தந்த்ரா என்றால் என்ன ?
நீ எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள் என தந்த்ரா கூறுகிறது.
இதுதான் அடிப்படை குறிப்பு. முழுமையான ஏற்றுக்கொள்ளுதல்.
முழுமையான ஏற்றுக்கொள்ளுதலின் மூலம் மட்டுமே நீ
வளர முடியும். பிறகு உன்னிடம் இருக்கும் எல்லா சக்திகளையும்
பயன்படுத்து. அவற்றை எவ்வாறு பயள்படுத்த முடியும்
அவைகளை ஏற்றுக்கொள். பிறகு அவை என்ன என்று
கண்டுபிடி. காமம் என்றால் என்ன அப்படி என்றால் என்ன
நமக்கு அதனுடன் பழக்கமில்லை. நமக்கு காமத்தைப் பற்றி
நிறைய விஷயங்கள் தெரியும். அவை மற்றவர்களால்
கற்றுக் கொடுக்கப் பட்டவை. நாம் காம செய்கையை செய்திருக்கலாம்.
ஆனால் ஓரு குற்றவுணர்வுள்ள மனதோடு, அதனை அமுக்கி வைக்கும்
ஆனால் ஓரு குற்றவுணர்வுள்ள மனதோடு, அதனை அமுக்கி வைக்கும்
உணர்வோடு, பரபரப்பாக அவசரஅவசரமாக செய்திருப்போம். இந்த சுமையை
குறைக்க ஏதோ ஓன்று செய்யப்பட வேண்டும். காம செய்கை
அன்போடு செய்யப்படும் செயல் அல்ல. நீ அதில்
மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் அதை உன்னால்
விட முடியாது. நீ மேலும் மேலும் அதை விட முயற்சி
செய்தால் அந்த அளவிற்க்கு ஈர்ப்பு உள்ளதாக அது மாறுகிறது.
நீ அதை ஓதுக்க முயற்சிக்கும் அளவிற்க்கு அது உனக்கு
அழைப்பு விடுப்பதாக நீ உணருகிறாய்.
நீ அதனை ஓதுக்க முடியாது. அதனை ஓதுக்க, அழிக்க முயலும்
இந்த நோக்கம் அதைப் பற்றி விழிப்பு கொள்ளும் விழிப்புணர்வை,
மனதை அழிக்கிறது. எது இதனை புரிந்து கொள்ளுமோ அந்த
நுண்ணுணர்வையே அழிக்கிறது. எனவே காமம் நுண்ணுணர்வு
இன்றியே நடக்கிறது. பிறகு நீ அதனை புரிந்துகொள்ள முடியாது.
ஓரு ஆழ்ந்த நுண்ணுணர்வு மட்டுமே எதையும் புரிந்து கொள்ள
இயலும். ஓரு ஆழ்ந்த உணர்வு – ஆழ்ந்து அதனுள் செல்லுதல்
மூலம் மட்டுமே எதனையும் புரிந்து கொள்ள முடியும்.
நீ ஓரு கவிஞன் மலர்களிடையே செல்வதை போல சென்றால்
மட்டுமே அப்படி சென்றால் மட்டுமே நீ காமத்தை புரிந்துகொள்ளமுடியும்.
நீ மலர்களை குறித்து குற்ற உணர்வு கொண்டால், நீ ஓரு சோலையை
கடந்து செல்லலாம், ஆனால் நீ கண்களை மூடிக்கொண்டு சோலையை
கடப்பாய். நீ அப்போது ஓரு அவசரத்தில், பைத்தியக்காரத்தனமான பரபரப்பில்
இருப்பாய். எப்படியாவது சோலையை விட்டு வெளியேற துடிப்பாய். பிறகு நீ எப்படி விழிப்புணர்வோடு இருக்கமுடியும்
எனவே நீ எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள் என தந்த்ரா கூறுகிறது.
நீ பல பரிமாணங்கள் உள்ள, பல சக்திகளின் ஓரு சிறந்த புதிர். ஏற்றுக்கொள்.
ஆழ்ந்த நுண்ணுணர்வுடன், விழிப்புணர்வுடன், அன்புடன், புரிந்து கொள்ளுதலோடு எல்லா சக்திகளோடும் செல்.
அதனுடன் செல் பிறகு எல்லா ஆசைகளும் அதனை கடப்பதற்க்கு ஓரு வாகனமாக மாறி விடுகிறது.
பிறகு எல்லா சக்திகளும் ஓரு உதவியாக மாறி விடுகின்றன.
பிறகு இந்த உலகமே நிர்வாணா.
நீ பல பரிமாணங்கள் உள்ள, பல சக்திகளின் ஓரு சிறந்த புதிர். ஏற்றுக்கொள்.
ஆழ்ந்த நுண்ணுணர்வுடன், விழிப்புணர்வுடன், அன்புடன், புரிந்து கொள்ளுதலோடு எல்லா சக்திகளோடும் செல்.
அதனுடன் செல் பிறகு எல்லா ஆசைகளும் அதனை கடப்பதற்க்கு ஓரு வாகனமாக மாறி விடுகிறது.
பிறகு எல்லா சக்திகளும் ஓரு உதவியாக மாறி விடுகின்றன.
பிறகு இந்த உலகமே நிர்வாணா.
இந்த உடலே ஓரு கோவில்.
ஓரு புனித கோவில்.
ஓரு புனித இடம்..
ஓரு புனித கோவில்.
ஓரு புனித இடம்..
SOURCE: VIGYAN BHAIRAV TANTRA VOL.1 CHAPTER-2
நன்றி: ஓஷோ இணைய மாத இதழ்
என்றும் நட்புடன்:
3 comments:
நல்லா இருக்கு நண்பா
@rk guruவாங்க நண்பா நீங்கள் ஒருவரது நல்லா இருக்கு என்று சொன்னிர்களே அது போதும் எனக்கு...நன்றி நண்பா
Post a Comment