Tuesday, June 8, 2010
என் எண்ணத்தின் வடிவம் மாறுபட்டது எப்போது....
ஒரு வீரனின் எதிரி யார் என்றே தெரியாமலே இந்திய ராணுவ வீரன் பாகிஸ்தான் வீரனை சுட்டு கொள்கிறான். அவ்வீரனின் வீரத்தை மெச்சி, பாராட்டி பரம்வீர் சக்ரா பதக்கம் கொடுத்து மகிழ்வோம். ஆனால் அந்த ராணுவ வீரன் மனைவியை ஒருவன் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்தால். அவனை, அவ்வீரன் சுட்டு கொள்வான். இப்போது அவனுக்கு பதக்கம் கிடைக்காது. ராணுவ நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும். முகம் தெரியாத ஒரு எதிரியை கொன்றால் பதக்கம். தன் மனைவியை தன் கண் முன்னால் ஒருவன் பலாத்காரம் செய்த எதிரியை கொன்றால் தண்டனை. ஒருவன் சமூகத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம் தவறில்லை ஆனால் தனிமனிதன் தேவைக்கு செய்தால் தவறு இதில் தனிமனித ஒழுக்கம் மட்டும் வேண்டும். இதுபோல்தான் நம் அரசியல் சட்டங்களும் இப்படிதான் இயற்றப்பட்டன இயற்றபடுகின்றன அச்சட்டம் என்றும் தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பது இல்லை. சட்டத்திற்கு இழப்பு கொஞ்சம் ஏற்பட்டால் கவலை இல்லை பேரிழப்பு ஏற்பட்டால்தான் கவலை. "பக்தி உள்ள சமூகத்தில் குற்றங்கள் குறைவாக இருக்கும்" என்று உயர்நீதிமன்ற நீதிபதி. எம். சொக்கலிங்கம் கூறுகிறார்.பக்தி மூலம்தான் ஒருவன் ஒழுக்கம் ஏற்பட்டு அதன் மூலம் சமூக குற்றம் குறையவேண்டுமா..? ஏன் எதையும் பகுத்தறிவு சிந்தனைமூலம் சிந்தித்து ஒழுக்கம் ஏற்பட்டு அதன்மூலம் சமுகத்தில் குற்றம் குறையக்கூடாதா...? இங்கே உழல் செய்யும் அரசுதான் தன்னிடம் வேலை செய்யும் உழியர்கள் கையுட்டல் வாங்ககூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறை என்று ஒரு துறை வைத்துள்ளது. ஒரு சமூகத்தை ஆளும் அரசே ஒழுக்கம் கெட்ட நிலையில்தான் உள்ளது. இவற்றில் சமூக ஒழுக்கம் மட்டும் எப்படி எதிர்பார்க்கமுடியும். அதாவது "நான் அயோக்கியன இருப்பேன் ஆனால் நீ எனக்கு நல்லவனா இரு" என்பதுபோல் உள்ளது. இது தனிநபர் சமூக நிலையில் உள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருந்த கூடியதாகதான் உள்ளது. நீங்களே சொல்லுங்கள் இந்த ஒழிங்கின்மையை களைவது எப்படி...? என்னைபொருத்தவரை பொதுவாழ்வில் உள்ளவர்களும் சமூக நிலையை மேம்படுத்தவேண்டும் என்று ஆர்வம் கொள்பவர்களும் தங்கள் நிலையில் எப்படி இருக்கிறார்கள் என்பதே முக்கியம். அது ஆணானாலும், பெண்ணானாலும் பொதுவானதே. சமூதாயத்தில் சமவாய்ப்பு, சமநீதி கேட்கும் உரிமையுள்ளவருக்கு எதிர்நிலையான கருத்துகளின் உண்மை நிலையை அறியவேண்டும்.
இவற்றினிடையே நாடுகளுக்கிடையான சண்டை, மதங்களுகிடையான சண்டை , இனங்களுக்கிடையான சண்டை, மொழிகளுகிடையான சண்டை, தமிழ் பேசற மற்றும் மற்ற மொழி பேசுற மக்களிடத்திலே ஜாதி சண்டை, ஒரே ஜாதியிலே வர்க்க சண்டை, அந்த ஜாதியில் ஏற்படும் குடும்ப சண்டை அது பங்காளி சண்டையாககூட இருக்கும். இப்படி நித்தம் நித்தம் ஒவ்வெரு நிலையிலும் சண்டை கடைசியாக தனிமனித எண்ணத்திலும் சண்டை அது மனசுக்கும், அறிவுக்கும் உள்ள சண்டை. சண்டையில கடைசி சண்டையாக என்ன இருக்கும் கிரகங்களுகிடையான சண்டை மனித இனம் அழிக்கும் சண்டையாக இருக்கும் அப்போது நம்மிடம் உள்ள எல்லா சண்டையும் முடிவுக்கும் வரும் ஒற்றுமை ஒன்றே இருக்கும். ஏன்னென்றால் பூமி போல மற்ற கிரகத்திலும் மனிதன் போல உயிர் வாழ சாத்தியம் இருக்கிறது என்று விஞ்சானிகளால் ஏற்றுகொள்ளபட்டது. இவற்றில் இதுதான் சிறந்தது, அதுதான் சிறந்தது என்று எப்படி சொல்ல முடியும். இது தான் சிறந்தது என்றால் இன்னொன்று வந்து நிற்கும் அப்போது நான் என்ன மட்டமா.. என்று கேட்கும். இப்படியே பிரிவு இருந்துகொண்டே இருக்கும் இவைகள் எல்லாம் முதலில் புரிந்துகொண்டால் எதிலும் குழப்பம் வராது. ஹென்றி போர்ட் மிக பெரிய சாதனையாளர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் தன சாதனை பற்றி கூறுகிறார். "நான் வாழ்வில் சாதனை செய்யவேண்டும் என்று இரவு, பகல் பாராமல் உழைத்தேன் சாதனை என்ற உச்சியை அடைந்தேன்..ஆனால் உச்சி என்ற ஏணியில் நின்று பார்த்தேன் அதற்கு மேலே ஒன்றும் இல்லை என்று ஆனால் கீழே பார்த்தேன் என்னை போல் மேல வர இன்னும் அதிகம் பேர் முயற்சித்து கொண்டுஇருந்தார்கள் அவர்களுக்கு தெரியாது நான் கண்ட உண்மை என்ன என்று".
இன்று சில பேர் அறிவாளி சொன்னால்தான் மதிக்கபடுகிறது நாலு பேரு உட்கார்ந்து மார்க் போட்டு நம்ம அறிவாளி சொல்ல அவங்க யார்...? நம்ம அறிவு நமக்கு தெரியாத இன்று படிப்பறிவு இல்லாதவன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள்தான் பல பல்கலைகழகங்களில் பட்டைய ஆய்வக படிப்பாய் இருக்கிறது. அறிவை விட புத்தி சிறந்ததாக இருக்கிறது. இன்றைக்கு படிக்கும் படிப்பை விட படிக்கும் பள்ளிதான் பெருமையாக பேசபடுகிறது பெற்றோர்களால் நான் ஜெயலலிதா படிச்ச ஸ்கூல்ல படிக்கிறேன், சென்னைல அண்ணா நகர்ல இருக்கிற DAV ஸ்கூல்ல படிக்கிறேன். என் புல்ல வேலமாள் ஸ்கூல்ல படிக்கிறான் என்று பெருமைபட பேசும் கூட்டம் தான் அதிகம் corporation ஸ்கூல்ல படிச்சும் கலெக்டர் ஆகலாம், கான்வென்ட்ல படிச்சும் கலெக்டர் ஆகலாம் எல்லாம் படிக்கிறத பொறுத்து உள்ளது. ஆடையில்லாத அம்மணமாக இருக்கும் கூட்டத்தில் ஒருவன் ஆடை போட்டிருந்தால் அம்மணமாக இருப்பவர்களுக்குதான் ஆடை போட்டவன் அம்மணமாக தெரிவான் இது ஆடை போட்டவன் குற்றமில்லை. இவை முட்டாளின் நடுவே ஒரு புத்திசாலி இருப்பது போல் இருக்கும்.
எரிமலை வெடிக்கும் போது பல்வேறு பூக்கள் நசுங்கத்தான் செய்யும். யானை வரும் பாதையில் பல எறும்புகள் மிதிபடத்தான் செய்யும். தவறுகள் நடக்குமோ...? மனம் ஏற்றுக்கொள்ளுமோ, எற்றுக்கொள்ளதோ...? என்று எண்ணி நினைத்து கொண்டு இருந்தால் செயல்கள் நடைபெறாமல் போய்விடும். இவற்றில் நடைபெறும் செயல்கள் செயல்அடிபடையில்தான் முடிவுகள் தீர்மானிக்கபடுகிறது. இதில் சாமியோ, ஆசாமியோ, எல்லாம் விதிவழி வந்தது என்றும் கூறுவது வெற்று வார்த்தைகளின் சால்ஜாப்புகள்.
பணத்தால் எல்லாம் கிட்டும் என்று படைத்தவனே உணரும் காலமாக்கி விட்டான் மனிதன். உலக வாழ்வில் அன்பு, தவம் தியாகம் எல்லாம் வெறும் கடை சரக்காகிவிட்டது. என்ன செய்வது, சும்மா இருந்தால் சுரண்டுது எட்டபோனால் எட்டி உதைக்கிது பணம், பணம் இந்த மூன்றேழுத்துதான் உலகம் என்ற நான்கேழுத்தை ஆள்கிறது பராசக்தி படத்தில் கலைஞசரின் ஒரு பாடல் வரிகள் வரும் "ஆரிய கூத்தாடினாலும் தாண்டவதொனே காசு காரியத்தில் கண் வையுடா தாண்டவதொனே முட்டா பயல்கெல்லாம் தாண்டவ தொனே காசு மூழு மூடனாக்குதட தாண்டவதொனே உள்ளே பகை வையுட தண்டவதொனே உதட்டில் உறவாடுடா தண்டவதொனே" என்று இருக்கும். இதில் தற்போது அவர் பாடல் வரிகள் ஏற்றார் போலவே இருக்கிறார். இருக்க இடம் இல்லைனாலும் சாப்பிட சோறு இல்லைனாலும், கட்டிக்க கோவணம் இல்லைனாலும் தன்மானமுள்ள தமிழன் தலைவன் இல்லாமல் வாழமாட்டன்.
அத்தமிழனை மாடு போல இருக்கியே என்று சொன்னால் கோபபடுவார். அதே அவரை நீ பசு போல இருக்கே என்று சொன்னால் அவருக்கு சந்தோசம் தான். இது மனதுடைய வேலையாக மானமாகி போகிறது. ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்தும் போது மனம் அதை கெட்டதாக எடுத்துகொள்கிறது. நாய் மனிதனுக்கு மிகவும் நன்றியுள்ளதுதான். ஆனால் "நீ நாய் போல" என்று சொன்னால். ஒரே கோபம் தான் அதே அவங்களை நீ ஒரு சிங்கம்யா என்று சொன்னால் ஒரே சிலிர்ப்புதான் ஆனால் சிங்கத்தால் மனிதனுக்கு எந்த பயனும் இல்லை அது ஒரு சோம்பேறி மிருகம்.
நாம் உண்மையை பேசவேண்டிய நேரத்தில் பேசித்தான் ஆகவேண்டும் இல்லையென்றால் உண்மை ஊமையாகிவிடும். பேசாமல் ஆணவம் கொண்டிருந்தால் அவ்வாணவம் முதலில் பிறரை அழிக்கும் அதன் பின் நம்மை அழிக்கும்.
இந்த நாளும், எந்த நாளும் இனிய நாளாக இருக்க அந்த இயற்கையை வணங்குவோம்...
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
நட்புடன் உங்கள்:
33 comments:
மனுஷனுக்கு தன்னை மிருகங்களுடன் இணைத்து பேசினால்தான் பிடிக்கும்..
புத்தர் சொல்கிறார் HUMAN HAVE NO SELF NATURE ..
@கே.ஆர்.பி.செந்தில்
நல்ல கருத்திட்டமைக்கு நன்றி...!
மிருகமாய் இருக்கும் மனிதனே...மிருகத்துடன் இணைவதில் தவறில்லை போலும்...
நானும் என்கடமையை முடிச்சிட்டேன் இது நல்ல ஐடியா by
newstamilcinema.blogspot.com
frnd contat me via jeyamaran333@gmail.com email i hav one idea
@Jeyamaran
உங்கள் கடமைக்கு மிக்க நன்றி....
@பார்வையாளன்
மிக்க நன்றிங்க...
நல்ல பதிவு
@soundar
நன்றிங்க....
அருமையான பதிவு. தொடருங்கள். என்னுடைய வாக்கு செலுத்திவிட்டேன்.
அருமை
@ciniposterமிக்க நன்றிங்க...
@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
மிக்க நன்றிங்க...
நல்ல கருத்துக்கள் நண்பரே. உங்கள் தளத்தை வாசித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
@அக்பர்
மிக்க மகிழ்ச்சி
/////////அத்தமிழனை மாடு போல இருக்கியே என்று சொன்னால் கோபபடுவார். அதே அவரை நீ பசு போல இருக்கே என்று சொன்னால் அவருக்கு சந்தோசம் தான். இது மனதுடைய வேலையாக மானமாகி போகிறது. ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்தும் போது மனம் அதை கெட்டதாக எடுத்துகொள்கிறது. நாய் மனிதனுக்கு மிகவும் நன்றியுள்ளதுதான். ஆனால் "நீ நாய் போல" என்று சொன்னால். ஒரே கோபம் தான் அதே அவங்களை நீ ஒரு சிங்கம்யா என்று சொன்னால் ஒரே சிலிர்ப்புதான் ஆனால் சிங்கத்தால் மனிதனுக்கு எந்த பயனும் இல்லை அது ஒரு சோம்பேறி மிருகம்.
////////
வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிந்திக்க தூண்டுகிறது . சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி . இது எனது முதல் வருகை தொடருங்கள் மீண்டும் வருவேன்
//பணத்தால் எல்லாம் கிட்டும் என்று படைத்தவனே உணரும் காலமாக்கி விட்டான் மனிதன். உலக வாழ்வில் அன்பு, தவம் தியாகம் எல்லாம் வெறும் கடை சரக்காகிவிட்டது. என்ன செய்வது, // கருத்துக்கள் ஆழம் மிக்கவை . வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள்
//பணத்தால் எல்லாம் கிட்டும் என்று படைத்தவனே உணரும் காலமாக்கி விட்டான் மனிதன். உலக வாழ்வில் அன்பு, தவம் தியாகம் எல்லாம் வெறும் கடை சரக்காகிவிட்டது. என்ன செய்வது, // கருத்துக்கள் ஆழம் மிக்கவை . வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள்
vote poddachu
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
உங்க மதிப்பு மிக்க கருத்துக்கு மிக்க நன்றிங்க...
@Suren ஓட்டாளித்தமைக்கு மிக்க நன்றிங்க...
@மதுரை சரவணன்
மிக்க நன்றிங்க...
குரு உங்களுக்கும் போட்டாச்சி தமிழிஷ் ஓட்டு. காலநிலை மாறலாம் குரு. ஆனால் இந்த குணம் மனிதனை விட்டு மாறாது போலிருக்கு. மாட்டுக்கு ஒப்பிட்டு அதை ஏன் கொச்சைபடுத்துவானேன்???
@Nishan
கொட்சைபடுத்துவது நம் நோக்கம் இல்லை...nishan கொட்சைபடுத்தபட்டிருகின்றன
ஓட்டாளித்தமைக்கு மிக்க நன்றிங்க...
மனிதாபிமானம் தூங்கி விட்டது தோழா. நல்ல தொரு பதிவு. தொடர்ந்தும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.
@தமிழ் மதுரம்
மிக்க நன்றிங்க...
ரொம்ப நல்லா இருக்கு :)
@பிரசன்னா
நன்றிங்க...
http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
Your comments are highly appreciated. Thanks
கருத்துக்கள் நல்லா இருக்கு.
நல்ல பதிவு தோழரே...
மொத்தத்தில் மனிதன் மனிதனாக இல்லை ....
மனித உருவில் மிருக குணத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்..
நன்றி
பனித்துளி சங்கர் சார் வருகைக்கு நன்றி
Post a Comment