Pages

Monday, June 28, 2010

ஓஷோவின் பார்வையில் தந்த்ரா....
தந்த்ரா என்றால் என்ன ?

நீ எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள் என தந்த்ரா கூறுகிறது.
இதுதான் அடிப்படை குறிப்பு. முழுமையான ஏற்றுக்கொள்ளுதல்.
முழுமையான ஏற்றுக்கொள்ளுதலின் மூலம் மட்டுமே நீ
வளர முடியும். பிறகு உன்னிடம் இருக்கும் எல்லா சக்திகளையும்
பயன்படுத்து. அவற்றை எவ்வாறு பயள்படுத்த முடியும் 
அவைகளை ஏற்றுக்கொள். பிறகு அவை என்ன என்று
கண்டுபிடி. காமம் என்றால் என்ன அப்படி என்றால் என்ன
நமக்கு அதனுடன் பழக்கமில்லை. நமக்கு காமத்தைப் பற்றி
நிறைய விஷயங்கள் தெரியும். அவை மற்றவர்களால்
கற்றுக் கொடுக்கப் பட்டவை. நாம் காம செய்கையை செய்திருக்கலாம்.
ஆனால் ஓரு குற்றவுணர்வுள்ள மனதோடு, அதனை அமுக்கி வைக்கும்
உணர்வோடு, பரபரப்பாக அவசரஅவசரமாக செய்திருப்போம். இந்த சுமையை
குறைக்க ஏதோ ஓன்று செய்யப்பட வேண்டும். காம செய்கை
அன்போடு செய்யப்படும் செயல் அல்ல. நீ அதில் 
மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் அதை உன்னால்
விட முடியாது. நீ மேலும் மேலும் அதை விட முயற்சி
செய்தால் அந்த அளவிற்க்கு ஈர்ப்பு உள்ளதாக அது மாறுகிறது.
நீ அதை ஓதுக்க முயற்சிக்கும் அளவிற்க்கு அது உனக்கு
அழைப்பு விடுப்பதாக நீ உணருகிறாய். 
நீ அதனை ஓதுக்க முடியாது. அதனை ஓதுக்க, அழிக்க முயலும்
இந்த நோக்கம் அதைப் பற்றி விழிப்பு கொள்ளும் விழிப்புணர்வை,
மனதை அழிக்கிறது. எது இதனை புரிந்து கொள்ளுமோ அந்த
நுண்ணுணர்வையே அழிக்கிறது. எனவே காமம் நுண்ணுணர்வு
இன்றியே நடக்கிறது. பிறகு நீ அதனை புரிந்துகொள்ள முடியாது.
ஓரு ஆழ்ந்த நுண்ணுணர்வு மட்டுமே எதையும் புரிந்து கொள்ள
இயலும். ஓரு ஆழ்ந்த உணர்வு – ஆழ்ந்து அதனுள் செல்லுதல்
மூலம் மட்டுமே எதனையும் புரிந்து கொள்ள முடியும்.
நீ ஓரு கவிஞன் மலர்களிடையே செல்வதை போல சென்றால்
மட்டுமே அப்படி சென்றால் மட்டுமே நீ காமத்தை புரிந்துகொள்ளமுடியும்.
நீ மலர்களை குறித்து குற்ற உணர்வு கொண்டால், நீ ஓரு சோலையை
கடந்து செல்லலாம், ஆனால் நீ கண்களை மூடிக்கொண்டு சோலையை
கடப்பாய். நீ அப்போது ஓரு அவசரத்தில், பைத்தியக்காரத்தனமான பரபரப்பில்
இருப்பாய். எப்படியாவது சோலையை விட்டு வெளியேற துடிப்பாய். பிறகு நீ எப்படி விழிப்புணர்வோடு இருக்கமுடியும் 
எனவே நீ எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள் என தந்த்ரா கூறுகிறது.
நீ பல பரிமாணங்கள் உள்ள, பல சக்திகளின் ஓரு சிறந்த புதிர். ஏற்றுக்கொள்.
ஆழ்ந்த நுண்ணுணர்வுடன், விழிப்புணர்வுடன், அன்புடன், புரிந்து கொள்ளுதலோடு எல்லா சக்திகளோடும் செல்.
அதனுடன் செல்    பிறகு எல்லா ஆசைகளும் அதனை கடப்பதற்க்கு ஓரு வாகனமாக மாறி விடுகிறது.
பிறகு எல்லா சக்திகளும் ஓரு உதவியாக மாறி விடுகின்றன.
பிறகு இந்த உலகமே நிர்வாணா.
இந்த உடலே ஓரு கோவில்.
ஓரு புனித கோவில்.
ஓரு புனித இடம்..
SOURCE: VIGYAN BHAIRAV TANTRA VOL.1 CHAPTER-2
நன்றி: ஓஷோ இணைய மாத இதழ்


என்றும் நட்புடன்:

Thursday, June 24, 2010

கொஞ்ச நேரம் சிரிக்க....----------------------------------------------------------------
அம்மா : பவித்ரா.... திருட்டு டிவிடி வாங்கிட்டு வர்றியாம்மா.......?
பவித்ரா : OKம்மா....
அம்மா : அய்யோ.... என்ன படம்னு சொல்லலையே, ஒருவேளை விஜய் படம் வாங்கிட்டு வந்துட்டா.... வாந்தி வருமே.... தலை சுத்துமே.... சூசைட் பன்னிக்கலாம்-னு தோனுமே.... என் பொன்னுக்கு பைத்தியமே பிடிச்சுடுமே.... அய்யோ.... பவித்ரா... பவித்ரா...
!!!!பவித்ரா : அம்மா.... டிவிடி வாங்கிட்டேன்.... (கையில் “கலைஞரின் பெண்சிங்கம் ” பட டிவிடி) பெண்சிங்கம் இருக்க.... : பயம் ஏன்...
அம்மா : அய்யோ.. பவித்ரா அதுவும் பயம் தான் நம்மள  கொல்லாம விடாது..!

-------------------------------------------------------------------------
நாமே கிணத்துக்குள்ள விழுந்த அது love Marriage...
நாலுபேரு சேர்ந்து தள்ளிவிட்டா அது aranch Marriage
இதில் நீங்க எந்த marriage ..

---------------------------------------------------------------------
ஒரு செக்ஸ் டாக்டரிடம் ஒருத்தர் கேட்கிறார். சார் நான் காண்டம் பயன்படுத்தும் போது அது கிழிந்துவிடுகிறது என்ன பண்றது. அதற்கு டாக்டர் சொல்கிறார். அது என்ன சட்டைய தைச்சு போடுவதக்கு ஒன்னு கிழிஞ்சுச்சுன இன்னொன்னு போட்டுக்க வேண்டியதுதான்....

------------------------------------------------------------------------
டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு
பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

--------------------------------------------------------------------------
சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம்
கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.

-----------------------------------------------------------
நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக்
கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து
கேட்கிறார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"இல்லை.. நான் பாண்டாசிங்."
-------------------------------------------------------
பேஷண்ட்: பரட்டைத் தலையோட ஒரு ஆளு வந்து என் உடல் நிலையை
விசாரிச்சுட்டுப் போறானே...அவன் யாரு டாக்டர்?

டாக்டர்: இந்த ஊர் வெட்டியான்தான்!.... நாளைக்குத்தான் உமக்கு ஆபரேஷன்னு
சொல்லியிருந்தேன்....எவ்வளவு அவசரம் பாருங்க அவனுக்கு!
-----------------------------------------------------
டாக்டர்: அந்த பேஷண்ட், தன்னைக் காப்பாத்தச் சொல்லி என் கையைப் பிடிச்சு
கெஞ்சினாரே...கவனிச்சியா?

நர்ஸ்: அப்படியா?......"வேற டாக்டரைப் பாத்துக்கறேன்..
என்னை விட்டுடுங்கோ"ன்னு அவர் கெஞ்சினதுதான் என் காதுல விழுந்துச்சு
டாக்டர்!
-------------------------------------------------------
பேஷண்ட்: எனக்கு இந்த ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சா, ஐயனாருக்கு ஒரு கடா
வெட்டறதா வேண்டிக்கிட்டுருக்கேன் டாக்டர்!

டாக்டர்: 'ரெண்டு கடா'வா வெட்டிடுய்யா!........எனக்கும் இதுதான் முதல்
ஆபரேஷன்!
-----------------------------------------------------------------
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

-----------------------------------------------------------------------
 ''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும்
எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை..... பத்திரமா இருக்கும்''

-----------------------------------------------------------------------
சிதம்பரம் பஸ்ஸ்டாண்டில் கண்டக்டர்..சிதம்பரம் எல்லாம் இறங்குங்க....ஓர் பயணி...நான் ராமசாமி...எங்கு இறங்கனும்....?

----------------------------------------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி.
பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும்,

டார்ச்
...அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

----------------------------------------------------------------------------------
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம்
பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.

-------------------------------------------------------------------------------------------
 மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி
வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்

--------------------------------------------------------------------------------
காதல் ஒரு மழை மாதிரி,

நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு

... ஜலதோஷம்

---------------------------------------------------------------------
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!

வருத்த படாதே!
... ஃபீல் பண்ணாதே!

உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!

-------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
... நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

-------------------------------------------------------------------------
காதல் வந்தால் சொல்லி அனுப்பு...
கல்யாணமே வந்திருச்சு. பிடி
...இன்விடேஷ்ன்.
உயிரோட இருந்தால் மொய் அனுப்பு...!

----------------------------------------------------------------------------
கலா : எ‌லி‌க்கு
பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்?
மாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.
கலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம்.

---------------------------------------------------------------------------
என்னதான் நாய் நன்றி உள்ளதானாலும் அதாலே தேங்சுன்னு சொல்லமுடியாது...

----------------------------------------------------------------------------
நாம அடிச்சா அது மொட்டை ,
அதுவா விழுந்தா அது சொட்டை !

-----------------------------------------------------------------------------
...'Dye' ! னா மண்டையில போடுறது ,

'Die' னா மண்டைய போடுறது

-------------------------------------------------------------------------
ரெண்டு மருமகள்கள்..

“போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார்
விழுந்து செத்துப் போய்ட்டாங்க”

...“ம்ஹ்ம்... என் வீட்லயும்தான்
கிணறு இருக்கு.. மாமியாரும் இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை
வேணும்”

“அதுசரி.. எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக்கட்டி
உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?”

-------------------------------------------------------------------------
மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...

“மகனே, மேலத்தெரு
முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”

...“கரெக்டா
வாங்கிக்கறேன்ப்பா”

“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா
வாங்கிருக்கான்”

“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”

“எதிர்வீட்டு
கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”

“ஐயையோ.. எங்கப்பா
நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”

----------------------------------------------------------------------------------
ஒரு நேர்முகத்தேர்வில்:

கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி
ஓடுகிறது?

...வேலைக்கு வந்தவர் : டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்..
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

கேள்வி கேட்பவர்: யோவ்... நிறுத்து..நிறுத்து

வேலைக்கு வந்தவர்:
டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!

-------------------------------------------------------------------------
நீங்க இரண்டு வார்த்தை சொல்லணும் ஆனா
அதுல minimum 200 letters இருக்கணும்.

தெரியலியா?

...Post Box.

---------------------------------------------------------------------------
பெரிய விஷயங்களை விட சிறிய விஷயங்கள்
நம்மை அதிகம் காயப்படுத்திவிடும்.

(உ.ம்):
மலைமேல் உட்கார முடியும்…
...
குண்டூசி மேல் உட்கார முடியுமா?

---------------------------------------------------------------------
 நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க
ஜோ?”

ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர்
எழுதிக்கிட்டு இருக்கேன்”
...
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு
மெதுவா எழுதற?”

ஜோ : “அவரால வேகமாக படிக்க
முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”

-------------------------------------------------------------------------
கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக்
கொண்டிருந்தார்கள்.
“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”

“நீங்களும் ஆம்பிளையா லட்சணமா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”

-----------------------------------------------------------------------------
ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப்
பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
...மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை**சொல்லிட்டு போவோம்...!

------------------------------------------------------------------------
ஒரு நாள் காட்டுக்குள்ள ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு போனான்.
அப்ப, 5 சிங்கங்க அவன துரத்துச்சி
அதுல இருந்து அவன் எப்படி தப்பிச்சி இருப்பான்?

தெரியலையா?
...
left indicator போட்டுட்டு rightla போய்ட்டான்.

-------------------------------------------------------------------------------
என்னை உங்களுக்குப் பிடிச்சா
நோ சொல்லுங்க.

பிடிக்கலேன்னா
யெஸ்
... சொல்லுங்க.

நோ சொல்லிட்டு
பின்னாடி பார்க்கக்கூடாது.

யெஸ்
சொல்லிட்டு
பார்க்காம இருக்கக்கூடாது.
என்ன புரியுதா..?

புரிஞ்சா
நோ சொல்லுங்க.
புரியாட்டி யெஸ் சொல்லுங்க..!

--------------------------------------------------------------------
கடசியா இதையும் பார்த்துட்டு ஒரு ஓட்டும் போட்டுட்டு அப்படியே சந்தோசமா இருங்க....  என்றும் நட்புடன்:

சமூதாய சிந்தனைகள் என் எண்ணங்களில்...!

            
பெண்ணை சம கால தோழரா நினைப்பது என்ன தவறு..! நான் கல்யாணம் தாலி, மெட்டி இவை போன்ற சட்டிகளுக்கெல்லாம் எதிரி என் மனைவியை இவையெல்லாம் கழற்றி ஏறிய சொல்கிறேன். நான் கட்டாயப்படுத்தாமல் ஆனால் இப்போது மாறுகிறார். இது அவர்கள் விருப்பமாக இருக்கிறது. ஒரு பெண் பத்து பேரிடம் படுத்தால் விபச்சாரி என்கிறது சமூகம். அதே பத்து பெண்ணிடம் ஒரு ஆண் படுத்தால் அவனை விபச்சாரன் என்றுதானே சொல்லவேண்டும் ஏன் இவனை ஆம்பிலேடா...அவன் அப்படி இப்படிதான் இருப்பான் என்கிறது. ஒரு பெண்ணுக்கு நாம் தாலி கட்டிவிட்டால் அவள் நமக்கு அடிமை இல்லை. பெண்ணின் உணர்வுகளை புரிந்தவனே ஆண்மகன். சில ஆண்மகன் எப்போதும் ஒரே பார்வையாய் பார்பார்கள் அதிலும் பெண்களை பார்க்கும் பார்வை சற்று வித்தியாசப்படும். அம்மா, தங்கை, தோழி என்று சொல்லி பழுகுவோம். ஆனால் இதில் அவன் நம்மை பார்க்கும் பார்வை சற்று வித்தியாசமாக இருக்கும். தாயின் மடியில் படுபதற்க்கும், தாரத்தின் மடியில் படுபதற்க்கும் வித்தியாசம் இல்லையா... தாயை தாரமாய் நினைத்தால், பேசினால் அவன் பிறந்த பிறப்பு சரியில்லை என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் தெரியாத குருடன் எனக்கு வெளிச்சத்தை காட்டு என்றானாம். இது எப்படி சாத்தியம். அவன் கண்கள் சரியாகட்டும் பின்பு வெளிச்சத்தை அவனே உணர்வான். இது சொல்லி தெரிவதில்லை.

அறிஞர் அண்ணா அவர்களுக்கு புற்றுநோய் வந்து அவர் இறந்தார் இவர் இறப்புக்கு காரணம் இவர் ஒரு நாத்திகவாதியா இருந்தார் பெரியாருடன் இணைந்து கடவுளை பழித்ததால்தான் இவருக்கு புற்றுநோய் வந்தது என்று என் நண்பர்களான ஆத்திகர்கள் சொல்லி கேட்டுருக்கேன். நான் அவர்களிடம் கேட்பேன் "ஆத்திகரான ரமணருக்கு ஏன் புற்றுநோய் வந்தது
" என்று பதில் எதுவும் வராது அவர்களிடம். ஆமாம்ல ஏன் வந்தது என்று என்னிடமே திருப்பி கேட்பார்கள். புரிந்தும் புரியாதவருக்கு நான் என்னவென்று சொல்வது. தர்க்கம் என்றும் புத்திசாளியானது அது என்றும் முடிவு நிலைக்கே வரவிடாது புரிதல் இருந்தால் எதுவும் ஏற்புடையது.

நாம் உண்ட உணவுதான் மலமாக வெளியேறுகிறது. உணவை ஏற்ற மனது மலத்தை பார்த்து முகம் சுளிக்கிறது. அன்னலட்சுமி, தான்னிய லக்ஷ்மி என்பவள் பின் எப்படி மல லக்க்ஷ்மியானால். ஆணின் உணர்வு பெண்ணால் புரிந்துகொள்ளமுடியாது. அதுபோல் பெண்ணின் உணர்வு ஆணால் புரிந்துகொள்ளமுடியாது. இவை இரண்டும் வெவ்வேறு திசைகள் இவைபோன்றுதான் தர்க்கமும் விவேகானந்தர், அரிஸ்டாட்டில் கருத்துகளும் வெவ்வேறானவை அது எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணையாது. இவர்கள் இரண்டுபேரும் தர்க்கவாதிகளுக்கு ஏற்புடையவர்கள். முடிவில்லாமல் போவதைத்தான் தர்க்கவாதியும் விரும்புகிறான். ஏன்னென்றால் இதில் அவனின் அறிவு மிகைபடுத்தப்படுகிறது அதை அவன் மனமும் விரும்புகிறது. யாருடைய தாக்கம் இல்லாமல் தர்க்கம் செய்யலாம். ஆனால் உங்கள் மனம் அதை அனுமதிக்காது. ஏனென்றால் மனத்திற்க்கு எப்போதும் ஒரு துணை வேண்டும். அறிவு மிகுதியால்தான் மனம் தர்க்கத்திற்கு இடம் கொடுகிறது. இதில் மறைமுகமாக ஆணவம் அறிவின் துணையோடு உள்ளது. அறிவே துணையோடு என்றால்...??? வாதமும் நீண்டதுதான். முடிவில்லாமல்....

தனக்காக வாழும் நெஞ்சங்கள் பலப்பேர் பிறருக்காக வாழ்பவர்கள் சிலபேர். "வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் என் மனம் வாடியது" என்று வள்ளலார் கூறினார். நீங்கள் மனித உயிர்கள் படும் அவலங்களை எண்ணி வேதனை கொள்கிறீர்கள். ஆனால்  ஒரு சிறு எறும்பு கூட தன்னால் துன்புறுக  கூடாது என்று பல சரித்திர நாயகர்கள் இருந்தனர். அவர்களுள்  புத்தர், ஒரு வேடன் வேட்டையாடிய மானை விடிவித்து மானை கற்றிய கயற்றினில் தன் கழுத்தை கட்டிக்கொண்டு இருந்தார். வேடன் இதை கண்டு மனம் வேதனை கொண்டு புத்தரின் வழியை பின்பற்றினான். இதேபோல் ரமணர் ஒருமுறை  வழக்கமாக நடந்து சொல்லும் பாதையில் எறும்பு புற்றை மிதித்து விட்டார். எறும்புகள் களைந்து அவற்றின்  இருப்பிடமே கலைந்துவிட்டது. அதை எண்ணி ரமணர் மிகவும் வறுத்தமுற்று என்னால் தான் இவ்வேரும்புகள் துன்புற்றன என எண்ணி அவைகள் தன்னை கடிக்கட்டும் என்று எறும்பு புற்று அருகிலே கால்களை வைத்திருந்தார். கால்கள் மிகவும் ரணமாகி வீக்கமுடன் நடக்கமுடியாமல் இருந்தார்.  உயிர்கள் துன்புறுவதை வேதனைகொண்டு உணர்வதில் நம்மை விட  ஒரு படி மேல்நிலையிலே இருந்தனர். அம்மேன்மக்கள்...ஒரு உயிரை அழித்து இன்னொரு உயிர் வாழ்வதா...? என எண்ணி நான் சுத்த சைவமாக மாறிவிட்டேன். என் பார்வையில் புழுவும் ஒன்றுதான் மனிதனும் ஒன்றுதான் ஒரு புழுவு துன்புற்றாலும் என்மனம் வேதனை அடையும்.
பலபேர் அசைவம் சாப்பிடுவது  வாழ்வில் தவிர்க்க முடியாதது அது வாழ்வின் எதார்த்தமாக இருக்கிறது என்று கூறுவார்கள்.
         
எதார்த்தம் நாமஏற்படுத்தியதுதான் முயற்சி செய்தால் முடியும் என்றே நினைக்கிறேன். உலகில் நாகரிகமற்ற  காட்டுமிராண்டியை வாழ்ந்த மக்கள் தன் இனத்தில் உள்ளவர்களையே நரமாமிசமாக உண்டார்கள். நாகரிகம் மாற, மாற அவர்களின் நாவின் ரூசி மாறுபட்டது. அதனால்தான் கூட அன்பாக வளர்த்த உயிர்களை கொன்று சாப்பிட ஆரம்பித்தார்கள். உண்மையிலே மனிதன் நன்றி கெட்டவன் தான்...எதிர்ப்புகாட்டாத உயிர்களை அழிப்பதில் அவனை விட சிறந்தவர்கள் யாருமில்லை யாராவது ஆட்டுக்கறி மாட்டுக்கறி, கோழிக்கறி என்று சாப்பிட நினைகிரவங்க ஏன் சிங்ககறி, புலிகறி சாப்பிட நினைக்க மாட்டிகிரிங்க ஏன்னா, அதுகிட்ட இவன் போன அதுக்கு இவன் கறியாயுடுவான்....என்ன பண்றது நம்மிடம் எதார்த்தம் இப்படிதான் ஓடிகிட்டு இருக்குது போல... நீங்கள் பல நேரத்தில் சோகமாக இருந்தால் என் கேள்வி. ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் என்று இருக்கும். உலகில் எல்லாமே சந்தோஷபடக்குடியது உங்களுக்கு சோகமான விஷயம் இன்னொருத்தருக்கு சந்தோசம் யாருக்கும் நோயே வரலான டாக்டர் எப்படி சந்தோஷமா இருப்பார். யாருமே சாகலான சவ அடக்கம்பன்றவருக்கு ஏது  பொழப்பு நாம செத்து அவங்கல  வாழவைக்கிறோம். வாழ்வே ஆனந்தமயமானது வாழ்வை புரிந்தவர்களுக்கு...!

இது என்னுடைய கருத்துகள் யார்மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல...எல்லாருடைய நற்செயல்களுக்கும், குற்றசெயல்களுக்கும் ஈர்ப்புதான் காரணமா இருக்கிறது. இதில் எது சரி, எது தவறு எனபது நம் சிந்தனையை பொறுத்துள்ளது.       

நீங்கள் சிந்திக்கும் சிந்தனைகளை எழுத்து வடிவமாக சேமித்து வையுங்கள்...தேவையானவருக்கு தேவைப்படும். எதேட்சியாக சிந்திக்கும் சிந்தனைதான் பெரிய மாற்றங்களை கொண்டுவரும். புவிர்ப்பு விசை கண்ட நியுட்டன் போல்...

 என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!


என்றும் நட்புடன்:

Monday, June 21, 2010

பெண்கள் வாழும் வாழ்வில் சில மாற்றங்கள்

  
பெண்கள்  வாழும் வாழ்வில் சில மாற்றங்கள் வரும் போது சமூக தளங்கள் போன்ற தளங்களில்  பெண்கள் புகைப்படம் மாற்றும் போதும் விமர்சனங்கள் அதிகமாக வருகின்றன"...ஏன் என்று தோழி ஒருவர்  என்னிடம் கேட்டார் அதற்கான பதிலை பதிவாய்  வெளியீடுகிறேன்...

ஆண்னிடம்,  பெண்கள் ஆரம்ப கால வாழ்வின் அடக்குமுறையால் ஏற்பட்ட விளைவாலே ஆண்களை எப்போதும் உள்ளுர மதிப்பதே  இல்லை அதனால் ஆண்கள் புகைப்படம் மாற்றினால் பெண்கள் அதை பெரிதாக நினைப்பதில்லை. ஆண்களும், ஆண்களின் புகைப்படம்  மாறும்போதும்  அதை அவர்கள்  பெரிதாக பேசுவதுயில்லை ஏனென்றால், அவை "ஒரே குட்டையில ஊருன மட்டைங்கதான்...." ஆனால் பெண்கள் புகைப்படம் மாறும்போது ஆண்தான் அதிகமாக  கவலைப்படுகிறான். பெண்ணின் புகைப்பட முகத்த வச்சு ஒரு கற்பனை உருவத்தை உண்டாக்குகிறான். அப்பெண்ணின் புகைப்பட முக பாவனை மாறும் போது கற்பனை  கவலையாய் ஆகிறது. ஆண்களின் பணம், பதவி, புகழ் மோகத்தை விட பெண் மோகம்தான் அதிகமாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது பெண் நேரடியாகவும், மறைமுகமாகவும்  அடிமையா இருக்கவே ஆண்  ஆசைபடுகிறான்...

பெண்கள், ஆண்களை சார்ந்தும் அடிமையாக மாறுவதற்க்கும் பெண்களுக்கு உடலில் உண்டாகும்  பலவீனமே காரணமாக இருக்கிறது அவள் மாதவிடாய் அடைவதும், தாய்மை அடைவதும் அவளின் உடல் பலவீனத்தை மேலும் அதிகபடுத்துகிறது. ஒரு ஆண், பெண்ணை அடக்க இவைகள் போதுமானதாக சாதகமாகவும் இருக்கிறது. ஆண்கள் பார்வையில்  பெண்கள் எப்போதும்  ஒரு அழகு, கவர்ச்சி பொம்மையாய் இருப்பதையே அவன் விரும்புகிறான். அவள் விருப்படி என்றுமே  அனுமதிப்பதே இல்லை அப்படியே மீறி வெளிவர பெண்களை அவன், இது அடங்காபிடாரி, ஆணவக்காரி என்று தூற்றுவான். அப்பெண்னின் புகைப்படத்தை  வச்சி ஆபாச கவர்ச்சி படமாய்  வெளிப்படுத்துவான். இப்படிதான் அவன் செயல் எப்படியாவது  ஒரு கேவலமான வழியில் வெளிபட்டு கொண்டே இருக்கும்...

இதையெல்லாம் உடைத்துக்கொண்டு வெளிவரவேண்டும் என்றால் ஓஷோ கூறுவது போல்....

"சர்வதேச அளவில் பெண்களே ஒரு கட்சி ஆரம்பிக்கவேண்டும். உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அதற்கு மட்டும் ஆதரவு வழங்கவேண்டும் ஆணை சார்ந்த செயல்களுக்கு அவள் ஒத்துழைக்க கூடாது ஏனென்றால் ஆணின் செயல்கள் எப்போதும் நயவஞ்சகம் மிக்கது...உலகத்தின் அதிகாரம் பெண்ணிடம் வரவேண்டும். கல்யாணம் இருக்ககூடாது பெண்கள் குழந்தை வேண்டும் என்றால்  பெற்றுக்கொண்டு அக்குழந்தைகளை வளர்பதற்க்கு பெண்களே உண்டாக்கும் காப்பகங்கள் வரவேண்டும். உலகத்தின் அதிகாரம் பெண்ணின் கைக்கு வந்தால் அவள் எந்த நாட்டின் மீதும் போர்தொடுக்க மாட்டாள். அணுகுண்டு போடமாட்டாள் நோயவாய்ப்பட்ட சமூதாயத்தை உருவாக்கமாட்டாள்.  இது முதலில் பெண்கள் நாகரிகத்தில் உயர்ந்த ஐய்ரோப்பா பெண்களிடமே வரவேண்டும்..."        : - ஓஷோஎன் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:

Thursday, June 17, 2010

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்க்க வாருங்கள்...!

                      

 

மனிதன் இயற்கை நீயதிக்கு உட்பட்டவனா இல்லை செயற்கையான சட்டங்களை உண்டாக்கி நொந்து வீழ்பவனா... வயிற்றுக்கு பசி எடுத்தால் சாப்பிடுகிறோம் நன்றாக இருக்கிறது தண்ணீர் தாகம் எடுத்தால் குடிக்கிறோம். இதுவும் சரியாக உள்ளது. ஆனால் இயற்கை இச்சையால் உண்டாகும் காமம் மட்டும் ஏன் அடக்கப்படுகிறது பிரமச்சரியம் என்ற போர்வையில். இன்று நம்மிடம் போலியான வழிகாட்டுதல்கள், போதனைகள் மூலம் இக்கால வாழ்வுக்கு பலதும் பொருத்தம் இல்லாமல்தான் இருக்கின்றன. போதனைகள், வழிகாட்டுதல்கள் அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்காக சொல்லப்பட்டது அப்போது அதற்கு உயிர் இருந்தது ஆனால் இப்போது அது செத்து பிணமாகிவிட்டது. செத்த பிணத்தை எவ்வளவு நாள் தான் நம் மனம் எனும் வீட்டில் வைப்பது இதில் நாம் பழமையை ஆதாரமாக வைத்து புதுமை படைக்கவேண்டும். சாக்ரடிஸ், பெரியார் சிந்தனைகளை போல மாறுபட்ட சிந்தனை எக்காலத்திற்கும் பொருந்த கூடியதாக இருக்கும். உலகில் படைக்கப்பட்டது, படைத்தது, படைப்பது எல்லாமே இயற்கைதான் அதை நாம் இயற்கை என்கிறோம். ஆத்திகர்கள் கடவுள் என்று கூறுகிறார்கள். நானே நானாகி உள்ளேன். பின் நான் எங்கே செல்வது. அண்டத்தில் உள்ளதே பிண்டம் இந்த பிண்டமும் அண்டமே...

விழிப்புடன் கவனித்தல்" எனபது சாதாரண வார்த்தை அல்ல.. புத்தர் கூறிய முக்கியமான வார்த்தை...இவை எல்லா பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் முயற்சி செய்து பாருங்க தீர்வு கிடைக்கும். நாம் வாழும் உலகில் இயற்கையை தவிர மற்றதை எல்லாம் பார்த்து அதிசய படுவதற்கும், ஆச்சர்யபடுவதற்கும் ஒன்றும்மில்லை போதிய முயற்சியும் அதனுடன் இணைந்த பயிற்ச்சியும் இருந்தால் எல்லாம் சாத்தியம்தான். இவ்வுலகில் எல்லாமே நம் சக்திக்கு உட்பட்டதுதான்.

அனைவருக்கும் கல்வி, கட்டாய கல்வி என்று சட்டமாக நாட்டில் எதற்கு கொண்டுவந்தார்கள்.  அனைவருக்கும் கல்வி வேண்டும் அதிலும் பெண்களுக்கு முக்கியமாக கல்வி வேண்டும் என்றுதான் கொண்டுவந்தார்கள். இது மக்கள் மனத்தால் நடந்ததா...? வாக்குறுதி கொடுத்த அரசால்தான் முடிந்தது. பல தனி மனித எண்ணங்கள் தான் கூட்டு கருத்தாக ஆகுது...அது சமூதாயா சிந்தனையாய் இருக்கு...அப்படி இருக்கும் போது பெண்களை அணுகும் பார்வை மட்டும் எப்படி மாறுபடும். எங்கே பெண்களை தெய்வமா வணங்குறாங்க....கோவில்ல மட்டும் பெண் தெய்வங்கள் பார்க்கலாம். ஊருக்குள்ள போய் பார்க்க முடியுமா ஒவ்வொரு நாட்டின் சரித்தரத்தை எடுத்து பார்த்தால் பெண்மையின் அவலங்கள் தெரியும் அதில் பெண்ணின் கற்பு சூறையாடல் மட்டும் அதிகமாக இருக்கும்....மனிதனின் நாடோடி சமூகத்தில் பெண்ணும் ஆணுக்கு நிகராக வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் ஆனால் எப்பொழுது  ஒரே இருப்பிடமாக  வாழ்ந்த விவசாய சமூகத்தில் பெண்ணின் நிலை மாற்றப்பட்டது. பெண் வீ ட்டைய்    பராமரித்தல் போன்ற பணிகளுக்கே ஆண் நிர்பந்தித்தான் இதற்கு முழு காரணம் அவள் தாய்மை அடைபவலாக இருந்தாதால்தான்.  தாய்மை அடைந்தபின்  ஏற்படும் உடல் பலவீனம் ஆணுக்கு அடக்கி ஆள்வதற்கு   சாதகமாக போய்விட்டது...ஆனால் இப்போது மாற்றம் அடைந்து கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன். அறியாமையின் பிழைதான் இயற்கையாய் மாறுகிறது. அவ்வியற்கை மாற்றம் அடைகிறதே என்று சொல்லலாம்..பெண்களுக்கு சமநீதி கொடுப்பதை விட சமவாய்ப்பு கொடுக்கலாம். ஒருவேளை சமவாய்ப்பு கொடுக்க வந்தாலும் பெண்களே பெண்களுக்கு எதிர்நிலையில்தான் இருகின்றனர். ஆம் நம் அம்மாவுக்கு எல்லாமே ஒரு ஈர்ப்புதான் தன் புல்லை ஒஸ்த்திதான் தன் மருமகள் புல்லை மட்டம் போல மனதுக்குள் கருதுவாள். ஏன் என்றால், அவள் மருமகள் பெற்ற பிள்ளை அல்லவா தன் மகன் மூலம் பிறந்தவன்தான் இவன் என்று அறிந்தும் அறியாமல் இருப்பவள் அம்மா...! தன் மகளின் பிள்ளையை மடிமேல் வைத்து கொஞ்சுவாள் அம்மா...! மகனின் பிள்ளையை தல்லாமல் தள்ளிவைத்து இருப்பாள். இவளே என்றும் நமக்கு அம்மா...!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவாய்ப்பு கொடுக்காமலே அரசியல் எல்லா இடங்களிலும் விளையாடுகிறது. சிந்து பைரவி படத்தில் இளையராஜாவின் இசையில் உண்டான பாடல் பாடகி சித்ராவுக்கு தேசிய விருது வாங்கிதந்தது ஆனால் இசையமைத்த இளையராஜாவுக்கு இன்னும் வரை ஒரு தேசிய விருதும் கிடைக்கவில்லை. இதுதான் நம் தேசிய விருது கமிட்டியின் லட்சணம். சார்லின் சாப்ளின் வாழ்ந்த காலத்தில் யார் சார்லின் சாப்ளின் போல் நடிகிறார்களோ அவர்களுக்கு பரிசுக்கள் வழங்கப்படும் என்று ஒரு விழா நடைபெறுகிறது எல்லாரும் சார்லின் சாப்ளின் போல் பிரமாதமா  நடித்தார்கள். இதில் நிஜ சார்லின் சாப்ளினும் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது...கடவுளே இங்கே நேரில் வந்து நான் தான் கடவுள் என்றால் யாரும் நம்ப தயாரில்லை ஏனென்றால் மக்கள் என்றும் உண்மையை விரும்பவில்லை அற்புதத்தைதான் விரும்புகின்றனர். 

நம் சமூக அமைப்பில் மத உணர்வாளர்கள், இன உணர்வாளர்கள், மொழி உணர்வாளர்கள் ஜாதி உணர்வாளர்கள்,  கடவுள் எதிர்பாளர்கள். ஜனநாயக கருத்துடையோர், கம்யுனிசம் கருத்துடையோர் இன்னும் எத்தனை, எத்தனை உணர்வாளர்கள்,கருத்துடையோர் வந்தாலும் நம் உணர்வு, நம் கருத்து எந்த நிலையில் உள்ளது என்று அறியவேண்டும். மக்களால் எது எற்றுகொள்ளபடுகிறதோ அதுவே அக்காலத்தின் உண்மையாக இருக்கிறது. பின் காலத்தின் சுழறச்சியில் அதுவும் உடைக்கப்படும். நம்மிடம் வாதம் செய்வதற்க்கும், விதண்டாவாதம் செய்வதற்க்கும் வித்தியாசம் உள்ளது. விதண்டாவாதம் குழந்தையை போல... குழந்த குறும்பு பண்ணும் போது அக்குழந்தையை கொஞ்சத்தான் முடியும். அதை அடிக்கமுடியாது, அறிவுரை சொன்னாலும் ஏறாது. குழந்தைக்கு A B C D கத்துகுடுக்கலாம் ஏரோபிளேன் ஓட்ட எப்படி கத்துகுடுக்கமுடியும் அதுக்கும் ஒரு நேரம், காலம் வரும். 

தமிழ், மற்ற மொழிகளுடன் கலப்பின மொழியாக வேறுநாட்டில் இருக்கும் போது. அத்தமிழ்நாட்டவர் தமிழ் கலப்பில்லாத தரமான தமிழை விரும்புவார்கள்...ஆனால் கலப்பில்லா தமிழ் அதிகமாக பேசும் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் மேலும் அதை கலக்கவே ஆசைபடுகிறார்கள். அவ்வாசை எப்படியானால் மற்ற மொழிக்காரன் ஏதோ சந்தேகம் கேட்டால் அவனுக்கு புரியலனாலும் அவன் மொழியிலே கூறுகிறார்கள். ஆனால் மற்ற மொழிக்காரன் இடத்துக்கு நாம் போனால் நாம ஏதோ சந்தேகம் கேட்டால் அவன் அவன் மொழிலதான் சொல்றான்...நாமும் பேந்த பேந்த முழிக்கிறோம்...மொழியறியாமல். சேற்றில் இருந்தே செந்தாமரை(தமிழ்) மலர்ந்தது. பின் அது தன் பொலிவை இழந்து வாடிக்கொண்டுயிறுக்கிறது. ஒருநாள் உதிர்ந்துவிடுமோ....? வழக்கமாக பேசும் தமிழ் அதன் பொலிவை இழந்தாலும் எழுத்து வடிவில் அவை  புத்தகமாக என்றும் இருக்கும். புத்தகம் படிப்பது வெகுவாக குறைந்துவிட்டது. தினமும் ஒரு புத்தம் படிக்கவேண்டும். புத்தகங்கள் நம் சிந்தனையை செம்மைபடுத்துவது. ஏனென்றால் ஒருவர் நம் வாழ்நாளில் கண்ட உண்மைகள், அனுவங்கள் எழுத்துகளாக புத்தக வடிவில் வருகிறது. நாம் அப்புத்தகத்தை படிக்கும் போது அவருடைய பலவருட அனுபவம் நமக்கு சில மணிநேரத்தில் கிடைத்துவிடுகிறது... அறிஞர் அண்ணா கூறியதுபோல்:"ஒரு நூலகம் திறக்கப்படும்போது பல சிறைக்கதவுகள் மூடப்படுகின்றன." - ஆம் நம் பழமை சிந்தனை சிறைகதவுகளும் மூடப்படுகின்றன விதைத்தவரைவிட அறுவடை செய்தவருக்கே அதிக பலன்...அதனால் தினமும் ஒரு புத்தகம் படிப்போம்..!

அவ்வை பிராட்டி சொன்னதுபோல்.... கற்றது கைமண் அளவு... கல்லாதது உலகளவு...

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:

Saturday, June 12, 2010

PhotobucketTuesday, June 8, 2010

என் எண்ணத்தின் வடிவம் மாறுபட்டது எப்போது....

                          

ஒரு வீரனின் எதிரி யார் என்றே தெரியாமலே இந்திய ராணுவ வீரன் பாகிஸ்தான் வீரனை சுட்டு கொள்கிறான். அவ்வீரனின் வீரத்தை மெச்சி, பாராட்டி பரம்வீர் சக்ரா பதக்கம் கொடுத்து மகிழ்வோம். ஆனால் அந்த ராணுவ வீரன் மனைவியை ஒருவன் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்தால். அவனை, அவ்வீரன் சுட்டு கொள்வான். இப்போது அவனுக்கு பதக்கம் கிடைக்காது. ராணுவ நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும். முகம் தெரியாத ஒரு எதிரியை கொன்றால் பதக்கம். தன் மனைவியை தன் கண் முன்னால் ஒருவன் பலாத்காரம் செய்த எதிரியை கொன்றால் தண்டனை. ஒருவன் சமூகத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம் தவறில்லை ஆனால் தனிமனிதன் தேவைக்கு செய்தால் தவறு இதில் தனிமனித ஒழுக்கம் மட்டும் வேண்டும். இதுபோல்தான் நம் அரசியல் சட்டங்களும் இப்படிதான் இயற்றப்பட்டன இயற்றபடுகின்றன அச்சட்டம்  என்றும் தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பது இல்லை. சட்டத்திற்கு இழப்பு கொஞ்சம் ஏற்பட்டால் கவலை இல்லை பேரிழப்பு ஏற்பட்டால்தான் கவலை.  "பக்தி உள்ள சமூகத்தில் குற்றங்கள் குறைவாக இருக்கும்" என்று உயர்நீதிமன்ற நீதிபதி. எம். சொக்கலிங்கம் கூறுகிறார்.பக்தி மூலம்தான் ஒருவன் ஒழுக்கம் ஏற்பட்டு அதன் மூலம் சமூக குற்றம் குறையவேண்டுமா..? ஏன் எதையும் பகுத்தறிவு சிந்தனைமூலம் சிந்தித்து ஒழுக்கம் ஏற்பட்டு அதன்மூலம் சமுகத்தில் குற்றம் குறையக்கூடாதா...? இங்கே உழல் செய்யும் அரசுதான் தன்னிடம் வேலை செய்யும் உழியர்கள் கையுட்டல் வாங்ககூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறை என்று ஒரு துறை வைத்துள்ளது. ஒரு சமூகத்தை ஆளும் அரசே ஒழுக்கம் கெட்ட நிலையில்தான் உள்ளது. இவற்றில் சமூக ஒழுக்கம் மட்டும் எப்படி எதிர்பார்க்கமுடியும். அதாவது "நான் அயோக்கியன இருப்பேன் ஆனால் நீ எனக்கு நல்லவனா இரு"  என்பதுபோல் உள்ளது. இது தனிநபர் சமூக நிலையில் உள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருந்த கூடியதாகதான் உள்ளது. நீங்களே சொல்லுங்கள் இந்த ஒழிங்கின்மையை களைவது எப்படி...? என்னைபொருத்தவரை பொதுவாழ்வில் உள்ளவர்களும்  சமூக நிலையை மேம்படுத்தவேண்டும் என்று ஆர்வம் கொள்பவர்களும் தங்கள் நிலையில் எப்படி இருக்கிறார்கள் என்பதே முக்கியம். அது ஆணானாலும், பெண்ணானாலும் பொதுவானதே. சமூதாயத்தில் சமவாய்ப்பு, சமநீதி கேட்கும் உரிமையுள்ளவருக்கு எதிர்நிலையான கருத்துகளின் உண்மை நிலையை அறியவேண்டும்.

இவற்றினிடையே  நாடுகளுக்கிடையான சண்டை, மதங்களுகிடையான சண்டை , இனங்களுக்கிடையான சண்டை, மொழிகளுகிடையான சண்டை, தமிழ் பேசற மற்றும் மற்ற மொழி பேசுற மக்களிடத்திலே ஜாதி சண்டை, ஒரே ஜாதியிலே வர்க்க சண்டை, அந்த ஜாதியில் ஏற்படும் குடும்ப சண்டை அது பங்காளி சண்டையாககூட இருக்கும். இப்படி நித்தம் நித்தம் ஒவ்வெரு நிலையிலும் சண்டை கடைசியாக தனிமனித எண்ணத்திலும் சண்டை அது மனசுக்கும், அறிவுக்கும் உள்ள சண்டை. சண்டையில கடைசி  சண்டையாக என்ன இருக்கும் கிரகங்களுகிடையான சண்டை மனித இனம்  அழிக்கும் சண்டையாக இருக்கும் அப்போது  நம்மிடம் உள்ள எல்லா சண்டையும் முடிவுக்கும் வரும் ஒற்றுமை ஒன்றே இருக்கும். ஏன்னென்றால் பூமி போல மற்ற கிரகத்திலும் மனிதன் போல உயிர் வாழ சாத்தியம் இருக்கிறது என்று விஞ்சானிகளால் ஏற்றுகொள்ளபட்டது. இவற்றில் இதுதான் சிறந்தது, அதுதான் சிறந்தது என்று எப்படி சொல்ல முடியும். இது தான் சிறந்தது என்றால் இன்னொன்று வந்து நிற்கும் அப்போது நான் என்ன மட்டமா.. என்று கேட்கும். இப்படியே பிரிவு இருந்துகொண்டே இருக்கும் இவைகள் எல்லாம் முதலில் புரிந்துகொண்டால் எதிலும் குழப்பம் வராது. ஹென்றி போர்ட் மிக பெரிய சாதனையாளர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் தன சாதனை பற்றி கூறுகிறார். "நான் வாழ்வில் சாதனை செய்யவேண்டும் என்று இரவு, பகல் பாராமல் உழைத்தேன் சாதனை என்ற உச்சியை அடைந்தேன்..ஆனால் உச்சி என்ற ஏணியில் நின்று பார்த்தேன் அதற்கு மேலே ஒன்றும் இல்லை என்று ஆனால் கீழே பார்த்தேன் என்னை போல் மேல வர இன்னும் அதிகம் பேர் முயற்சித்து கொண்டுஇருந்தார்கள் அவர்களுக்கு தெரியாது நான் கண்ட உண்மை என்ன என்று".

இன்று சில பேர் அறிவாளி சொன்னால்தான் மதிக்கபடுகிறது  நாலு பேரு உட்கார்ந்து மார்க் போட்டு நம்ம அறிவாளி சொல்ல அவங்க யார்...? நம்ம அறிவு நமக்கு தெரியாத இன்று படிப்பறிவு இல்லாதவன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள்தான் பல பல்கலைகழகங்களில் பட்டைய ஆய்வக படிப்பாய் இருக்கிறது. அறிவை விட புத்தி சிறந்ததாக இருக்கிறது. இன்றைக்கு படிக்கும் படிப்பை விட படிக்கும் பள்ளிதான் பெருமையாக பேசபடுகிறது பெற்றோர்களால் நான் ஜெயலலிதா படிச்ச ஸ்கூல்ல படிக்கிறேன், சென்னைல அண்ணா நகர்ல இருக்கிற DAV ஸ்கூல்ல படிக்கிறேன். என் புல்ல வேலமாள் ஸ்கூல்ல படிக்கிறான் என்று பெருமைபட பேசும் கூட்டம் தான் அதிகம் corporation ஸ்கூல்ல படிச்சும் கலெக்டர் ஆகலாம், கான்வென்ட்ல படிச்சும் கலெக்டர் ஆகலாம் எல்லாம் படிக்கிறத பொறுத்து உள்ளது. ஆடையில்லாத அம்மணமாக இருக்கும் கூட்டத்தில் ஒருவன் ஆடை போட்டிருந்தால் அம்மணமாக இருப்பவர்களுக்குதான் ஆடை போட்டவன் அம்மணமாக தெரிவான் இது ஆடை போட்டவன் குற்றமில்லை. இவை முட்டாளின் நடுவே ஒரு புத்திசாலி இருப்பது போல் இருக்கும்.

எரிமலை வெடிக்கும் போது பல்வேறு பூக்கள் நசுங்கத்தான் செய்யும். யானை வரும் பாதையில் பல எறும்புகள் மிதிபடத்தான் செய்யும். தவறுகள் நடக்குமோ...? மனம் ஏற்றுக்கொள்ளுமோ, எற்றுக்கொள்ளதோ...? என்று எண்ணி நினைத்து கொண்டு இருந்தால் செயல்கள் நடைபெறாமல் போய்விடும். இவற்றில் நடைபெறும் செயல்கள் செயல்அடிபடையில்தான் முடிவுகள் தீர்மானிக்கபடுகிறது. இதில் சாமியோ, ஆசாமியோ, எல்லாம் விதிவழி வந்தது என்றும் கூறுவது வெற்று வார்த்தைகளின் சால்ஜாப்புகள்.

பணத்தால் எல்லாம் கிட்டும் என்று படைத்தவனே உணரும் காலமாக்கி விட்டான் மனிதன். உலக வாழ்வில் அன்பு, தவம் தியாகம் எல்லாம் வெறும் கடை சரக்காகிவிட்டது. என்ன செய்வது, சும்மா இருந்தால் சுரண்டுது எட்டபோனால் எட்டி உதைக்கிது பணம், பணம் இந்த மூன்றேழுத்துதான் உலகம் என்ற நான்கேழுத்தை ஆள்கிறது பராசக்தி படத்தில் கலைஞசரின் ஒரு பாடல் வரிகள் வரும் "ஆரிய கூத்தாடினாலும் தாண்டவதொனே காசு காரியத்தில் கண் வையுடா தாண்டவதொனே முட்டா பயல்கெல்லாம் தாண்டவ தொனே காசு மூழு மூடனாக்குதட தாண்டவதொனே உள்ளே பகை வையுட தண்டவதொனே உதட்டில் உறவாடுடா  தண்டவதொனே" என்று இருக்கும். இதில் தற்போது அவர் பாடல் வரிகள் ஏற்றார் போலவே இருக்கிறார். இருக்க இடம் இல்லைனாலும் சாப்பிட சோறு இல்லைனாலும், கட்டிக்க கோவணம் இல்லைனாலும் தன்மானமுள்ள தமிழன் தலைவன் இல்லாமல் வாழமாட்டன்.

அத்தமிழனை மாடு போல இருக்கியே என்று சொன்னால் கோபபடுவார். அதே அவரை நீ பசு போல இருக்கே என்று சொன்னால் அவருக்கு சந்தோசம் தான். இது மனதுடைய வேலையாக மானமாகி போகிறது. ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்தும் போது மனம் அதை கெட்டதாக எடுத்துகொள்கிறது. நாய் மனிதனுக்கு மிகவும் நன்றியுள்ளதுதான். ஆனால் "நீ நாய் போல" என்று சொன்னால். ஒரே கோபம் தான் அதே அவங்களை நீ ஒரு சிங்கம்யா என்று சொன்னால் ஒரே சிலிர்ப்புதான் ஆனால் சிங்கத்தால் மனிதனுக்கு எந்த பயனும் இல்லை அது ஒரு சோம்பேறி மிருகம்.

நாம் உண்மையை பேசவேண்டிய நேரத்தில் பேசித்தான் ஆகவேண்டும் இல்லையென்றால் உண்மை ஊமையாகிவிடும். பேசாமல் ஆணவம் கொண்டிருந்தால் அவ்வாணவம் முதலில் பிறரை அழிக்கும் அதன் பின் நம்மை அழிக்கும்.

இந்த நாளும், எந்த நாளும் இனிய நாளாக இருக்க அந்த இயற்கையை வணங்குவோம்...

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
நட்புடன் உங்கள்:

Thursday, June 3, 2010

நாம் பார்க்கும் பொருள் யாவும் மனத்தின் வடிவமே......! மனமே உலகை             ஆள்கிறது....!
நம் உலகில் எல்லாமே விரும்பகுடியதுதான் வெருக்கரதா இருந்தால் இயற்கை நமக்கு எதுவும் படைத்திருக்காது எல்லாமே ஏற்றுகொள்ளகுடியதுதான். அது அன்பை மட்டும் இல்லை வெறுப்பையும். பலபேர் சினிமாவில் சோகமான காட்சி வந்தாலே கண்ணீர் விட்டு அழுவாங்க அந்த காட்சியில் வரும் சோகம் தன்னை பற்றியதாக இருகிறதே என்ற நினைப்பு. அது படம் தான் அவை பொய் தான் என்று தெரியும் ஆனால் மனம் அதை உண்மை என நம்பி அழும். இப்படி பட்ட மனதுடன்தான் நாம் வாழ்கிறோம் பின் அது எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்குமா...?

மனசுடைய உணர்ச்சி வேகத்தில் உண்டாகும் அனுபவமே அறிவாக கொள்கிறோம்...மறுபடியும் அந்த உணர்வு ஏற்படும் போது அறிவு அதன் வேகத்தை கட்டுபடுத்துகிறது. ஆனால் பல நேரங்களில் கட்டுபடாமல்தான் போகிறது. இறுதியில் மனமே வெற்றிகொள்கிறது. இவற்றில் மனதுக்கு மந்திரம், ஜபம் வேற தனியாக செய்கிறார்கள் அவை ஒரு கட்டுபடுத்த ஒரு பயற்சி தான் அன்றி வேறல்ல ஓம் நாமோ நாராயண..! என்றுதான் சொல்ல வேண்டு என்றில்லை பெப்சி. கோகோ கோலா, என்று சொன்னால் கூட மனம் கட்டுப்படும்.என்ன வார்த்தைகள் என்று மனதுக்கு கூறுகிறோமோ அதைதான் ஏற்றுகொள்கிறது.

உடலும், மனமும் இருக்கும் போது மரணம் வருவதில்லை. மரணம் வரும் போது அவை இருப்பதில்லை. செத்த பிணத்தை நினைத்து சாகபோற பிணங்கள் அழுமாம் தானும் ஒரு நாள் சாகபோறோம் என்று அறியாமல். தூக்கம் என்பதும் தற்காலிக மரணம்...! யாருக்காவது தெரியுமா...? மரண ஞானம் ஒன்று உண்டு அது எப்போது வரும் எனபது யாருக்காவது தெரியுமா..? அவை மரணிக்கும் போது வரும். மரணத்தை நாம் பார்க்கும் போதும் வரும். அது தற்காலிமாக இருக்கும். பின் நாம் வீட்டிற்கு வந்தவுடன் அது போய்விடும்.

மறுபடியும் நாம் சுயநலம், பொறமை என்ற சுழல் உள்ள வாழ்க்கையில் மரணிக்கும் வரை முடிவில்லாமல் சுழல்வோம். இவ்வாறு இருக்கும் போது நம்மிடம் பெரு ஒளி(ஞானம்) வந்தவுடன் சிறுஒளி(மனம்) தேவையில்லாமல் போய்விடும். நாம் எப்படி தனிமையில வந்தமோ...அப்படியியே தனிமையில போகபோறோம். நடுவில் ஏன் இந்த ஆர்பாட்டம்....


இந்த நாளும், எந்த நாளும் இனிய நாளாக இருக்க அந்த இயற்கையை வணங்குவோம்...

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!நட்புடன் உங்கள்: