Pages

Wednesday, July 14, 2010

என்னுள் தோன்றிய பல கேள்விக்கு நானே பதிலை ஆராய்ந்தேன். இவை சரியா.? தவறா.? எனபது உங்கள் பார்வைக்கே:

 
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பு எது..?

ஆணுக்கும்,  பெண்ணுக்கும்  உள்ள  நட்பு நட்பல்ல...அது  ஒரு  வித  நட்பு முலாம்  பூசப்பட்ட  காமம்  கலந்த  காதல்தான். அது  முதலில் கவர்ச்சியில்தான்  ஆரம்பிக்கிறது. கவர்ச்சி  மெல்ல  மெல்ல  விழுங்கி காதலாய்  வெளிப்படும்.  நம்  மனதுக்கு  எல்லாமே  ஒரு ஈர்ப்பு.  அவ்விர்ப்பு தாயிடம்  அன்பாய்  வெளிபடுகிறது.  மகளிடம்  பாசமாய்  இருக்கிறது. சகோதரியிடம்  அன்பு  கலந்த  ஆதரவாய்  இருக்கிறது.  ஆனால் மனைவியிடமும்,  நமக்கு  பிடித்த  நட்புதான்  நம்புங்கோ...! என்று  சொல்ற பெண்களிடமும்  மட்டும்  அன்பு,  பாசம், நேசம்,  கருணை  இவையாவும் ஒட்டுமொத்தமாய்  வெளிப்பட்டு  காமமாய்  வருகிறது.  இது  உண்மைதான். எல்லோருடைய  ஆணின்  மனதுக்கும்  பெண்ணின்  நட்பு  பொய்  என்றே தெரியும்.  அது  பொய்தான்  என்று  உண்மையாக  ஒப்புகொள்ளமாட்டர்கள்.


தியானத்தை வார்த்தைகளால் சொல்லமுடியுமா..?

தியானத்தை பற்றி விஞ்ஞானமும் அறிந்தவன் பக்கம் பக்கமாக எழுதலாம், சொல்லலாம் ஆனால் உணரமுடியாது. மெயஞானமும் கண்டவன் தியானத்தை உணரமுடியும் ஆனால் சொல்ல தெரியாது. சொன்னால் அது தியானமாகாது. இதில் வார்த்தைகள் அற்ற நிலையே தியானம். உள்ளுணர்விலே ஏற்படும் அனுபவம் அவ்வளவுதான். இதன் தொடக்க ஆரம்பம் இவ்வளவுதான் ஆனால் அதன் எல்லை அதை உணர்ந்தவனுக்கே தெரியும்.


மனங்களுக்கு பிராத்தனை அவசியமா..?

மனங்களை புரிந்தால் மதம் தேவையில்லை. பிராத்தனை செய்வதான மனத்துக்கு ஒத்தடம் கொடுக்கவும் அவசியமில்லை. ஆனால் மனங்களை புரிந்துகொள்ளத்தான் மனம் இடம்கொடுக்க மறுக்கிறது...ஏனென்றால் மனத்தின் உயிரே ஆசைதான்....
   

ஒரு இனத்தின்  மொழி எப்படி புரிந்துகொள்ளவேண்டும்...? 


மொழி  எனபது  ஒரு இனத்திற்கு  அடையாளம்தான். அந்த அடையாளமே வாழும் வாழ்வாகாது நாகரிகம் இல்லாமல் காட்டில் நாடோடியாய் திரிந்த மக்களுக்கு சைகை மூலமே மொழி பரிமாறப்பட்டது. பயம், அன்பு, அதிர்ச்சி, கோவம் போன்ற நிலைகளிலே மனிதனின் வார்த்தைகளாக வரத் தொடங்கின அது ஒரு பொருளுக்கும், உயிர் உள்ளத்துக்கு வார்த்தை பெயர்களாய் ஆனது. ஆது நாளடைவில் செம்மைபடுத்துவரால் செம்மைபடுத்தப்பட்டது. நாம் மொழிகளை மேலோட்டமாய் பார்த்தால் மொழி உணர்வு அதிகமாய் வெறித்தனம்தான் உண்டாகும். உங்க அம்மாவை நீங்க அம்மான்னு சொல்றதால நான் எங்க அம்மாவை அம்மான்னு சொல்றதில்லை அது இயற்கையா நாவில் வரும் முதல் வார்த்தை அந்த குழந்தைக்கு சொல்லவில்லையென்றாலும் அது அம்மா என்றுதான் சொல்லும். இக்குழந்தைக்கு 'அம்மா' என்ற வார்த்தை தெரியவருவது எப்படி...? அது உணர்வு சம்பந்தப்பட்டது. அதற்காக அக்குழந்தை எந்தவித போராட்டமும் செய்யவில்லை நாவில் வரும் வார்த்தையை அனுமதிக்கிறது அவ்வளவுதான்...நம்  மொழிகளின் ஆழத்தை புரிந்துகொள்வோம் அதுனுடன் மல்லுகட்டவேண்டும் என்று நினைக்கவேண்டாம்...


தமிழ் மொழி பேசும் மக்களின் பேச்சு கலப்படம் எப்படி...?

நாம் எல்லோர் எழுதும் கையெழுத்து ஒரே மாதிரியில்லை வேற வேற மாதிரி இருக்கின்றன அப்படியிருக்கும்போது நடைமுறை வாழ்கையில் வாழும் மக்களின் பேச்சுகள் திரிந்து பல மொழி கலப்படம் ஏற்பட்டு ஒரு புதுவடிவாமாக இருக்கிறது. அதுவே அவர்கள் பழக்கமாக இருக்கிறது. இதை வெளியில் இருந்து பார்பவர்களுக்குதான் குறையாக தெரியும் அவங்களுக்கு தெரியாது. எல்லோரும் தமிழை படிந்திருந்தாலே தமிழ் பற்று இருக்கவேண்டும் என்றில்லை படிக்காத பாமரனும் தமிழ் மேல் ஆர்வம் கொண்டவராகத்தான் இருப்பான். படிக்க தெரியவில்லை என்பதற்காக அவர்களை தமிழன் இல்லை என்று சொல்லமுடியாது. தமிழ் மொழியை திரித்து பேசுகிறார்கள் அது அவங்க வட்டார மொழியாய் இருக்கிறது. அது அவங்க நடைமுறை பழக்கமும்கூட...ஒரு மொழியின் பழகத்திற்க்கும், அம்மொழியின் மரபுக்கும் வித்யாசம் இருக்கிறது. ஒரு பேச்சுமொழி இப்படி பேசுறாங்க என்பதால் அதன் மரபு பாதிக்கபடாது. அதுவே எழுத்தில் எழுத்தும்போது மரபோடுசார்ந்துதான் படிக்கும் முறையில் எழுதவேண்டும். நாம் உண்ணும் உணவில் கூட உங்களுக்கு பிடித்த உணவு எனக்கு பிடிக்காது. எனக்கு பிடித்த உணவு உங்களுக்கு பிடிக்காது. இதில் பிடிக்காது போவது ஒருவரின் குறையல்ல...அதனால் ஒருவர் இப்படி பேசுறார் அப்படி பேசுறார் என்பதைவிட அவர் என்ன பேசுறார் என்பதையே பொருள் கொள்ளவேண்டும்.

 

மொழி காக்கவேண்டுமா.? இனம் காக்கவேண்டுமா.?

ஒரு இனத்தை அழித்து மொழியை காப்பதில் என்ன பயன். அம்மொழிக்கு எதற்கு செம்மொழி என்று பெயர்....ஆனால் இதை கட்சிதமாக செய்தார். நம் தமிழின தானைத்தலைவர்: "கருணை இல்லா நீதி"


மற்றவங்க அறிவுரையை நாம் ஏற்றுகொள்ளவில்லை என்றால் "நாய் வாலை நிமிர்த்த முடியாது" என்று சொல்றாங்க ஏன் சொல்றாங்க..?  

நாய் வாலை நாம் ஏன் நிமிர்த்தனும் நமக்கு என்ன பைத்தியமா....ஆனால் நிமிர்த்திதான் ஆகணும்ன்னு சிலபேரு இருக்காங்க அவங்களை என்ன பண்ண்றது......நாய் வால் அப்படியே இருந்தாதான் நாய்க்கு அழகு.....நாம் நாமாகவே இருந்தாதான் நமக்கழகு நாம் இன்னொருத்தர் மாதிரி மாறணும்னு நினச்ச அது எப்படி நல்லா இருக்கும்......நாம் எந்த வடிவத்திலும் மாறாமல்...நம்முடைய மாற்றம் நம் சிந்தனை, செயல் மற்றும் எண்ணங்களை பொறுத்தே இருக்கவேண்டும் அமையவேண்டும்....இது நல்லா இருந்தா ஏத்துக்குங்கோ இல்லனா தூக்கி தூர எரிங்க...இதுவும் உங்க சிந்தனை பொறுத்தே இருக்கவேண்டும்.


 ‎"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை படலாமா"...?

என் கேள்வி "ஏன் ஆசை படக்கூடாது..."


"நதியை கேட்டா நீர் கொள்கிறீர்கள்". -என்று சில பேரிடம் இப்படி ஒரு கேள்வி..?

நீரை நீராய் பார்த்தால் நதியென் கேட்கவேண்டும். நீர் வற்றினால் நதி எங்கே...? இது என் பதில்.


மற்றவங்க வாதம்தான் சரியென்று சொல்றாங்களே இது எதனால்...?

நம் மனதுக்கு யார்மேலாவது சாய்ந்துகொள்ளவேண்டும் என்ற ஒரு ஆவால் எப்போதும் இருக்கும். அது மற்றவருடைய கருத்தாககுட இருக்கலாம். அவங்க, அவங்க கருத்தின் நியாத்தை தெரிபடுத்தலாம். இதில் மற்றவங்க வாதம் சரியோ, தவறோ அது அவங்க நிலைப்பாடு....சரியென்றால் மேற்கோள்காட்டி பேசலாம் அது தவறில்லை.......ஆனால் நான் பிடிச்ச முசலுக்கு மூணு கால் என்றால் ஒன்னும் பண்ணமுடியாது...


பத்தினிக்கும், மழைக்கும் என்ன சம்பந்தம்..?

‎"பெய்யென்றால் பெய்யும் மழை" என்று பத்தினி சொன்னால் மழை பெய்யுமாம். பத்தினியாய் இருக்குறதுக்கும் மழை பெய்யரதுக்கும் என்ன சம்பந்தம். அது பெய்யும் போது பெய்யபோகிறது. அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்....இப்படிதான் அதிகம் பேரு சம்பந்தம் இல்லாம முடிட்சுபோடுறாங்க....


நம் செயல்  எதன் அடிப்படையில் தீர்மானிக்க படுகிறது..?


நாம எந்த வேகத்தில் பந்தை சுவற்றில் அடிக்கிறோமோ அதே வேகத்தில்தான் பந்து நம்மை நோக்கி வரும்....நாம் செய்யும் செயலும் இதன் அடிப்படையில்தான் இருக்கும்.....அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி..


எது நிஜம்..?

நாளை எனபது அதுவாக வரபோகிறது. இன்று இப்போதே என்பதே நிஜம். நிஜத்தை விழிப்புடன் வாழ்தால் நாளை என்பதும் இனிதே...!


இந்துமதத்தில் சாமிகள் எத்தனை எத்தனை...?

நம் நாட்டில் தான் படிப்பு ஒரு சாமி காசுக்கு ஒரு சாமி, சண்டைக்கு ஒரு சாமி, செக்ஸ்க்கு ஒரு சாமி இன்னும் பல துறைகளுக்கு ஒவ்வொரு சாமி இச்சாமிகளுடன் சேர்ந்த ஆசாமிகளும் அதிகம் உண்டு. இவ்வளவு சாமி இருந்தும்  மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில்தான்  இருக்காங்க.....


ஜெர்மனியின் ஆட்டத்தை ஒரு ஆக்டோபஸ்  தீர்மானித்ததா...?

ஆக்டோபாஸ், ஒரு ஆட்டத்தை தீர்மானிக்கிறது எனபது எவ்வளவு ஒரு கேவலமான நிகழ்வு இதெல்லாம் எல்லார் மனங்களுக்கு மயில் இறகால் வருடிவிடுற போலதான்....... முட்டாள் இருக்கும் வரை முட்டாளின் செயலும் தொடரும்...தோர்பபோமோ என்று நினைத்தால் வெற்றியடைய வழியை ஆராய்யவேண்டியதுதான்.... விளையாட்டில் முழுமை இருக்கும் போது வெற்றி, தோல்வி என்ற எண்ணமே தேவையில்லை...தேவையில்லை என்று நினைக்கும்போதே வெற்றி தானாய்வரும்....இதுதான் வெற்றியின் சூத்திரம். "தேடுதலை நிறுத்து தேவையானது கிடைக்கும்."


நம் மனதின் முகம் எப்படி..?

நம்  எதிர்பார்ப்புக்கு ஒன்று நடக்கவேணும் எனபது நம்முடைய மனதுக்கு ஒரு வேலையையாய் எப்போதும் இருக்கிறது. அவை நடக்கவில்லை என்றால் அதன் மேல் கோவம்தான். அது பொய்யாக இருக்குமோ என்ற பயம்வேற ...முதலில் அது உண்மை பொய் என்று எதற்கு நம்பவேண்டும். உன் செயலை நீ சிறப்புடன் செய்தால் வெற்றி என்ற சொல்லபடுவது தானாய் வரபோகிறது....
.


பல பேருடைய அறிவுரைகள் நமக்கு பொருந்துமா..?

நம் நண்பர்கள் பல அறிஞ்சர்களின் அறிவுரை, ஆலோசானைகள் எல்லாம் தாரளாமாக சொல்லுவாங்க ஆனால் அதை அவங்க பின்பற்றுனான்களா எனபது சந்தேகம்தான். ஆனா நாம் ரெண்டு காதையும் கொடுக்க தயராயுட்டோம். அறிவுரை சொல்ல அவங்க தயாராயுடுவாங்க...அறிவுரைகள், ஆலோசனைகள் எல்லாம் உங்கள் வாழ்கைக்கு பொருந்துமா என்று பாருங்க இல்லனா தூக்கி தூர எரிங்க பல அறிஞ்சர்களின் அறிவுரைகள் இப்பொழுது இருக்கிற நடைமுறை வாழ்கைக்கு பொருத்தம் இல்லாமல்தான் இருக்கிறது. உங்க அனுபவங்கள் மூலமே வாழ்கை அமையவேண்டும் யாருடைய அறிவுறுத்தல் பேரிலும் இருக்ககூடாது. அது பெத்த அப்பனா கூட இருந்தாலும் சரி....


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:

 

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.)

45 comments: