Pages

Wednesday, March 31, 2010

நாத்திகம் எனபது என்ன........?

நாத்திகம் என்ற வார்த்தை பெரியார் காலத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னே சித்தர்கள் காலத்திலே இவை மக்களிடம் பாடல்களாக சொல்லப்பட்டன. அறிவியல் வளர்ச்சி போதிய அளவில் இல்லாத நிலையில் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள நினைக்கவில்லை. ஆனால் பெரியார் வந்து நாத்திகத்தை தீவறமாக்கினார் அவரை பின்பற்றுபவர்கள் இதை முன் முன்னேடுத்து செல்கின்றனர்... உண்மையில் நாத்திகம் எனபது என்ன? ஆத்திகத்திர்க்கு எதிர்மரைதானே ஒன்று இருந்தால் தானே ஒன்று உயிர்யுடன் இருக்கும் ஒன்று இல்லை என்றால் இன்னொன்றுக்கு வேலை இல்லைதானே..? ரஷ்யாவில் நாத்திகத்திற்கு வேலை இல்லை ஏன்யென்றால் அங்கே யாரும் கடவுள் இல்லை என்கின்றனர். காம்யுனிசம் கொள்கையில் உள்ளவர்கள். அங்கே எப்படி நாத்திகம் புகுத்தமுடியும். ஆத்திகத்திர்க்கு தான் அங்கே வேலை இருக்கிறது. 

ஓஷோ, கதை ஒன்று சொல்வார். "ஒரு கிருஸ்துவ பாதிரியார் வேகமாக நடந்து கொண்டுஇருகின்றார் அப்போது பாதிரியாரை ஒரு ஆள் தடுத்து நிறுத்துகிறார். "என்னை ஏன் தடுகின்றிர்கள்" என்று கேட்க அதற்கு அந்த ஆள் "எதற்கு வேகமாக போகின்றிர்கள்" என்று கேட்க. பாதிரியார், "எனக்கு பிரசங்கம் பண்ண நேரம் ஆகிவிட்டது தடுக்காதே வழியை விடு" என்றார். அதற்கு அந்த ஆள் "யாரை எதிர்த்து பிரசங்கம் பண்ண போறிங்க" என்று கேட்க அதற்கு அவர் சாத்தனை எதிர்த்துதானே பிரசங்கம் பன்னபோறேன் கடவுளின் எதிரி சாத்தான் தான் அது அழியவேண்டும்" ஆமாம், நீயார் என்றார். அதற்கு அந்த ஆள் நீ அழியவேண்டும் என்கிறாயே அந்த சாத்தான் நான்தான் என்றது. அவருக்கு பயங்கற கோவம் நான் யாரை அழியவேண்டும் என்று சொல்கிறேனே அந்த சாத்தான் நீ தானா இன்றே ஆண்டவன் மேல் ஆணை இட்டு சொல்கிறேன் நீ அழித்துபோவையாக" என்றார். அதற்கு அந்த சாத்தான் இரு சாமி ஏன் அவசரம் ஆமா நான் அழிந்து போனால் நீ எப்படி வாழ்வாய் நான் அழியவேண்டும் என்று தானே சர்ச்சில் பிரசங்கம் செய்கிறாய் நான் உயிறுடன் இருந்தால் தானே உனக்கு பொழப்பு அழிந்தால் உனக்கு வேலையே இல்லையே என்றது".

என்னுடைய கருத்து என்னவென்றால் ஒன்று இருந்தால் தான் ஒன்று வாழ முடியும் இல்லையென்றால் மற்றதுக்கு வாழ்வேது ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் வேண்டும். மலர் இருந்தால் தானே வாசம் வரும் கூடவே வண்டுகளும் வரும். எது புனிதம் என்கிறோமோ அதுவே அசிங்கமாக மனது நினைக்கிறதே..! இரண்டு நிலைய சரி சமமாக பாவிக்க முடியவில்லையே மனதுக்கு.? அன்ன லக்ஷ்மி, தான்னிய லக்ஷ்மி என்று சொல்ற உணவு தானே பின் மலமாக வெளியேறுகிறது பின் எப்படி அன்னலட்சுமி மல லக்ஷ்மி ஆனாள். இது தான் அது. அது தான் இது. "அண்டத்தில் உள்ளதே பிண்டம்" பெரியார் அவர் நிலையை அவர் தேர்தெடுத்தார். அவர் நிலையை நாம் எப்படி தேர்தெடுப்பது. அவருடைய கார்பன் காப்பியா நாம் எப்படி இருப்பது. அவருடிய முகமூடியை நாம் எப்படி அணிவது. பின் நம் முகம் எப்படி இருக்கும் நம்முடைய தேடுதல் எப்படிபட்டதாக இருக்கும்.
நட்புடன்:

Friday, March 26, 2010

மொபைல் நோய்

    


இன்று கோட்டையில் இருக்கிறவங்களிருந்து குடிசையில் வாழ்பவர்களிடம் வரை  மொபைல் போன் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இது வரவேர்க்க கூடியது என்றாலும்  இதனுடைய எதிர்வினைகள் தெரியும் போது அதிர்ச்சிதான் வருகிறது.  தொலைதொடர்பு சாதனம் மக்கள் பயன்பாட்டிற்க்கு  ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் இதனில் உண்டாகும் ஆபத்துக்கள் அவை அறியாமல் பயன்பாட்டிற்க்கு ஏற்றார் போல் உள்ளன.  "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி மொபைல் போனுக்கு நன்கு பொருந்தும் இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் உலக மக்கள் தொகையை விட கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.  சிகரேட் அடிச்சா எப்படி புற்று நோய் வருமோ அதுபோல் மொபைல் போன்  பேசினாலும், கேட்டாலும் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்கள். இது வெளிபடுத்தும் கதிர்வீச்சு  முலம் புற்றுநோய் செல் வளரும் என்று கூறுகிறார்கள். இவை அதிர்ச்சி அடையகூடியதுதான். கொஞ்சம் அதிகமாகவே யோசிக்கவும் வேண்டியதுதான்.

ஆய்வின் முடிவுகள்: 
 
Food and Drug Administration மற்றும் CTIA - The Wireless Association போன்ற அமைப்புகள் "புற்று நோய் உருவாவதற்கு மொபைல் போனில் போதுமான கதிர்வீச்சு  இல்லை" என்கிறது. ஆனால் Environmental Working Group(EWG) மற்றும் World Health Organization(WHO) போன்றவைகள் "பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன் பயன்படுத்தினால் மூளை மற்றும் எச்சில் சுரபிகளில் புற்றுநோய் கட்டிகள் வரும் வாய்ப்பு அதிகமா இருக்கும் என்றும் நாம் அன்றாட நடவடிக்கையிலும் பாதிப்பு இருக்கும் மற்றும் இவை பத்து வயதுக்குள் உள்ள சிறுவர்களிடம் அதிக பாதிப்பை உண்டாகும் என்றும் கூறுகின்றார்கள். மொபைல் போனில் (SAR - Sepecific Absorption Rate) எண் அளவு ரேடியோ அலைவரிசையை பெறுகின்றது இதை நம் தலை  உருஞ்சுகிறது. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சுகிறதோ அதை SAR ரேட் என கூறலாம். ஒவ்வொரு போனுக்கும் ஒரு SAR ரேட் உண்டு. இவை அதிகமா இருந்தால் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும் SAR ரேட் அறிய பேட்டரிக்கு கீழ் FCC (Federal Communication Commission) எண் இருக்கும். FCC website சென்று அதன் எண்ணை கொடுத்தால் கதிர்வீச்சின் அளவை அறியலாம். EWG.org website-இலும் சென்றும் பார்க்கலாம்.


அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (E.W.G) சமீபத்தில் ஒரு தீங்கு விளைவிக்கும் செல்போன் பட்டியலை வெளியிட்டது. இதில் அப்பிள், எல்.ஜி, சாம்சங், எச்.டி.சி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன வகை செல்போன்கள் அதிகமாக கதிர்வீச்சு  உள்ளது என்று அறிவித்துள்ளது.


அந்த லிஸ்ட்:


மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg


ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3GS)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg
எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg


பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg


சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg


மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg


மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)


அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg


பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg


எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)


அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg


சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.


மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கதிர்வீச்சு தலைக்கு செல்லாமல் இருக்க ஹெட்செட்  அல்லது ஸ்பீக்கர் பயன்படுத்துவது நல்லது. நாம் பேசும்போதும் text அனும்பும்போதும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். call மற்றும் sms வரும்போதும் கதிர்வீச்சு குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் குறைவாக பேசுவது  நலம். "மற்றவை நேரில் பேசலாம்"  என்று இனிமையாக சொல்லலாம்.  இதனை மற்றவரிடமும் கூறுங்கள்.


................சமுக நலன் காப்போம்..............


அப்படியெ படிச்சுட்டு போன எப்புடி ஒரு கள்ள sorry நல்ல ஓட்டாவுது போட்டுட்டு போலாமே.........?


நட்புடன் :

Friday, March 19, 2010

என்னுடைய மனத்தாக்கம் சிலது மட்டும் உங்களுடன்...

 
என்னுடைய மனத்தாக்கம் சிலது மட்டும் உங்களுடன்...

பரமாத்மா, அவதாரத்தில் ஒருஅவதாரம் கடல் கடந்து இலங்கையை வென்று துணையை அழைத்து வந்ததாம். அந்த அவதார் போவதற்கு ரோடோ, பாலமோ போட்ட பிரச்சனை இன்னும் திர்தபாடில்லை. அந்த அவதாரத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தியாம். மறுஅவதாரத்தில் கலவாடியாகவும், காமுகனாகவும் வந்தானாம். அவனே உலகை இரச்சித்தானாம்  காக்கின்றானாம். சந்தனமும், பன்னிரும் கூடவே மலரும் பூசிகொண்டு இருக்கின்ற பரமாத்மா சொல்வது யாதெனில்... "ஒருத்தனுக்கு ஒருத்தியை கட்டிக்கொண்டு ஒருத்தியுடன் வீட்டில் இரு" ஆனால் வெளியில் மறுஅவதாரமாய் "களவுபொறிக்கி  வேலையை பார் " என்று கூறுகிறது.  

 இதனுடைய கொள்கை, தத்துவம் இத்யாதி, இத்யாதி தான் நாம் இந்து  சொல்கிற மடசாம்ப்ரானிகளையும் உருவாக்கி இன்று நம்மோடு உலாவ விட்டு இருக்கிறது. அதுங்க சொல்றது தான் சட்டம், நீதி, தத்துவம், கொள்கை, மட்டை. மசிரு எல்லாம். மாற்று இனம் என்று கூட நினைக்கவேண்டாம். மனிதர்கள், உயிர்கள் என்று கூடவா நினைத்திருக்கமாட்டான். ஒரு நாதாரி.  அங்கே உயிரோடு மண்ணில் புதைத்தார்களே மக்களை.  ஒரு எறும்பு என்னால் அறியாமல் மிதிப்படும்போது என் மனம் அழுகுதே  "இயற்கையின் படைப்பை அழித்தென்" என்று.   நம்  உயிரின் உணர்வுகளின்  நூரில் ஒரு சதவிதம் கூட இல்லையே இந்துவம் மருவிய புத்தத்துவம் நாட்டிற்கு எங்கே புத்தம்...? அங்கே புத்தம் இல்லை. புத்தருடைய  சொல் இல்லை.  அவருடைய பல் உள்ளது. பாதுகாக்கிறது.  இங்கிருந்து போன அரசியல் சாக்கடிங்க  பல்லை பார்த்து கழிவி கையேழுத்து போட்டு வந்துதுங்க. மிச்சம் மீதி இருந்த உயிறை எடுக்க ஆலோசினை சொல்லுச்சிங்க. அங்கும் எங்கும் புத்தம் மறைந்து புத்தர் பல் வாழ்கிறது. எதற்கு இந்த பல்.... புத்தரை அழித்து புத்தத்தை காப்போம்....!
நட்புடன் உங்கள் தோழன்Sunday, March 14, 2010

போலி மதவாதிகள் முகத்திரை கிழிவது எப்போது...?

 


பச்சையப்பன் கல்லூரியிலே பட்டை தீட்டிக்கொண்டு பகுத்தறிவை அரகொரை அறிவுடன் அறிந்து அல்லோலபட்டுகொண்டு  திரிகிற சேசாசலம் என்கிற பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ் என்கிற ஜார்ஜ் பெர்னாண்டஸ் ..? (நாளை இந்த பெயரை வச்சுகிட்டாலும் வச்சுபார் அதான் ஏன் சிரமம் நானே தேர்தெடுத்து கொடுக்கிறேன்) இவர் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற மார்ச் 12 அன்று செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தாராம்.


அதற்க்கு இவர் சொல்லும் காரணம் "தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்று கூறினாறாம்.


இவரு என்னத்த அரிசிய கடைந்து ஆய்ந்தார் என்று தெரியவில்லை. இந்தமாதிரி மத சந்தர்ப்பவாதிகளை என்ன சொல்றது. காட்டில் திரியும், கோவில் முன்னும் பிச்சை எடுக்க வைக்கும் யானையிக்கு தானே மதம் பிடிக்கும். இந்த பாழாய்போன மனிதனுக்கு ஏன் மதம் பிடிக்கிறது. பெரியாரிடம் அம்பேத்கார் நீங்கள் புத்தமதத்தை தழுவுங்கள் என்று சொன்னதற்க்கு அவர் நான் இந்து மதத்திலே பிறந்தேன் அவற்றில் இருந்தே விமர்சிக்கின்றேன் புத்தமதம் மாறினால் மதம் மாறி அதை       சீர்படுத்தமுடியாது வேண்டாம் என்றார். அவரை பின்பற்றினேன் என்று சொன்னார். இவர் (பெரியார்தாசன்). திறடனுகுதான் பல பெயர்கள்  இருக்கும் இவரு படிச்சா படிப்பு மாதிரி இவரு பெயறையும் சேர்த்தே போட்டுக்கலாம்.


இந்த மாதிரி  மதசந்தர்ப்பவாதி திருந்துவது எப்போது...?   ச்சீ இந்த பழம் புளிக்கிறது என்று விமர்சனம் பண்ணலாம் பண்ணுவார் "முஸ்லிம் நண்பர்களே ஜாக்கரதை...."

நட்புடன் உங்கள் தோழன்.
 

குத்துங்க எசமான் குத்துங்க..... ஓட்டாய் குத்துங்க இந்த ஆம்பளிங்கலே இப்படித்தான்.

Thursday, March 11, 2010


புகையினால் ஏற்படும் உடல் நல கேடு

சிகரெட் புகையினால் 4000 மேலான வேதியல் பொருட்கள் உள்ளன. இவற்றில் 50க்கும் மேலானவை புற்றுநோய் உருவாவதற்கு காரணமான (carcinogen) வேதி பொருள்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான பொருள் நிக்கோடின். இது சற்றளவு மூளையை சுறுசுறுப்படைய செய்தாலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவருக்கு அது நிறுத்தும் போது ரத்தத்தில் நிகோடின் அளவை குறைத்து பதட்டம், தலைவலி, எரிச்சல் அடைதல், முனைந்து செயல்படும் திறன் குறைதல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவை அடுத்த சிகரெட் பிடிக்கும் போது குறைந்து விடும். அதனால் புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த சுழற்சியிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவர். அடிமையாவர். நிகோடின் தவிர புகையில் உள்ள கார்பன் மோனக்ச்சிட் என்ற வேதி பொருட்கள் பிராணவாயு உடலின் எடுத்து செல்லும் திறனை பாதிக்கிறது.


புகையினால் ஏற்படும் நோய்கள்

புற்றுநோய், ரத்த புற்றுநோய், உயர்ந்த ரத்த அழுத்தம் ரத்த குழாய் அடைப்பு, பக்கவாதம், முச்சு குழாய் இறுக்கம், ஆஸ்துமா, நுரையீரல் நோய் கிருமிகள் தாக்கம், காச நோய், மூக்கிலிருந்து சளி மற்றும் நீர் வடிதல், வயது முதிர்ச்சி, முகசுருக்கம், மலட்டு தன்மை, கண்ணில் குறைவிழுதல், பல், ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள். 10 ல் 8 பேருக்கு புகைப்பிடித்தல் நேரடி காரணமாக உள்ளது. புகையினால் மெல்லும் பழக்கம் உள்ளவருக்கு வாய் உட்புறம், மூக்கு, தொண்டை, உணவுகுழாய், இறைப்பை, கணையம், பித்த நீர் குழாய், சீறுநீர் பை, சீறுநீரகம் இவற்றில் புற்று நோயும், ரத்த புற்று நோயும் வர வாய்ப்பு அதிகம் ஆயுளில் 10 வருடம் அதற்கு மேற்பட்ட ஆயுள் குறைகிறது.

புகைபழக்கம் இல்லாதவர் இப்பழக்கம் உள்ளவரிடம் இருக்கும் போது (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் பிடித்தால்) புகைக்காத நபர் அவரை அறியாமலே மூன்று சிகரெட் புகைக்கிறார். இது அவரின் சீறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்டு கணிக்கப்பட்டது.


புகை பழக்கத்தினால் ஏற்படும் சமுக பிரச்சனைகள்

1 . மூச்சு காற்று உடை, தோல் அனைத்திலும் புகையிலை விஷம்.
2 . தூசி மற்றும் நுகர்தல் குறைந்து உணவை ருசிக்கும் தன்மை குறைதல்.
3 . பணவிரயம்.
4 . அடிகடி பணியிளிருந்து விடுப்பு.
5 . மற்ற குடும்ப உறுப்பினர், நட்பு இவற்றில் பதிப்பு.


புகைப்பழக்கம் நிறுத்தினால் ஏற்படும் பலன்


12 மணி நேரத்தில் சுவாசம் சுலபமாகிறது.
1
மாதத்தில் தோலில் ரத்தம் சீராக தோல் பலப்பாகிறது.
3 ளிருந்து 4 மாதம் இருமல் மூச்சு இறைப்பு குறைகிறது.
நுரையீரல் திறன் 10 % குறைகிறது.
1 வருடம் நுரையீரல் புற்றுநோய் பாதிக்க்கூடிய வாய்ப்பு பாதியாக குறைகிறது.
15 வருடம் மாரடைப்பு வரும் வாய்ப்பு வேகமாக குறைகிறது.

உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளர் டாக்டர். மார்க்கரெட் ஜான் கூறுகிறார் "இந்த நுற்றாண்டின் சுமார் 100 கோடி பேர் பலியாவார்கள்" என்று. புகையினால் தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் வரிகள் முலம் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 8 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்தாலும் அதில் ஒரு சதவிதத்துக்கும் குறைவான பணமே புகையிலை கட்டுபாட்டுக்காக பயன்படுத்தபடுகிறது.

"புகை பிடிப்பதன் முலம் இந்தியாவில் 10 லட்சம் பேர் ஆண்டிற்கு உயிர் இழக்கின்றனர்" என்று முன்னால் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்


புகைபழக்கத்தை நிறுத்துவது எப்படி

இப்பழக்கம் உள்ளவர்கள் 3 ல் 2 பேர் அதை விட்டுவிட விரும்புகின்றனர். மனதிடம், தீர்மானம் ஆகியவை முக்கியம்
எப்பொழுது எல்லாம் புகையினால் நினைவு வருகிறதோ அப்பொழுது உட்கார்ந்து அல்லது படுத்த நிலையில் மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சியுங்கள். உங்கள் குழைந்தைகளை பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.
நன்றாக குடிநீர் அருந்துங்கள். ஆரோக்கியமான உணவினை உட்கொல்லுங்கள் .


100 கோடி பேர்களின் மரணம் நம் கைகளில் உள்ளது. இன்றே வீசிஎறிவோம்.


நட்புடன் உங்கள் Rk.குரு
......................சமுக நலன் காப்போம்............

இப்பதிவை முன்னெடுத்து செல்ல உதவுங்கள். உங்கள் ஓட்டுகளாக......

Monday, March 8, 2010

ஓஷோவை பற்றி சில துளி.......


ஓஷோ நகைச்சுவை உணர்வு புரட்சி சிந்தனையும் நம்மை விட மேம்பட்டதன்மையை கொண்டவர். அவர் இளமையில் நடந்த ஒரு சுவையான நிகழ்வு.

"ஓஷோ சிறு வயதில் இருக்கும் போது அவர் இருக்கும் ஊரில் ஒரு பிரபலமானசாமியார் ஒருவர் இருந்தார். வயதானவர் எல்லோருக்கும் ஆசி வழுங்குவதுதான்அவர் வேலை
அப்பொழுது ஓஷோ வீட்டில் உள்ளோர் அனைவரும் அவரிடம்சென்று ஆசி பெற செல்ல ஓஷோவியும் அழைத்து சென்றனர். ஓஷோவை கூ ப்பிட்டு அவரிடம் காலில் விழுந்து ஆசி வாங்க சொன்னார்கள். ஆனால்ஓஷோ மறுத்தார்.

"நான் ஏன் அவரிடம் காலில் விழுந்து வணங்கவேண்டும். என்று பாட்டியை
பார்த்து கேட்டார்". அதற்க்கு பாட்டி சொன்னார். "அவர் உன்னை விட வயதில்முத்தவர் பெரியவர் அவர் காலில் விழுந்து வணங்கினால் நல்லது" என்றார். ஆனால் ஓஷோ அதற்கு "நம் வீட்டின் எதிரே ஒரு யானை உள்ளதே அதுஇவரைவிட வயதானதே அப்ப ஏன் அது காலில் விழுந்து வணங்கமாட்டங்கரங்க" என்று கேட்டார் பாட்டி பதில் ஏதும் சொல்லமுடியவில்லை.

ஓஷோ
இளைமைலே புரட்சி சிந்தனை உள்ளவராக இருந்தார்.ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை.

இப்பதிவை முன்னெடுத்து செல்ல உதவுங்கள். உங்கள் ஓட்டுகளாக......வியாதிக்காரன் மனதின் தேவைதான் கடவுள்...?


"உலகில் முன்னுறு மதங்கள் இருக்கின்ற. ஆனால் முன்னுறு கடவுள்கள் இல்லை. எதற்கு இந்த முன்னூர் மதங்கள்? இந்த முன்னூர் மதங்களில் குறைந்தது முவாயிரம் பிரிவுகள் இருக்கின்றன. அவை ஒன்றுக்குகொன்று கடவுள் கொள்கையில் மாறுபட்டு திரிகின்றன.

எதார்த்தம் ஒன்றே என்பதால் கடவுள் ஒருவரே. பிற மதங்கள் மனித வடிவில் கடவுளை கற்பித்து வைத்து கொள்கின்றன. அதையே மையமாக கொள்கின்றன. அதனாலதான் நீக்ரோ ஒருவனுடைய கடவுள் நீக்ரோவைபோல் இருப்பார் தடித்த உதடுகள், கருண்ட முடி, சீனக்காரன் தன்னுடைய வடிவில் கடவுளை படைத்துக் கொல்வான். இந்தியனும் அவனுடைய கடவுளும் அவனை மாதிரியே இர்ருக்கும்.


மனித வடிவங்களில் கடவுளை பற்றி நினைக்கும் அந்த கணத்திலே ஒரு வடிவத்தை கற்பித்து கொள்கிறாய். அப்படி கடவுள் தந்துவிடும் வடிவம் ஒரு விளையாட்டு பொம்மை தவிர வேறொன்றும்மில்லை. அதை வணங்கலாம். அதனிடம் உன் பிராத்தனையை சமர்பிக்கலாம். அதற்கு முன்னால் விழுந்து வணங்கலாம். ஆனால் வெகுமுட்டாள்தனம். நீ செய்து வைத்திருக்கும் பொம்மைக்கு முன்னால் விழுந்து வணங்குகிறாய். உன்னுடைய படைப்பை நீயே வணங்குகிறாய். இதுதானே உன்னுடைய கோவில்கல், சர்சுகள், மசூதிகளும் மனிதர்கள் கட்டியது. மனிதனின் மனம் படைத்தது.

கடவுள் ஒரு கடைச்சரக்கல்ல. சிக்மன்ட் பிராய்டு சொன்னது என்ன என்றால் கடவுள் என்பவர் தந்தை அல்லது தாய் ஸ்சாணத்தில் இருக்கும் ஒருவரை தேடுவது ஆகும்.

மனிதனுக்கு தந்தை அல்லது தாய் ஸ்தானத்தில் ஒருவர் வேண்டும். யாராவது ஒருவரை சார்ந்திருக்க வேண்டும். கடுவுளை தேடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு பிறரை சார்ந்து இருக்கவேண்டும். என்ற தேவைக்கு சால்ஜாப்பு தேடுகிறார்கள். அருமையான சால்ஜாப்புகள். பிறர் தயவில் இருப்பது அடிமைத்தனம் எனபது தெரியாத அளவுக்கு இருக்கிறது.தேடுதல் கடவுளை தேடுவதாக இருக்க முடியாது என்கிறார் புத்தர். உண்மையாக தேடுதல் கடவுளைத் தேடுவதாக இருக்க முடியாது என்கிறார். அப்படி இருக்கவும் முடியாது. ஏன் என்றால் வியாதிக்காரன் மனதின் தேவைதான் கடவுள்"


- ஓஷோ


ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை.


இப்பதிவை முன்னெடுத்து செல்ல உதவுங்கள். உங்கள் ஓட்டுகளாக......

Sunday, March 7, 2010

சிந்தனை....


ஒத்த கருத்துடைய சிந்தனையாளர்கள் சில பேர்கள்தான் உள்ளனர். அவற்றில் பிறர் நலன், சமூக நலன் காப்பவர்களும் நேசிப்பவர்களும் அவற்றில் சில பேர்கள் மட்டும் உள்ளனர். மனிதர்களிடம் சிந்தனைக்கும் செயலுக்கும் வேறுபட்டுதானே இருக்கிறது. குறிபெடுத்து மேடையில் பேசுகிறவன் பேசுவதோடு முடித்து கொள்கிறான் செயல்புரியும் திறன் மங்கி போகிறதே இவற்றை அரசியல்வாதி கனகச்சிதமாய் செய்கிறான். இவற்றை பார்த்து சாமானியனும் செய்கிறான். ஏன் என்று கேட்டால்

\\\«தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி\\\» என்று அவன்
கூறியதையே இவன் கூறுகிறான். அடிப்படையலே அன்பு என்ற பேரில் அடிமையாக இருக்கவே நினைகின்றோம் இல்லை மாறுபட்ட நிலையில் ஆத்திரம் கொண்டு அடக்கி ஆளவே நினைகின்றோம். நம் மக்களின் மனம் தேவையை சார்தே இருக்கின்றது அதுவும் பெண்களின் மனம் அதிகமாக ஆண்களின் மற்றும் சுயபாதுகாப்பு சார்ந்தே இருக்கின்றன. இந்த மாதிரி சுயசார்பு எண்ணங்கள் வீழ்வது எப்பொழுது?……….