Saturday, October 2, 2010
காந்தி யாருக்காக பிறந்தார்...
காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.
"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால் காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.
காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம் இல்லாமல் இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார். அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில் உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம் ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...
இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது. பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல் சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...
காந்தியின் மகன் தேவதாஸ் குடிகாரன் என்பதால் இவனுக்கு கல்யாணம் செய்தால் திருந்துவான் என்று கல்யாணம் செய்ய முடிவிடுத்திருகிறார்கள் ஆனால் குடிகார தேவதாசுக்கு பெண் கொடுக்கக யாரும் முன்வரவில்லை அப்போது ரொம்ப துணிச்சலாக தன் பெண் வாழ்வை விட என் பார்பான் இனமும் நமக்கு ஒரு தலைமையும் வேண்டும் என்பதற்காக மூதறிஞசர் என்று சொல்ற ராஜாஜி தன் மகளை தேவதாசுக்கு மனம் முடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். கல்யாணமும் சிறப்பாக,சிரிப்பாக நடந்து சிலவருடம் கழித்து தேவதாஸ் மரணம் அடைகிறான். ராஜாஜிக்கு இதன் மூலம் பெற்ற மகளின் வாழ்க்கை போனாலும் காந்திக்கு சம்பந்தி என்ற உறவு கிடைத்தது. அதன் மூலம் ராஜாஜிக்கு தன் இன மக்களுக்கு "மகளை கொடுத்து இனத்தை காத்த பெருமாகான்" என்ற பட்ட பெயரும் ராஜாஜி கிடைத்தது...
இதனாலையே பாப்பானின் ஆதிக்க சக்திக்கு உட்பட்டு பல ஈ(ஜி)களின் சொல்படி கேட்டும் வாழ்ந்த காந்தி "தன் கொள்கையில் உறுதியானவர், இவராலே நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்க முடியும், கொடுக்கப்பட்டது" என்ற ஒரு திட்டமிட்ட மாயயை பாப்பான்னிய ஆதிக்க சக்தியால் வளர்க்கப்பட்டது, வளர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது ....
காந்தி, அவர் இனம், மதம் சார்ந்த அடிப்படையில் இல்லாமல் இருந்திருந்தால் அவர் உண்மையிலே எல்லா மதத்து மக்களுக்கும் அவர் ஒரு புனித ஆத்மாவா இருந்திருப்பார். ஆனால் ஹே ராம்...என்ற தந்திரத்தை அடிகடி உச்சரித்து நான் இன்னார் மதத்தில் இருந்து வந்தவன் என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டார்...அதனால் அவர் இந்துக்களுக்கு மட்டும் மகாத்தமா....
காந்தின் நிகழ்வின் ஊடே என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
13 comments:
இத்தகவல்கள் எதுவும் இதுவரை நான் அறிந்திறாதது.மிக்க நன்றி பகிர்வுக்கு .
காந்தி குறித்த தங்கள் அளித்த விபரங்கள்
நிஜமா குரு ????
-அன்புடன்
பாபு பழமலை .
காந்தியை சிலருக்கு பிடிக்காது, சிலருக்கு பிடிக்கும். அதற்கான காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்கக் கூடிய பாடங்கள் பல உண்டு. அவர் செய்த தவறை நாம் செய்ய வேண்டாம். அவர் செய்த நல்லதை நாம் செய்யலாம்.
மகாத்மாவின் பிறந்த நாளில் அவரை நினைத்து ஆக்கத்தைத் தந்தமைக்காக நன்றிகள்!
வேற்பட்ட ஒரு பார்வை. உண்மைதான். காந்தியால் சில 'கட்டுக்களை " மீறி நடக்க இயலவில்லைதான்.
தலைவரே தயவு செய்து காந்தியை பற்றி இழிவாக எழுத வேண்டாம்.. நீங்கள் சத்திய சோதனையை முழுதுமாக வாசிக்கவில்லை என்று புரிகிறது ... காந்தி பற்றிய நிறைய விசயங்களை தேடி படியுங்கள் ... அவர் எப்போதும் மகாத்மாதான்...
அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் //
சுய சரிதையில் இதை குறிப்பிட எத்தனை தலைவர்களுக்கு மனம் வரும்>?
நிச்சயமாய் எனக்கும் இது புது தகவல் தான். பகரிந்து கொண்டமைக்கு நன்றி குரு!!
இதுவரை தெரியாத 3 தகவல்கள்.குறிப்பாக காந்தி கணக்கு மேட்டர் சூப்பர்,
சத்திய சோதனையில் கஸ்தூரிபாய்யை
துன்புறுத்துவது அடிப்பது என்று ஒரு சராசரி
இந்தியன் இந்தியச் சூழலில் வழக்கப் பட்டவர்
தான் அவர். மனித பலவீனம் அதை அவர் மனிவியோடு
மட்டும் நிறுத்திக் கொண்டது பெருமையே நாம் படித்தேன் இதை
எனக்குப் பிடிக்காதது மனைவியை அடிப்பது துன்புறுத்துவது பலாத் காரம் செய்வது.
இது தான் அன்றைய பல இந்தியர் வாழ்வு விரும்பியதை அதன் விருப்பம் இலாத போது அடைவது.
அது வண்டில் கால அறிவியல் கற்காலம் போய் வண்டில் காலம் போய்
விட்டுள்ளது. அடுத்து காந்தியின் ஒரு சில போக்கில் எனக்கும் சம்மதம் இல்லை
அவர் அவர் தேடல் தான் அவர் அவர் தெரிவும் எழுத்தும் விருப்பும்.
காந்தி சிற்பாய்க் கலவரத்தில் ஈடு பட்டவர்களை கொல்லும் படி சொன்னார்
வெள்ளையன் அணியில் இருந்த அவன் ஆட்சியை எதிர்த்தவர்கள்
இவர்கள் என் கட்சியில் ஆட்சியில் இருந்தாலும் இவர்கள் இப்படி தான் செய்வார்கள் அதனால்
நான் மன்னிக்க மாட்டேன் என்று தன் நாடவர் பிறநாட்டவர் போராட்ட உணர்வு
இவைதெரியாது அதிகாரி முறைத் தீர்பிட்டார் என்றே நான் சொல்வேன்.
இதை விட M G R மேல் கரணம் அவர் பிரபாகரனிடம் பேசும் போது நான் புரட்சியாக நடித்து இருக்கிறேனே தவிர புரட்சியாக வாழவில்லை அதை
நீங்கள் செய்கிறீர்கள் அதனால் உங்களில் எனக்கு மதிப்பு உண்டு என்றார்.
தினமும் புரட்சிவாதியாய் நடித்துப் பழக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் கற்றுக்கொண்டது. அதே போல் அவரிடமும் காந்தியுடன் கேட்ட கேள்வி போல் அன்றைய அரசு கேள்வி கேட்கும் சந்தர்பம் வந்தது.... அதற்கு அவர் சுபாஸ் சந்திரபோஸ்
புரட்சி வாதி என்றால் பிரபாகரன் புரட்சிவாதி இல்லையென்றால் இருவரும் பயங்கரவாதி என்று கருத்துக் ௬றி மக்களையும் ஆரசையும் தவறு செய்யாமல்
காத்துக் கொண்டார். இத்தனைக்கும் காந்தி வக்கீல் M G R நடிகர். சந்தர்பங்களும்
உலகப் புரட்சியும் மாமனிதர்களும் மேதைகளும். இது தான் புரட்சி பற்றியும்
ஜனநாயகம் பற்றியும் எனது கருத்து.
நன்றி...
http://aagaayamanithan.blogspot.com/2009/09/blog-post.html
//காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம் இல்லாமல் இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார்.//
சூப்பர் தல ...நான் கூட இதை ஓஷோ புத்தகத்தில் படித்தேன் ....இதை படித்த பின்பு காந்தி கூட கடைசி காலங்களில் காம எண்ணத்தால் சிரமப்பட்டு கொண்டு தான் இருந்தார் என்பதை படித்த போது அவரும் நம்மை போன்ற சாதாரண மனிதர் தான் என நினைத்தேன் ....
நீங்கள் என்ன எழுதி உள்ளிர்களோ அது போலவே நானும் கூட ஒரு பதிவு எழுதலாம் என நினைத்தேன் ....
நீங்கள் சொல்வது உண்மைதான் ...இருந்தாலும் அவர் வாழந்த கால கட்டம் என்பது மிக மிக ஒரு சிரமமான கால கட்டம்.....அந்த காலத்திலும் அவர் எளிமை ,மன உறுதி,நேர்மை போன்ற பல குணங்கள் மிகவும் பாரட்ட தக்கவை ....
நாம் ஒரு குடும்பத்தை சாமாளிக்கவே எவ்வளவு சிரமபடுகிறோம் .....
குறைகள் யாரிடம் தான் இல்லை ...விடுங்க தல...
சாராசரி மனிதர்கள் அவரை மகான் என நினைகிரார்கள்......கொஞ்சம் தெளிந்த அறிவுள்ளவர்கள் அவரும் நம்மை போல் சாதாரண மனிதர் என புரிந்து கொள்ள வேண்டியது தான் ....
காந்தியார் அவர்களை நாம் இரு வழிகளில் அடைகிறோம் , ஒன்று பாட புத்தகம் வழியாக தேச தந்தை என்று ஒரு மிகை சித்திரம் , இல்லை வெவ்வேறு அரசியல் சக்திகள் தங்கள் காந்திய காழ்புகளின் வாயிலாக , அவரை மனிதரை விட கீழ்மையாக .இரண்டுமே தவறு , அவரை நாம் திறந்த மனதுடன் அணுகினால் அவரது வழிமோரிகள் நமக்கு புதிய திறப்பை கொடுக்கும் , அவர் தவறே செய்யாதவர் அல்ல ஆனால் அவர் தவறை திருத்தி கொள்ள முயல்பவர் , எதையும் யாரிடமும் மறைக்காத அபார நேர்மை அவரிடம் உண்டு , என்னை பொறுத்த வரையில் கடந்த நூற்றாண்டில் உலகில் நேர்ந்த மாபெரும் சம்பவம் காந்தி தான்
நாம் இப்போது பார்க்கும் அரசியல் மனிதன் போலல்லாமல் தன் அத்துணை வுடமையையும் நாட்டுகாக விட்டு சென்ற மனிதர். நினைத்திருந்தால் வெள்ளையனிடம் பெரிய பதவி மற்றும் பல சுக போகங்கள் அனுபவித்திருக்கலாம். ஆனால் வாழ்ந்தாலும், இறந்தாலும் வீரனாகவே இன்னும் நம்முடன் வாழும் கதாநாயகன் போஸ் என்கிற சுபாஷ் சந்திர போஸ்.
எல்லாரும் இன்றைய அரசியல் பற்றியே பேசுகிறார்கள்.
வுண்மையில் அன்றே நமது மகாத்மா விதைத்தார் இன்றும் அதையே நாம் அறுவடை செய்கிறோம். அன்று சுபாஷ் மற்றும் நேரு ஒரே மார்கத்தில் இருந்தனர்
அப்படி இருந்தால் காந்தியார் நிலை பாதிக்கப்படும் என்று நேருவின் தந்தை நேஹ்ருவை ஒரே நாளில் போசை விட்டு விலகசெய்தார். அன்று அன்று தனி மரமானாலும் தனியே போராடி மறைந்தார் போஸ்.
அப்படி ஆரம்பித்த அரசியலே இன்றும் நிலவுகிறது. இந்த இடத்தில எல்லோரும் மோதிலால் மட்டுமே இதை செய்ததாக கொள்ளவேண்டாம். காந்தி சொற்படி மோதிலால் செய்தார்.
போஸ் வழியே நமக்கு சுதந்திரம் கிடைத்திருந்தால் ஒருவேளை நம்முடைய இன்றைய அரசியல் நம் நாட்டின் முன்னேற்றதிட்காக மட்டுமே இருந்திருக்குமோ !!!!!!!!!!!!!!!!!!!!!!
இது ஒரு ஆவண படத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டது. தவிர இது பொது கருத்தாக கொள்ளவேண்டாம் மற்றும் ஒரு பார்வையாக நான் பார்க்கிறேன்.
Post a Comment