Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Monday, August 23, 2010

ஏன் காலில் விழுந்து வணங்குரிங்க...?


காலில் விழுந்து வணங்குவது.....

இந்த காலில் விழுந்து வணங்கும் பழக்கம் தொன்று தொட்டு வருகிறது.  நம்மைவிட மூத்தவங்க காலில் விழுந்து வணங்கினால் நல்லதாம் பல பேரு சொல்வார்கள்...சிலபேர் புண்ணியத்திர்காக சாமியார் காலில் விழுந்து சாமியாரே சரணம் என்று இருப்பாங்க...இந்த காலில் விழுவது என்ன நல்லது, புண்ணியம் என்று  தெரியல...கைபோல காலும் உடலில் உள்ள ஒரு உறுப்பு அது தொட்டா எப்படி நல்லது, புண்ணியம்...அதே தொட்ட காலு தொட்டவங்கல மேல தெரியாமல் பட்டுடுச்சுனா...அவங்களுக்கு ஒரே மொரப்புதான், கோவம்தான் அவர் ஒரு சாரி சொல்லிட்டாருணா சரி இல்லனா கால் பட்டவரு முகம் எல்லாம் மாறிவிடும்...தெரியாமல் பட்டாலோ அல்லது எட்டி உதைத்சாலோ காலில் விழுபவர்களுக்கு ஏன் கோவம் வருது...அந்த காலுதானே உதைக்கிறது, படுகிறது அது புண்ணியம் என்று இருக்கலாமே அது எப்படி தப்பாகும். ஓ...நாமே தொடவேண்டும். அதுவேபட்டால் குற்றம்...!

ஐந்தறிவு சொல்ற விளங்குகெல்லாம் எந்த விலங்கிடம் காலில் விழுந்து வணங்குது...இந்த மனிதன் மட்டும் எதுக்கு சக மனிதனிடம் சரனாகதியாகிறான்...அதுவும் நம்ம இந்திய, தமிழக அரசியல்'வியாதிகாரனுங்க' சொல்லவே வேணாம் விழு என்று ஒரு ஜாடை காட்டினால்  போதும் காலையே நக்கி எடுத்துடுவானுங்க...அதே நேரத்தில் காலை வாரி விடுவதும் இவனுங்கல்தான்.

காலில் விழுவது இந்திய மக்கள் கலாச்சாரத்தில் குறிப்பாக தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் எடுக்க, பிரிக்கப்பட முடியாத ஒன்று...


சக மனிதனை மனிதனாக மதிக்கலாம் அதற்காக காலில் விழுந்து அவன் ஆணவத்திற்கு தீனி போடவேண்டாம்.               



என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!




என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

10 comments:

சசிகுமார் said...

அருமை நண்பா

Robin said...

கரெக்டு!

Unknown said...

கால்ல விழுகிறதுனால...ஒரே நல்ல விஷயம்...
விழுகிறவருக்கு வயிறு நல்ல ஜெரிமானமாகும்....

http://rkguru.blogspot.com/ said...

@ஆகாயமனிதன்

அதுக்கு கால்லதான் விழுந்து வணங்குனும் இல்லை தரைல படுத்து நல்லா உருண்டாலே போதும்....

Cikgu S Balan said...

nalla nachunnu sonenga nanbare,kalile vilunthu vilunthu innum adimai thanam oliya villai tamilanidam

sribalan said...

மருத்துவக்காரணங்கள் உங்களுக்கு தெரியும் தெய்வத்தை அல்லது பணக்காரரை வீழ்ந்து வணங்கும் காரணம் என்னால் முயன்றும் எதுவுமே முடியாமல் போனது,நிற்பதற்கு கால்களில் கூட வலுவில்லை என்பதை காட்டி அருள்,பொருள் பெறுவதற்கே!! விலங்குகள் விழுந்தே அதாவது நான்கு காலில்தான் உள்ளன,உங்கள் நாய் உங்கள் காலடியில் விழுவதில்லையா??

http://rkguru.blogspot.com/ said...

@ sribalan

வாழ்க்கையில் விழுவது எழுவதர்க்குதான் அது மற்றவங்க காலில் இருக்ககூடாது....நாயின் நிலையிக்கு நாம் வருவோமானால் அப்போது தெரியாது யார் காலில் யார் நிற்பது என்று....

ம.தி.சுதா said...

சகோதரா ஒரு காரியம் அகணுமுன்னா எத்தனை பேருக்கு வால் கட்ட வேண்டியிருக்கு பாத்திங்களா...

Vibunan said...

பெரியார் வழி வந்தவர் குடும்பம் இப்படி தடுமாறுதே...

ஆமினா said...

//காலில் விழுவது இந்திய மக்கள் கலாச்சாரத்தில் குறிப்பாக தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் எடுக்க, பிரிக்கப்பட முடியாத ஒன்று...//

அதை ஏன் கேக்குறீங்க. நம்மூர்லையாவது பரவாயில்ல. இப்ப இருக்குற ஜெனரேஷன் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருதுங்க. வட நாட்டில் எதற்கெடுத்தாலும் நம்ஸ்தேன்னு சொல்லி கால்லுல விழுவாங்க. இதுக்காகவே காத்துட்டு இருக்குறவங்க மாதிரி கால்ல விழுறவங்கல தடுத்து கூட நிப்பாட்ட கை வராது. விழுடா மவனேன்னு அந்த காலை தொடுர வரைக்கும் காத்துட்டு இருந்து எழுந்ததும் வாழ்த்து சொல்லுவாங்க!

//சக மனிதனை மனிதனாக மதிக்கலாம் அதற்காக காலில் விழுந்து அவன் ஆணவத்திற்கு தீனி போடவேண்டாம். //

சரியா சொன்னீங்க. இப்படி கால்ல விழுகுறதுனால தான் இல்லாதவங்களுக்கும் தலகணம் வருது.