Thursday, August 26, 2010
கனவுகள் ஏன் வருகின்றன....ஓஷோவின் விளக்கத்துடன்
"உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொல்வார்கள். ஆனால் ஒருவர் பழகும் நண்பர்கள் பலவிதம் அதில் ஒருவரை புரிந்துகொள்வது முடியாதது அதனால் இவ்வாக்கியம் செல்லாதாக இருக்கும். அவையே "உன் கனவை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என மாற்றி அமைத்தால் புரிதலுக்கு மிக பொருத்தமாக இருக்கும் ஏனெனில் ஒருவரின் அடக்கப்பட்ட உணர்வுகளே கனவில் வருகிறது...
நான் உணவு உண்பதில் சுத்த சைவமாக மாறிவிட்டேன் ஆனால் என் மனைவி குழந்தைகள் அசைவ உண்பார்கள். அவர்களை நான் தடுப்பதில்லை சைவத்தை பற்றிய நல்லதை மட்டும் அவர்களுக்கு சொல்லிகொண்டே இருக்கிறேன். நான் மாறினது போல அவர்களும் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அன்று ஒரு நாள் வீட்டில் எனக்கு வெறும் ரசம் மட்டும் வைத்துவிட்டு அவர்கள் பிரியாணி செய்து சாப்பிட்டார்கள் ..அவர்கள் சாப்பிடும் போது என் மனம் சொன்னது "இந்த முறை சாப்பிடு அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ஆனால் சாப்பாடு என்றாலும் பிடித்த கொள்கையில் உறுதியாய் இருந்தேன். அந்த இரவு அதை மறந்து தூங்கிவிட்டேன் ஆனால் நினைவில் மறந்தது கனவில் உதயமாயிற்று "ஒரே பிரியானை வாடை அதை நான் ருசித்து சாப்பிடுவதுபோல் இருந்தது. அதன் பின்னே நான் யோசித்தேன் நினைவில் அடக்கப்படும் நிகழ்வுகள் கனவின் மூலம் வெளிபடுகிறது...அவைகள் கோவம், அழுகை, ஆனந்தம், நாவின் ருசி போன்றவை அடக்கப்படும் போது கனவின் மூலம் காட்சிகளாக வருகிறது என்று உணர்ந்தேன். இதில் ஒருவருக்கு செக்ஸ் சம்பந்தப்பட்ட கனவுகள்தான் அதிகமாக வரும் ஏனென்றால் உணர்வுகளை அடக்குவதில் செக்ஸ்தான் முதலிடம் பெறுகிறது...போதிய மட்டும் நாம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். அப்படியில்லை என்றால் கனவின் மூலம் அவை கட்டாயம் வெளிப்படும் அதுவே நிராசையாக கூடும்.
ஓஷோ, கனவின் தன்மையை பற்றி விளக்குகிறார்:
நாம் எப்போதும் இல்லாததை பற்றியே கனவு காண்கிறோம் ஒருநாள் பட்டினி கிடைந்தால் அந்த இரவு நாம் உணவைபற்றிய கனவு காண்கிறோம் . பிரம்மசாரியத்தை உன்மீது திணித்துக் கொண்டால் உனது கனவு காம சம்பந்தப்பட்டதாக இருக்கும். காம உணர்வு உள்ளதாக இருக்கும். அதனால்தான் மனோதத்துவர்கள் உன் கனவை ஆராய்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறார்கள். என்னெனில் அது நீ எதை அடைக்கிவைத்திக்கிறாய் என்பதை காட்டிவிடும் நீ மிகவும் பசியோடிருந்தால் நிச்சயமாக உணவை பற்றிய கனவு வரும். அதனால் தான் பலமதத் துறவிகளும் உறங்குவதற்கு பயப்படுகிறார்கள். மகத்தா காந்தி கூட உறங்குவதற்கு பயப்பட்டார் அவர் எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு அதை குறைக்க முயற்சித்தார். மாகத்மா காந்தி "நான் விழித்துக் கொன்டிருக்கும் நிலையில் நான் பிரம்மசரியத்தை கடை பிடிக்கிறேன் ஆனால் என் கனவுகளில் நான் ஒரு பிரம்மச்சாரியல்ல" என்று கூறினார். அவர் குறைந்தபட்சம் தன் கனவுகளில் தான் ஒரு பிரம்மச்சாரியல்ல என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.
பகல் நேரத்தில் நீ அடிக்கி வைப்பதை உனது கனவுகள வெளிபடுத்திவிடுகின்றன. ஒருவர் எதையும் அடக்கி வைக்கவில்லையோ கனவுகள் வராமல் மறைந்துவிடும்.
ஒருமுறை ஒரு கிருஷ்ண பக்தர் என்னுடன் தங்கினார் அவர் "நான் எப்போதும் கிஷ்ணனை பற்றிய கனவு காண்பேன்" என்றார். நான் "உங்களால் எப்படி இதை செய்ய முடிந்தது.? கனவு எப்போதும் நாம் செய்யக்குடியது அல்ல எந்த முறையில நீங்கள் முயற்சிக்கிரீர்கள் என்று கேட்டேன். அவர் " என்னுடைய குரு எனக்கு ஒரு வழி சொல்லிகொடுத்தார். அதன் படி ஒவ்வொரு நாள் இரவும் துங்கப் போகும்போது கிஷ்ணரை பற்றி நினைத்துக் கொண்டு கற்பனை செய்து கொண்டிருப்பேன் மூன்று வருட இடைவிடாத கற்பனை பயிற்சி செய்து கொண்டே துங்கியதன் மூலம் ஒருநாள் அது நிகழ்ந்தது நான் என் கனவை பற்றிய என்ன கற்பனை செய்தேனோ அதுவே என் கனவாய்கிவிட்டது. அதிலிருந்து எனக்கு அற்புதமான ஆன்மிக கனவுகள் வருகின்றன "என்றார்.
நான் "விவரமாக சொல்லுங்கள் நீங்கள் இந்த கதை மூலம் சமாளித்துயிருக்கலாம் ஆனால் ஆழ்மனது இந்த கதையில் கூட செய்தியை அனுப்பும் ஆழ்மனது தனது செய்தியாய் சொல்ல உங்களுடைய இந்த் கதையை கூட உபயோகிக்கும்" என்றேன்.
அவர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேட்டார். நான் "நீங்கள் உங்களது கனவை விளக்கமாக எனக்கு கூறுங்கள்" என்று கேட்டேன். அவர் என்னிடம் கனவை கூற ஆரம்பித்தார். அது முழுக்க முழுக்க காமவயபட்டது. கிஷ்ணர் இவருடைய காதலனாகிவிட்டார் இவர் ஒரு ஆண்கோபியாகவே ஆண் நண்பனாக மாறிவிட்டார் உள்ளர்த்தம் என்பது ஹெமோசெக்ஸ்-ஓரின சேர்க்கைதான் இவர்கள் இணைந்தது, நடனமாடியது, முத்தமிட்டது அணைத்து கொண்டது எல்லாம் ஓரின சேர்கையாகத்தான் நடந்தது.
நான் "நீங்கள் வெறும் உருவத்தை மட்டும் மாற்றி இருக்கிரீகள். ஆனால் உள்ளே உள்ளது அப்படியேதான் உள்ளது. நீங்கள் ஒரு ஒரின சேர்க்கையாளர் எனபது எனக்கு புரிகிறது" என்றேன். அவர் மிகவும் அதிர்சியடைந்து பாதிக்கபட்டார். அவர் "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கு எப்படி தெரியும் அது.? என்றார். நான் உங்களது கனவுதான் மிக தெளிவாக கூறுகிறதே என்றேன்.
இந்த ஓரின சேர்க்கை எண்ணம் அவரது மத கதையிலும் புகுந்துவிட்டது. கிஷ்ணா ஒரு ஓரின சேர்கையாளராய் ஆக்கிவிட்டார். அவர் மிகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி அந்த இரவே அவர் கண்ட கனவு மறைந்துவிட்டது மிகவும் தெளிவாக ஓரினசேர்கை கனவு வந்தது. அவர் "என்னை என்ன செய்தீர்கள்" என்று கேட்டார். நான் எதையும் செய்யவில்லை நான் உங்களுது ஆழ்மனதில் செய்தி என்ன என்பதை உங்களுக்கு தெளிவு படுத்தினேன். இனிமேல் நீங்கள் என்ன கதை வேண்டுமானலும் கட்டலாம் அது பொருட்டே அல்ல ஆனால் உள்ளர்த்தம் அதுவாவே தான் உள்ளது. என்றேன்.
என் எண்ணத்தின் எழுத்துகளையும், ஓஷோ கூறிய விளக்கங்களையும் பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
5 comments:
என்னெனில் அது நீ எதை அடைக்கிவைத்திக்கிறாய் என்பதை காட்டிவிடும் நீ மிகவும் பசியோடிருந்தால் நிச்சயமாக உணவை பற்றிய கனவு வரும். அதனால் தான் பலமதத் துறவிகளும் உறங்குவதற்கு பயப்படுகிறார்கள்.
அருமையான பகிர்வு குரு
///"நான் விழித்துக் கொன்டிருக்கும் நிலையில் நான் பிரம்மசரியத்தை கடை பிடிக்கிறேன் ஆனால் என் கனவுகளில் நான் ஒரு பிரம்மச்சாரியல்ல" என்று/// நல்ல பதிவு நண்பரே கூறினார்.
//பகல் நேரத்தில் நீ அடிக்கி வைப்பதை உனது கனவுகள வெளிபடுத்திவிடுகின்றன. ஒருவர் எதையும் அடக்கி வைக்கவில்லையோ கனவுகள் வராமல் மறைந்துவிடும்.//
ஓஷோ கூறிய விளக்கங்களையும் பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல.///
நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் நன்றி...
கனவுகளைப் பற்றி அருமையாகத் தந்திருக்கிறீர்கள். இன்னும் பல விளக்கமிருப்பதாக கேள்விப்பட்டேன். தெரிந்தால் பதிவிலிடுங்க சகோதரா..
Post a Comment