Wednesday, September 22, 2010
பிரான்சை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்....
எனக்கு இப்போது பிறநாட்டு இலக்கியம் அதன் வரலாறு பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் வருகிறது. இதற்கு காரணம் நமக்கு ஏற்கனேவே அந்நாட்டின் பற்றி ஏதோ தெரிந்த சரித்திர நாயகர்கள். நெப்போலியன் போன்றவர்களை பற்றிய வரலாறுகள் இதில் அவர்களுடைய சிந்தனை, பேச்சு இவைவாவும் நாம் ஏற்கனவே படித்ததால் தொடர்ந்த அதன் தொடர்ச்சி அந்நாட்டினை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலை கொடுக்கும். இவையில்லாமல் நமக்கு பிடித்த நண்பர்களும் அந்நாட்டில் இருப்பதால் கூட அந்நாட்டினை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தை கொடுக்கும்.
ஒரு நாட்டின் இலக்கியங்கள், அதன் வரலாறு அந்நாட்டின் தொன்மையும் மக்களின் உணர்வையும் நன்கு தெளிவுபடுத்தும். இதில் இலக்கியம் அம்மக்களின் உணர்வுகளை பிரிதிபலிக்கும் காலக் கண்ணாடிபோன்றது. அது என்றும் பிரிதிபளித்துகொன்டே இருக்கும். இதில் பிரான்சின் இலக்கிய சார்ந்த அந்நாட்டின் வரலாறு அருமையானது, அழகானது...
பிரான்ஸ் 2500 ஆண்டுக்குமுன் இதன் பெயர் கோல்(Gaule), மேற்கு ஐரோப்பாவில் இருந்த ஒரு இனம் சேலத்(celtes) இனம் என அழைக்கப்பட்டது. இந்த சேலத் இனம் கோல் நாட்டில் இருந்ததால் கொலுவா என்று சொல்வார்களாம்...அப்போது வாழ்ந்த கொலுவா மக்களில் துருய்த் என்றழைக்கப்பட்ட குருமார்கள் வீரத்திலும், மதிப்பிலும் புகழ்வாய்ந்தவர்களாக இருந்திருகிறார்கள். கி.மு 390 கொலுவா என்றழைபட்ட பிரான்ஸ், ரோம பேரசுடன் போரிட்டு ரோம் நகரை கைபற்றியது. கி.மு 50 ஆம் ஆண்டு ரோம சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசர் ஆல்ப்ஸ் மலையை கடந்து கோல் நாட்டை கைபற்றினான். கொலுவா மக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். ஒரு நாடு இன்னோர் நாட்டை கைபற்றினாள் அந்நாட்டு மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அடிமைகளாகவே இருந்தனர். பெண் அடிமைகள் காம லீலைக்கும், ஆண் அடிமைகள் மற்ற வேலைக்கும் ஈடுபடுத்தினார்கள். ஒவ்வொரு செல்வந்தனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையை பொறுத்தே அவன் மதிப்புடைய செல்வந்தனாக கருதப்பட்ட காலம்...ஜூலியஸ் சீசர், கொலுவா நாட்டை போரிட்டு உடனேயே பிடிக்கமுடியவில்லையாம் பல வருடங்களுக்கு பிறகே இந்நாட்டை கைபற்றினான். இவனின் பிரிசிதிபெற்ற வாக்கியம். "வந்தேன், கண்டேன், வென்றேன்" எனபது.
சுமார் 400 வருடம் இருந்த இந்த ரோம பேரரசு பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் வடக்கு ஐரோப்பா வரை அடக்கி ஆட்சி செய்தது. 4ஆம் நூற்றாண்டில் இருந்த ரோம பேரரசு விழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது அதன் ஏதோ சதிகாரம், மக்களை அடிமைகளாக வைத்திருந்தது, குடி, பெண்களுடன் சல்லாபம் போன்ற என்னற்ற காரணங்களால் தன சாம்ராட்சியத்தை மெல்ல மெல்ல இழந்தது. இதில் இயேசு பிறந்தவுடன் மக்களிடம் ஒரு புதிய எழுர்ச்சி கண்டது . மக்கள் தங்களை உணர ஆரம்பித்தார்கள். ஒரு மதத்தின் குடையின் கீழ் கொலுவா நாடு வந்தது. மக்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்ப திவரமாக முனைந்தனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்துவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. 8 முதல் 12 ஆம் நூற்றண்டு வரை இஸ்லாம் மதம் ஐரோப்பா முழுவதும் பரவ தொடங்கியது. இம்மதம் பரவவிடாமல் கிருஸ்துவ மன்னர்கள், நிலபிரபுக்கள், மத அமைப்புகள் தடுத்திட முனைந்தனர். இதன் விளைவாலே ஏற்பட்டது "புனித சிலுவை போர்" இது பல வருடங்களாக நடந்தது. புனித சிலுவை போர் 1095 முதல் 1270 வரை நடந்தது. அதன் எதிரொலி இப்போது வரை அந்நாட்டில் மறைமுகமாக தொடர்கிறது. தற்போது பிரான்சில் வாழும் இஸ்லாம்
பெண்கள் பார்தா போட தடை விதித்திருக்கிறது. 400 வருடம் இருந்த ரோம ஆட்சியில் அவர்களின் செல்திக் மொழி மறைந்து போயிட்டு இப்போது சில உதிரி வார்த்தைகளே இருக்கிறதாம்..பிரான்ஸ் மொழியில் அதிகமாக லத்தின் மொழின் ஆதிக்கமே இருந்திருக்கிறது. பல்வேறு இலக்கிய நூல்களும் லத்தின் மொழியிலே வந்திருக்கிறது. இம்மொழியில் தொடர்ந்து அக்கால ஸ்பெயின், கோல் வழங்கிய பிரான்சிஸ்யர் என்ற மொழியும் அடங்கி பிரான்ச் மொழியையானதாம். மார்கோபோலோ என்ற வெனிஸ் நகர யாத்திரிகன் சீனா போன்ற கிழக்கு நாடுகளில் பயணம் செய்து இந்நாடுகளின் பெருமைகளை கட்டுரையாக "அதிசையங்களின் புத்தகம்" என்ற தலைப்பில் பிரஞ்சு மொழிலே எழுதினானாம்.
ரூசோ, வால்டேர் போன்ற அறிஞசர்களின் சிந்தனையால், ஏழுர்ச்சி மிகு பேச்சுகளால் மக்கள் புரட்சிக்கு அடிகோலிட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் உலக சரித்திர நிகழ்வான பிரான்சுப் புரட்சி வெடித்தது அப்புரட்சி மக்களிடம் ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது. நெப்போலியன் தலைமையில் புதிய வரலாற்றை படைத்தது. இந்த புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. ஆண்டான், அடிமை நிலைமை மாறி மக்களாட்சிக்கு கொண்டுசென்றது. மன்னர், நிலபிரபுகள், செல்வந்தர்களுக்கு புதிய ஆட்டத்தை காண செய்தது. நெப்போலியனின் படையெடுப்பு, அவன் ஆட்சி முறை மக்களுக்கு துணிவை தந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 14 ஆம் நூற்றாண்டில் 100 வருட போர் நடந்தது. இது ஒரு நூற்றாண்டு போர் என வரலாட்டு அறிஞசர்களால் சொல்லப்படுகிறது. இறுதியில் "ழான தார்க்" என்ற ஆயர்குல பெண் போர்படைக்கு தலைமையேற்று ஆங்கிலரை எதிர்த்து போரிட்டால். அப்போரின் விளைவில் அவள் 1431 ஆம் ஆண்டு உயிருடன் எரிக்கபட்டாள். அதன்பின்னரே இப்போர் முடிவுக்கு வந்தது.
பிரான்ஸ் மொழியை மேன்மை படுத்தும் நோக்கத்தால் 1626 ஆண்டு பல அறிஞ்சர்கள் தலைமையில் லத்தின் மொழி ஆதிக்கம் தவிர்த்து பிரன்ச் மொழியை வளர்க்க வாரம் ஒரு முறை ஒன்றுகூடி மொழி வளர்ச்சியை பற்றி விவாதித்தனர். இவை அந்நாட்டு மந்திரிக்கு தெரிந்து 1636 அரசரின் அனுமதியுடன் பிரஞ்ச அகடெமியாக அங்கீகரிக்கப்பட்டது. பிரஞ்ச அகடெமி 40 உறுபினர்களுடன் செயல்பட்டது. பின்னர் பல துறைகள்களும் இணைந்தன..அப்போது மகளிர் மேம்பாடு உயர்வுநிலை பெற்றிருந்தது மகளிர் மாமன்றங்கள் அதிகம் இருந்தன ஆனால் 1635 ஆண்டில் இருந்து 1980 வரை அகடெமிக்கு பெண்கள் எவரும் உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தது. 345 ஆண்டுகள் பெண்வாடையே இல்லாமல் இருந்த பிரஞ்ச அகடெமி 1980 ஆண்டு, முதல் பெண் உறுப்பினர் "மர்கரீத் யூர்ஸ்னார்" நியமிக்கப்பட்டார். இன்றுவரை அகதெமி சிறப்புடனே நடக்கிறது. தற்போது பிரான்ஸ் உலக அரங்கில் தன்னிறைவு பெற்ற நாடக திகழ்கிறது. அதன் பொருளாதாரம் வளர்ச்சி மேம்பட்ட நிலையில்தான் இருக்கிறது. பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் சபையில் ஜி8 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று. பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
பிரான்சை பற்றிய நான் சேகரித்து எழுதிய எழுத்துகளை வரவேற்றதற்கும், பதிவை பொறுமையாக படித்தற்கு மிக்க நன்றி...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
9 comments:
நண்பரே உங்களின் கடின உழைப்பு தெரிகிறது. அளவற்ற விஷயங்கள் அனைத்து விஷயங்களும் அருமையானவை.
பிரான்சில் இருக்கும் எனக்கு பிரான்சு பற்றிய மேலும் அறிய உதவும் பதிவு!
நல்ல முயற்சி!
நல்ல தகவல் பகிர்வு தல ..pal
பிரான்ஸ் பற்றி ஆர்வத்துடன் தொகுத்த தகவல்கள், அருமை.... தொடர்ந்து இன்னும் நிறைய எழுதுங்க.... தெரிந்து கொள்கிறோம்
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்..
thanks, good information.......
//பிரான்சில் இருக்கும் எனக்கு பிரான்சு பற்றிய மேலும் அறிய உதவும் பதிவு!
நல்ல முயற்சி! // repeat...
உங்கள் முயற்சிக்குபாராட்டுக்கள்.
"பிரான்சில் இருக்கும் எனக்கு பிரான்சு பற்றிய மேலும் அறிய உதவும் பதிவு!
நல்ல முயற்சி!" REPEAT ட்டு
Post a Comment