Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, August 8, 2010

உன்னை பற்றி தெரிந்து கொள்...


நம் உலகில் எல்லாமே விரும்பகுடியதுதான் வெருக்கரதா இருந்தால் இயற்கை நமக்கு எதுவும் படைத்திருக்காது எல்லாமே ஏற்றுகொள்ளகுடியதுதான். அது அன்பை மட்டும் இல்லை வெறுப்பையும். பலபேர் சினிமாவில் சோகமான காட்சி வந்தாலே கண்ணீர் விட்டு அழுவாங்க அந்த காட்சியில் வரும் சோகம் தன்னை பற்றியதாக இருகிறதே என்ற நினைப்பு. அது படம் தான் அவை பொய் தான் என்று தெரியும் ஆனால் மனம் அதை உண்மை என நம்பி அழும். இப்படி பட்ட மனதுடன்தான் நாம் வாழ்கிறோம் பின் அது எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்குமா...?

மனசுடைய உணர்ச்சி வேகத்தில் உண்டாகும் அனுபவமே அறிவாக கொள்கிறோம்...மறுபடியும் அந்த உணர்வு ஏற்படும் போது அறிவு அதன் வேகத்தை கட்டுபடுத்துகிறது. ஆனால் பல நேரங்களில் கட்டுபடாமல்தான் போகிறது. இறுதியில் மனமே வெற்றிகொள்கிறது. இவற்றில் மனதுக்கு மந்திரம், ஜபம் வேற தனியாக செய்கிறார்கள் அவை ஒரு கட்டுபடுத்த ஒரு பயற்சி தான் அன்றி வேறல்ல ஓம் நாமோ நாராயண..! என்றுதான் சொல்ல வேண்டு என்றில்லை பெப்சி. கோகோ கோலா, என்று சொன்னால் கூட மனம் கட்டுப்படும்.என்ன வார்த்தைகள் என்று மனதுக்கு கூறுகிறோமோ அதைதான் ஏற்றுகொள்கிறது.

உடலும், மனமும் இருக்கும் போது மரணம் வருவதில்லை. மரணம் வரும் போது அவை இருப்பதில்லை. செத்த பிணத்தை நினைத்து சாகபோற பிணங்கள் அழுமாம் தானும் ஒரு நாள் சாகபோறோம் என்று அறியாமல். தூக்கம் என்பதும் தற்காலிக மரணம்...! யாருக்காவது தெரியுமா...? மரண ஞானம் ஒன்று உண்டு அது எப்போது வரும் எனபது யாருக்காவது தெரியுமா..? அவை மரணிக்கும் போது வரும். மரணத்தை நாம் பார்க்கும் போதும் வரும். அது தற்காலிமாக இருக்கும். பின் நாம் வீட்டிற்கு வந்தவுடன் அது போய்விடும்.

மறுபடியும் நாம் சுயநலம், பொறமை என்ற சுழல் உள்ள வாழ்க்கையில் மரணிக்கும் வரை முடிவில்லாமல் சுழல்வோம். இவ்வாறு இருக்கும் போது நம்மிடம் பெரு ஒளி(ஞானம்) வந்தவுடன் சிறுஒளி(மனம்) தேவையில்லாமல் போய்விடும். நாம் எப்படி தனிமையில வந்தமோ...அப்படியியே தனிமையில போகபோறோம். நடுவில் ஏன் இந்த ஆர்பாட்டம்....


இந்த நாளும், எந்த நாளும் இனிய நாளாக இருக்க அந்த இயற்கையை வணங்குவோம்...

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!




நட்புடன் உங்கள்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

4 comments:

அப்பாதுரை said...

// பெப்சி. கோகோ கோலா, என்று சொன்னால் கூட மனம் கட்டுப்படும்//

உண்மை. மனதைக் கட்டுப்படுத்த நினைத்து முயற்சி செய்பவருக்கு எந்தக் காட்சியும் சொல்லும் பொருளும் ஆதாரமாகும். பெப்சி பெப்சி என்று ஜபம் செய்வது கொஞ்சம் குறும்பு தான்.

Unknown said...

நல்ல பதிவு நண்பரே!!!!

Unknown said...

தத்துவ முத்து

sakthi said...

செத்த பிணத்தை நினைத்து சாகபோற பிணங்கள் அழுமாம் தானும் ஒரு நாள் சாகபோறோம் என்று அறியாமல். தூக்கம் என்பதும் தற்காலிக மரணம்..

நெத்தியடி குரு