Thursday, September 2, 2010
நீங்கள் எவ்வளவு காலம் வாழவேண்டும்...
மரணத்தை பற்றிய நினைப்பு பல பேரிடம் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது....சிலபேர் சொல்லுவாங்க "நான் இனிமேல் வாழ்ந்து என்ன சாதிக்கபோறேன் ஒரு 60,70 வருஷம் இருந்தாலே போதும் அதுக்கு மேல இருந்தா மரியாதை இருக்காது" என்பார்கள். ஒரு மனிதனின் சராசரி வயதே 100 வருடம் இதையே யாரும் ஒழுங்கா வாழமுடியல, வாழவேண்டும் என்ற நினைப்பும் இல்லை...
பலபேருக்கு வாழ்வதை விட சாவதே விரும்புகின்றனர்...ஏன் இப்படி.? இந்தியா போன்ற கிழகத்திய நாடுகளில்தான் இந்த நினைப்பு இருக்கிறது. மேற்கத்திய நாட்டில் சாவதை விட வாழ்வதில்தான் முனைப்பு காட்டுகிறார்கள். அவர்களுக்கு மரணம் ஒரு அருவருப்பான செய்தி ஆனால் ஆசியா நாட்டில் உள்ளவர்களுக்கு வாழ்வுதான் மிகவும் அருவருப்பானது...
பெர்னாட்ஷா, ஒரு கிராமத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார் அப்போது அக்கிராமத்தின் இடுகாட்டின் வழியே சென்றுகொண்டிருக்கும் போது அங்கு புதைக்க பட்ட கல்லறை பார்க்க நேர்ந்தது அதில் ஒரு கல்லறையில் பின்வருமாறு எழுதிருந்தது "இவன் இளம் வயதில் அகால மரணம் அடைந்தான். வயது 125 " என்று. இதை பார்த்த பெர்னாட்ஷாவுக்கு மிகவும் ஆச்சர்யம். இந்த கிராமத்தில் 125 வயதுள்ளவனே இளம் வயதில் இறக்கும் போது வயதானவர்கள் இவ்வளவு காலம் இருப்பார்கள். என நினைத்து தன் கடைசி வாழ்நாள் இந்த கிராமத்தில்தான் வாழவேண்டும் என முடிவுகொண்டு தன் மீதி வாழ்நாளை அங்கையே கழித்தார்...
நமக்கு உண்டாகும் மரணம் நோயில் வருவதை விட மனத்தில் உண்டாகும் எண்ணகள்படிதான் உண்டாகிறது. நீண்ட ஆயுளுடன் வாழ்வோம் என நினைத்தால் வாழ்வோம்...போதும் இனிமேல் வாழ்ந்தது என நினைத்தால் சீக்கிரம் வீழ்வோம். இதில் எந்த மாற்றமும் இல்லை...எல்லாமே நாம் நினைக்கும் நினைப்புதான்...
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
5 comments:
படம் சூப்பர் சார்
//மனிதனின் சராசரி வயதே 100 வருடம் இதையே யாரும் ஒழுங்கா வாழமுடியல,//
யோக பாதையில் செல்லும் மனிதன் 160 வருடங்கள் வரை வாழ முடியும் என்று படித்துள்ளேன் ......
தன்னம்பிக்கை தரும் பதிவு..அருமை.
சகோதரம் நான் சாதிக்கும் வரை வாழ வேண்டும்... அதற்கு வழியிருக்க..
நல்ல பதிவு நண்பரே தன்னம்பிக்கை அளிக்கிறது....
Post a Comment