Pages

Tuesday, August 10, 2010

வாழ்வில் உண்டாகும் கசப்பான அனுவங்கள்....


நாம் ஒன்றை அடையாள படுத்திய பிறகுதான் அதற்கு வடிவம் கொடுக்கவேண்டும். அடையாள படுத்துவதற்கு முன்னரே வடிவம் கொடுத்தால் அதில் எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்திருக்கவேண்டும். இல்லை அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வைந்திருக்க வேண்டும். தேவையில்லாமல் நானும் அதீத முயற்சி (Risk) எடுக்கிறேன் என்று கூறி விழி பிதுங்கி, கைய பிசைந்து  இருக்கவேண்டாம் . நமக்கு எதிலும் ஒரு முன்னேற்பாடு, மாற்று வழி(Alternative) இருக்கவேண்டும்.  இவை நாம் செய்யும் தொழில், வேலை, வாழும் வாழ்கை என்று  இன்னும் பிற நிலைகளுக்கும் பொருந்து.  இவைகள் எதுவும் இல்லாமல் இருந்தால் நம்  நம்பிக்கையின் பிடி ஆட்டம் கண்டுவிடும். நம்பிக்கையின்  தளர்வு வாழ்கையின் நம்பதன்மையே கேள்வி குறியாக்கிவிடும். அதாவது இது எப்படி என்றால் நாம் ஏதோ ஒன்றில் ஈடுபடும்போது. அது விளயாட்டு ஆகட்டும், வேலையாகட்டும், வாழும் வாழ்கையாகட்டும் அதில் நாம் முன்னேறி விடுவோம் என்று நினைக்கும் போது அதில் ஏற்படும் சறுக்கல் நம்மை நிலை குலைய வைத்து விடும். அவை சலிப்பு, வெரக்தி, கோவம், துடிப்பு, பரிதவிப்பு போன்ற உணர்வுகள் எல்லாம் வெளிபடுத்தும்.  இதற்கு முழுக்க முழுக்க காரணம்  மனம் அதில் லயத்திருந்த்ததாலும், பயம், பதற்றம் போன்றவற்றாலும் ஏற்பட்டிருக்கும்.

இதனை சில உதாரணங்கள் முலம் சொல்லலாம் அவை நாம் முக்கியமான விசயம் கணிபொறியில் (computer) தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது மின் தொடர்பு துண்டித்தல் (power cut) தட்டுச்சு செய்த முக்கிய தகவல் சேமிக்காததால் எல்லாம் போதல்,  நண்பர்களுடன் இணையத்தில் இருக்கும் போது  இணையம் தொடர்பு துண்டித்தல், கணிபொறி திடிர்னு பழுதடையுதல், நம் கண்முன்னே திடீர் ஏற்படும் அசம்பாவிதம், நம்மை யாராவது அடிக்கும் போது ஏற்படும் மன பதற்றம் (அது போலீசா கூட இருக்கலாம்..), திடிர்ன்னு வருமான வரித்துறை வருதல்...(இது பணகாரனுங்களுக்கு வயத்துல ஒரு பூகம்பத்தையே உண்டுபண்ணி விடும்) இவை போன்ற பெரிய, சின்ன விசயங்கள் நம் மனத்தில் ஒரு பெரிய மனசஞ்சலத்தையே உண்டாக்கும்.

'நிலைகுலைந்து போகுதல்' என்ற வார்த்தை  நம் வாழ்வில் உண்டல்லவா...அது எப்படி ஏற்படும் என்றால் நாம் மிகவும் பாசம் வைத்த நபர் அகால மரணம் அடையும் போதும் , நாம் நம்பிக்கை வைத்த நபர் நம்மை ஏமாற்றும் போதும், நம்மை ஏளனமாக பேசும்போதும், உற்ற உறவுகள் வெறுக்கும் போதும் கண்டிப்பாக நிலைகுலைந்துதான் போவோம். அது சிறிது காலம் என்றாலும் அது ஏற்படுத்திட்டு போற வலியின் காயம் பல வருடங்களை கடந்து அனுபவமாக வரும். அது ஒரு கசப்பான அனுபவமாக கூட இருக்கும். அதை மறக்க நினைக்க முடியாத அளவுக்கு மனதை நிலைகுலைய செய்து விட்டு போயிருக்கும். இதுதான் பல பேருக்கு தற்கொலை உணர்வை தூண்டி விடுவது. பலர்பேர் இறப்பதும் இப்படிதான்... "நல்லா இருந்த மனுசன் நேற்று வரை நல்லாதான்  பேசின்னு இருந்தவரு இப்படி பட்டுன்னு போயிட்டாரே..." என்று சொல்வதும் இதுபோலகாரணகலாகத்தான்.

அதனால வாழ்வில் நாம் எந்த ஒரு நிலையை தேர்தெடுக்கும் போதும் அதற்கு முன்னேற்பாடு,  மாற்றுவழி வாய்ப்புகள், பிரச்சனைகள் என்று வந்தால் முன்னரே எதிர்கொள்ளும் மனநிலையை பெற்றுகொள்வது, நம்பிக்கையானவர்களின் ஆலோசனைகளை பிரச்சனை ஏற்படுவதற்கு முன்னும், அப்படி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பின்னும் தேவையான ஆலோசனை பெறுவது, ஊகத்தின் அடிப்படையில் செயல்படாமல் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தி கொள்வது. இது போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு செயல்பட்டால் எதிர்வரும் பிரச்சனைகள், மனசங்கடங்கள் என்று எதுவுமே இல்லாமல் போய்விடும். நமக்கு பெருத்த வலியின் ரணங்களை உண்டாக்காது. இது ஒரு கசப்பில்லாத இனிய அனுபவமாகக்கூட மாறி போகும்..என்றும்..!

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

15 comments: