Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Friday, September 3, 2010

ஓஷோ சொன்ன கதை...


 ஓஷோ சொன்ன கதையின் உள்ளாழம்...

ஒரு பாதிரியார் இரண்டு கிளிகளை வாங்கி அவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு கிறிஸ்துவைப் பற்றிய அழகிய ஸ்தோதிரங்களை சொல்லிக் கொடுத்தார். அவைகளுக்கு அப்படியே சரியாகத் திருப்பி  சொல்லியதை கண்டு எல்லோருக்கும் மிகவும் ஆச்சரியம். அவைகளுக்கு என சிறிய மணி மாலையை  தயாரித்துக் கொடுத்தார். அவைகளை அந்தக் கிளிகள் உருட்டிக் கொண்டே பிராத்தனை செய்யவும் அவைகளுக்கேனே மிகச் சிறிய பைபிளை  தயாரித்து கொடுத்தார். அவைகள் அந்த பைபிளை திறந்து வைத்துக் கொண்டு படிப்பதுபோல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டுவதற்க்கு பயிற்சியும் அளித்தார். அவைகளுக்குப் படிக்கத் தெரியாவிட்டாலும் இன்ன பக்கத்தில் இன்ன செய்தி இருக்கிறது என்று ஏற்கெனவே அந்த பாதிரியார் அவைகளுடைய மூளைக்குள் திணித்துவிட்டார். அந்த பாதிரியார் அந்த பைபிளை புரட்டி பனிரெண்டாவது பக்கம் என்று சொன்னால் அவைகள் அந்த பக்கத்தில் உள்ளவைகளை மனப்பாடமாக ஒப்புவிக்கும்.

அந்த பாதிரியாருக்கு முழு திருப்தி ஆனால் இன்னொரு கிளியை வேறு முறையில் பயிற்றுவிக்க நினைத்தார்.அதாவது பைபிளை புரட்டி பக்கத்தை சொல்லி அவைகள் அதில் உள்ளவை சொல்வதைவிட தானே முழு ஸ்தோத்திரங்களை சொல்லும் படியாக கற்றுக்கொடுக்க  நினைத்தார். கடைக்கு சென்று ஒரு கிளியைத் தேர்ந்தெடுத்தார். அப்பொழுது அந்த கடைக்காரன் உங்களுடைய  ஆசை கண்டிப்பாக நிறைவு பெரும் இந்த கிளி மிகவும் புத்தி கூர்மையுடையது என்று புகழ்ந்தார் .

அவரும் அதை வாங்கி வந்து அந்த இரண்டு கிளிகளோடு சேர்த்து விட்டார். முதலில் உள்ள இரண்டு கிளிகளும் ஆண்கிளிகள் இப்பொழுது வாங்கியது பெண் கிளி இது பாதிரியாருக்கு தெரியாது. அப்பொழுது அந்த இரண்டு ஆண் கிளிகளும் பைபிளை வைத்து கொண்டு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டுயிருந்தது.  இந்த பெண் கிளியை பார்த்த ஒரு ஆண் கிளி மற்றோன்று  ஆண் கிளியிடம் சொன்னது "ஜார்ஜ் முதலில் அந்த மணிமாளையை  தூக்கி ஏறி நாம் கடவுளிடம் வேண்டின பிராத்தனை கடவுளுக்கு கேட்கப்பட்டது" என்று.  

உங்கள் பாதிரிமார்கள் இந்த கிளிகளுக்கு மேல் திறமையுடைவர்கள் இல்லை அவர்களுடைய பிராத்தனை பணம் அதிகாரம் மற்றும் அந்தஸ்துகாகவேதான் அவர்கள் முக  மூடி அணிந்த  அரசியல்வாதிகள்தான் அவர்கள் கடவுளின் பெயரால் அரசியல்தான்  நடத்துகிறார்கள் அரசியல் எப்படி எண்ணிக்கையின் அடிபடையில் இருக்கிறதோ அதைப் போல மதமும் எண்ணிக்கையின் அடிபடையில் சக்தி வாய்ந்ததாக கருதபடுகிறது. இன்றைக்கு 700 மில்லியின் கத்தோலிக்கர்கள்  இருக்கிறார்கள். ஆகவேதான் போப் இன்று மிகவும் மதிப்புவாய்ந்தவராக கருதபடுகிறார்.

ஒவ்வொரு மதமும் இப்படி பல வழிகளில் தங்கள் மத உறுபினர்களது எண்ணிகையை அதிகபடுத்தி கொள்ளவே நினைக்கின்றன. ஒரு முகமதியன் நான்கு பெண்களை மணந்துகொள்ளலாம் இதனால்  வருடத்திக்கு 4 குழந்தைகளை அவனால் உண்டாக்க முடியும். இந்த முறை மிகவும் வெற்றியடைந்தது இவர்கள்தான் இன்று உலகத்திலே கிருஸ்தவ மதத்திற்கு அடுத்ததாக  இருக்கிறார்கள்

ஓஷோவின் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



நன்றி: கவிதா பதிப்பகம், சென்னை




என்றும் நட்புடன்:   




(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

5 comments:

ம.தி.சுதா said...

சிந்திக்க வைத்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

தனி காட்டு ராஜா said...

தல ,
இந்த நூறாண்டின் மிக சிறந்த ஞானி ஓஷோ தான் ...
தொடர்ந்து எழுதுங்க ...

ரிஷபன் said...

கதை அருமை. கருத்தை அப்படியே ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ நிச்சயம் சிந்திக்க வைக்கிறது. நாம் பல விஷயங்களில் தடம் புரண்டு போய்விட்டோம். மத விஷயத்திலும்.

Vadamally said...

Ella Noorandukalin Gnani avar

mubarak kuwait said...

osho is nothing, what gnani he is, simply he spoil the culture in America, thatswhy amercial goverment arrest him and put a poision injection