Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Thursday, January 8, 2015

55 வார்த்தைக் கதைகள்

     



                நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவுலகில் (Blog)  எழுதுகிறேன். பலவேறு பதிவுகள் எழுதியுள்ளேன். அப்பதிவுகளின் கருத்துகள் பரவலாக பல பேரின் பாராட்டையும், பல பேர் திட்டையும் பெற்றுவந்திருகின்றன.. அதில் ஏற்பட்ட மிகையான அனுபவம் என்னை தொய்வடையாமல் இன்னும் எழுதவே துண்டியது. அது என் எழுத்தாற்றளையும் வளர்த்தது.

                சில காலமாய் நான் பதிவுலகில் எழுதுவதை நிறுத்திருந்தேன். அதற்கு காரணம் முகநூலில் (facebook) எழுதிய சிறு பதிவுகளே போதும் என்றிருந்தேன்.  ஆனால் பல நீண்ட கருத்தாக்க மிக்க பதிவை முகநூலில் பதிவேற்றம் செய்தாலும் சேமிக்கும் நிலையில் முகநூல் இல்லை ஆனால் அது பதிவுலகில்  சாத்தியம். இது காலம் கடந்தும் தலைமுறை தாண்டியும் இருக்கும். அந்த அடிபடையில் கட்டுரை, கவிதை, சிறுகதை போன்ற இலக்கியம் சார்ந்த படைப்புகளை என் பதிவுலகிலே எழுதலாம் என்று  நினைகிறேன்.

                சில சிறுகதைகளை "சிறுகதை.காம்" (இணைப்பு) என்ற இணையத்தில் "லஷ்மிகாந்தன்" என்ற புனைபெயரில் வெளியிட்டுயிருகிறேன். ஆனால் இப்போது என் வலைப்பதிவிலே சில கதைகளை பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன். இக்கதைகள் வெறும் 55 வார்தைகளை மட்டுமே கொண்ட கதைகளாக எழுதியுள்ளேன். படியுங்கள் உங்கள் மேலான கருத்துகளையும் சொல்லுங்கள்...  நன்றி..!


                                    விதை விதைத்தால் அறுவடை நிச்சயம்.

           குழந்தைகளின் சுட்டித்தனம் அதிகமாகவே இருந்தது. அதுவும் வேலுவின் நான்காவது படிக்கும் பையனின் லூட்டி, அவனை மிகவும் எரிச்சலுட்டியது.

                சத்தம் அதிகமாகவே அவன், குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு போய், பிள்ளைகளை அடித்துவிட்டான்.

       “இதுப்போல நீ சும்மா எரிச்சல் படுத்திக்கொண்டிருந்திங்க, உன்னை ஹோஸ்டல்ல சேர்த்துடுவேன். வீட்டுக்கே வரமுடியாது என்று மிரட்டல் தொனியில் சொன்னான்.

                அந்தப் பையன், அவன் சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டுக் கேட்டுக்கொண்டிருந்தான்.


                பல வருடங்கள் கழிந்தது. முதியோர்களின் சத்தம் அங்கு அதிகமாக கேட்க, கனத்த மனதுடன் வேலு உட்கார்ந்துக்கொண்டிருந்தான்





                                                                     பேசினான்; பேசுவான்..
        
அவன் அந்த இயக்கத்தின் முக்கிய பிரிதிநிதி. அன்று உலக மகளிர் தினம், மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசினான்,

         அன்றோ பாரதியும், பெரியாரும் சொன்னார்கள். அதையே இன்று நான் சொல்கிறேன். பெண்களுக்கு எதிராக பாலியல் பலத்காரம் அதிகரித்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்று அவனின் பேச்சில் அனல் பறந்தது.
         அவனின் பேச்சு அன்று மாலை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்தது. அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வேலைக்காரி குனிந்து வீட்டைப் பெறுக்கிக்கொண்டிருந்தாள்.

      அவன் டிவியை பார்க்கவில்லை.        



                                                                        பொய்க் காதல்

        “நான் இத்தனை வருடம் காதலிச்சும், நீ என் காதலை புரிந்துக்கொள்ளல..“

        “அப்படி இல்ல சிவா, என் நிலையை நான் உனக்கு எப்படி புரியவைப்பேன்
               
                புரிந்தது எல்லாம் போதும் பிரியா, நாளைக்கே நீ என்னுடன் வரனும். நாம் எங்காவது போய், நம் புது வாழ்கையை ஆரம்பிப்போம்
                 “...ம்ம் 

சரி நாளைக்கு நைட்டு 11 மணிக்கு கார் எடுத்துட்டு வரேன், நீ கிளம்பி இரு “..ம்ம், சரி  .. சொல்லமறந்துட்டேன், எந்தக் காரணம் கொண்டும் உன் புருசனுக்கு சந்தேகம் வந்துடக்கூடாது  


                                                                 அதேக் கதை மாறியது

            நிலவில் தேவையான ஆக்ஸிஜன், நீர் எல்லாம் உற்பத்திப் பண்ணியாகிவிட்டது. ஒரு தலைமுறை மனிதர்கள் அங்கு வசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

                நிலவில் பஞ்சாங்க தேதி எல்லாம் குறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அமாவாசை, பௌர்ணமி மட்டும் குறிக்க முடியவில்லை.

                நிலவில் குழந்தைகள் சோறு உண்ண மறுக்கிறது.

                என் ராசா, என் கண்ணு.. அதோ பாரு பூமி, அங்க பாரு, நம்ம பாட்டி வடை சுடுறாங்க..” என்று சொல்லி, அம்மாக்கள் பூமிச்சோறு கூட்டிக்கொண்டிருந்தார்கள்.

        அப்போது பூமி செழிமை இழந்து வயதானவர்களின் முதியோர் இல்லமாக மாறிக்கொண்டிருந்தது



                                                                            கவனக் குறைவு

                  பாலைக் காயிச்சிக் கொண்டிருந்தாள். பால் பொங்கி வழிந்தது. அந்நேரம் பிள்ளைகளின் சண்டை,

            யேய், சும்மா இருங்க.. என்றுச்சொல்லி கேஸ் அடுப்பை அணைத்தாள்.

                நேரம் ஆகிவிட்டது. காலை 5 மணிக்கேல்லாம் எழுந்து சமையல் பார்த்தாகனும். இப்போதே மணி 10 ஆகிவிட்டது என்று நினைத்துக்கொண்டே படுக்கைக்கு சென்றாள்.

         வீட்டின் ஜன்னல், கதவு எல்லாம் சாத்தப்பட்டிருந்தது. ரெகுலேட்டர் முழுவதும் ஆஃப் செய்யாமல் சிறிது மேல் நோக்கியே இருந்தது.

                கேஸ் காற்றில் மெல்லக் கலந்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவே அவர்களுக்கு மிக நிசப்தமாக இருந்தது.




உங்கள் நட்புடன்: