Friday, September 3, 2010
ஏதோ, நம்மால் கொடுக்கும் அன்பளிப்பு மதிப்பான மொய்யாய் மாறியது ஏனோ..
தமிழக குடும்ப விசேசங்களில் விசேசத்திற்கு வருபவர்கள் நிகழ்சிகளை பார்த்துவிட்டு சாப்பிட்டு கடைசியா மொய் ஒன்று எழுதுவாங்க இது ஒரு அன்பளிப்பு என்பார்கள். ஆனால் இந்த மொய் என்கிற அன்பளிப்பு இன்று மறைமுக கட்டாய தேவையாக மாறிவிட்டது. "எல்லோரும் விசேசத்திற்கு வந்தார்கள் ரொம்ப சந்தோசமா இருந்தது" எனபது போய் வந்தவர்கள் எவ்வளவு மொய் எழுதினார்கள். என்று பார்க்கும், கேட்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். வந்தவர்கள் ஏதோ அவர்களிடம் இருந்தத பணத்தை மொயயாக கொடுத்துவிட்டு போவார்கள். ஆனால் வாங்கியவர்கள் "படுபாவி போயபோயும் 101 ரூபா எழுதுறான இவன் பொண்ணு, பையன் கல்யாணத்துக்கு விழுந்து விழுந்து செய்தேன் இந்த மொய் எழுதறத்துக்கு இவன் கலயாணத்துக்கு வராமலே இருக்கலாம்" என்று சொல்வார்கள்.
பிறருக்கு பத்திரிகை வைக்கும் போதே நாம் "இவனுக்கு இவ்வளவு செய்தோம். நமக்கு அதைவிட செய்வான்"என்று நினைப்பில்தான் பலபேர் பத்திரிகை வைக்கிறார்கள். ஆனால் அவங்க ஏதோ ஒரு சூழ்நிலையில் மொய் எழுத முடியாவிட்டாலும், வரமுடியாவிட்டாலும் அவங்கள வார்த்தையால வறுத்து எடுப்பது அடுத்த கட்ட காட்சி..இப்படி இதுபோல இருப்பதால் கல்யாணம் மற்றும் மற்ற நிகழ்சிகளுக்கு மொய் எழுதுவது தனி நபர் கௌருவம், மதிப்பு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதனால் முடியாதவங்க யாரிடமாவது கடனாகவோ, இல்லை போட்டுக்கிற நகையை அடமானம் வைத்தோ மொய் எழுதுகிறார்கள்.
சிலபேர் சந்தோசத்திற்கு பலபேர் வேதனைகள் மறைமுகமாக உரிஞ்சபடுகிறது... நான், இது எல்லாம் யோசித்துதான் விசேசம் என்று
செய்தால் யாரிடமும் மொய் வாங்குவதில்லை. மொய்யை யாருக்கும் எழுதுவதுமில்லை. கொடுக்கும் பத்திரிக்கையிலே "நீங்கள் வழங்கும் அன்பளிப்பு, மொய்யை தவிர்க்கவும்...உங்கள் வருகையே எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தரும். நன்றி..! என்று இருக்கும். பல பேர் வரதட்சணை வாங்கமாட்டேன், கொடுக்கமாட்டேன் என்று கொள்கையுடன் இருப்பவர்கள் மொய்யும் வாங்கமாட்டேன் என்று இதையும் இணைத்து கொள்ளலாம்...வேதனையான உள்ளங்களை நினைத்து...!
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
8 comments:
கல்யாணம் என்பதே ஒரு கொடுத்தல்...வாங்கல் என்ற வியாபாரம் தான் தல ...
இப்பவும் சில சமுகத்தில், பேருக்கு அஞ்சு ரூபாய், பத்து ரூபாய் எழுதற வழக்கம் இருக்கு. சாப்பிட்டு வெறுங்கையோட போக கூடாதுங்கிறதுக்காக.
பிறருக்கு பத்திரிகை வைக்கும் போதே நாம் "இவனுக்கு இவ்வளவு செய்தோம். நமக்கு அதைவிட செய்வான்"என்று நினைப்பில்தான் பலபேர் பத்திரிகை வைக்கிறார்கள்//
எல்லாமே நிஜ வாழ்வில் உள்ளவையே நண்பா கலக்குங்க வாழ்த்துக்கள்.
உண்மை,,,,தமிழர்கள் இடையே இது சாபமாகத் தொடர்வதான உணர்வெனக்கு எப்போதும் இருந்து வருவதுண்டு...தேவையான பகிர்வொன்று....
// பல பேர் வரதட்சணை வாங்கமாட்டேன், கொடுக்கமாட்டேன் என்று கொள்கையுடன் இருப்பவர்கள் மொய்யும் வாங்கமாட்டேன் என்று இதையும் இணைத்து கொள்ளலாம்...//
நான் என் கல்யனத்துக்கு வரதட்சனை வாங்கல..”இனா.வாயன்னு” பட்டம்..:0
அது பரவாயில்லை...மொய் வாங்கல.. பாதிப்பேரு கல்யானச் சாப்பாடு சாப்பிடமாட்டேனு திட்டிட்டு போய்ட்டாங்க..., ஒவ்வொரு இடத்துலயும் ஒரு மாதிரி நிகழ்வுகள்.
நீங்க சொல்ல வந்த கருத்து அருமை...
நாமாக விரும்பிச் செய்யலாம் இப்பவும்.. எவ்வளவு முடியுமோ.. நமக்குப் பின்னால் அவர்கள் பேசிக் கொள்வதைப் பற்றி கவலை இன்றி.
மொய் (எ)அன்பளிப்பு தொடர்ச்சியாக வருவது.மாமன் சீர்,அண்ணன் சீர்,அத்தை சீர்,மாமனார் சீர், ஒவ்வொரு விசேஷ நாட்களில் ஒவ்வொருவர் பங்கும் உண்டு. இதை வட்டியில்லாத கடன் என்றும் சொல்லுவது உண்டு. இதை நோட்டுபுத்தகத்தில் குறித்து வைத்திருப்பார்கள்.நாம் வாங்கிக்கொண்டதை திருப்பி கல்யாணம் காட்சிகளில் திருப்பி கொடுக்கிறோம்.இதில் புரட்சி செய்ய இடமேது?
இதிலும் ஒரு பிஸ்னஸ் தந்திரம் இருக்கிறது...
Post a Comment