Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, October 10, 2010

சிரிக்க தெரியாத மனிதர்கள்.."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுகிறார்கலாம்."


ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாமா காண முடியுமா....இதில் நாம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்லி இறைவனை காணுவதர்காகவே ஏழையை ஏழையாய் வைத்திருப்போமா...

இதில் குழந்தை சிரிப்பும் இறைவனின் சிரிப்பாம் சிரிக்க தெரியாத மனிதர்கள் சொல்கிறார்கள். நாம் நாய் நன்றியுள்ளது என்று சொல்கிறோம்.  அதற்கும் சில நேரங்களில் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி போட்டால்தான் இன்னும் நம்மிடம் நன்றி உணர்வுடன் வாலட்டிகொண்டு இருக்கும்...இல்லையென்றால் அதற்கு ஒரு நிலைக்கு மேல் இந்த மனிதர்களுக்கு  நன்றியே  இல்லை இவர்கள்  நம்மிடம் மட்டும்தான்  நன்றியை எதிர்பார்க்கிறார்கள் என்று அதற்கு புரிந்துவிடும. இதுபோல் அறியாத குழந்தையின் சிரிப்பு, சிரிப்புதான்...அக்குழந்தை ஏதோ அறியும் குழந்தையானால் அதற்கு விளையாட ஒரு பொருள் வேண்டும் சாப்பிட உணவு வேண்டும் அதை யார் தருகிறார்களோ அவர்கள் மேல் அதற்கு சிரிப்புடன் கலந்த அன்பு வரும்...அது இறைவனின் சிரிப்பாய் எப்படி மாறும்...அக்குழந்தைக்கு கேட்கும் பொருளையும், நல்ல உணவையும் வாங்கி கொடுக்க முடியாத நிலைதான் இருக்கிறான்  ஏழைகள் பின்  எப்படி குழந்தையிடம் பொய்யாக சிரிக்க சொல்லி அவர்களும் சிரிப்பார்கள்...இதில் என்ன ஒரு வேடிக்கை என்னவென்றால்  இல்லாத இறைவனை எப்படி முன்னிலைபடுத்துவது ...ஆனால் பல பேர் போலியான சுயதேடுதல் என்று சொல்லி முன்னிலைபடுத்தி கொண்டுசெல்கின்றனர். அவை அவர்களுக்கு இறைவன், கடவுள், சாமி, தெய்வம் என்று பல பெயர் கொடுத்து காசு சம்பாதிக்கும் ஒரு  வியாபாரமாக  வைத்திருக்கிறார்கள். இந்த்  நிலைகெட்ட மனிதர்கள்...     

இந்த ஏழை மக்கள் கடவுளிடமும், இவனுடைய அடிமட்ட  ஏழையிடம்  மட்டுமே பேரம் பிரமாதமாக பேசுவான். ஆனால் நம்மை  ஆட்சி அதிகாரத்தில், பண பலம் உள்ளவனிடம் இவன் பேரம் பலிக்காமலே போய்விடும் என்றுமே  ஏமாறுபவனாகவே இருப்பான் ஆனால் இவன்  "நாமும் உஷாராதான் இருக்கிறோம்" என்ற நினைப்பு மட்டும் எப்போதும் வந்துவிட்டு போகும்...அரசியல்'வியாதி'காரன்தான்  புரியாததை புரிந்ததாக காட்டிகொள்வான். .என்ன புரிந்தோம் ஏது புரிந்தோம் என்று கூட அறியாமல் அ..ஆ..ஒ.. ஓ என்று சொல்வதுதான் நமக்கு  ஆச்சர்யமாக உள்ளது. புரியவில்லை என்றால் எனக்கு புரியவில்லை என்று சொல்லவது கூட இல்லை...அரசியல்'வியாதி'காரனைப்போல்  எல்லாம் புரிந்ததுபோல் நடிபவர்கள்தான் பல பேர் இருக்கிறார்கள். இது போல் ஏதுவும் அறியாத பெரும் கூட்டம்தான்... முட்டாள் அரசியல்'வியாதி'காரனை பெரும்பான்மையான ஓட்டுவித்தியாசத்தில் தேர்தெடுக்கிறது...நம்மிடம் என்று தீருமோ இந்த முட்டாள்களின் எண்ணிக்கை...பலரிடம் இருக்கும் பொய்,  அவர்களின் உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு உண்மையுடனே வருகிறது...ஆனால் நாம்தான் பொய்யை உண்மையாக நம்பிவிடுகிறோம்... அதனால் உண்மை எதுவென அறியாமலே போய்விடுகிறது.          

இது போன்ற நிலைகளைத்தான் மார்க்ஸ் சிந்தனைகள் என்றும் நிலைபடுத்தபட்டது. உண்மையை அறியவைத்தது அவரின் சிந்தனைகள் எல்லாம் அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வாதரத்தை மையபடுத்தியே இருந்திருக்கிறது....பசி எடுத்தவனுக்குதான் உணவின் அருமை தெரியும்..அதை எப்பொழுதும் அவன் சிந்தாமல் சிதறாமல்  சாப்பிடுவான். வறுமையில் வாடி வறுமையை பார்த்த மார்க்ஸ் வறுமைக்கான முல காரணங்களை எண்ணினான், அதை செயல் படுத்தினான் எனபது ஆச்சர்யபடுவதற்கில்லை....

எதுவாயினும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்தியாகவேண்டும் இதுதான் மார்க்சும் சொல்வது...தேவைகள் பூர்தியாவதில் இருந்தே  விஞ்சான மறுமலர்ச்சி. கலை, இலக்கியம். மட்டை. மசிரு எல்லாம் கிளர்ந்தெழும் இவையெல்லாம் மக்களின் வாழும் அடிப்படை தேவை பொறுத்து அமையவேண்டும் அதைதான் மார்க்ஸ் எண்ணியது, அவரை பின்பற்றியவர்களும் நினைப்பது....இதில் நானும் அடக்கம்..!

விவேகனந்தர் சொன்னதுதான் நினைவில் வருகிறது...."பசியோடு வருபவர்களுக்கு  முதலில் சாப்பாடு  போடு.. உபசேமெல்லாம் அப்புறம் வைத்துகொள்ளலாம்"

                    
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!





என்றும் நட்புடன்:  



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

14 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇந்த ஏழை மக்கள் கடவுளிடமும், இவனுடைய அடிமட்ட ஏழையிடம் மட்டுமே பேரம் பிரமாதமாக பேசுவான்.ஃஃஃஃஃ
சுடு சோறு எனக்கத் தான் சகோதரா.. நான் சந்திப்பவரில் தங்ளுடைய சமுகப் பொறுப்புணர்ச்சி வித்தியாசமானது....

ஆயிரத்தில் ஒருவன் said...

//இல்லாத இறைவனை எப்படி முன்னிலைபடுத்துவது ...ஆனால் பல பேர் போலியான சுயதேடுதல் என்று சொல்லி முன்னிலைபடுத்தி கொண்டுசெல்கின்றனர். அவை அவர்களுக்கு இறைவன், கடவுள், சாமி, தெய்வம் என்று பல பெயர் கொடுத்து காசு சம்பாதிக்கும் ஒரு வியாபாரமாக வைத்திருக்கிறார்கள். இந்த் நிலைகெட்ட மனிதர்கள்...//பகுத்து அறிந்து இந்த கடவுள் என்ற மூட நம்பிக்கையை விட்டொழித்தால் தான் ஏற்ற தாழ்வில்லா சமுதாயம் மலரும் என்பதில் மாற்று கருத்து இருக்காது.

Unknown said...

உங்களின் பதிவு நன்றாக உள்ளது..
- ஏழையின் சிரிப்பில் இறைவனை யார், எதற்கு காண வேண்டும்...?
அவசியமில்லை, அவரவர் நிலைமையில் இருந்து பார்த்தால் கருத்து மாறுபட்டு தான் இருக்கும்..இவர்கள் விதைக்கப் பட்டவர்கள்....
உலக மக்கள் தொகை அறுநூறு கோடிக்கு மேல்... ௦
இதில் சம பங்கு இவர்களைப் போன்றவர்கள் தான்...
அறியாமை இருக்கும் வரை ஏழ்மை நீடிக்கும்...

Unknown said...

////"பசியோடு வருபவர்களுக்கு முதலில் சாப்பாடு போடு.. உபசேமெல்லாம் அப்புறம் வைத்துகொள்ளலாம்"////இதுதான் உண்மை, இன்றைய தேவையும் கூட

எம் அப்துல் காதர் said...

//அரசியல் 'வியாதி' காரன்தான் புரியாததை புரிந்ததாக காட்டிகொள்வான்.//

இது ஒரு நல்ல உவமை. வாழ்த்துகள் நண்பா!! தொடர்ந்து எழுதுங்க!!

எஸ்.கே said...

சிறப்பான கட்டுரை!!

Unknown said...

சுரண்டல் பெருகி சமூகம் மென்மேலும் கீழே போகிறது ... ஓட்டு மொத்த மாற்றம் அல்லது புரட்சி தேவைபடுகிறது ...

கவி அழகன் said...

அருமையான படைப்பு

சசிகுமார் said...

அந்த குழந்தையை காட்டியிருக்கும் அந்த ஒரு முழம் துணி கூட கிழிந்து இருப்பதை பார்த்தவுடன் கண்கள் கலங்கின.

Thenammai Lakshmanan said...

அருமை குரு..

என்னோட பதிவை பாருங்க..

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புகளை இன்றோ நாளையோ அனுப்புங்க..

அம்பிகா said...

விழிப்புணர்வு பதிவு.

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Anonymous said...

All the powers in the universe are already ours. It is we who have put our hands before our eyes and cry that it is dark.

Where can we go to find God if we cannot see Him in our own hearts and in every living being.
Swami Vivekananda


திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409



http://sagakalvi.blogspot.com/


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

ஜெமினி said...

இப்போதெல்லாம் அரைவேக்காடுகள் அறிவாளிகளாக எண்ணும் காலம். ஒன்றை விமர்சிக்குமுன் அதன் நீள அகலம் மட்டுமன்றி ஆழத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது எந்த சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை பார்க்க வேண்டும்.
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற செய்தியை பரப்ப ஏற்பட்டது இந்த வாசகம். ஏழைக்கு நீ உதவி செய், உன் உதவி கிடைத்ததும் அவன் சிரிப்பான், அந்த சிரிப்பிலே நீ இறைவனைக் காணலாம் என்பது தான் இச்சொற்றொடரின் உண்மை கருத்து.