பெண்ணை சம கால தோழரா நினைப்பது என்ன தவறு..! நான் கல்யாணம் தாலி, மெட்டி இவை போன்ற சட்டிகளுக்கெல்லாம் எதிரி என் மனைவியை இவையெல்லாம் கழற்றி ஏறிய சொல்கிறேன். நான் கட்டாயப்படுத்தாமல் ஆனால் இப்போது மாறுகிறார். இது அவர்கள் விருப்பமாக இருக்கிறது. ஒரு பெண் பத்து பேரிடம் படுத்தால் விபச்சாரி என்கிறது சமூகம். அதே பத்து பெண்ணிடம் ஒரு ஆண் படுத்தால் அவனை விபச்சாரன் என்றுதானே சொல்லவேண்டும் ஏன் இவனை ஆம்பிலேடா...அவன் அப்படி இப்படிதான் இருப்பான் என்கிறது. ஒரு பெண்ணுக்கு நாம் தாலி கட்டிவிட்டால் அவள் நமக்கு அடிமை இல்லை. பெண்ணின் உணர்வுகளை புரிந்தவனே ஆண்மகன். சில ஆண்மகன் எப்போதும் ஒரே பார்வையாய் பார்பார்கள் அதிலும் பெண்களை பார்க்கும் பார்வை சற்று வித்தியாசப்படும். அம்மா, தங்கை, தோழி என்று சொல்லி பழுகுவோம். ஆனால் இதில் அவன் நம்மை பார்க்கும் பார்வை சற்று வித்தியாசமாக இருக்கும். தாயின் மடியில் படுபதற்க்கும், தாரத்தின் மடியில் படுபதற்க்கும் வித்தியாசம் இல்லையா... தாயை தாரமாய் நினைத்தால், பேசினால் அவன் பிறந்த பிறப்பு சரியில்லை என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் தெரியாத குருடன் எனக்கு வெளிச்சத்தை காட்டு என்றானாம். இது எப்படி சாத்தியம். அவன் கண்கள் சரியாகட்டும் பின்பு வெளிச்சத்தை அவனே உணர்வான். இது சொல்லி தெரிவதில்லை.
அறிஞர் அண்ணா அவர்களுக்கு புற்றுநோய் வந்து அவர் இறந்தார் இவர் இறப்புக்கு காரணம் இவர் ஒரு நாத்திகவாதியா இருந்தார் பெரியாருடன் இணைந்து கடவுளை பழித்ததால்தான் இவருக்கு புற்றுநோய் வந்தது என்று என் நண்பர்களான ஆத்திகர்கள் சொல்லி கேட்டுருக்கேன். நான் அவர்களிடம் கேட்பேன் "ஆத்திகரான ரமணருக்கு ஏன் புற்றுநோய் வந்தது" என்று பதில் எதுவும் வராது அவர்களிடம். ஆமாம்ல ஏன் வந்தது என்று என்னிடமே திருப்பி கேட்பார்கள். புரிந்தும் புரியாதவருக்கு நான் என்னவென்று சொல்வது. தர்க்கம் என்றும் புத்திசாளியானது அது என்றும் முடிவு நிலைக்கே வரவிடாது புரிதல் இருந்தால் எதுவும் ஏற்புடையது.
நாம் உண்ட உணவுதான் மலமாக வெளியேறுகிறது. உணவை ஏற்ற மனது மலத்தை பார்த்து முகம் சுளிக்கிறது. அன்னலட்சுமி, தான்னிய லக்ஷ்மி என்பவள் பின் எப்படி மல லக்க்ஷ்மியானால். ஆணின் உணர்வு பெண்ணால் புரிந்துகொள்ளமுடியாது. அதுபோல் பெண்ணின் உணர்வு ஆணால் புரிந்துகொள்ளமுடியாது. இவை இரண்டும் வெவ்வேறு திசைகள் இவைபோன்றுதான் தர்க்கமும் விவேகானந்தர், அரிஸ்டாட்டில் கருத்துகளும் வெவ்வேறானவை அது எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணையாது. இவர்கள் இரண்டுபேரும் தர்க்கவாதிகளுக்கு ஏற்புடையவர்கள். முடிவில்லாமல் போவதைத்தான் தர்க்கவாதியும் விரும்புகிறான். ஏன்னென்றால் இதில் அவனின் அறிவு மிகைபடுத்தப்படுகிறது அதை அவன் மனமும் விரும்புகிறது. யாருடைய தாக்கம் இல்லாமல் தர்க்கம் செய்யலாம். ஆனால் உங்கள் மனம் அதை அனுமதிக்காது. ஏனென்றால் மனத்திற்க்கு எப்போதும் ஒரு துணை வேண்டும். அறிவு மிகுதியால்தான் மனம் தர்க்கத்திற்கு இடம் கொடுகிறது. இதில் மறைமுகமாக ஆணவம் அறிவின் துணையோடு உள்ளது. அறிவே துணையோடு என்றால்...??? வாதமும் நீண்டதுதான். முடிவில்லாமல்....
தனக்காக வாழும் நெஞ்சங்கள் பலப்பேர் பிறருக்காக வாழ்பவர்கள் சிலபேர். "வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் என் மனம் வாடியது" என்று வள்ளலார் கூறினார். நீங்கள் மனித உயிர்கள் படும் அவலங்களை எண்ணி வேதனை கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிறு எறும்பு கூட தன்னால் துன்புறுக கூடாது என்று பல சரித்திர நாயகர்கள் இருந்தனர். அவர்களுள் புத்தர், ஒரு வேடன் வேட்டையாடிய மானை விடிவித்து மானை கற்றிய கயற்றினில் தன் கழுத்தை கட்டிக்கொண்டு இருந்தார். வேடன் இதை கண்டு மனம் வேதனை கொண்டு புத்தரின் வழியை பின்பற்றினான். இதேபோல் ரமணர் ஒருமுறை வழக்கமாக நடந்து சொல்லும் பாதையில் எறும்பு புற்றை மிதித்து விட்டார். எறும்புகள் களைந்து அவற்றின் இருப்பிடமே கலைந்துவிட்டது. அதை எண்ணி ரமணர் மிகவும் வறுத்தமுற்று என்னால் தான் இவ்வேரும்புகள் துன்புற்றன என எண்ணி அவைகள் தன்னை கடிக்கட்டும் என்று எறும்பு புற்று அருகிலே கால்களை வைத்திருந்தார். கால்கள் மிகவும் ரணமாகி வீக்கமுடன் நடக்கமுடியாமல் இருந்தார். உயிர்கள் துன்புறுவதை வேதனைகொண்டு உணர்வதில் நம்மை விட ஒரு படி மேல்நிலையிலே இருந்தனர். அம்மேன்மக்கள்...ஒரு உயிரை அழித்து இன்னொரு உயிர் வாழ்வதா...? என எண்ணி நான் சுத்த சைவமாக மாறிவிட்டேன். என் பார்வையில் புழுவும் ஒன்றுதான் மனிதனும் ஒன்றுதான் ஒரு புழுவு துன்புற்றாலும் என்மனம் வேதனை அடையும். பலபேர் அசைவம் சாப்பிடுவது வாழ்வில் தவிர்க்க முடியாதது அது வாழ்வின் எதார்த்தமாக இருக்கிறது என்று கூறுவார்கள்.
எதார்த்தம் நாமஏற்படுத்தியதுதான் முயற்சி செய்தால் முடியும் என்றே நினைக்கிறேன். உலகில் நாகரிகமற்ற காட்டுமிராண்டியை வாழ்ந்த மக்கள் தன் இனத்தில் உள்ளவர்களையே நரமாமிசமாக உண்டார்கள். நாகரிகம் மாற, மாற அவர்களின் நாவின் ரூசி மாறுபட்டது. அதனால்தான் கூட அன்பாக வளர்த்த உயிர்களை கொன்று சாப்பிட ஆரம்பித்தார்கள். உண்மையிலே மனிதன் நன்றி கெட்டவன் தான்...எதிர்ப்புகாட்டாத உயிர்களை அழிப்பதில் அவனை விட சிறந்தவர்கள் யாருமில்லை யாராவது ஆட்டுக்கறி மாட்டுக்கறி, கோழிக்கறி என்று சாப்பிட நினைகிரவங்க ஏன் சிங்ககறி, புலிகறி சாப்பிட நினைக்க மாட்டிகிரிங்க ஏன்னா, அதுகிட்ட இவன் போன அதுக்கு இவன் கறியாயுடுவான்....என்ன பண்றது நம்மிடம் எதார்த்தம் இப்படிதான் ஓடிகிட்டு இருக்குது போல... நீங்கள் பல நேரத்தில் சோகமாக இருந்தால் என் கேள்வி. ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் என்று இருக்கும். உலகில் எல்லாமே சந்தோஷபடக்குடியது உங்களுக்கு சோகமான விஷயம் இன்னொருத்தருக்கு சந்தோசம் யாருக்கும் நோயே வரலான டாக்டர் எப்படி சந்தோஷமா இருப்பார். யாருமே சாகலான சவ அடக்கம்பன்றவருக்கு ஏது பொழப்பு நாம செத்து அவங்கல வாழவைக்கிறோம். வாழ்வே ஆனந்தமயமானது வாழ்வை புரிந்தவர்களுக்கு...!
இது என்னுடைய கருத்துகள் யார்மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல...எல்லாருடைய நற்செயல்களுக்கும், குற்றசெயல்களுக்கும் ஈர்ப்புதான் காரணமா இருக்கிறது. இதில் எது சரி, எது தவறு எனபது நம் சிந்தனையை பொறுத்துள்ளது.
நீங்கள் சிந்திக்கும் சிந்தனைகளை எழுத்து வடிவமாக சேமித்து வையுங்கள்...தேவையானவருக்கு தேவைப்படும். எதேட்சியாக சிந்திக்கும் சிந்தனைதான் பெரிய மாற்றங்களை கொண்டுவரும். புவிர்ப்பு விசை கண்ட நியுட்டன் போல்...
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
21 comments:
வோட்டுப் போட்டாச்சுங்க.... கட்டுரை நல்லா இருக்கு.
"ஆம்பிலேடா...அவன் அப்படி இப்படிதான் இருப்பான்"//
ரஜினி வசனம் கேக்கறா மாதிரி இருக்கு...அப்டி இப்டிதான் இருப்பான்...!!
@ஸ்ரீராம்.
அப்படி இருந்தால் என்ன... நாம எப்படி....ஆனா ரஜினி அப்படி..எப்படியோ ஓட்டு போட்ட ஸ்ரீராமுக்கு நன்றி...
நண்பா! கட்டுரை அருமை. ஜனநாயக கடமையை நிறைவேற்றியாச்சு.
@தமிழ் மதுரம்
உங்கள் கடமைக்கு என் நன்றிகள் ..நன்பா
ஒரு பெண் பத்து பேருடன் படுத்தால் எதற்காக விபசாரி என்று சொல்ல வேண்டும்? பெண்ணின் விருப்பம் என்று விட வேண்டியது தானே?
ஆத்திக நாத்திக வாதங்கள் எல்லாமே சுயநல சந்தர்ப்பவாதம் தான் என்று நினைக்கிறேன் - வாதிப்பவர்கள் மனிதர்கள் தானே?
@அப்பாதுரை
ஆண் போல் பெண்ணின் விருப்பமாய் விட்டால் பெண்ணுக்கு சந்தோசம்தான் ஆனால் எதிர்ப்பு .... எல்லா நிலையும் விவாதங்களுக்கு உட்பட்டதுதான் இதில் ஆத்திகம், நாத்திகம் எதற்கு...
கருத்து பகிர்தமைக்கு மிக்க நன்றி..!
நல்லாயிருக்கு பாஸ்.. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி பாருங்க.. அதோட கொஞ்சம் கோர்வையாவும் எழுதினா இன்னும் நல்லாயிருக்கும்..:-)))
@கார்த்திகைப் பாண்டியன்
google transliterate முலம் எழுதுகிறேன் அதனால் தான் சிறு எழுத்து பிழைகள் வருகிறது. வரும் பதிவுகளில் பிழை வரமால் இருக்கும்...இது ஏற்கனவே சிந்தித்த வாக்கியங்கள் மொத்தமாக தொகுத்தது....
கருத்து பகிர்தமைக்கு மிக்க நன்றி..!
நல்லா இருக்கு
@ஷஸ்னி
மிக்க நன்றி..!
நல்லா இருக்கு நண்பரே , தொடர்ந்து எழுதவும் . உங்கள் புகழ் மென்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@சசிகுமார்
உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்கு நன்றி...சசி
நல்ல பதிவு...
நாம் வாழ்வதற்காக சாப்பிடலாம்...
சாப்பிடுவதற்காக வாழ்பவர்களை நாம் திருத்த முடியாது...
- ஆகாய மனிதன்
குரு சார்,
நான் சிறுவன், உங்களுக்கு ஆலோசனை செய்யும் தகுதி எனக்கு உள்ளதா தெரியவில்லை. எனினும்....
நான் கா.பாண்டியன் கருத்துக்களை வழி மொழிகிறேன்.
உங்களது...நல்ல சிந்தனை, ஆனால் எங்க தலைவர் கமலோட ஆளவந்தான் பார்த்தாப் போல இருக்கு. நிறைய கருத்துத் திணிப்புகள். இருப்பினும், மன ஓட்டத்தை பதிவு செய்த நேர்மையைப் பாராட்டுகிறேன்.
மேலும் உங்கள் கேள்வி சில இடங்களில் நியாயமாக இருந்தாலும், கேட்கும் முறையில் நேர்த்தி ஏற்படுத்தி கொள்ள வேண்டுகிறேன்
Nee un wife-kku JAALRA podura case-a?
ippadi pathivu potta thaan ponnunga unnoda blog padichu reply pannuvaanga-nu ninakkura alpha putthi-ya?
kaala kodumai-da machaan
nalla iru
@unmai tamilan நீங்க எல்லாருக்கும் புரியமாதிரி தமிழ்ல கேட்டுறிருக்கலாம். இந்த கட்டுரையின் தொடக்கத்திலே என் கருத்து ஆரம்பிக்குது "பெண்ணை சம கால தோழரா நினைப்பது என்ன தவறு..." - இது போல் என் மனைவியும் தோழியாய் நினைக்கும் போது நான் ஏன் ஜால்ரா போடணும் 8 பேர் கருத்து வழங்கி இருக்கிறார்கள் அதில் ஒருவர் மட்டும் தான் பெண் மற்ற எல்லாரும் ஆண் நீங்க சொல்றத பார்த்த பெண்கள் அல்லவா அதிகமா இருக்கவேண்டும். நீங்க உண்மை தமிழனாய் இருந்தால் இது யார்மனதையும் புண்படுத்துவது என் நோக்கமாக இருக்காது. நம் எண்ணங்கள் மற்றவரிடம் சென்றடையவேண்டும் இவைதான் என் புத்தியாய் இருக்கிறது. நீங்கள் சொல்ற அல்ப புத்தி உண்மை தமிழனாய் இல்லாதவருக்கு இருக்கும் என்று நினைக்கிறன்.
@கிரி
கிரி, தவறை சுட்டி காட்டுவதில் சிறியவர்கள், பெரியவர்கள் பேதம் எல்லாம் கிடையாது. அப்பனுக்கு, சுப்பன் பதில் சொன்ன புராணங்கள் எல்லாம் இருக்கிறது. தோழர். பாண்டியனுக்கு அளித்த பதிலே உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். "google transliterate முலம் எழுதுகிறேன் அதனால் தான் சிறு எழுத்து பிழைகள் வருகிறது. வரும் பதிவுகளில் பிழை வரமால் இருக்கும்...இது ஏற்கனவே சிந்தித்த வாக்கியங்கள் மொத்தமாக தொகுத்தது வழங்கியுள்ளேன்." இந்த 'வைரம்' உங்களை போன்றோர் பட்டை தீட்டம் போதுதான் ஜொலிக்க ஆரம்பிக்கும் என்றே நினைகிறேன். பட்டை தீட்டுவதற்கு நீங்கள் தயார் என்றால் ஜொலிக்க நான் தயார். உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்கு நன்றி...கிரி
@ஆகாயமனிதன்..
உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்கு நன்றி...
பதில் சொல்லத் தெரியாதபடியான கேள்விகள் என்றால் எல்லோரும் நம்மை தவிர்ப்பார்கள்
வசமாக மாட்டிக் கொண்டால் தவிப்பார்கள்
Post a Comment