Pages

Saturday, October 23, 2010

வட்டத்தின் நடுவே அம்பு...


ஒரு மனநல மருத்துவரிடம் ஒரு பெண்மணி தன் மகன் சிறு வயதில் இருந்தே இன்றுவரை படுக்கையிலே சீறுநீர் கழிக்கிறான் நீங்கள்தான் அவனின் பிரச்சனையாய் தீர்க்கவேண்டும் என்று சொல்கிறார். அவர் அப்பிரச்சனையை தீர்த்தாரா..என்று தெரியவில்லை ஆனால் அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிவிட்டார்.     

இதை போன்றே ஒரு பிரச்சனையை ஓஷோ அவர்களிடம், ஒரு பெண்மணி " ஐயா, என் மகன் எப்போதும் விரல் சூப்புகிறான். இப்படி வளர்ந்து கல்யாணம் பண்ற நிலையில் இருக்கிறான் இன்னும் விரல் சுப்பிகிட்டே இருக்கான் .எனக்கு ரொம்ப கவலையா இருக்கு" என சொல்கிறார். அதற்கு ஓஷோ, "நீ ஏம்மா கவலை படுகிறாய் நீ சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவை அப்புறம் ஏன் விரலை சப்ப போகிறான், இப்பொழுது இருக்கிற பழக்கம் அப்பொழுது மறைந்துவிடும் கவலைபடாதே" என்றார்.

வட்டத்தின் நடுவே அம்பை குறிபார்த்து ஏய்வதைவிட, அம்பை ஏய்துவிட்டு அதை சுற்றி வட்டம் போட்டுவிட வேண்டியதுதான்...வேலை எளிதாக முடிந்துவிடும் அம்பும் வட்டத்தின் நடுவிலே இருக்கும். நம் இலக்கும் சரியாக இருக்கும்.

சில பிரச்சனைகள் எளிய முறையில் தீர்க்கபடுவதை பெரும் பிரச்சனையாக மாற்றுவதுதான் என்றும் நம் கலையாக இருக்கிறது..எல்லா நம்மிடமே இருக்கிறது..ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை..


ஓஷோவின் விளக்கத்தையும், என் எண்ணத்தின் எழுத்தினையும் வரவேற்றதற்க்கும்  நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:  


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Thursday, October 21, 2010

'கெட்ட' வார்தையிலே திட்டிபுடுவேன்....

 
ஒரு வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லும்போது மனம் அதை ஏற்காமல் எரிச்சல் அடைகிறது. நாளடைவில் அது கெட்டவார்த்தையாக மாறுகிறது...நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் சொன்னது. "ஒருத்தனை நீங்கள் மாடுபோல  இருக்கியே என்று சொன்னால் கோவபடுவான் அதுவே அவனை நீ ஒரு பசு மாதிரிப்பா...என்றால் ரொம்ப சந்தோசபடுவான் ஆனால் பசுவும் ஒரு மாடுதான் என்று அவன் உணரமாட்டான்..."

இதில் மாடு என்ற வார்த்தை பலபேருக்கு  கெட்டவார்த்தையாகவே  ஆகிவிட்டது..அதுபோலதான் நாய், கழுதை, பண்ணி இதெல்லாம் மனிதனை பார்த்து மிரளதுங்க அதனால் இவைகள் எல்லாம் ஏலனமாக மற்றவர்களை திட்ட பயன்படுத்துகிறான்...அதே அவங்களை சிங்கம், புலி, சிறுத்தை என்று சொன்னால் ஒரே சிலிர்ப்புதான்.... மனம் சார்ந்த மனிதன் என்றுமே கேவலமானவன்...

உடம்பிலே அதிகமாக கை படாத இடமெல்லாம் கூச்சம் என்றதில் அவ்வுருப்பு எல்லாம்  கெட்ட வார்த்தைகளாய் மாறிவிட்டது. ஆண் குழந்தைகைங்க அவன் பெல்லாவில், குஞ்சி (இது ஆண் உறுப்பு - இது இலக்கிய வார்த்தை இல்லை சென்னை லோக்கல் வார்த்தை) அக்குழந்தை கைவைத்தால் அதை பார்பவர்கள் அக்குழந்தையை  "ஏன் அதுல கைய வைக்கிற..." என சொல்லி அடிப்பார்கள்....இதில் அவங்க எண்ணத்தின் பார்வை  சரியானது இல்லை. குழந்தை அவன் உறுப்பை தொட்டு பார்த்து கொள்கிறான். அவ்வுறுப்பின் உணர்வினை அவன் உணர்கிறான். இதில் அவனின் புலன் உணர்வு முழுமை அடைய விரும்புகிறது. இதை அறியாமல் அவன் கையை தட்டிவிடுகிறார்கள் அவனின் புலன் உணர்வின் அறிவு முழுமை அடையாமலே குறுகி போய்விடுகிறது...நாளடைவில் அவன் வாழ்நாள் கவனம் எல்லாம் அதுமேலையே இருக்கும்...நாளடைவில் அவன் வளர்ந்து காமபசி அதிகமாகி கற்பழிப்புக்கு தயாராகிவிடுவான். இதில்  அவனின் கற்பழிப்புக்கு சமுகம் சார்ந்த ஒழுங்கினமும் காரணமாக இருக்கிறது.

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:  (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Wednesday, October 20, 2010

நதி மூலம், ரிஷி மூலம்....


நதி மூலம் ரிஷி மூலம் என்றும் அறிய முடியாது என்றார்கள் மூடர்கள் ஆனால் இப்ப இருக்கிற அறிவியல் துறையில் எல்லா மூலத்தையும் அறியலாம்...ரிஷிகள் இப்போது இருந்தால் அவர்களை உட்காரவைத்தும் மூலத்தை அறியலாம். என்ன பொல்லாத மூலம்...

ஒருவனை பதவி அதிகாரத்தில் அமரத்தபடும் போது திறமையுடன் அவனின் பின்புலத்தை அறியவேண்டும்...ஏனென்றால் அவனின் வளர்ந்த சூழ்நிலைகள் சாதக, பாதக கருத்துகள் அவன் இனத்தை சார்ந்தே வரும். உதாரணம் பாப்பான் அதிகார மையத்தில் இருக்கும் போது அவனின் அதிகாரம் எதை சார்ந்து இருக்கும் என்று அவனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். இதில் அவனை அதிகாரத்தில் அமர்த்தும் போது அவனின் பின்புலத்தை நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேல்தட்டு நிலையிலே ஒருவன்  படித்து மேற்பதவி அடையும்போது அவன் எப்படி கீழ்மட்ட மக்களின் போராட்ட உணர்வினை எப்படி உணர்வான். நிச்சயம் அவனால் உணரமுடியாது. பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்காது... அடிப்படை அறிவு இல்லாதவனே இன்று அமைச்சராய் இருக்கிறான். இவன் எப்படி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அதனால் நதிமூலம், ரிஷிமுலம் அறிவதுபோல் ஒவ்வொருவரின் பின்புலத்தையும் அறிவேண்டும்...அவ்வாறு அறிந்து செயல்பட்டாலே பல பிரச்சனைகள் தீரும் என்றே நினைக்கிறேன்.
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்: (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Sunday, October 10, 2010

சிரிக்க தெரியாத மனிதர்கள்.."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுகிறார்கலாம்."


ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாமா காண முடியுமா....இதில் நாம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்லி இறைவனை காணுவதர்காகவே ஏழையை ஏழையாய் வைத்திருப்போமா...

இதில் குழந்தை சிரிப்பும் இறைவனின் சிரிப்பாம் சிரிக்க தெரியாத மனிதர்கள் சொல்கிறார்கள். நாம் நாய் நன்றியுள்ளது என்று சொல்கிறோம்.  அதற்கும் சில நேரங்களில் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி போட்டால்தான் இன்னும் நம்மிடம் நன்றி உணர்வுடன் வாலட்டிகொண்டு இருக்கும்...இல்லையென்றால் அதற்கு ஒரு நிலைக்கு மேல் இந்த மனிதர்களுக்கு  நன்றியே  இல்லை இவர்கள்  நம்மிடம் மட்டும்தான்  நன்றியை எதிர்பார்க்கிறார்கள் என்று அதற்கு புரிந்துவிடும. இதுபோல் அறியாத குழந்தையின் சிரிப்பு, சிரிப்புதான்...அக்குழந்தை ஏதோ அறியும் குழந்தையானால் அதற்கு விளையாட ஒரு பொருள் வேண்டும் சாப்பிட உணவு வேண்டும் அதை யார் தருகிறார்களோ அவர்கள் மேல் அதற்கு சிரிப்புடன் கலந்த அன்பு வரும்...அது இறைவனின் சிரிப்பாய் எப்படி மாறும்...அக்குழந்தைக்கு கேட்கும் பொருளையும், நல்ல உணவையும் வாங்கி கொடுக்க முடியாத நிலைதான் இருக்கிறான்  ஏழைகள் பின்  எப்படி குழந்தையிடம் பொய்யாக சிரிக்க சொல்லி அவர்களும் சிரிப்பார்கள்...இதில் என்ன ஒரு வேடிக்கை என்னவென்றால்  இல்லாத இறைவனை எப்படி முன்னிலைபடுத்துவது ...ஆனால் பல பேர் போலியான சுயதேடுதல் என்று சொல்லி முன்னிலைபடுத்தி கொண்டுசெல்கின்றனர். அவை அவர்களுக்கு இறைவன், கடவுள், சாமி, தெய்வம் என்று பல பெயர் கொடுத்து காசு சம்பாதிக்கும் ஒரு  வியாபாரமாக  வைத்திருக்கிறார்கள். இந்த்  நிலைகெட்ட மனிதர்கள்...     

இந்த ஏழை மக்கள் கடவுளிடமும், இவனுடைய அடிமட்ட  ஏழையிடம்  மட்டுமே பேரம் பிரமாதமாக பேசுவான். ஆனால் நம்மை  ஆட்சி அதிகாரத்தில், பண பலம் உள்ளவனிடம் இவன் பேரம் பலிக்காமலே போய்விடும் என்றுமே  ஏமாறுபவனாகவே இருப்பான் ஆனால் இவன்  "நாமும் உஷாராதான் இருக்கிறோம்" என்ற நினைப்பு மட்டும் எப்போதும் வந்துவிட்டு போகும்...அரசியல்'வியாதி'காரன்தான்  புரியாததை புரிந்ததாக காட்டிகொள்வான். .என்ன புரிந்தோம் ஏது புரிந்தோம் என்று கூட அறியாமல் அ..ஆ..ஒ.. ஓ என்று சொல்வதுதான் நமக்கு  ஆச்சர்யமாக உள்ளது. புரியவில்லை என்றால் எனக்கு புரியவில்லை என்று சொல்லவது கூட இல்லை...அரசியல்'வியாதி'காரனைப்போல்  எல்லாம் புரிந்ததுபோல் நடிபவர்கள்தான் பல பேர் இருக்கிறார்கள். இது போல் ஏதுவும் அறியாத பெரும் கூட்டம்தான்... முட்டாள் அரசியல்'வியாதி'காரனை பெரும்பான்மையான ஓட்டுவித்தியாசத்தில் தேர்தெடுக்கிறது...நம்மிடம் என்று தீருமோ இந்த முட்டாள்களின் எண்ணிக்கை...பலரிடம் இருக்கும் பொய்,  அவர்களின் உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு உண்மையுடனே வருகிறது...ஆனால் நாம்தான் பொய்யை உண்மையாக நம்பிவிடுகிறோம்... அதனால் உண்மை எதுவென அறியாமலே போய்விடுகிறது.          

இது போன்ற நிலைகளைத்தான் மார்க்ஸ் சிந்தனைகள் என்றும் நிலைபடுத்தபட்டது. உண்மையை அறியவைத்தது அவரின் சிந்தனைகள் எல்லாம் அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வாதரத்தை மையபடுத்தியே இருந்திருக்கிறது....பசி எடுத்தவனுக்குதான் உணவின் அருமை தெரியும்..அதை எப்பொழுதும் அவன் சிந்தாமல் சிதறாமல்  சாப்பிடுவான். வறுமையில் வாடி வறுமையை பார்த்த மார்க்ஸ் வறுமைக்கான முல காரணங்களை எண்ணினான், அதை செயல் படுத்தினான் எனபது ஆச்சர்யபடுவதற்கில்லை....

எதுவாயினும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்தியாகவேண்டும் இதுதான் மார்க்சும் சொல்வது...தேவைகள் பூர்தியாவதில் இருந்தே  விஞ்சான மறுமலர்ச்சி. கலை, இலக்கியம். மட்டை. மசிரு எல்லாம் கிளர்ந்தெழும் இவையெல்லாம் மக்களின் வாழும் அடிப்படை தேவை பொறுத்து அமையவேண்டும் அதைதான் மார்க்ஸ் எண்ணியது, அவரை பின்பற்றியவர்களும் நினைப்பது....இதில் நானும் அடக்கம்..!

விவேகனந்தர் சொன்னதுதான் நினைவில் வருகிறது...."பசியோடு வருபவர்களுக்கு  முதலில் சாப்பாடு  போடு.. உபசேமெல்லாம் அப்புறம் வைத்துகொள்ளலாம்"

                    
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!

என்றும் நட்புடன்:  (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Thursday, October 7, 2010

நம் ஆணவத்தின் மதிப்பீடு...


பிறர் நம்மை பற்றிய மதிப்பீடு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கிறது. அவை முட்டாளாய், உதவகரையாய் புத்திசாலியாய், எதிரியாய், நண்பனாய், மோசகாரராய், பாசகாரராய், வேசகாரராய், ஏமாளியாய், கோமாளியாய், சிந்தனைவாதியாய் என்று பல மாதிரி தெரிவோம். ஆனால் அவர்களிடம் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்தே நம்மை அவர்கள் மதிபீடுகிறார்கள்....அவர்கள் சொல்வதர்கெல்லாம் 'ஆமாம்' என  சொல்ல ஆரம்பித்துவிட்டால் நாம் அவர்கள் கண்ணுக்கு  நல்லவராய் காட்சி அளிப்போம்....அதுவே அவங்க கருத்துக்கு  எதிர் கருத்து சொல்ல ஆரம்பித்தால் அவர்கள் முகம் கொஞ்சம் கோணல் ஆகும்..."இவன நல்லவன் என்று தெரியாதனமா நினட்சிட்டமோ..." என்று நினைக்க ஆரம்பிப்பாங்க...அதுவே இன்னும் கொஞ்சம் கோவம் கலந்து சொல்லும்போது நம்மை எதிரியாகவே நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க...அப்புறம் உங்க பெயர் நினைத்தாலே அவங்களுக்கு நீங்க எதிரிதான்..."பிறரிடம் எதிர்ப்பு இல்லாதவரை எல்லோருக்கும் நாம் நண்பர்கள்தான்"...இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை....

எதிர்ப்பை உண்டக்குவதேல்லாம் நம் மனம் செய்யும்  வேலைதான். அதற்கு  எப்போதும் சாய்ந்து கொள்ள ஒரு ஆதரவு வேண்டும். மனம் சொல்வதை கேட்டு 'ஆமாம் சாமி'நீ சொல்வது சரிதான்' என்று சொல்ல பல மனங்கள் வேண்டும். இவைகள் இல்லையென்றால் ஆணவம் என்ற சுவற்றின் மீது ஏறி மனம் இல்லாத ஆட்டம் போடும்...இதில் நாம் செய்யவேண்டியது ஆணவம் எனும்  சுவரை உடைத்து தள்ளவேண்டும் அப்போதே மனத்தின் ஆட்டம் அடங்கும் பின்பு என்ன.? மனம் நம்மை விட்டு ஓட்டம்தான்...

நம் மனம் இல்லாத நிலையில் நம்மிடம் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படும் அது புத்தருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு அவ்விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரை பற்றிய மதிப்பீடு நம்மிடமிருந்து தானாய் மறையும்...பின்பு அன்புள்ள  நெஞ்சத்திலே எதையும் அன்புடன் அரவனைக்க கைகள் காத்திருக்கும்...அங்கு எதிர்ப்பு இல்லை, வெறுப்பு இல்லை வேதனை இல்லை. பார்க்கும் பொருளெல்லாம் நாமாகி போகும் போது பின்பு நாம் எங்கு போவது...எல்லாமே நம்முள் அடக்கம்...!


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்: (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Monday, October 4, 2010

ஜாதியை பார்காதிங்க ஏழையை பாருங்கள்...


ஜாதியை ஒழிப்போம் நீதியை காப்போம்:

எனக்கு ஒரு சந்தேகம் உயர் ஜாதிக்காரன் என்று சொல்றவனுங்ககேல்லாம் கீழ் ஜாதி பெண்களை கல்யாணம் செய்யமாட்டான்கலாம் ஆனால் கீழ் ஜாதி பெண்களின் கூ..? மட்டும் ஆசைபடுவான்கலாம்...இதில் ஆசைபட்டும் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.....நாங்க உயர்ந்த ஜாதி என்று சொல்றவனுங்ககேல்லாம் தோல்மேல போடற துண்டுக்கும் மட்டும்தான் ஜாதிபார்பானுங்க போல அவிழ்க்கும் வேட்டிக்கு கிடையாது.....ஒருவேளை  உயர்ஜாதி ஆண்களின் பூ..? ,  கீழ் ஜாதி பெண்களின் கூ..?யை  அறியாதுபோல.....

ஜாதி வெறி பிடித்தவனுக்கு தன் உற்ற நண்பனும் எதிரியாவான். அவன் நல்லவனாக இருந்தாலும் அவன் ஜாதி படு மோசமானது....

ஜாதி வெறிபிடித்தவன் பல தலைமுறையாக  ஜாதி என்கிற மலத்தை உடல் முழுவது பூசிகொண்டு வந்தவன்....அவனால் ஜாதி என்ற மலநாற்றத்தை சுவாசிக்காமல் வாழமுடியாது....ஜாதி அப்பேர்பட்டது...!  இந்த சாக்கடை ஜாதிகளுக்கு மனிதாபிமானம் எனபது  துளிகூட கிடையாது...

ஜாதி, ஜாதி என்று சொல்றவனுங்கள என்ன பண்ணலாம்...சொல்லுங்க...

இழுத்து வச்சு......நறுக், நறுக்....    


ஏழைகளின் வறுமை:

ஏழை மக்களுக்கு உயர்தரமான பொருட்களை பார்க்கத்தான் முடிகிறது...அது ஆடையாகட்டும், உணவு பொருளாகட்டும், வாழும் வசதி வாய்ப்பாகட்டும் எல்லாம் தள்ளி நின்று பார்க்கத்தான் முடிகிறது... இதில் தொடுவதற்கு கூட பல நேரம் அனுமதிப்பதில்லை....

ஏழைகளுக்கு வாங்கும் சக்தி இல்லை....மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே உயர்தரம் கிடைக்கிறது...எச்சிலையாய் வீசியெறியும் பொருட்களையே விலைகொடுத்து வாங்குகிறான் ஏழை...!

நான் ஒரு பூங்காவில் கண்ட காட்சி...."மெலிந்த தேகத்துடன் பசியால் இறுகிய  வயிருடன் ஒருவன் சுருண்டு படுத்திருக்க.... உடல்பெருத்த ஒருவன்  மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிகொண்டு அவனை கடந்து செல்கிறான்...."

இதில் ஒருவனுக்கு உணவு இல்லை, மற்றொருவன் அதிக உணவு உண்டு கொழுத்து கொழுப்பை கரைக்க நடைபயற்சி செல்கிறான்....

ஓ...இதுவல்லவோ இந்திய ஜனநாயகம்...பார்த்திர்களா  இந்தியாவில் சரிசமமான வளர்ச்சி....

வறுமையில் இருக்கும் ஏழைக்கு பணம்தான் சந்தோஷம் கொடுகிறது...."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" என்பார்கள். அதெல்லாம் பொய்..வறுமையான் ஏழைக்கு சிரிப்பை பார்க்கவேண்டும் என்றால் வறுமையை போக்கும் பணம்தான் தேவை.  அதுதான் அவன் முகத்தில் சிரிப்பை கொண்டுவரமுடியும்....

இதில் சிரிப்பாய் சிரிக்கும் இறைவன் என்றும் நம்மிடம் வரமாட்டா(ன்)(ள்)(ர்)....(இந்த இறைவனை எந்த பாலினத்தில் சேர்த்து -கொல்வதே...என்றே தெரியவில்லை....)

இந்தியாவில் சுத-தந்திரம் கிடைக்கும் முன்னே ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரி வெள்ளகாரன்தான் இருந்தான் ஆனால் சுத-தந்திரம் அடைந்தவுடன் மக்களுக்கு எதிரி அதிகமாக ஆகிவிட்டார்கள்...மக்களுக்கு யாரை எதிர்த்து சுதந்திரம் அடைவது என்றே தெரியவில்லை....  

 
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்: 


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, October 2, 2010

காந்தி யாருக்காக பிறந்தார்...


காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.

‎"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு  நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால்  காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.

காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம்  இல்லாமல்  இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார்.  அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில்  உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம்   ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...

இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை  பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது.  பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல்  சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...

காந்தியின்  மகன் தேவதாஸ் குடிகாரன் என்பதால் இவனுக்கு கல்யாணம் செய்தால் திருந்துவான் என்று கல்யாணம் செய்ய முடிவிடுத்திருகிறார்கள் ஆனால் குடிகார தேவதாசுக்கு பெண் கொடுக்கக யாரும் முன்வரவில்லை அப்போது ரொம்ப துணிச்சலாக தன் பெண் வாழ்வை விட என் பார்பான்  இனமும் நமக்கு ஒரு தலைமையும் வேண்டும் என்பதற்காக மூதறிஞசர்   என்று சொல்ற ராஜாஜி தன் மகளை தேவதாசுக்கு மனம் முடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். கல்யாணமும் சிறப்பாக,சிரிப்பாக நடந்து சிலவருடம் கழித்து தேவதாஸ் மரணம் அடைகிறான். ராஜாஜிக்கு இதன் மூலம் பெற்ற மகளின் வாழ்க்கை போனாலும் காந்திக்கு சம்பந்தி என்ற உறவு கிடைத்தது. அதன் மூலம் ராஜாஜிக்கு தன் இன மக்களுக்கு "மகளை கொடுத்து இனத்தை காத்த பெருமாகான்" என்ற பட்ட பெயரும் ராஜாஜி கிடைத்தது...

இதனாலையே பாப்பானின் ஆதிக்க சக்திக்கு உட்பட்டு பல ஈ(ஜி)களின் சொல்படி கேட்டும் வாழ்ந்த காந்தி "தன் கொள்கையில் உறுதியானவர், இவராலே நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்க முடியும், கொடுக்கப்பட்டது" என்ற ஒரு திட்டமிட்ட மாயயை  பாப்பான்னிய ஆதிக்க சக்தியால் வளர்க்கப்பட்டது, வளர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது ....

காந்தி, அவர் இனம், மதம் சார்ந்த அடிப்படையில் இல்லாமல் இருந்திருந்தால் அவர் உண்மையிலே எல்லா மதத்து மக்களுக்கும் அவர் ஒரு புனித ஆத்மாவா இருந்திருப்பார். ஆனால் ஹே ராம்...என்ற தந்திரத்தை அடிகடி உச்சரித்து நான் இன்னார் மதத்தில் இருந்து வந்தவன் என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டார்...அதனால் அவர் இந்துக்களுக்கு மட்டும் மகாத்தமா....


காந்தின் நிகழ்வின் ஊடே என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:  (இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)