Pages

Friday, July 2, 2010

போகத்தில் யோகத்தை காணலாம் என்றார்கள். இதை எவ்வாறு சாத்திய படுத்துவது.....இவற்றில் காமம் எனபது மக்களால் தவறாகவே பொருள் கொள்ளபடுகிறது இது எதனால்....


ஆதிகாலம் முதல் இன்றுவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் காமம் ஒரு புரிதல் இல்லாமலே நடைபெறுகிறது திருவள்ளுவர் தனது 1330 குறளாக காமத்து குறளாக சொல்லி முடிக்கின்றார். "ஊடத்தல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முழங்க பேரின்" - ஊடல் நடப்பதற்கு முன் தழுவல் இருக்கவேண்டும் அதுவே இருவரையும் உச்சநிலை வரைக்கும் கொண்டுசெல்லும் என்கிறார்.

ஆண்கள் முன்று நிமிடத்திற்கு ஒரு முறை காமத்தைபற்றி சிந்திக்கிறார்கள். ஆனால் பெண்கள்  ஒரு நாளைக்கு ஏழு முறை காமத்தை பற்றி சிந்திப்பதைவிட இதர பொருட்கள் வாங்க (Shopping) போவதைத்தான் அதிகமாக சிந்திக்கிறார்கள் எனபது ஒரு ஆய்வில் கூறப்பட்டுளது. ஆண்களுக்கு காமம் இச்சை ஊட்டும் படங்களை பார்த்தாலே கிளர்ச்சி அடைவான் ஆனால் பெண்கள் காம பேச்சுகள் கேட்டாலே அதன் மூலம் கிளர்ட்ச்சி அடைவார்கள் என்று அந்த ஆய்வு தெறிவிக்கின்றது. இவையே ஆணும் பெண்ணும் உடலுறவு நடைபெறும்போது ஏற்படும் உள்ளுனர்வு நிலையில் உச்ச நிலை அடையும் போது எண்ணம் மறைந்துபோய்விடுகிறது மனம் வெறுமையாகிறது சில வினாடிகள் காலம் நின்றுபோகிறது விருப்பு, வெறுப்பு அற்ற நிலை ஏற்படுகிறது. சில விநாடிகள் காலம் நிற்கிறது இதை அனுபவம் கண்டவர்கள் உணர்வார்கள். ஒருமுறை இயேசுவிடம் குடியானவன் ஒருவன் கேட்கிறான். "உங்கள் இராட்சியத்தில் என்ன கிடைக்கும்" என்று. இயேசு கூறுகிறார். "என் ராச்சியத்தில் காலங்கள மறைந்துவிடும்" என்கிறார். அவர் சொன்ன இராட்சியம் இன்று கிறிஸ்துவர்களால் வேறுமாதிரி திரித்து கொண்டு செல்லபடுகிறது. காலங்களை மறக்கடிக்க செய்யும் இந்த காமம், எவ்வளவு பெரிய தத்துவாதி, அறிஞன், பேராற்றல் உடையவர்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நான் படித்த அரிஸ்டாடிலின் காமம் பற்றிய குட்டி கதை:

அலெக்சேந்தர் அரிஸ்டாடிலின் மாணவன் என்பது தெரிந்திருக்கும். அலெக்சேந்தர் பிலிஸ் எனும் நாட்டியக்காரியுடன் நெருக்கமாக இருந்த பொழுது, காமத்தின் தீமையை அரிஸ்டாடில் தன் மாணவனுக்கு விளக்கிச் சொல்லி பிலிஸை விட்டு விலகச் சொன்னாராம். அலெக்சேந்தரும் "காமம் என் குறிக்கோள்களை அடைய முடியாமல் செய்து விடும்; இனி நெருக்கமாக இருக்க முடியாது" என்று பிலிஸிடம் சொல்லி விலகினானாம். தன் ஆசிரியரான அரிஸ்டாடிலே சொல்லியிருப்பதால் இனி நெருக்கமாக இருக்க முடியாது என்றானாம். மனமுடைந்த பிலிஸ் பழி வாங்கத் தீர்மானித்தாளாம். அரிஸ்டாடில் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் தினமும் அவர் முன் சென்று நிர்வாணமாகவும் அரை குறை ஆடையுடனும் பல் வேறு நிலைகளில் ஆடியும் பாடியும் அவரைக் கவர முயற்சித்தாளாம். முதலில் பிலிஸைப் பொருட்டாக எண்ணாத அரிஸ்டாடில் நாளடைவில் தளர்ந்து போய், பிலிஸை நாடினாராம். தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு உடைகளைக் களைந்து பிலிஸின் முன்னே சென்று மன்றாடினாராம். அரிஸ்டாடிலின் உடலழகைக் கண்ட பிலிஸும் அவரை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி, ஒரு நிபந்தனை விதித்தாளாம். இருவருமே நிர்வாணமாக இருக்கையில், அரிஸ்டாடில் பிலிஸை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு அலெக்சேந்தரின் தோட்டத்தை வலம் வர வேண்டும் என்பதே நிபந்தனை. அரிஸ்டாடில் தயங்காமல் உடனே அவளுடைய உடைகளைக் களையச் சொல்லி, பிலிஸை முதுகில் ஏற்றிச் சுமந்து தோட்டத்தை வலம் வந்தாராம். பிலிஸ் கேட்டுக் கொண்டிருந்தபடி அலெக்சேந்தர் அங்கே வந்து நின்றதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆடை துறந்தது மட்டுமில்லாமல், தன்னைத் துறக்கச் சொன்ன அதே பெண்ணை உடையில்லாது உப்பு மூட்டைத் தூக்கி வந்த ஆசிரியரைக் கண்டானாம்! அரிஸ்டாடிலுக்கு வெட்கமாகி விட்டதாம். ஒரு கணம் யோசித்த அலெக்சேந்தர், "நீங்கள் சொன்னது சரிதான் குருவே. காமம் படுத்தும் பாட்டை இப்போது நன்றாகப் புரிந்து கொண்டேன்" என்று பெருந்தன்மையுடன் அரிஸ்டாடிலிடம் சொன்னாலும் அன்றிலிருந்து அவரின் மாணவனாகப் பழகுவதை நிறுத்திக் கொண்டானாம்.

சொல்லுதல் யாருக்கும் எளிவனாம் ஆனால் சொல்லிவண்ணம் செயல் எனபது வெறும் தண்ணீரில் எழுதப்பட்ட வாக்கியம்தான். காமத்தை அடக்கு பிரமட்சர்யம் என்ற காம கோட்பாடுகள் எல்லாம் மதங்கள் சார்ந்தே வந்துள்ளன இதில் எல்லா மதங்களும் உட்பட்டே உள்ளது. காமத்திற்கு எதிரான நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.....

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:          

22 comments: