மனிதன் இயற்கை நீயதிக்கு உட்பட்டவனா இல்லை செயற்கையான சட்டங்களை உண்டாக்கி நொந்து வீழ்பவனா... வயிற்றுக்கு பசி எடுத்தால் சாப்பிடுகிறோம் நன்றாக இருக்கிறது தண்ணீர் தாகம் எடுத்தால் குடிக்கிறோம். இதுவும் சரியாக உள்ளது. ஆனால் இயற்கை இச்சையால் உண்டாகும் காமம் மட்டும் ஏன் அடக்கப்படுகிறது பிரமச்சரியம் என்ற போர்வையில். இன்று நம்மிடம் போலியான வழிகாட்டுதல்கள், போதனைகள் மூலம் இக்கால வாழ்வுக்கு பலதும் பொருத்தம் இல்லாமல்தான் இருக்கின்றன. போதனைகள், வழிகாட்டுதல்கள் அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்காக சொல்லப்பட்டது அப்போது அதற்கு உயிர் இருந்தது ஆனால் இப்போது அது செத்து பிணமாகிவிட்டது. செத்த பிணத்தை எவ்வளவு நாள் தான் நம் மனம் எனும் வீட்டில் வைப்பது இதில் நாம் பழமையை ஆதாரமாக வைத்து புதுமை படைக்கவேண்டும். சாக்ரடிஸ், பெரியார் சிந்தனைகளை போல மாறுபட்ட சிந்தனை எக்காலத்திற்கும் பொருந்த கூடியதாக இருக்கும். உலகில் படைக்கப்பட்டது, படைத்தது, படைப்பது எல்லாமே இயற்கைதான் அதை நாம் இயற்கை என்கிறோம். ஆத்திகர்கள் கடவுள் என்று கூறுகிறார்கள். நானே நானாகி உள்ளேன். பின் நான் எங்கே செல்வது. அண்டத்தில் உள்ளதே பிண்டம் இந்த பிண்டமும் அண்டமே...
விழிப்புடன் கவனித்தல்" எனபது சாதாரண வார்த்தை அல்ல.. புத்தர் கூறிய முக்கியமான வார்த்தை...இவை எல்லா பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் முயற்சி செய்து பாருங்க தீர்வு கிடைக்கும். நாம் வாழும் உலகில் இயற்கையை தவிர மற்றதை எல்லாம் பார்த்து அதிசய படுவதற்கும், ஆச்சர்யபடுவதற்கும் ஒன்றும்மில்லை போதிய முயற்சியும் அதனுடன் இணைந்த பயிற்ச்சியும் இருந்தால் எல்லாம் சாத்தியம்தான். இவ்வுலகில் எல்லாமே நம் சக்திக்கு உட்பட்டதுதான்.
அனைவருக்கும் கல்வி, கட்டாய கல்வி என்று சட்டமாக நாட்டில் எதற்கு கொண்டுவந்தார்கள். அனைவருக்கும் கல்வி வேண்டும் அதிலும் பெண்களுக்கு முக்கியமாக கல்வி வேண்டும் என்றுதான் கொண்டுவந்தார்கள். இது மக்கள் மனத்தால் நடந்ததா...? வாக்குறுதி கொடுத்த அரசால்தான் முடிந்தது. பல தனி மனித எண்ணங்கள் தான் கூட்டு கருத்தாக ஆகுது...அது சமூதாயா சிந்தனையாய் இருக்கு...அப்படி இருக்கும் போது பெண்களை அணுகும் பார்வை மட்டும் எப்படி மாறுபடும். எங்கே பெண்களை தெய்வமா வணங்குறாங்க....கோவில்ல மட்டும் பெண் தெய்வங்கள் பார்க்கலாம். ஊருக்குள்ள போய் பார்க்க முடியுமா ஒவ்வொரு நாட்டின் சரித்தரத்தை எடுத்து பார்த்தால் பெண்மையின் அவலங்கள் தெரியும் அதில் பெண்ணின் கற்பு சூறையாடல் மட்டும் அதிகமாக இருக்கும்....மனிதனின் நாடோடி சமூகத்தில் பெண்ணும் ஆணுக்கு நிகராக வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் ஆனால் எப்பொழுது ஒரே இருப்பிடமாக வாழ்ந்த விவசாய சமூகத்தில் பெண்ணின் நிலை மாற்றப்பட்டது. பெண் வீ ட்டைய் பராமரித்தல் போன்ற பணிகளுக்கே ஆண் நிர்பந்தித்தான் இதற்கு முழு காரணம் அவள் தாய்மை அடைபவலாக இருந்தாதால்தான். தாய்மை அடைந்தபின் ஏற்படும் உடல் பலவீனம் ஆணுக்கு அடக்கி ஆள்வதற்கு சாதகமாக போய்விட்டது...ஆனால் இப்போது மாற்றம் அடைந்து கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன். அறியாமையின் பிழைதான் இயற்கையாய் மாறுகிறது. அவ்வியற்கை மாற்றம் அடைகிறதே என்று சொல்லலாம்..பெண்களுக்கு சமநீதி கொடுப்பதை விட சமவாய்ப்பு கொடுக்கலாம். ஒருவேளை சமவாய்ப்பு கொடுக்க வந்தாலும் பெண்களே பெண்களுக்கு எதிர்நிலையில்தான் இருகின்றனர். ஆம் நம் அம்மாவுக்கு எல்லாமே ஒரு ஈர்ப்புதான் தன் புல்லை ஒஸ்த்திதான் தன் மருமகள் புல்லை மட்டம் போல மனதுக்குள் கருதுவாள். ஏன் என்றால், அவள் மருமகள் பெற்ற பிள்ளை அல்லவா தன் மகன் மூலம் பிறந்தவன்தான் இவன் என்று அறிந்தும் அறியாமல் இருப்பவள் அம்மா...! தன் மகளின் பிள்ளையை மடிமேல் வைத்து கொஞ்சுவாள் அம்மா...! மகனின் பிள்ளையை தல்லாமல் தள்ளிவைத்து இருப்பாள். இவளே என்றும் நமக்கு அம்மா...!
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவாய்ப்பு கொடுக்காமலே அரசியல் எல்லா இடங்களிலும் விளையாடுகிறது. சிந்து பைரவி படத்தில் இளையராஜாவின் இசையில் உண்டான பாடல் பாடகி சித்ராவுக்கு தேசிய விருது வாங்கிதந்தது ஆனால் இசையமைத்த இளையராஜாவுக்கு இன்னும் வரை ஒரு தேசிய விருதும் கிடைக்கவில்லை. இதுதான் நம் தேசிய விருது கமிட்டியின் லட்சணம். சார்லின் சாப்ளின் வாழ்ந்த காலத்தில் யார் சார்லின் சாப்ளின் போல் நடிகிறார்களோ அவர்களுக்கு பரிசுக்கள் வழங்கப்படும் என்று ஒரு விழா நடைபெறுகிறது எல்லாரும் சார்லின் சாப்ளின் போல் பிரமாதமா நடித்தார்கள். இதில் நிஜ சார்லின் சாப்ளினும் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது...கடவுளே இங்கே நேரில் வந்து நான் தான் கடவுள் என்றால் யாரும் நம்ப தயாரில்லை ஏனென்றால் மக்கள் என்றும் உண்மையை விரும்பவில்லை அற்புதத்தைதான் விரும்புகின்றனர்.
நம் சமூக அமைப்பில் மத உணர்வாளர்கள், இன உணர்வாளர்கள், மொழி உணர்வாளர்கள் ஜாதி உணர்வாளர்கள், கடவுள் எதிர்பாளர்கள். ஜனநாயக கருத்துடையோர், கம்யுனிசம் கருத்துடையோர் இன்னும் எத்தனை, எத்தனை உணர்வாளர்கள்,கருத்துடையோர் வந்தாலும் நம் உணர்வு, நம் கருத்து எந்த நிலையில் உள்ளது என்று அறியவேண்டும். மக்களால் எது எற்றுகொள்ளபடுகிறதோ அதுவே அக்காலத்தின் உண்மையாக இருக்கிறது. பின் காலத்தின் சுழறச்சியில் அதுவும் உடைக்கப்படும். நம்மிடம் வாதம் செய்வதற்க்கும், விதண்டாவாதம் செய்வதற்க்கும் வித்தியாசம் உள்ளது. விதண்டாவாதம் குழந்தையை போல... குழந்த குறும்பு பண்ணும் போது அக்குழந்தையை கொஞ்சத்தான் முடியும். அதை அடிக்கமுடியாது, அறிவுரை சொன்னாலும் ஏறாது. குழந்தைக்கு A B C D கத்துகுடுக்கலாம் ஏரோபிளேன் ஓட்ட எப்படி கத்துகுடுக்கமுடியும் அதுக்கும் ஒரு நேரம், காலம் வரும்.
தமிழ், மற்ற மொழிகளுடன் கலப்பின மொழியாக வேறுநாட்டில் இருக்கும் போது. அத்தமிழ்நாட்டவர் தமிழ் கலப்பில்லாத தரமான தமிழை விரும்புவார்கள்...ஆனால் கலப்பில்லா தமிழ் அதிகமாக பேசும் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் மேலும் அதை கலக்கவே ஆசைபடுகிறார்கள். அவ்வாசை எப்படியானால் மற்ற மொழிக்காரன் ஏதோ சந்தேகம் கேட்டால் அவனுக்கு புரியலனாலும் அவன் மொழியிலே கூறுகிறார்கள். ஆனால் மற்ற மொழிக்காரன் இடத்துக்கு நாம் போனால் நாம ஏதோ சந்தேகம் கேட்டால் அவன் அவன் மொழிலதான் சொல்றான்...நாமும் பேந்த பேந்த முழிக்கிறோம்...மொழியறியாமல். சேற்றில் இருந்தே செந்தாமரை(தமிழ்) மலர்ந்தது. பின் அது தன் பொலிவை இழந்து வாடிக்கொண்டுயிறுக்கிறது. ஒருநாள் உதிர்ந்துவிடுமோ....? வழக்கமாக பேசும் தமிழ் அதன் பொலிவை இழந்தாலும் எழுத்து வடிவில் அவை புத்தகமாக என்றும் இருக்கும். புத்தகம் படிப்பது வெகுவாக குறைந்துவிட்டது. தினமும் ஒரு புத்தம் படிக்கவேண்டும். புத்தகங்கள் நம் சிந்தனையை செம்மைபடுத்துவது. ஏனென்றால் ஒருவர் நம் வாழ்நாளில் கண்ட உண்மைகள், அனுவங்கள் எழுத்துகளாக புத்தக வடிவில் வருகிறது. நாம் அப்புத்தகத்தை படிக்கும் போது அவருடைய பலவருட அனுபவம் நமக்கு சில மணிநேரத்தில் கிடைத்துவிடுகிறது... அறிஞர் அண்ணா கூறியதுபோல்:"ஒரு நூலகம் திறக்கப்படும்போது பல சிறைக்கதவுகள் மூடப்படுகின்றன." - ஆம் நம் பழமை சிந்தனை சிறைகதவுகளும் மூடப்படுகின்றன விதைத்தவரைவிட அறுவடை செய்தவருக்கே அதிக பலன்...அதனால் தினமும் ஒரு புத்தகம் படிப்போம்..!
அவ்வை பிராட்டி சொன்னதுபோல்.... கற்றது கைமண் அளவு... கல்லாதது உலகளவு...
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
34 comments:
பாஸ்..
தமிலிஸ் ஓட்டுப்பட்டைய, உங்களோட பதிவுல இணைங்க...
பதிவு கலக்கல்...
@பட்டாபட்டி..
மிக்க நன்றி...
தமிழ்10, தமிளிஷ், உளவு என்ற மூன்று ஓட்டு பட்டை இணைத்து இருக்குங்க....
இளையராஜாவுக்கு ரெண்டு நேஷனல் அவார்ட் கொடுத்துட்டாங்க பாஸ்... ஆனா, ரெண்டுமே அவரு தெலுங்குல இசையமைச்ச படங்களுக்கு....
வாழ்த்துகள்!
இன்னும் சுருக்கமாக எழுதப்பாருங்கள் நண்பரே!
:)
@Karthick Krishna CSஇந்திய அரசுக்கு தமிழில் இசைஅமைத்த இசைஞானிக்கு இன்னும் அங்கீகாரம் கொடுக்கலையா...இது ரசனை கேடுதான்...
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║கண்டிப்பாக உங்க ஆதரவுடன் எளிமை படுத்துகிறேன் நன்றி..!
// வயற்றுக்கு பசி எடுத்தால் சாப்பிடுகிறோம்
நண்பரே காமம் மட்டுமல்ல ஐம்புலன்களினால் உண்டாகும் எல்லாவற்றுக்குமே வரை முறை உண்டு. காமத்தை அடக்கவேண்டும் என்று எந்த மதமும் சொல்லவில்லை. அல்லது புரிதல் தவறாக இருக்கலாம். வரை முறை இல்லாமல் தீனி தின்பவனை இது சரியல்ல வயிற்றை கட்டுப்படுத்து என்று சொல்கிறோம். அது பசியை அடக்கு என்று ஆகி விடுமா? புலன்கள் எப்போதுமே மனிதனின் இயக்கத்தை தடை செய்து விடும். நாம் சென்று கொண்டிருக்கும் போது அழகான ஒரே பெண்ணை பார்த்து விட்டால் நம் நடை ஒரு சில வினாடியாவது தடை படும். இது எல்லா புலனுக்கும் பொருந்தும். நம் இயக்கம் சீராக இருக்க வேண்டுமானால் புலன்களை அடக்கி ஆளவேண்டும். அடக்கி என்பதற்கு தடை செய்து என்று அர்த்தமல்ல. நம் கட்டுப்பாட்டில் அதாவது நம் விருப்பத்திர்க்கிணங்க வைத்திருத்தல் என்று பொருள். மாறாக புலன் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதற்கு நாம் அடிமை ஆகி விடுவோம். இதனால் சீரான இயக்கம் தடை பட்டு விடும். ஒரு சக்கரத்தின் இயக்கத்தை ஒரு ரயில் பின் பற்றினால் ரயில் இலக்கை அடைய முடியாது. ரயிலின் கட்டுப்பாட்டில் அந்த சக்கரம் இருக்கும் வரைதான் இலக்கை அடைய முடியும்.
// குழந்தைக்கு A B C D கத்துகுடுக்கலாம் ஏரோபிளேன் ஓட்ட எப்படி கத்துகுடுக்கமுடியும் அதுக்கும் ஒரு நேரம், காலம் வரும்.
ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதைத்தான் நாத்திகர்கள் செய்கிறார்கள். ஜீன்களிலேயே ஊறிப்போன மத இறை கோட்பாடுகளை, அதுவும் படிக்காத மக்களிடம் உடைப்பது என்றால் சாதாரண விஷயமா? எடுத்த எடுப்பிலேய இந்த ராமன் இருக்கானே? அப்படின்னு தொடங்கினால் அடிக்கத்தான் வருவார்கள். முதலில் A B C D கற்று கொடுக்காமல் நேராக ஏரோப்ளேனுக்கு கூட்டி சென்றால் பேந்த பேந்த விழிப்பான். இல்லை மோதி விடுவான். நாத்திகம் என்றாலே கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவது என்றாகிவிட்டது.
நண்பரே உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது. ஆங்காங்கே எழுத்து பிழைகள் உள்ளன. தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள்
வாழ்த்துக்கள் :))))
வாழ்த்துகள்!
@T.V.ராதாகிருஷ்ணன்
மிக்க நன்றி..!
nalla irukkunka.. aana konjam surukkama ezhtha muyarchi seiyunka..
@Bala
நல்லது, தீயது என்று நாம் நினைத்தால் இயற்கை நமக்கு எதுவும் படைத்திருக்காது. விழிப்புடன் கவனித்தால் என்று புத்தர் சொன்னார் என்று சொல்லிருக்கேன் அதை நீங்க படிக்கவில்லையா... விழிப்புடன் கவனித்தாலே பல்வேறு போதனைகள் தேவைபடாமல் போய்விடும் என்றே நினைக்கிறன்..
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பின் தமிழில் வருகிறது அதனால் ஏற்படும் சிறு பிழைகள் வரும் பதிவுகளில் வராமல் சரி செய்யபடும். உங்க மதிப்பு மிக்க கருத்துகளை வரவேற்கிறேன் நன்றி..!
@ப.செல்வக்குமார்
கண்டிப்பாக உங்க ஆதரவுடன் எளிமை படுத்துகிறேன் நன்றி..!
good post ...
my vote for u.....
வாழ்த்துகள்!
www.athiradenews.blogspot.com
//அறியாமையின் பிழைதான் இயற்கையாய் மாறுகிறது.//
அருமை.
தமிலிஷ் ஓட்டு பட்டை இல்லையே
நன்றாக இருக்கு நண்பா...........
தினமும் ஒரே புத்தகத்தை படிப்போம்
வாழ்த்துகள் நண்பரே
நிறைய எழுதுங்கள், இன்னும் கொஞ்சம் கூர்மையாக...
Best wishes!
@பார்வையாளன்Thanks friend....
@beer mohamedரொம்ப நன்றிங்க...
@அருண் பிரசாத்மிக்க நன்றி...
தமிழ்10, தமிளிஷ், உளவு என்ற மூன்று ஓட்டு பட்டை இணைத்து இருக்குங்க....
@kishoreமிக்க நன்றி...
@நிகழ்காலத்தில்...கண்டிப்பாக உங்க ஆதரவுடன் கூர்மையாக தொடரும்...
@Chitraநன்றிங்க...
வணக்கம்.அன்புள்ளம் கொண்ட நண்பரே தினமும் எத்தனையோ பதிவுகளை படிக்கிறோம் எழிதில் மறந்தும் விடுகிறோம் தாங்களின் பதிவில் அவசரத்தன்மை இருந்தாலும் பசுமரத்தில் அடித்த ஆணியை போல் சில விசயங்கள் மனதில் பதியும் படி எழுதி இருந்தீர்கள் மாமியார் அம்மா இருவருமே பெண்கள் தான் அவர்கள் வீட்டில் அவர்கள் தாய் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் அவர்களின் அப்பாவின் அம்மா எப்படி எல்லாம் அம்மாவை நடத்தி கொண்டு
இருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்த்து பார்த்து பலகி போனதையே தான் பிற்க்காலத்தில் இவலும் செய்கிறாள் இதில் தாங்கள் எங்கிருந்து குற்றம் கண்டுபிடிப்பீர்கள் சொல்லுங்கள் காமம் அதுவும் இப்படித்தான் அவரவர் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் தான் எல்லாத்துக்கும் காரனம் விரிவாக எழுதினால் அது படிக்க தகாதது என்று சமுதாயம் சொல்லும் எல்லாமே மன திருப்த்திக்குதான் இதல்லாம் தவறு எண்றால் உலகில் மனித இனமே இல்லாமல் தான் போகும் இயற்க்கையின் நியதியில் எல்லாமே சாதரனம் தான் அதை பெரிது படுத்தி பார்க்கும் போது அது பெரிய விசயமாகி போகிறது அப்படித்தான் நித்தியாண்ந்தா பேசப்ப்ட்டார் அவர் என்னத்த பெரிய தப்பை செய்து விட்டார் அவர்கள் இருவரும் மணதிருப்திக்காக புணர்ந்தார்கள் அதில் என்ன தப்பு இருக்கிறது அது இயற்க்கையாக நடக்கிற சம்பவம் தானே அடுத்து மொழி எதனை பாஸை பேசினாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்ஞிக்க மனுசனால உருவாக்கப்பட்டதில் ஏன் பேதம் பார்க்க வேண்டும் காலத்துக்கு தகுந்தார் போல் எல்லாம் மாறிவரிகிறது அவ்வளவுதான் இண்டர்நெட் உலகத்தில் யாருக்கு புத்தகம் வாங்கி படிக்க தோனும் எல்லாம் தான் வீட்டுக்குல்லேயே கிடைக்கிறதே காலம் மாரும் போது அண்ணனும் தங்கயும் கல்யாணம் செய்து கொள்வார்கள் அப்போது யாரும் பெரிது படுத்தி பார்க்கமாட்டார்கள் அவ்வளவுதான் இயற்க்கையின் முன் நாம் எது செய்தாலும் அது கணவு மாதிரிதான் அதைமாத்த யாறாலும் முடியாது தினமலரில் அன்புடன் அந்தரங்கம் படியுங்கள் உண்மையான பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம்
@நண்பன்நல்ல கருத்துகளை பதிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்...எல்லாம் பல்கி பெருகிறதைதான் இவளும் செய்கிறாள் என்று சொன்னீர்கள் எதனால் பல்கி பெறுகிறது என்று சொல்லவில்லை...வெறுப்பு அடிபடையில்தான் பல்கி பெறுகிறது இது உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது...காமத்தை நான் என்றும் குற்ற பார்வையுடன் பார்த்ததே இல்லை...இது இயற்கையின் கொடை ஆனால் நித்யானந்தா போல் பிரமட்சரியம் என்று பேசிவிட்டு ரஞ்சித்தாவுடன் தியானம் பண்ண உண்மையாய் உள்ளவனுக்கு எப்படி பிடிக்கும். மொழி பேதம் தமிழில் மட்டும் இல்லை அது எல்லா மொழியிலும் உள்ளது. அவன் தாய் அவன் அவனுக்கு சிறந்ததாக இருப்பாள்..மற்ற தாய்க்கும் அவன் பெறாத பிள்ளையாய்த்தான் இருப்பாள் அத்தாய்க்கு....எதுவானாலும் தாய்மை ஒன்றுதான். மௌனத்திற்கும் மொழி உண்டு அதை உணர்தவனுக்குதான் தெரியும்...ஏட்டில் உள்ளதுதான் இன்டர்நெட்டில் வருகிறது...அதனால் ஏட்டில் உள்ளதை வேண்டாம் எனபது இல்லை...அண்ணன், தங்கை என்ற ஒரே உறவிலே உணர்வு தாயிடம் இருந்து எப்படி பிறந்தோமோ அப்படியே திறம்பி போவதற்கு ஈடாகும்...தாயின் மடியில் படுப்பதற்கும் தாரத்தின் மடியில் படுப்பதற்கும் வித்தியாசம் அறியுமோ உங்கள் மனம்...
நல்ல பதிவு நண்பரே. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள். என் பதிவை படித்ததற்கு நன்றி. நான் உங்கள்
follower ஆகி விட்டேன்.
@ஜெகதீஷ் குமார்ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பின் தமிழில் வருகிறது அதனால் ஏற்படும் சிறு பிழைகள் வரும் பதிவுகளில் வராமல் சரி செய்யபடும். உங்க மதிப்பு மிக்க கருத்துகளை வரவேற்கிறேன் நன்றி..!
good post continue..
my blog-
riyasdreams.blogspot.com
@Riyas மிக்க நன்றி..!
Post a Comment