Tuesday, August 3, 2010
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...." இது உண்மையா...
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...." இது உண்மையா... மனைவியோ அல்லது கணவனோ அமைவது நம்ம வீட்டு பேருசுங்க பண்ற வேலை.. இதுல இல்லாத இறைவன் எப்படி join பண்றார் என்று தெரியல.. அப்ப, மனைவியும் கட்டிக்கொண்டு சின்ன வீடும் செட் பண்ராங்கலே இது எந்த இறைவன் கொடுத்த வரம்... ஒருவேளை இறைவனின் செட்டப் கொடுத்த வரமா இருக்குமோ...
மனைவி அமைவது ஒரு மறைமுக வாழ்கை ஒப்பந்தம். உனக்கு தெரியாமல் நானும் எனக்கு தெரியாமல் நீயும் ஒளிவு மறைவு இல்ல்லாமல் ஒரு வாழ்கை வாழ்வோம் எனபது....25 வயதில் ஒருத்தருக்கு கல்யாணம் ஆகிறது என்று வைத்துகொள்வோம் அவரு அந்த மனைவியுடன் அல்லது கணவனுடன் எத்தனை வருடம் வாழ்வார் என்று நினைகிரிங்க ஒரு 50 , 60 , 70 ....இதுக்கு மேல யாரும் வாழ் முடியாது அப்ப ஒரு 70 வருடம் ஒருவருடன் வாழ்தால் அது ஒரு மறைமுக ஒப்பந்தம் தானே....
நாம் ஒருவரிடம் நண்பனாய் இருப்போம் சில காலம் பிரிவோம், பேசாமல் இருப்போம் மறுபடியும் பேசுவோம் ஆனால் மனைவி அல்லது கணவனோ நட்புபோலதானே... இங்கே பிரிவதற்கு இடம்மில்லாமல் மன சங்கடம் வந்தாலும் சகிப்பு தன்மையுடன் வாழ்வோம்..இது இல்லாதவங்க விவாகரத்து வரை போயிடறாங்க...
மறுபடியும் சொல்றேன் மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் இல்லை நமக்கு நாமாகவும், சமுதாயத்தாலும் மறைமுகமாக போடப்படும் ஒரு ஒப்பந்தம். ஒருத்தர், ஒருத்தர் புரிந்து கொள்ளாமல் கட்டாய படுத்தி இணைக்கும் முயற்சி.....இவர்களை இணைத்த பிறகு போய்விடுவார்கள் அப்புறம் இணைப்பு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொண்டுதான் வாழ்ந்து ஆகணும்.. இல்லையென்றால் பிரியனும்...
இதில் கட்டாய கல்யாணத்தை விட காதல் கல்யாணம் இவ்வளவோ மேல் அல்லவா...அதில் முதலில் பார்த்து பழகி, பேசி வாழ்கை என்ற ஒப்பந்தத்தை ஆரம்பிக்கிறோம்....இதில் காதலும் முதலில் புரிதல் இல்லாமல் காமத்தில் ஆரம்பிக்கிறது அக்காமம் தணிந்ததும் அவர்களுக்குள் வாழ்கை புரியவில்லை என்றால் பிரச்சனைதான்...
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்...! இது தான் எல்லோர் வாழ்விலும் நடக்கிறது சும்மா அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னாலும் பல பேருக்கு இதுதான் உணமையாக இருக்கிறது.
எனக்கு இதெல்லாம் புரிந்ததால் என் வாழ்கை ஒப்பந்தம் முறியாமல் இருக்கிறது... வணக்கம்..!
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.)
20 comments:
உங்க பேச்சுக்கு எதிர் பேச்சே கிடையாது தல ....
கலக்கிட்ட நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@தனி காட்டு ராஜா
எனக்கு எதிர்பேச்சே கிடையாது என்று ஆணவம் கொண்டால்...கண்டிப்பாக வரும்
இருந்தும் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி..!
@சசிகுமார்
மிக்க நன்றி..Sasi
காதல் கல்யாணமோ? பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த கல்யாணமோ? எதுவாக இருந்தாலும் மனைவி என்பவள் இறைவன் கொடுத்த வரமே.
திருமண வாழ்க்கையை பந்தம் என்றும் சொல்லலாம், ஒப்பந்தம் என்றும் சொல்லலாம், நிர்பந்தம் என்றும் சொல்லலாம்.
பெரிசுகள் பார்த்து செய்து வைத்தாலும் சரி, சிறுசுகளே பார்த்து முடிவு செய்து கொண்டாலும் சரி. இவை அனைத்துக்கும் நான் சொல்பவை பொருந்தும்.
மிக மிக நன்றாக இருக்கு அண்ணா .... உண்மையான் கருத்து நல்தோர் பதிவு
ஜெனித்தா பிரதீப்
@r.selvakkumar
பலர் கட்டிய மனைவியை வீட்டில் வைத்து கொண்டு வெளியில் காம களியாட்டம் போடுகிறார்களே மனைவியை மட்டும் இறைவன் நல்லா அமைத்துகொடுத்து நீ நல்லா ஆட்டம் போடு என்று சொல்கிராரா ...பல போடும் ஆட்டத்தை மனைவி செய்தால் நம் மனம் ஏற்கும் நிலையில் இருக்குமா...நம் கட்டாயத்தின் அடிப்படையிலும், காதலின் அடிபடையிளும்தான் கல்யாணம் நடைபெறுகிறது....முதல் மனைவி சரியில்லை என்று விவாகரத்து செய்து இரண்டாம் மனைவி கட்டிக்கொண்டு ஒருவன் நல்லா வாழ்தால்.....அவனை எப்படி நிலை நிறுத்துவது அப்போ முதல் மனைவியை எந்த இறைவன் அமைத்து கொடுத்தான் இறைவன் என்ன மாமா வேலை பார்க்கும் கல்யாண தரகரா....முதல் மனைவி நல்லவளாக இருந்தாலும் இவன் அவளை விவாகரத்து செய்கிறான்....அப்போது ஏன் இந்த நல்ல பெண்ணுக்கு இறைவன் நல்ல வாழ்கை அமைத்துகொடுக்கவில்லை....
பழமையான ஆணை சார்ந்த ஒருவார்தையின் பொருளையே மாற்றியமைக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் தாங்கள் அதே "மனைவி என்பவள் இறைவன் கொடுத்த வரமே." என்ற வார்த்தையை சொல்கிறீர்கள். இதில் மனைவிக்கும், இறைவனுக்கும் என்ன சம்பந்தம்....என்றே புரியவில்லை....எல்லாம் ஆணுக்கு சாதகமான வார்த்தைகள். இல்லாத இறைவனை முன்னிருத்துவது
@Anonymous
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...ஜெனித்தா
உண்மைதான் குரு.. மனைவி மட்டுமல்ல.. கணவன் அமைவதும் அப்படித்தான்..
@thenammailakshmanan
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...
மிக இயல்பான கருத்துக்களோடு உங்கள் பதிப்பு அமைய பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் !!
என்னை பொறுத்த மட்டில், திருமணம் என்பது ஒரு official license , அவ்வளவே!! இதை மனதில் திடமாக கணவனும் மனைவியும் மனதில் கொண்டிருந்தாலே போதுமானது!!
ஆண் என்றால் சம்பாதிப்பதும், பெண் என்றால் அடக்குமுறைக்கு ஆட்படுவதுமாய் இருக்கும் அந்த சூழல் மாற ஒரே வழி தோழமை உணர்வு!! இதை உணர ஒரு முறையாவது காதல் வயபட்டிருத்தல் அவசியம் ! உங்கள் நண்பருக்கு கொடுக்கும் அதே personal space மற்றும் அந்த சகிப்பு தன்மை நம் மனைவி அ கணவனிடம் கொடுக்க பட்டால் எல்லாம் இன்ப மயமே !! சந்தோஷமோ துக்கமோ அது உங்கள் நடத்தையில் தானாய் அமைந்து விடும்!! இதற்காக இறைவனை எல்லாம் அழைக்காதிருங்கள் !! அவருக்கு என்ன வேற வேலை இல்லையா? எத்தனை கேடுகளை விளைவிக்க வேண்டி இருக்கிறது? ஏன் இதை போன்ற நல்ல விஷயத்துக்கு அவரை கூப்பிடனும்?
கலக்கிட்ட நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..RK GURU ....GURU ...SUPER...GOOD..???
மனைவி கிடைப்பது
மனைவி காதலியாக தியாகமனுஷுயாக நல்லகுனவதி
எல்லாம் கடவுளின் அல்லது அதிர்ஷ்டம் வைக்கணும்
இல்லை எனில் மௌனமாக வாழவேண்டியது தான்
அறிவால் ஒன்னும் கணிக்கமுடியாது
குரு அருள் வேண்டும் குரு !!!!!!!!!!!!!!!!!!!
தங்கஷியை கேட்டதாக சொலவும் குரு மாப்ளே !!!!!!!!!
@vinoveenee
இயல்பாய் புரிந்தமைக்கு மிக்க நன்றிங்க......எனக்கும் உங்களுக்கும் ஒத்த கருத்துகள்.
@Anonymous
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...
@coimbatorebalu
உங்கள் இறைவன் கொள்கையில் இருந்து நீங்கள் வரமாடிங்க நானும் என் புரிதல் நிலையில் இருந்து வரமாட்டேன்....
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....
(கருத்து -1)
அன்பு தோழமைக்கு,
கடவுள் உண்டா இல்லையா என்பது அவரவர் அறிவிற்கு ஏற்ற; புரிதலுக்குட்பட்ட, சுயமாக சிந்திக்கத் தக்க, தீர்வுகொள்ளக் கூடிய, நம்பிக்கைக்குள் உருவான 'ஒரு சுய கருத்து' சார்ந்தது. அதை விடுவோம்.
உங்கள் கேள்வி 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்' எனில், இல்லாத இறைவன் எப்படி வரம் கொடுப்பார் என்பது தான் இல்லையா?
அங்ஙனமெனில், இந்த 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்' என்ற கூற்றின் அர்த்தம் கடவுள் வந்து மனைவி என்னும் வரம் கொடுத்தார், கொடுப்பார் என்பதல்ல.
கடவுள் என்பதற்கு உயர்ந்த, மேன்மையான, மதிக்கத்தக்க, வார்த்தையிலடங்கா உண்ணத மதிப்பு கொண்டோர்' அப்படிப்பட்ட ஒரு கடவுள் வரம் தந்தால் அந்த கடவுளின் வரம் எத்தனை சிறப்போ, அந்த கடவுள் எத்தனை சிறப்பாக வரம் கொடுப்பாரோ, 'அத்தனை சிறப்பிற்குரியவர் மனைவி' என்பதே பொருள்.
(கருத்து -2)
அதையும் கடந்து, இல்லை இல்லை கடவுளே இல்லையே, அதெப்படி மீண்டும் இல்லாத கடவுள் வந்து எதையோ கொடுத்தது போல் ஆகும், இந்த கூற்றே தவறாயிற்றே' என்பீர்களேயானால், அது உங்களின் தீர்விற்குட்பட்டது.
கடவுள் தான் இல்லையே இந்த கூற்றும் உண்மை இல்லை என்றே கூட நீங்கள் கொள்ளலாம். காரணம், கடவுள் இல்லை என்போருக்கு நிறைய விஷயங்கள் இருக்கு என்பதிலும் நம்பிக்கை இல்லாத பட்சத்தில் அவை இல்லை என்றே பொருள்படுகிறது. எனவே எவ்வளவோ இல்லாமல் இருக்கையில் இதுமட்டும் எப்படி இருந்துவிடும்.
போகட்டும், கடவுள் இருக்கிறார், இல்லை, என்று மெச்சுவதிலோ இகழ்வதிலோ ஒன்றுமில்லை. நாம் சரியாக வாழவே அத்தனையும். நாம் சரியெனில்; சரி. வாழுங்கள், வாழ்வை பிறர் வருந்தாதவாறு வாழுங்கள். மனிதம் புரிந்து வாழும் பட்சத்தில் கடவுள் பற்றியெல்லாம் கவலையே வேண்டாம்.
எல்லாம் கடந்து, காதல் திருமணம் பலவழிகளில் வரவேற்கத் தக்கது; அதனால் மட்டுமே ஜாதி இன மத பேதத்தை ஒழிக்க இயலும். ஜாதி இன மத பேதம் ஒழித்தால், தான் என்ற தனது என்ற சுயநலம் ஒழியும். சுயநலம் ஒழிதலில் மனிதம் நிலைக்கலாம். ஜாதியற்று மனிதனை மனிதனாக பார்க்கலாம்.
எனினும் காதலின் நோக்கம் வாழ்கைக்கானதாகவும் உரித்த வயதிற்குட்பதாகவும் இருக்குமெனில் காலத்தின் பயன்.
//எனக்கு இதெல்லாம் புரிந்ததால் என் வாழ்கை ஒப்பந்தம் முறியாமல் இருக்கிறது//
எப்படியோ, கடவுள் தரும் வரம் போல்; உங்களுக்கு நல்ல மனைவியே கிடைத்திருக்கிறார் போல். மிக்க வாழ்த்துக்கள். என்றென்றும் நலம் வாழ்க உறவே!
வித்யாசாகர்
@வித்யாசாகரின் எழுத்துப் பயணம்
அதிக முரண்பட்ட உடன்படாத கருத்துகள் அமைந்துள்ளது. இதற்கு என் விளக்க உரை பெரிதாக அமையும். மறுபடியும் சொல்கிறேன் கல்யாணத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை இதை மையபடுத்திதான் என் விளக்கமே இருக்கும் இதில் இருந்து நான் கருத்து மாற்றம் அடைபவன் இல்லை.
///கடவுள் என்பதற்கு உயர்ந்த, மேன்மையான, மதிக்கத்தக்க, வார்த்தையிலடங்கா உண்ணத மதிப்பு கொண்டோர்' அப்படிப்பட்ட ஒரு கடவுள் வரம் தந்தால் அந்த கடவுளின் வரம் எத்தனை சிறப்போ, அந்த கடவுள் எத்தனை சிறப்பாக வரம் கொடுப்பாரோ, 'அத்தனை சிறப்பிற்குரியவர் மனைவி' என்பதே பொருள். ////
அதெப்படி கடவுள் என்பதற்கு பல விளக்க வார்த்தை கொடுத்துவிட்டு மறுபடியும் அப்படிப்பட்ட ஒரு கடவுள் வரம் தந்தால் என்று சொல்கிறீர்கள்...கடவுளே இல்லை என்று மறுக்கிறேன் அப்படிருக்கும் போது மனைவிக்கான பொருள் 'கடவுள் சிறப்பான என்ற வார்த்தை' இவை என் பதிவுக்கே முரண்பட்டது. இல்லை என்பதை இருக்கு என்றே இருக்கிறது உங்கள் விளக்கம்
///எப்படியோ, கடவுள் தரும் வரம் போல்; உங்களுக்கு நல்ல மனைவியே கிடைத்திருக்கிறார் போல்///
இங்கையும் இல்லாத கடவுளை முன்னிருத்துகிரீர்கள்....
இருந்தும் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...
குரு! நல்ல சிந்தனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி சொல்கிறேன்...தொடர வாழ்த்துகிறேன்:-)
Post a Comment