மனித மனதுக்கு எதாவது பற்றிகொள்ளவேண்டும் என்ற ஆவா எப்போதும் உண்டு.. அது ஆன்மிகம் என்று வரும் போது யோசிப்பதே இல்லை காந்தம்போல் சட்டனே பற்றிகொள்கிறது பற்றியும் எரிகிறது செலவில்லாமல் விளம்பரமாக புகழ் தேடிகொள்கிறது. மக்கள் தன்னை தானே அறியாதவரை போலி சாமிகளிடம் ஏமாறத்தான் செய்வார்கள். இதில் மக்களுக்கு ஒட்டுமொத்தமாக சுயநலம்தான்..பொருள் தேடுதல் இருக்கின்றது ஆனால் தன்னைதானே தேடும் சுய தேடுதல் இல்லை...கண்ணை மூடினால் காட்சி தெரியும் ஆனால் கண்களை மூடத்தான் யாரும் தயாரில்லை...கண்ணை மூடினால் மாலையை போட்டு படுக்க போட்டுடறான்..எப்போதும் விழிப்பா இருக்குனும் போல விழுமீன், எழுமீன், கருமீன்.....!
மனம் எனபது எண்ணங்களின் தொகுப்பு அது கடகின்றது,கடந்தது, கடப்பது இவற்றின் மொத்த தொகுப்பு இவையெல்லாம் மூளையில் நினைவாய் பதியபடுகிறது தேவையானபோது மனம் எடுத்து அலசுகிறது..இதில் தனியாக உணர்வு, அறிவு சார்ந்து பிரிவு உண்டாகிறது...உணர்வு இதயம் சார்ந்தது, அறிவு மூளை சார்ந்தது இதில் மனத்திற்கு, அறிவை விட உணர்ச்சிக்கே அடிபணியுது எண்ணமான அறிவையே இன்னும் பகுத்து ஆராயும்போது அது பகுத்தறிவாய் மாறுது.. நம் மனம் சார்ந்த எண்ணகளுக்கு இவ்வளவு வேலை..நம் எண்ணங்களுக்கு வாழ்வு நீடித்து கொண்டே இருக்கும் ஆனால் உடல் மரணத்தை நோக்கிதான் செல்கிறது வாழ்வின் கடைசி தருணம் மரணம் பயமாக காட்சிதரும் அது வாழும் போதும் பல பேருக்கு ஒரு அச்சஉணர்வையே கொண்டதாகவே இருக்கும் வாழ்வு முழுவதும் இருந்துகொண்டே இருக்கும் வாழ்வு முடியும் தருவாயில் அச்சம் அதிகமாகவே இருக்கும் அம்மரண நினைத்து பயப்பட தேவையில்லை அது எத்தகையதாக இருக்கும் என்றால் உங்க சுண்டு விரல் வெட்டுபட்டால் வெட்டுபட்ட இடத்தில்தான் வலிக்கும். துண்டான விரலுக்கு அப்போது வலி இல்லை. உங்கள் கண்முன்னே துண்டான விரலை தீயிட்டு கொளுத்தலாம் உங்களுக்கு வலி இல்லை நீங்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்பீர்கள் இதேபோல்தான் நம் மரணத்திற்கு பின் இந்த உடலை நம் எண்ணங்கள் பார்க்கும். அதை நீங்க மனசாக கூட வைத்துக்கொள்ளாம். மனமே உடலை ஆள்கிறது. உருவம் இல்லாத மனம்தான் வலிக்குது என்போம். இது வேடிக்கைதான்...
வாழ்கையை பற்றி எத்தனை, எத்தனை பேரு சிந்திகிறாங்க அதை பற்றி பல்வேறு தத்துவங்கள் வேற சொல்றாங்க புத்தகம் எல்லாம் போடுறாங்க....ஆனா யாரும் முழுமையாக வாழ்ந்ததாக தெரியவில்லை...பல பேருக்கு பழையதை தூக்கி போடா மனம் இருக்காது பழைய செருப்பனாலும் சரி...அதை கொஞ்சம் நாள் வச்சுருந்து அப்புறம் போடுவாங்க ஏன் என்று கேட்டால் பழச மறக்ககுடாதாம்...ஆனா பிறர் செய்யும் உதவி மட்டும் எப்படி மறந்து போகிறது இது பழசில்லையா....நமக்கு பிறர் செய்யும் உதவியை தவிர மற்ற எல்லா பழசையும் தூக்கி போடுவோம். உங்க சிந்தனை, செயல் எல்லாம் புதுமையாய் இருக்கவேண்டும்....என்றும் பழமையை பேசிக்கொண்டு பழமை வாதியாய் இருக்கவேண்டாம்...
நம்முன்னே பிறர் பேசிகொண்டிருக்கும் போது அவங்க கால்மேல் கால் போட்டால். நம் ஆணவம் சிலிர்த்து ஏழும். அவங்க கால் மேல் கால் போட்டு இருக்க நமக்கு எப்படி மரியாதை குறைச்சல் வருகிறது. ஆனால் வரும். நம் ஆணவம் கேட்காது. நீயும் கால்மேல் கால் போடு" என்று கூறும்....கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தால் நம் ஆணவத்திற்கு ஒரு கம்பீரம் உண்டாகும். பிறரை பார்க்கும் பார்வை வேறுபடும்...பேசும் தோரணை மாறும்...அப்போது உங்கள் ஆணவத்தை நீங்கள் நன்கு உணரலாம்...அதை பார்க்கலாம் அப்போது அதை பாருங்கள் அதுதான் உங்கள் ஆணவம் அது இவ்வளவு நாள் உங்களுக்கு தெரிந்தும் தெரிமல்தான் இருந்தது. அவ்வாணவத்தை அடையாளம் காணுங்கள் ஒருநாள் அது இல்லாமலே போய்விடும். ஆணவம் நம்முள்ளே எப்போதும் ஒரு பெரும் சுவராக காட்சியளிக்கும் அதை தாண்டிவர நம்மை எப்போதும் அது அனுமதிப்பதே இல்லை....அது ஏதாவது ஒரு எதிர் கேள்வியை கேட்கவைத்து கொண்டே இருக்கும்...பிறர் சொல்வது உண்மை இருந்தாலும் பொய்யென்றே வாதிடும்......உண்மையாய் ஏற்றுகொண்டால் ஆணவம் செத்துவிடும்..ஆனால் சாவாமல் உயிர் வாழ்வே ஆணவம் ஆசைபடுகிறது....
ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்கும்போதுதான் நம் சிந்தனை தூண்டபடுகிறது. ஆனால் கேள்விகள் இல்லாமல் பலபேருக்கு எப்படி சிந்தனை தூண்டபடுகிறது. அது சமுதாயத்தை பார்க்கும் பார்வையால் இருக்கலாம், கேள்வியாக இருக்கலாம், கேட்கும் ஒலியில் வரலாம், நுகரும் வாசனையில் உண்டாகலாம். ஒருவரின் சிந்தனை என்பது இன்னொன்றின் தழுவல்தான். நியூட்டனுக்கும் ஒரு ஆப்பில் விழுந்தவுடன்தான் அவரின் சிந்தனை தூண்டபட்டது அவரின் சிந்தனையும் ஒரு பழத்தின் தழுவல்தான். ஏதேச்சையாக சிந்திக்கும் சிந்தனைதான் பெரிய மாற்றங்களை உண்டாக்கிருக்கிறது.
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.)
10 comments:
Romba yosichu eluthi erukenga
nice post
@sakthi
மிக்க நன்றிங்க....
பதிவு நல்லாருக்கு வித்தியாசமான சிந்தனை.
@Riyas
நன்றி, Riyas
நல்ல முயற்சி...நிறைய எழுதுங்கள்..
nallayirukku
@தோழிமிக்க நன்றிங்க....
@சசிகுமார்மிக்க நன்றிங்க....
பதிவு நல்லாருக்கு வித்தியாசமான சிந்தனை
@ magesh
மிக்க நன்றிங்க....
Post a Comment