Thursday, October 21, 2010
'கெட்ட' வார்தையிலே திட்டிபுடுவேன்....
ஒரு வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லும்போது மனம் அதை ஏற்காமல் எரிச்சல் அடைகிறது. நாளடைவில் அது கெட்டவார்த்தையாக மாறுகிறது...நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் சொன்னது. "ஒருத்தனை நீங்கள் மாடுபோல இருக்கியே என்று சொன்னால் கோவபடுவான் அதுவே அவனை நீ ஒரு பசு மாதிரிப்பா...என்றால் ரொம்ப சந்தோசபடுவான் ஆனால் பசுவும் ஒரு மாடுதான் என்று அவன் உணரமாட்டான்..."
இதில் மாடு என்ற வார்த்தை பலபேருக்கு கெட்டவார்த்தையாகவே ஆகிவிட்டது..அதுபோலதான் நாய், கழுதை, பண்ணி இதெல்லாம் மனிதனை பார்த்து மிரளதுங்க அதனால் இவைகள் எல்லாம் ஏலனமாக மற்றவர்களை திட்ட பயன்படுத்துகிறான்...அதே அவங்களை சிங்கம், புலி, சிறுத்தை என்று சொன்னால் ஒரே சிலிர்ப்புதான்.... மனம் சார்ந்த மனிதன் என்றுமே கேவலமானவன்...
உடம்பிலே அதிகமாக கை படாத இடமெல்லாம் கூச்சம் என்றதில் அவ்வுருப்பு எல்லாம் கெட்ட வார்த்தைகளாய் மாறிவிட்டது. ஆண் குழந்தைகைங்க அவன் பெல்லாவில், குஞ்சி (இது ஆண் உறுப்பு - இது இலக்கிய வார்த்தை இல்லை சென்னை லோக்கல் வார்த்தை) அக்குழந்தை கைவைத்தால் அதை பார்பவர்கள் அக்குழந்தையை "ஏன் அதுல கைய வைக்கிற..." என சொல்லி அடிப்பார்கள்....இதில் அவங்க எண்ணத்தின் பார்வை சரியானது இல்லை. குழந்தை அவன் உறுப்பை தொட்டு பார்த்து கொள்கிறான். அவ்வுறுப்பின் உணர்வினை அவன் உணர்கிறான். இதில் அவனின் புலன் உணர்வு முழுமை அடைய விரும்புகிறது. இதை அறியாமல் அவன் கையை தட்டிவிடுகிறார்கள் அவனின் புலன் உணர்வின் அறிவு முழுமை அடையாமலே குறுகி போய்விடுகிறது...நாளடைவில் அவன் வாழ்நாள் கவனம் எல்லாம் அதுமேலையே இருக்கும்...நாளடைவில் அவன் வளர்ந்து காமபசி அதிகமாகி கற்பழிப்புக்கு தயாராகிவிடுவான். இதில் அவனின் கற்பழிப்புக்கு சமுகம் சார்ந்த ஒழுங்கினமும் காரணமாக இருக்கிறது.
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
19 comments:
சிந்திக்கத் துண்டிய ஒரு அருமையானப் பதிவு நண்பரே . முதலில் நான் தலைப்பை பார்த்ததும் எதோ என்று நினைத்தேன் முழுவதும் வாசித்தப்பிரகுதான் உணர்ந்தேன் பதிவின் சிறப்பை . நகைச்சுவையும் கலந்த எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி
என்னது யாராவது திட்டீட்டாங்களா சின்ன பதிவா இருக்கு குரு..!!!
nice
//மனம் சார்ந்த மனிதன் என்றுமே கேவலமானவன்...//
மனிதன் என்றாலே மனம் சார்ந்து செயல் படுபவன் என்று தானே அர்த்தம் தல ....
எல்லா வார்த்தையும் நல்ல வார்த்தை ஆகி விட்டால் எப்படி திட்டுவது ?
இங்கிலீஷ் -ல தான் திட்டனுமோ ??
அருமையாக உள்ளது!
ஐ நான் தான் முதல்ல வந்தேன்
குரு சார் , அருமையான கோணத்தில் யோசித்து உள்ளீர் , நீங்கள் சொல்வது எல்லாம் எதார்த்தமான உண்மை
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)////
ஒரு ஒட்டு பெட்டிய கூட காணோம்
நூற்றில் ஒரு வார்த்தை...
மிக சிறந்த பதிவு.. உங்கள் போல் சிறந்த பதிவாளர்கள் பலர் கண்களுக்கு தெரிவது இல்லை.. இது வருத்தத்துக்கு உரிய விடயம்
ஜெனித்தா பிரதீப்
நல்ல வார்த்தை
பசு இறைச்சி
மாட்டு இறைச்சி...
கெட்ட வார்த்தை
பசுக்கரி...
மாட்டுக்கறி...
-பசுமாடு
கொன்றார் பாவம் தின்றால் தீருமா ?
ஃஃஃஃஃநாளடைவில் அவன் வளர்ந்து காமபசி அதிகமாகி கற்பழிப்புக்கு தயாராகிவிடுவான்.ஃஃஃஃ
உண்மை தான் சகோதரா...
ஃஃஃஃஃமிக சிறந்த பதிவு.. உங்கள் போல் சிறந்த பதிவாளர்கள் பலர் கண்களுக்கு தெரிவது இல்லை.. இது வருத்தத்துக்கு உரிய விடயம்ஃஃஃஃ
எனக்கும் இது உறுத்தலான விடயம் தான் வாசகர்கள் சினிமா, ஆபாசம், முக்கியமாக பேருக்கப் பின்னால் உள்ள பேர் என்பவற்றைத் தான் அதிகம் விரும்புகிறார்கள்....
என்ன குரு..உடலியல் மருத்துவர் யாரும் சொன்னதா..
ரத்தினச் சுருக்கமாக, குழந்தையின் குறுகுறுப்பில் சிறு உறுப்பை தீண்டுவதைக் கூட சீண்டும் இந்த வயோதிகர்கள் தான் மன வியாதியர்கள்.
அருமை ,சிந்திக்க வேண்டியது
.///நாளடைவில் அவன் வாழ்நாள் கவனம் எல்லாம் அதுமேலையே இருக்கும்...நாளடைவில் அவன் வளர்ந்து காமபசி அதிகமாகி கற்பழிப்புக்கு தயாராகிவிடுவான். இதில் அவனின் கற்பழிப்புக்கு சமுகம் சார்ந்த ஒழுங்கினமும் காரணமாக இருக்கிறது. ////
சமுகத்திற்கு சவுக்கடி கொடுக்கும் சரியான கேள்வி, அருமையான பதிவு தோழரே .............
கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய விடயம். நன்றி
உண்மைதான்..
//என்ன குரு..உடலியல் மருத்துவர் யாரும் சொன்னதா//
மருத்துவர் இதை மறுக்கிறார் குரு. தட்டி விடுவதை கோபமாகச் செய்யாமல் உடை அணிவித்து அந்த பகுதியைத் தொடாமல் இருக்க பழக்க வேண்டுமாம். புலன் உணர்வு இதனால் முழுமை அடைவதில்லையாம்.
அருமையானப் பதிவு நண்பரே
Post a Comment