பலபேர் மரணத்தையும், வாழ்கையின் ஏற்படும் சலிப்பு பற்றியே நினைக்கிறார்களே..ஏன்.?
வேதனை ஏன் உங்களுக்கு எல்லோருக்கும் எப்போதும் மரணத்தை பற்றியே சிந்தனை...என்ன வாழ்வு வாழ்ந்தீர்கள். வாழ்கை எனபது மழலையின் சிரிப்பு போன்றது கள்ளம் கபடம் அற்றது...வாழ்ந்தவர்களுக்கே அதன் அழகு புரியுமே....ஒரு முறை வாழ்ந்து பாருங்கள்...! மறிப்போம் என்ற எண்ணம் வராது...வந்தாலும் அது மரித்தல் ஆகாது...தூங்கி எழுவது போன்றது மரணம்..!
பிட்சைகாரர்களிடமே பிச்சை கேட்பவர்கள் யார்...?
சென்னையில் மின்சார ரயிலிலே கண்ணு தெரியாத பிச்சைகாரர்கள் பிச்சை எடுக்க பாடுகிறார்கள். "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னைகையை கண்டேனே..."என்று சோகம் ததும்பிய முகத்துடன் பாடுகிறார்கள். இன்னொரு முஸ்லிம் பிச்சைகாரர் பாடுகிறார். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டு பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.."என்று மூடர்கள் முன்னே இல்லாத இறைவனை நினைத்து பாடுகிறார்கள். வறுமை உள்ள நாட்டில் தான் வள்ளல்கள் பிறப்பார்கள். அவர்கள்தான் அனாதைகளுக்கு விருதளிக்க மற்ற நாட்களை விடுத்து பிறந்தநாளில் செல்வார்கள் புண்ணியம் தேட..! மற்றும் நான் ஒரு வள்ளல் என்று விளம்பர புகழ் தேட..! இந்தியாவில் பிட்சைகாரர்களும், தொழுநோய்காரர்களும் அனாதைகளும் இல்லாமல் இருந்துதிருந்தால் அன்னை தெரசா போன்றவர்கள் புனிதர்கள் ஆகாமலே போயிருப்பார்கள். சில பேர் போற்றி புகழ்வதற்கு பலபேர் ஏழ்மை காரணமாய் இருக்கிறது.
எது முக்கியம்...?
பசித்தவனுக்கு முதலில் உணவுதான் முக்கியம்...உபதேசமோ, கடவுள் பிரார்த்தனையோ முக்கியமில்லை....
நீ நேசிக்கும் உயிர்..?
பார்க்கும் உயிர்கள் எல்லாம் நம் உயிர்போல் நேசி..!
நம் சுதந்திரம் எப்படி கிடைத்தது...?
இந்நாட்டின் சுதந்திரமும் அடி வாங்கிதானே கிடைத்தது. இன்னும் வெள்ளக்காரன் நினைப்பில் நம் அரசியல்வாதியிடம் அடிமைகலாகத்தானே நாம் உள்ளோம். நினைப்பு அப்படியேதான் உள்ளது அதனால் தான் மேன்னாட்டு நாகரிகத்தை மேன்மைபடுத்தி பேசுகிறோம்...நம்மிடம் என்று தனியுமோ இந்த அடிமையின் மோகம்..!
இந்தியாவுக்கு கண்கெட்ட பின்பே சூரிய வணக்கம்....இந்தியாவில் சீனாவின் ஒட்டுமொத்த தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருக்கு...இதுக்கு முத்துமாலை என்று பெயர் வேற...போர் வந்தால் பாதிப்பு அரசியல்வாதிகளுக்கா... இவனுங்கள்ல நம்பி ஓட்டு போட்ட அப்பாவி மக்களுக்குதான்..நண்பர் ஒருவர் கூறினார் "இலங்கை விசயத்தில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை மருமகள் தாலி அறுக்க மகனை கொன்றதுபோல்." உலக நாட்டு அரசியல்வாதிகளுக்கு பைத்தியம் பிடித்தால் உலகம் அழிந்துவிடும்..அறிவு சார்ந்த உலக அறிஞசர்கள் இதை உணரவேண்டும்
ஆணவம் எவற்றால் அடக்கபடுகிறது..?
பெர்ணட்ஷாவிடம் ஒரு பெண் நிருபர் "நீங்கள் ரொம்ப அறிவாளியை இருக்கிறீர்கள். நான் ரொம்ப அழகாக இருக்கிறேன் நாம் கல்யாணம் செய்துகொண்டால் உங்களை மாதிரி அறிவாகவும் என்னை மாதிரி அழகாகவும் ஒரு குழந்தை பிறந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்றாளாம். அதற்கு பெர்ணட்ஷா நல்லாதான் இருக்கும் ஆனால் என்னை போன்ற அழகும் உங்களை போன்ற அறிவாக குழந்தை பிறந்தால் என்ன ஆவது என்றாராம். அறிவின் முன்னே பிறர்கொள்ளும் ஆணவம் அடக்கப்படும்...!
ஐன்ஸ்டன் சொல்கிறார்..?
குவாண்டம் தியரி பற்றி ஒரு பையனுக்கு ஐன்ஸ்டன் விளக்குகிறார். "நீ உன் காதலியுடன் இருந்தால் ஒரு யுகமும் ஒரு நொடிபோல் அதே உனக்கு பிடிக்காத கணக்கு வகுப்பில் நீ இருந்தால் ஒரு நொடியும் உனக்கு மரண யுகம் போல் இருக்கும்" என்றாராம்.
இதே போலதான் காதலும், கல்யாணமும்..இருக்கிறது போல (இது ஒரு அப்பாவியின் புலம்பல்)
காதலா, கல்யாணமா...?
கல்யாணம் செய்வதை விட காதலிட்சுகிட்டே இருக்கலாம் போல கல்யாணம் எனபது சுதந்திரமா திரிந்த பறவையை இறக்கை வெட்டி கூண்டில் அடைத்தது போலத்தான் காதல் ஒரு உயிர் துடிப்பானது கல்யாணம் அந்த துடிப்பை மறைமுகமாக அடக்கிறது. காதல் ஒரு சுகமானதுதான் அதை உணர்ந்தவர்களுக்கே அதன் ஆழம் தெரியும். கல்யாணம் பண்ணாம காதலிக்கலாம் என்று நினைக்கிறேன்....கல்யாணம் என்ற நிலை தேவை இல்லை என்பதே என் நிலை...காதல் எப்போதும் ஒரு சார்ந்திருத்தலை ஏற்படுத்தாது அது ஒரு சுதந்திர உணர்வை தரும். அதனால் வயதனாலும் காதலிக்கலாம்...காதல் அவர்களின் வயதை இன்னும் அதிகரிக்கும்..
பெண்களின் ஆளுமை எங்கே இருக்கிறது..?
பெண்களை நேரடியாக துன்புறுத்தாத மறைமுகமாக சைட் அடிச்சு ஜொள்ளு விடறவன் ஜொள்ளு விட்டு போறான். இதில் பெண்கள் கோவப்பட தேவை இல்லை என்றே நினைக்கிறேன்...இதில் மறைமுகமாக பெண்களும் அதைத்தானே விரும்புறாங்க...என்று நினைக்கிறேன். ஆண்கள், பெண்களை ஏறடுத்து பார்க்கவில்லை என்றால் அவள் ஆளுமையே ஆட்டம் கண்டுவிடும்...இது பொய் என்று நினைத்தாலும் இதுதான் உண்மை...
பிள்ளைகள் விசயத்தில் பெற்றோர்கள்...?
பெற்றோர்கள் திரைபடம் பார்க்கும் போது படத்தில் நடிக்கும் காதலர்கள் சேரவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவங்க பொண்ணோ, பையனோ காதலித்தால் எதிரியாகி விடுகிறார்களே ஏன்..? இது ஒரே ஓரவஞ்சனை இல்லையா..பெற்றோர்கள் பிள்ளைகள் மனசை என்றும் புரிந்துகொள்ளாவேண்டும்.
மனித இயல்பு மாறுவது எப்படி..?
ஒரு சிலபேர் செய்யும் தவறால் ஒரு இனத்து மக்கள் மேல கோவம் கொள்ள செய்யும் இது மனித இயல்பு...தமிழர்களை கொன்றவன் ராஜபக்ஷே ஆனால் சிங்கள மக்கள் மேல் நமக்கு இன்னும் கோவம் உண்டல்லவா...
மனிதனை முட்டாளாக்குவது எது..?
உலகில் உள்ள எல்லா மதங்களுமே மனிதர்களை முட்டளாக்கவே முற்படுகின்றன. இயற்கையை மீறிய கட்டுபடுத்துதல்தான் எல்லாமதங்களிலும் நடக்கின்றது.
உற்சாகம் எப்படி..வரும்.?
"இந்த நொடியில் உற்சாகமாய் இருங்கள் அடுத்தநொடி உற்சாகம் தானாய் வரும்."
இது என் எண்ணத்தில் தோன்றிய வாசகம். என்னுடைய எல்லா செயலும் இதன் அடிப்படையில்தான் இயங்குகிறது. இது என் அனுபவம் கூட...இது உங்களுக்கு சரி என்றால் ஏற்றுகொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் சிந்தனையில் இருந்து அகற்றிவிடுங்கள். ஏனென்றால் உங்கள் சிந்தையில் இருக்கும் பல குப்பையில் இதுவும் ஒரு குப்பையாய் சேர்ந்துவிடும்.
எது கடந்து போகும்..?
இதுவும் கடந்து போகும் என்பார்கள். எதுவும் இல்லையென்றால் எது கடந்து போகும்...மகிழ்ச்சியை கடக்க மனம் அனுமதிப்பதில்லை துக்கத்தைதான் கடக்க மனம் துடிக்கிறது...மகிழ்ச்சியும், துக்கமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இதை நாம் புரிந்தால் எதையும் கடக்கவேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் எழாது....அது வருவதும் தெரியாது, போவதும் தெரியாது...வந்தது போலவே சென்றுவிடும்.
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.)
25 comments:
//வாழ்கை எனபது மழலையின் சிரிப்பு போன்றது கள்ளம் கபடம் அற்றது அல்லவா...வாழ்தவர்களுக்கே அதன் அழகு புரியுமே....ஒரு முறை வாழ்ந்து பாருங்கள்...!//
எல்லாம் அழகான கருத்துக்கள்
வடை எனக்கு தான்
@Riyas
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ரியாஸ்...
@சசிகுமார்
வடை மட்டுமா அடையும் உங்களுக்குத்தான் .......
கல்யாணம் என்ற நிலை தேவை இல்லை என்பதே என் நிலை...காதல் எப்போதும் ஒரு சார்ந்திருத்தளை ஏற்படுத்தாது அது ஒரு சுதந்திர உணர்வை தரும். அதனால் வயதனாலும் காதலிக்கலாம்...காதல் அவர்களின் வயதை இன்னும் அதிகரிக்கும்..
தத்துவமழையா!!!
என்ன ஒரு அற்புதமான சிந்தனைகள்.. பாராட்டுக்கள்
@கே.ஆர்.பி.செந்தில்
படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....
@sakthi
இந்த மழை அப்ப அப்ப வந்து போகும்....
நல்ல சிந்தனைகள் குரு.
வாழ்த்துக்கள்
உலகில் உள்ள எல்லா மதங்களுமே மனிதர்களை முட்டளாக்கவே முற்படுகின்றன. இயற்கையை மீறிய கட்டுபடுத்துதல்தான் எல்லாமதங்களிலும் நடக்கின்றது.///
நீங்கள் சொல்வது உண்மை கருத்துக்கள்
கலக்கல் குரு...
@அருண் பிரசாத்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....
@தமிழ் உதயம்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....
@பட்டாபட்டி..
மிக்க நன்றி.....
///இந்தியாவில் பிட்சைகாரர்களும், தொழுநோய்காரர்களும் அனாதைகளும் இல்லாமல் இருந்துதிருந்தால் அன்னை தெரசா போன்றவர்கள் புனிதர்கள் ஆகாமலே போயிருப்பார்கள். சில பேர் போற்றி புகழ்வதற்கு பலபேர் ஏழ்மை காரணமாய் இருக்கிறது.///
புதுமையான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்.
எல்ல கருத்துக்களும் அருமை.
@Jey
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....
ஆணவம் எவற்றால் அடக்கபடுகிறது..?
பெர்ணட்ஷாவிடம் ஒரு பெண் நிருபர் "நீங்கள் ரொம்ப அறிவாளியை இருக்கிறீர்கள். நான் ரொம்ப அழகாக இருக்கிறேன் நாம் கல்யாணம் செய்துகொண்டால் உங்களை மாதிரி அறிவாகவும் என்னை மாதிரி அழகாகவும் ஒரு குழந்தை பிறந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்றாளாம். அதற்கு பெர்ணட்ஷா நல்லாதான் இருக்கும் ஆனால் என்னை போன்ற அழகும் உங்களை போன்ற அறிவாக குழந்தை பிறந்தால் என்ன ஆவது என்றாராம். அறிவின் முன்னே பிறர்கொள்ளும் ஆணவம் அடக்கப்படும்...!
..... அறிவு ஆணவத்தை வளர்க்க கூடாது, தன்னடக்கத்தை வளர்க்க வேண்டும்.... நல்ல மெசேஜ்.
கல்யாணம் பண்ணாம காதலிக்கலாம் என்று நினைக்கிறேன்....கல்யாணம் என்ற நிலை தேவை இல்லை என்பதே என் நிலை...காதல் எப்போதும் ஒரு சார்ந்திருத்தலை ஏற்படுத்தாது அது ஒரு சுதந்திர உணர்வை தரும். அதனால் வயதனாலும் காதலிக்கலாம்...காதல் அவர்களின் வயதை இன்னும் அதிகரிக்கும்..
....... Kamalism? mmmm.....
@Chitraகருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....
@Chitra
பல லிசத்தில் இது ஒரு வகை லிசம்.....
//கல்யாணம் செய்வதை விட காதலிட்சுகிட்டே இருக்கலாம் போல கல்யாணம் எனபது சுதந்திரமா திரிந்த பறவையை இறக்கை வெட்டி கூண்டில் அடைத்தது போலத்தான் காதல் ஒரு உயிர் துடிப்பானது கல்யாணம் அந்த துடிப்பை மறைமுகமாக அடக்கிறது. காதல் ஒரு சுகமானதுதான் அதை உணர்ந்தவர்களுக்கே அதன் ஆழம் தெரியும். கல்யாணம் பண்ணாம காதலிக்கலாம் என்று நினைக்கிறேன்....கல்யாணம் என்ற நிலை தேவை இல்லை என்பதே என் நிலை...காதல் எப்போதும் ஒரு சார்ந்திருத்தலை ஏற்படுத்தாது அது ஒரு சுதந்திர உணர்வை தரும். அதனால் வயதனாலும் காதலிக்கலாம்...காதல் அவர்களின் வயதை இன்னும் அதிகரிக்கும்..//
I AGREE WITH YOU..........
மனது சிந்திக்க ஆரம்பிக்கும் போதுதான் கேள்விகள் பிறக்கின்றன. அதற்காக இத்தனை கேள்விகளா:)ம்ம் சரி சிந்திச்சுக்கிட்டே இருங்க.
கேள்விகளை போலவே பதில்களும் நல்லா இருக்கு.
@Priya
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....
பார்க்கும் உயிர்கள் எல்லாம் நம் உயிர்போல் நேசி..!
:)
@இது நம்ம ஆளு
நன்றிங்க....
Post a Comment