Monday, September 27, 2010
ஓஷோ சொன்ன கதை....
ஒரு ஊரின் பாதை வழியே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது. அவ்வழியே இருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்துவிடுகிறான். விழுந்தவன் மேல ஏற முடியாமல் கத்துகிறான்...யாரும் வரவில்லை சிறிது நேரம் போனதும் அந்த வழியே இந்து மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் வருகிறான். அவன், கூக்குரல் கேட்டு கிணற்றில் எட்டி பார்கிறான்...... "அட பாதாக இப்படி விழுந்துவிட்டாய்யே போன பிறவியில் நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பிறவியில் சாவ போகிறாய் உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான். இன்னும் கொஞ்சம் நேரம் போனபின் சீனன் ஒருவன் வருகிறான். அவன், "நான் கன்பூயுசத்தை பின்பற்றுபவன். இந்த கிணற்றை சுற்றி சுவர் எழுப்பவேண்டும் எழுப்பாமல் விட்டது மனிதனின் தவறு அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அதன் பின் அவன் அழுகுரல் கேட்டு ஒரு பாதிரியார் வருகிறார். அவர் கிணற்றில் விழைந்தவன் அழுகுரல் கேட்டு மிகவும் பதற்றம் அடைகிறார். "நான் காப்பாற்றுகிறேன் அன்பரே கவலை அடையாதே" என்று சொல்லி ஒரு கயிர விட்டு விழுந்தவனை காப்பாற்றுகிறார். அவன், "நான் உயிர் பிழைத்தேன் யாருமே என்னை காப்பாற்றவில்லை நீங்கள் தான் என்னை பிழைக்க வைத்தீர்கள் இந்த நன்றியை நான் மறக்கமாட்டேன்" என்றான். அதற்கு பாதிரியார், "இது எங்கள் மதத்து கடமை அப்பா யார் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீ காப்பாற்றுவாயாக அப்போதே உனக்கு புண்ணியம் ஏற்படும். என் இராச்சியத்தில் சீக்கிரம் புகுவாய்" என்று பைபிளில் வாசகம் உள்ளது. அதனால் காப்பாற்றினேன். "இனிமேல் நீ எப்போதெல்லாம் விழுவாய் என்று எனக்கு முன்பே சொல்லிவிடு நான் வந்து உன்னை காப்பாற்றுகிறேன். பின்பு எனக்கு புண்ணியம் அதிகரித்து இறைவன் இராட்சியத்தில் சீக்கிரம் இடம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
மக்கள் புண்ணியம் அடைவதற்குதான் மற்றவர்களுக்கு பல உதவிகள் செய்யபடுகிறது. எல்லா உதவிகளும் சுயதேவையை பொறுத்தே அமைகிறது..
ஓஷோ கதையை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
3 comments:
அருமையாக கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது...
காமடி மதங்கள்...
நல்ல கதை.இன்னும் நிறைய எழுதுங்கள்
Post a Comment