ்வுதான் மிகவும் அருவருப்பானது...    

பெர்னாட்ஷா,  ஒரு கிராமத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார் அப்போது அக்கிராமத்தின்   இடுகாட்டின் வழியே சென்றுகொண்டிருக்கும் போது அங்கு புதைக்க பட்ட  கல்லறை பார்க்க நேர்ந்தது அதில் ஒரு கல்லறையில் பின்வருமாறு எழுதிருந்தது  "இவன் இளம் வயதில் அகால மரணம் அடைந்தான். வயது 125 " என்று.  இதை பார்த்த பெர்னாட்ஷாவுக்கு மிகவும் ஆச்சர்யம். இந்த கிராமத்தில் 125 வயதுள்ளவனே இளம் வயதில் இறக்கும் போது வயதானவர்கள் இவ்வளவு காலம் இருப்பார்கள். என நினைத்து தன் கடைசி வாழ்நாள் இந்த கிராமத்தில்தான் வாழவேண்டும் என முடிவுகொண்டு தன் மீதி வாழ்நாளை அங்கையே கழித்தார்...

நமக்கு உண்டாகும் மரணம் நோயில் வருவதை விட மனத்தில் உண்டாகும் எண்ணகள்படிதான் உண்டாகிறது. நீண்ட ஆயுளுடன் வாழ்வோம் என நினைத்தால் வாழ்வோம்...போதும் இனிமேல் வாழ்ந்தது என நினைத்தால் சீக்கிரம் வீழ்வோம். இதில் எந்த மாற்றமும் இல்லை...எல்லாமே நாம் நினைக்கும் நினைப்புதான்... 


 என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:           (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)