Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Monday, July 5, 2010

உடலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோம்...

                           
உடலும், மனமும்:
  
நம்மில் பலபேர் உடற்பயிற்சி செய்யாமல் உடல் நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். இதில் பல பேருக்கு உடலை பற்றிய நினைப்பே இருப்பதில்லை. அவ்வுடலுக்கு நோயவாய்ப்படும் போதுதான் நமக்கும் ஒரு உடம்பு  இருக்கிறது என்ற நினைப்புவரும் அதுவரைக்கும் மனத்தின் கட்டுபாட்டில்தான் முழு உடலும் இயங்கும். மனது, நில் என்றால் நிற்க்கும் உட்காரு என்றால் உட்காரும். நம் உடல் நோயவாய்ப்படும் போது மட்டும் மனம் சொல்வதை கேட்பதில்லை அப்போது மனமும், உடலுடன் கூடசேர்ந்தே அழும். ஏனென்றால் மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது. உடல் கெட்டால் மனமும் கெடும் ஆனால் இதில் அதிக நேரம் மனம்தான் கெட்டு உடலையும் கெடுக்கிறது. இவற்றில்  மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனமும், உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் செய்யும் செயலும் சிறப்பாக இருக்கும். ஆதலால் முழு ஆரோக்கியத்திற்க்கு முதலில் மனத்தையும், உடலையும் புரிந்துகொள்ளவேண்டும்        

உடலைபற்றிய சிந்தனை: 

உடலை பற்றி நினைப்பு இல்லாதவர்கள் ஒருமுறை அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுவந்தால் தெரியும். நோயாளிகள் எப்படி இருக்கிறார்கள் அவர்கள் நோய் எப்படி இருக்கிறது என்று கண்ணாலே பார்த்துவிட்டு முடிந்தால் அவர்களிடம் பேசிவிட்டும் வரலாம் அது அவர்களுக்கு ஒரு ஆறுதலாகவும் இருக்கும்.  பின் மருத்துவமனையைவிட்டு வெளி வரும்போது பிணவறை பக்கமும் கொஞ்சம் போயிட்டுவரலாம் ஏனென்றால் நமக்கு வாழ்வின் இன்னொரு மறுபக்கம் நிச்சயம் தெரியவரும்..! அப்புறம் என்ன  நாம் ஆரோக்கியம் வேண்டாம் என்றாலும் நம் மனசு பயத்துடன் ஆரோக்கியத்தைதான் நாடும்.

உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்:

நாம் தினமும் பயன்படுத்தும் ஆறாவது விரலான கைப்பேசிக்கு(Mobile Phone) முழு இயங்கு நிலையில்(Charge) இயங்கவைக்கிறோம் ஆனால் நூறு வருடம் வரை வாழக்கூடிய  நம் உடலை ஏன் பாதுகாக்க மறக்கிறோம். நம் உடலை பாதுகாக்க தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயற்சி செய்ய ஒதுக்கலாமே...! ஏன் பணம், பணம் என்று அதன் பின்னாலே ஓடுகிறோம். நம் வாழ்விற்க்கு பணம் தேவைதான் அதைவிட அந்தவாழ்வு வாழ இந்த உடல் தேவை இல்லையா...! இதை ஏன் நாம் மறந்துவிடுகிறோம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நமக்கு உடலை காக்கவேண்டும் என்று நினைத்தால்  உடற்பயிற்சி  கூடத்திற்கு(Gym) செல்லலாம், நடைபயற்சி(Walking) போகலாம், இவைகள் முடியவில்லை என்றால் வீட்டின் மொட்டை மாடியில் போயும் நமக்கு தெரிந்த உடற்பயற்சியை செய்யலாம். நீ ஏன் இப்படி தப்பா செய்றா.? என்று யாரும் கேட்க மாட்டார்கள். நமக்கு தெரிந்தை செய்யலாம். ஆனால் முதலில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதில் மொட்டை மாடி இல்லாதவர்கள் வாடகை வீட்டில் உள்ளவர்கள். உடற்பயிற்சிக்காக காலையில் நேரம் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளவர்கள். தாங்கள் குடியிருக்கும் வீட்டிலே செய்யலாம். வெறும் தரையில் தண்டால் அடிக்கலாம், உட்கார்ந்து எழும் பயற்சி செய்யலாம். குதிக்கலாம், கைய கால முறுக்கலாம், தலைய திருப்பலாம் பரனை(lapt) என்று சொல்ற அதில் கையைவைத்து தொங்கலாம் ஏதோ ஒன்று செய்யலாம். அப்படியெல்லாம் செய்தால் கைபேசிக்கு முழு மின்இயக்கம்(charge) கொடுத்து போல உடம்பு முழு இயங்கு நிலையில்  இருக்கும். அப்புறம் என்ன நம்ம சாலமன் பாப்பையா சொன்னதுபோல் 'இந்த நாள் இனிய நாள்தான்'.      

உடலுக்கு தேவையானவை:

இந்த உடல்  பல கோடிகணக்கான செல்கள் மூலம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதில் தினம் புதிய புதிய  செல்கள் உருவாவதும், வீ ழ்வதுமாக உள்ளது. அந்த செல்கள் உறுதியினை பொறுத்தே உடல் இயங்குகிறது. அவ்வாறு செயல்படும் உடல் நல்ல நிலையிலே இருக்கவேண்டும். அதற்கு எட்டு மணிநேர தூக்கம் இரவில் மட்டும் இருக்கவேண்டும்.  பகல் தூக்கம் 10 மணிநேரம் தூங்கினாலும் உடல் வெப்பநிலை குறையாது ஏனென்றால் பகல் வெப்பமானது உடலுக்கு வெப்பமாகத்தான் இருக்கும். இரவில் சந்திரனின் குளுமையானது உடல் வெப்பநிலையை குறைக்கும் நல்ல தூக்கத்தையும்  தரும்,   நன்கு  காய்ச்சி ஆறவைத்த சுடுதண்ணீர் தினமும் 4 லிட்டர் மேல் அருந்தவேண்டும். பின் உடலுக்கு தேவையான உடற்பயற்சி, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவது.  இவைகளை தினமும் நீங்கள் செயல்படுத்தினால் வாழ்க்கையில் உங்களுக்கு மனக்கவலை இருந்தாலும் நோயுடன் சேர்ந்து ஓடிவிடும்.  இதனால் உடற்பயிற்சியை கட்டாயமாக்குங்கள். உங்கள் உடலுக்கு ஏற்ற ஊட்ட சக்துள்ள உணவுகள் வாங்கி சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உடலை காணுங்கள். ஏனென்றால் இந்த உடல் பிரபஞ்ச சக்தி (இறைவன்) உறைவிடம். அண்டத்தில் உள்ளதே பிண்டம் இந்த பிண்டத்தை பாதுகாப்பது நம் கடமை.


சுத்தமான உணவு உயிரை காக்கும்:

உண்ணும் உணவில் புரதச்சத்து, கொழுப்புசத்து, உயிர்சத்து, உப்புசத்து ஆகியவை இருந்தால்தான் உடல் வளர்ச்சி முழுமையாக இருக்கும்.

புரதச்சத்து: உடலை வளர்க்குடியது. இது பால், பருப்பு, மீன், முட்டை, மாமிசம், பாலாடைக்கட்டி , எண்ணெய் வித்துகள், தானியங்கள், சோயா பீன்ஸ் போன்றவற்றில் உள்ளது.

மாவுசத்து மற்றும் கொழுப்பு சத்து: நம் உடலுக்கு ஆற்றலை கொடுக்ககுடியது இவை தானிய வகைகள், நெய், எண்ணெய், சர்க்கரை, வெண்ணை, முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறால், எண்ணெய் வித்துகள், உணவு தானியங்கள், கிழங்கு வகைகள், வெள்ளம்  போன்றவற்றில்  உள்ளது.

உயிர்சத்துகள்: இச்சத்து நம் உடலை பாதுகாக்ககுடியது இவை பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றில் உள்ளது.
இச்சத்துகள் உடன் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, அயோடின் சத்து வைட்டமின்A, B, C ...., வகைகளான சத்துகளும் வேண்டும். இந்த சத்துகள் எல்லாமே மேலே சொன்ன உணவிலும் உள்ளது.

இதில் எனக்கு தெரிந்த ஆரோக்கிய உணவு குறிப்புகளை சொல்கிறேன்.  இவைகளை முடிந்தவரைக்கும் உண்டு நோய இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது உங்கள் எண்ணத்தை  பொறுத்தே இருக்கிறது.  ஏனென்றால் "எண்ணம்போல் வாழ்வு" என்று விவேகானந்தரே சொல்லிருக்கிறார். இதில் எண்ணம் சார்ந்த மனத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. வாழ்க வளமுடன்...!    

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!



 என்றும் நட்புடன்:       


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை  தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல்  குத்தவும்.)

17 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்டு..ஆரம்பிச்சுடுவோம்....

http://rkguru.blogspot.com/ said...

@பட்டாபட்டி..
வாங்க...... பட்டாப்பட்டி. ஆரபிச்சிங்கனா சந்தோசம்தான்....

goma said...

ஆரம்பிச்சாச்சு.

ஒவ்வொரு உறுப்பும் களைப்படையும் போதுதான் அதன் முக்கியத்துவம் உணரப் படுகிறது.

http://rkguru.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://rkguru.blogspot.com/ said...

@goma
உணர்ந்தமைக்கு நன்றி...

Prasanna said...

நல்ல விளக்கமான பகிர்வு.. முயற்சியாவது பண்ண வேண்டும்..

http://rkguru.blogspot.com/ said...

@பிரசன்னா
உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.....கண்டிப்பாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நிலாமதி said...

மிகவும் பயனுள்ள் உங்கள் பதிவுக்கு நன்றி .

http://rkguru.blogspot.com/ said...

@நிலாமதி
நன்றி...!

swartham sathsangam said...

அவ்வாறே செய்வோம் நண்பரே
நன்றி
உதயகுமார்

எம் அப்துல் காதர் said...

//நாம் தினமும் பயன்படுத்தும் ஆறாவது விரலான கைப்பேசிக்கு(Mobile Phone) முழு இயங்கு நிலையில்(Charge) இயங்கவைக்கிறோம் ஆனால் நூறு வருடம் வரை வாழக்கூடிய நம் உடலை ஏன் பாதுகாக்க மறக்கிறோம்//

உண்மை தான் குரு, மிகச் சரியாச் சொன்னீங்க. வெல்டன்!! நீங்க சொன்னா வேணாம்னா சொல்லப் போறோம்.

தூயவனின் அடிமை said...

நல்ல பயன் உள்ள பதிவு வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அவசியமான பகிர்வு.. நன்றி :)

http://rkguru.blogspot.com/ said...

@swartham sathsangamகண்டிப்பாக செய்யுங்கள்...நன்றி

http://rkguru.blogspot.com/ said...

@எம் அப்துல் காதர்புரிந்தமைக்கு மிக்க நன்றிங்க...

http://rkguru.blogspot.com/ said...

@இளம் தூயவன்மிக்க நன்றிங்க...

http://rkguru.blogspot.com/ said...

@Ananthiமிக்க நன்றிங்க...