Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Monday, June 21, 2010

பெண்கள் வாழும் வாழ்வில் சில மாற்றங்கள்

  
பெண்கள்  வாழும் வாழ்வில் சில மாற்றங்கள் வரும் போது சமூக தளங்கள் போன்ற தளங்களில்  பெண்கள் புகைப்படம் மாற்றும் போதும் விமர்சனங்கள் அதிகமாக வருகின்றன"...ஏன் என்று தோழி ஒருவர்  என்னிடம் கேட்டார் அதற்கான பதிலை பதிவாய்  வெளியீடுகிறேன்...

ஆண்னிடம்,  பெண்கள் ஆரம்ப கால வாழ்வின் அடக்குமுறையால் ஏற்பட்ட விளைவாலே ஆண்களை எப்போதும் உள்ளுர மதிப்பதே  இல்லை அதனால் ஆண்கள் புகைப்படம் மாற்றினால் பெண்கள் அதை பெரிதாக நினைப்பதில்லை. ஆண்களும், ஆண்களின் புகைப்படம்  மாறும்போதும்  அதை அவர்கள்  பெரிதாக பேசுவதுயில்லை ஏனென்றால், அவை "ஒரே குட்டையில ஊருன மட்டைங்கதான்...." ஆனால் பெண்கள் புகைப்படம் மாறும்போது ஆண்தான் அதிகமாக  கவலைப்படுகிறான். பெண்ணின் புகைப்பட முகத்த வச்சு ஒரு கற்பனை உருவத்தை உண்டாக்குகிறான். அப்பெண்ணின் புகைப்பட முக பாவனை மாறும் போது கற்பனை  கவலையாய் ஆகிறது. ஆண்களின் பணம், பதவி, புகழ் மோகத்தை விட பெண் மோகம்தான் அதிகமாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது பெண் நேரடியாகவும், மறைமுகமாகவும்  அடிமையா இருக்கவே ஆண்  ஆசைபடுகிறான்...

பெண்கள், ஆண்களை சார்ந்தும் அடிமையாக மாறுவதற்க்கும் பெண்களுக்கு உடலில் உண்டாகும்  பலவீனமே காரணமாக இருக்கிறது அவள் மாதவிடாய் அடைவதும், தாய்மை அடைவதும் அவளின் உடல் பலவீனத்தை மேலும் அதிகபடுத்துகிறது. ஒரு ஆண், பெண்ணை அடக்க இவைகள் போதுமானதாக சாதகமாகவும் இருக்கிறது. ஆண்கள் பார்வையில்  பெண்கள் எப்போதும்  ஒரு அழகு, கவர்ச்சி பொம்மையாய் இருப்பதையே அவன் விரும்புகிறான். அவள் விருப்படி என்றுமே  அனுமதிப்பதே இல்லை அப்படியே மீறி வெளிவர பெண்களை அவன், இது அடங்காபிடாரி, ஆணவக்காரி என்று தூற்றுவான். அப்பெண்னின் புகைப்படத்தை  வச்சி ஆபாச கவர்ச்சி படமாய்  வெளிப்படுத்துவான். இப்படிதான் அவன் செயல் எப்படியாவது  ஒரு கேவலமான வழியில் வெளிபட்டு கொண்டே இருக்கும்...

இதையெல்லாம் உடைத்துக்கொண்டு வெளிவரவேண்டும் என்றால் ஓஷோ கூறுவது போல்....

"சர்வதேச அளவில் பெண்களே ஒரு கட்சி ஆரம்பிக்கவேண்டும். உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அதற்கு மட்டும் ஆதரவு வழங்கவேண்டும் ஆணை சார்ந்த செயல்களுக்கு அவள் ஒத்துழைக்க கூடாது ஏனென்றால் ஆணின் செயல்கள் எப்போதும் நயவஞ்சகம் மிக்கது...உலகத்தின் அதிகாரம் பெண்ணிடம் வரவேண்டும். கல்யாணம் இருக்ககூடாது பெண்கள் குழந்தை வேண்டும் என்றால்  பெற்றுக்கொண்டு அக்குழந்தைகளை வளர்பதற்க்கு பெண்களே உண்டாக்கும் காப்பகங்கள் வரவேண்டும். உலகத்தின் அதிகாரம் பெண்ணின் கைக்கு வந்தால் அவள் எந்த நாட்டின் மீதும் போர்தொடுக்க மாட்டாள். அணுகுண்டு போடமாட்டாள் நோயவாய்ப்பட்ட சமூதாயத்தை உருவாக்கமாட்டாள்.  இது முதலில் பெண்கள் நாகரிகத்தில் உயர்ந்த ஐய்ரோப்பா பெண்களிடமே வரவேண்டும்..."        : - ஓஷோ



என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:

24 comments:

கௌதமன் said...

Good.

நீச்சல்காரன் said...

மனித இனத்தைத் தவிர மற்ற இனத்தில் பெண்தான் வெளிப்படையான ஆளும் சக்தி, மனித இனத்தில் பெண் மறைமுக சக்தி.

http://rkguru.blogspot.com/ said...

@நீச்சல்காரன்
உணமைதான்.... நல்ல கருத்திட்ட உங்களுக்கு என் நன்றிகள்

http://rkguru.blogspot.com/ said...

@kggouthaman
Thanks....

Bala said...

பெண்கள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்ற கருத்து உண்மைதான். ஆனால் சுதந்திரம் என்பதை ஆண்கள் செய்யும் தவறுகளை தானும் செய்ய உரிமைதரும் ஒரு கருவியாக மட்டும் நினைக்க கூடாது

//உலகத்தின் அதிகாரம் பெண்ணின் கைக்கு வந்தால் அவள் எந்த நாட்டின் மீதும் போர்தொடுக்க மாட்டாள். அணுகுண்டு போடமாட்டாள்

கண்டலிசா ரைஸ் மாதிரியானவர்களும் உள்ளார்கள்.

வித்தியாசமான கட்டுரை நண்பரே...

http://rkguru.blogspot.com/ said...

@Bala

கண்டலிசா ரைஸ் ஆட்டிவைத்த பொம்மையாய் இருந்தார்...

நல்ல கருத்திட்ட உங்களுக்கு என் நன்றிகள்

Jey said...

மாயா, மம்தா,ஜெ-னு ஏற்கனவே நம்மூர்ல புரச்ச்சி நடந்துகிட்டதான சார் இருக்கு, இப்போ குஷ்பு வேர வந்துருக்காக. பெண்ணுரிமைக்காக பொரப்பட்டிருக்கிற உங்களுக்கு என் ஆதரவ தெரிவிச்சிக்கிறேன் சார்.
( சார் உங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன், பின்னூட்டமும் போட்ருக்கேன், அதனால எனக்கு follower ஆயிருங்க, டீல் ஓகேவா சார்)

http://rkguru.blogspot.com/ said...
This comment has been removed by the author.
calmmen said...

THANKX FRIEND
NAANUM OOTTU POTTACHU
VERY GUD WORK

http://rkguru.blogspot.com/ said...

@Jey

கண்டிப்பா...இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க நான் உங்கள் நண்பனாய் இருப்பேன்

http://rkguru.blogspot.com/ said...

@BOSS
Thanks friend...

Jey said...

//கண்டிப்பா...இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க நான் உங்கள் நண்பனாய் இருப்பேன்//

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு நொம்ப பிடிச்சிருக்கு சார்.

Thirumurugan MPK said...

nice article friend and voted in tamilish

http://rkguru.blogspot.com/ said...

@Thirumurugan MPK
மிக்க நன்றி...

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பா, ஓட்டும் போட்டாச்சு

http://rkguru.blogspot.com/ said...

@சசிகுமார்

மிக்க நன்றி...sasi

உங்களில் ஒருவன் said...

இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு,

பெண்கள் தனி நாடு, அதிகாரம், ஆட்சி எல்லாம் வந்தாலும் ஆண்வர்க்கத்தினரால் பாதிக்கத்தான் படுவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

வேறு ஏதாவது வழி இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

hasan said...

wow...thatz a beautiful post brother...the solution what you said is 100% true...

Ahamed irshad said...

Good Post...

http://rkguru.blogspot.com/ said...

@Shafiq
அதிகாரம் வரும் போது எப்படி ஆண்களால் பாதிக்கபடுவார்கள் என்று சொல்கிறீர்கள். அதான் பெண் எந்தா ஆணையும் சாராமல் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். பெண்களுக்கு மட்டுமே பெண்கள் ஆதரவு..! மாற்று வழியை நீங்கள் சொல்லுங்கள். சரியாய் இருந்தால் அவர்கள் பின்பற்றட்டும்...இருந்தும் கருத்துகளை பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்...!

http://rkguru.blogspot.com/ said...

@hasan
Thanks...hassan

http://rkguru.blogspot.com/ said...

@அஹமது இர்ஷாத்
மிக்க நன்றி...இர்ஷாத்

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி .

http://rkguru.blogspot.com/ said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
உங்கள் பனித்துளி போன்ற கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி....