Sunday, August 15, 2010
நமக்கு தேவையா இந்த சுத'தந்திரம்'
இந்த சுதந்திராத்தால் யார் பலன் அடைந்தார்கள். அரசியல்'வியாதிகாரனுங்க' மட்டுமே...
ஒரு இனத்தை அழிக்க முக்கிய காரணமாக இருந்த இந்த சுதந்திரம் நமக்கு தேவையா..சுற்றி முள்வேலி அமைத்து ஜன்மயிருநாயகம் என்ற போர்வையில் நம் அடிப்படை உரிமைகள் தட்டிபரித்தால் இது எதுமாதிரி சுதந்திரம்..இதில் நாம் எப்படி சுதந்திரமாக இருக்குமுடியும். சுதந்திர நாடு என்று சொல்ற நாட்டுல ஒரு சுதந்திர கருத்த சுதந்திரமாக சொல்ல கூட உரிமையில்லை என்றால் அது என்ன சுதந்திர நாடு அதுக்கு எதுக்கு ஒரு தேசிய அடையாளம்..இறையாண்மை பாதிக்கபடுகிறது என்று அலறும் அரசியல்'வியாதிகாருனுங்க'..மக்களை அரசியல்வாதிகளுக்கு எதிராக சிந்திக்க விட்டால் அவங்க ஓட்டு வங்கி பாதிக்கப்படும். அப்போது பாதிக்கபடாமல் இருக்கத்தான் எதிராளின் மேல் அரசியல்'வியாதிகாருனுங்க' பயன்படுத்தும் வார்த்தை இறையாண்மை பாதிக்கபடுகிறது...
ஒரு சனமயிறுநாயகத்தில் சாப்பிடுவதற்கு சோறையும் கொடுத்துவிட்டு சாப்பிடும் போது தட்ட பிடிங்குனதுபோல..பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று சொல்ற சனமயிறுநாயகம் நாட்டுல..சுதந்திரமா எழுதினாலோ, கருத்து சொன்னாலோ, பேசினாலோ..அரசியல் 'வியாதிகாருன்ங்க' தன நலன் பாதிக்கபடாமல் இருக்க பயன்படுத்தும் சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டம். கைதுக்கு காரணம்: இறையாண்மைக்கு எதிராக குந்தகம் விளைவித்தல்..நாங்க முட்டாளாக்கி வச்சுருக்குற மக்களை எங்களுக்கு எதிராக சிந்திக்கவிடுதல், எங்க தலைமுறை குடும்ப பொழப்புல மண்ண அள்ளி கொட்டுதல்....
அறிஞசர் பெருமக்களே சிந்தியுங்கள் உங்கள் புரட்சிகரமாக கருத்துக்களால்தான் இந்த அரசியல்'வியாதிகாரனுங்களிடம் இருந்து இந்நாட்டை முழுமையான சுதந்திர நாடாக மாற்றமுடியும்.
உலக அரசியல் வியாதிகாரனுங்களுக்கு பைத்தியம் பிடித்தால் உலகம் அழித்துவிடும் நாம் மயிரிழைலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். படித்த, படிக்காத அறிவுள்ள அறிஞசர்களே சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை புதிய உலகை படைக்கட்டும். உங்களால் முடியும்...
செத்த பிணங்களின் மேல் சுதந்திர கொடியை நட்டுவைத்து ஆனந்த கூத்தாடும் எம்மக்களே...'ஈழபடுகொலைகளை' மறந்துவிடீர்களா..எப்படி மறந்தீர்கள் அரசியல்வியாதி பணம் கொடுத்தானா...உன் தன்மானம் எங்கே போனது கோபாலபுரம் சென்று பதுங்கிவிட்டதா....
ஈழம் மலர்வதே எங்கள் சுதந்திரம்...அதுவே எம்மக்களுக்கும், தமிழுக்கும் கிடைக்கும் சுதந்திரம்...அதுவே தமிழனின் தாகம்...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
16 comments:
இந்த மாதிரி பதிவு எழுதவும் அந்தச் சுதந்திரம் வேண்டும் நண்பரே...
@LK
இந்த மாதிரி சுதந்திரமா எழுதின 'சவுக்கு' இணைய நிர்வாகி அராஜ அரசால் கைது செய்யபட்டார். நம் மீனவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீமான் இன்று தேசிய பாதுகாப்பு சட்ட்டத்தில் சிறையில் இருக்கிறார். இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு...இதுதானா சுதந்திரம்
http://www.savukku.net/2010/07/blog-post_26.html
சவுக்கு விவகாரம் முழுதும் தெரியாது . அதை பற்றி நான் பேச தயாரில்லை. சீமான் பேசிய விதம் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் என்பது நடுநிலையாளர்களின் கருது. அதுதான் என் கருத்தும்.. சினிமாவில் பிழைக்க வழி இல்லாமல், மக்களிடம் புகழும், பணமும் சம்பாதிக்க அரசியலில் குதித்து இன்று சிறையில் இருக்கிறார் சீமான். அதற்காக நான் கவலை பட போவது இல்லை. கவலைப் பட எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவற்றை விட சீமானின் கைது ஒன்று பெரியது அல்ல
உண்மையில் சுதந்திரத்துக்காக போராடிய தமிழர்கள் பலர் ஆனால் அவர்களை பற்றி
பெருமையாக இந்திய அரசு மக்களும் நினைபதே இல்லை , பாரதியார் பார்பனனாக
பிறந்தாலும் பார்பன பயங்கரவாதத்தையும் பெண் அடிமையும் துணிவோடு எதிர்த்தவர்
தன் கேளிக்கை சித்திரங்களாலும் கட்டுரைகளாலும் ஆங்கிலேயரை எதிர்த்தார்,
புலித்தேவன், திருப்பூர் குமரன், இப்படி ...ஏகப்பட்ட தமிழர்கள் இதற்காக
உழைத்திருக்கிறார்கள், ஏன் நேதாஜி, பகதசிக்ன் போன்றோரும் சுதந்திர
போராட்டத்தில் முக்கிய மாணவர்கள் எதோ காந்தியும், நேஹ்ருவும், தான் போராடி
வாங்கினார்கள் என்று கூறுவது வேதனைக்குரிய விடயம், பார்பானிய
பயங்கரவாதத்தின் உச்சம், காந்தி ஆரம்பித்து வைத்த இந்தியா பாகிஸ்தான்
பிரச்சனை இன்றும் முடிவுக்கு வரவில்லை,
எனக்கு நாடு, எல்லை என்பதில் நம்பிக்கை இல்லை, அப்புறம் எங்கே சுதந்திரத்தை தேடுவது!!!!! நல்லபதிவு நண்பரே
குரு அவர்களே சுதந்திரம் என்பது இல்லாவிட்டால், இல்லாம்மல் இருந்து இருந்தால், நீங்கள் இப்படி பேசி இருக்க முடியாது... என் கேள்விகள் என்னவென்றால் வெறும் கருத்து தெரிவிப்பதால்,கத்தி பேசுவதால் மட்டும் மாற்றம் நிகழ்ந்துவிடாது.... ஆரோக்கியமான செயல்கள் தேவை தோழரே!! நம்முடைய பலவீனம் நாம் புரட்சியை வெறும் வார்த்தையில் மட்டும் பயன்படுத்துகிறோம்,வாழ்க்கையில் செய்தவர்கள்,வாழ்ந்துகாட்டியவர்கள் யார்?? மிகச் சிலரே,கிளர்ச்சியை தூண்டும் வார்த்தைகளால் மட்டும் புரட்சி ஏற்பட்டுவிடாது... நான் என்ன கேட்கிறேன் இப்படி பேசுவதால் என்ன நடக்கும் என்பதும் பேசுபவர்க்கும் தெரியும்,ஆகையால் அப்படி பேசுவதால் பெயர் மட்டுமே வாங்க முடியும் நீங்கள் விரும்பும் சுதந்திரத்தை அல்ல!! அதற்காக இப்போது உள்ள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை நான் ஆதரிக்கவில்லை.... இலங்கையில் போர் முடிந்து எவ்வளவு நாள் ஆகின்றது, கத்தி பேசுபவர்கள்,கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் கிளர்ச்சியை தூண்டும் சொற்பொழிவினை கொடுப்பவர்கள் என்ன பயனுள்ள செயலில் ஈடுபட்டார்கள் எண்ணி பாருங்கள் தோழரே!! அவர்களின் உணர்வுகளை நான் கொச்சை படுத்த விரும்பவில்லை,நீங்கள் நினைக்கும் சுதந்திரம் இவர்கள் செய்யும் செயல்களால் நிச்சயம் கிடைக்க போவதில்லை பயனுள்ள மாற்றம் தேவை, ஆரோக்கியமான கண்ணோட்டம் தேவை,சிறந்த நடைமுறை தேவை, ஆரோக்கியமான செயல்பாடுகள் தேவை, இதை சாதாரண ,சராசரி மனிதர்கள் செய்யது கடினம், பேசுபவர்களை கொஞ்சம் பேச்சை நிறுத்திவிட்டு எதாவது பயனுள்ள செயலில் ஈடுபடசொல்லுங்கள்... தமிழர்கள் மட்டுமல்ல மனித தன்மை உள்ள அனைவரும் தயாராக உள்ளோம் தோழரே!!இன்று எது உண்மை அங்கு வாழ்பவர்களின் துன்பம்,அதை போக்க உடனடி செயல்கள் தேவையில்லையா தோழரே அதற்கு என்ன நடக்கும் என்று தெரிந்த செயலை செய்வதை விட என்ன நடக்க வேண்டும் என்பதற்க்கான செயல்தான் தேவை!!!
நல்ல பதிவு ...
கருது சுதந்திரம் கூட இல்லாத நாடு ... சுதந்திரம்... புண்ணாக்கு ...
@vignesh narayanan
சுதந்திரம் இல்லாமல் போதும் சுதந்திரம் வேண்டி வெள்காரண எதிர்த்து நலயுள்ளங்கள் போராடித்தான் வாங்கின அப்போது புரட்சி கருத்துகள் மக்களுக்காக சொல்லப்பட்டன. அதன் பின்னே வந்தது இந்த சுதந்திரம் அதில் காந்தி மட்டும் மிகைபடுத்தபட்டார். ஆரோக்கியமான செயல் எனபது என்ன சொல்லுங்கள்... ஈழத்தில் ஆரம்பத்தில் அமைதியான முறைல்தான் போராட்டம் இருந்தது. அப்போராட்டத்தை நடக்கவிட்டார்களா...புரட்சி எனபது முதலில் வார்த்தையில்தான் வரும் பின்பே செயலில் இருக்கும் இல்லையென்றால் முத்துகுமார் செத்ததுபோல்தான் சொல்லிவிட்டு போகவேண்டும். வாழ்துகாட்டியவர்கள் அதிகம் பேர் உள்ளனர் தன இனத்திற்காக தன் மக்களையும், தன் மகன்களையும் இழந்த பிரபாகரன் உங்களுக்கு தெரியவில்லை....எனக்கு பெயர் வாங்க வேண்டும் என்ற அல்ப எண்ணம் எல்லாம் கிடையாது எந்த லாப நோக்கமும் இல்லை...மனக்குமுறல் வெளிபடுத்தின அது ஒவ்வொருவரின் சுதந்திரம் அதுகூட வேண்டாம் அரசியல் வாதி மறைமுகமாக ஆப்பு அடித்துகொண்டே இருப்பான் நீ வாங்கி கொண்டே செயலை மட்டும் கவனி அவனால் பாதிக்கப்பட்டவருக்கு நீ உதவி மட்டும் செய் கேள்விகள் கேட்காதே எனபது போல் உள்ளது உங்க வாதம்...400 வருடம் ஆட்சி புரிந்த வெள்ளையனிடம் நீச்சயம் கிடைக்க போவதில்லை என்ற இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. கிடைக்கும் என்ற நம்பிக்கையின் விதை ஆழமாக இருந்தது அதனாலே கிடைத்தது. பயனுள்ள மாற்றம் என்பதை சொல்லுங்கள் சேர்ந்தே செய்யலாம் வாருங்கள். ஏன் தயக்கம் நான் சராசரி மனிதன்தான் என்னால் முடிந்ததை சொல்லவில்லை. உங்களால் முடிவாதை சொல்லுங்கள் நானும் வருகிறேன். நினைக்கும் மாற்றத்தை உருவாக்குவோம். அங்கு எல்லாம் நடந்து விட்டது கொஞ்சம் நஞ்சம் இருப்பதையும் தடையம் இல்லாமல் அழிகின்றனர்.
இப்படியே அடக்கப்படும் குணம்தான் நம்மிடம் அதிகம் இருக்கு. இப்பதில் உள்ள பிரச்சனைகளை நான் அறிவேன் ஆனால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. சொல்லவேண்டியதை சொல்ல நான் பயந்ததில்லை....
என் பதிவில் கருத்திட்டமைக்கு நன்றி...வாழ்க கொள்கை
இன்று இந்தியாவின் சுதந்திர நாள்!
ஈழத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?
ஈழத்தைப் பற்றி, புலிகளிடம் சென்று கேளுங்கள்!
ஈழத்தில் நடந்தது இனக்கொலை அல்ல! இனப்பலி!
முட்டாள்/முரட்டுத் தலைவன் எழுதிய விதி!
பிரியமிருந்தால் இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடு!
இல்லையெனில் வெளியேறி திண்டாடு!
எம் மண்ணில், குறைகள் இருக்கலாம்! கவலையில்லை! சுதந்திரம் என்னும் சொல்லுக்கு இலக்கணம் இந்தியா தான்!
வேற்றுமையில் ஒற்றுமையே எம் தாயகம்!
தாய் மண்ணே வணக்கம்!
ஜெய் ஹிந்த்!
வந்தே மாதரம்!
இப்போது கேட்டீர்கள் பாருங்கள்,இதை என்னிடம் கேட்டதை போல் உங்களுக்குளே கேட்டு பாருங்கள்... நடந்தையெல்லாம் விடுங்கள், இது ஒரு அறை நூற்றாண்டு கால பிரச்சனை,நாம் விவாதிடுவதால் தீருமா என்றால்?,இது போன்ற ஆரோகியமான விவாதங்கள் தொடங்கும் போதும்,தொடரும் போதும் நிச்சயம் தீர்வு கிடைக்கும் தோழரே!அப்போதுதான் நான் கூரிய பயனுள்ள செயல்கள் பற்றிய சிந்தனைகள், யோசனைகள் கிடைக்கும்...
என் பார்வையில் தற்போது பகிரங்கமான ஆய்வுகள் அங்கு நடத்தப்பட வேண்டும், இதற்கு உலகளாவிய முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.. அது தமிழருக்காக மட்டுமல்லாது மனிதர்களுக்கான அமைப்பாக இருக்க வேண்டும்,போர் என்று எங்கு நடந்தாலும் அதில் நாட்டாமை செய்யும் வேலையை மட்டுமல்ல போருக்கான காரணிகளை ஆராய்ந்து நியாயம் நிலை நாட்டபட வேண்டிய செயல்களை செய்ய வேண்டும்.... போர் மட்டுமல்ல மனிதர்களுக்கெதிரான எந்த செயல்கள் நடந்தாலும் அதில் தலை இட அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும்,அப்படி ஒரு அமைப்பு உருவாகும் போது உள்நாட்டு பிரச்சனை என்று யாரும் கூற முடியாது, நீ எந்த நாட்டுகாரனாக இருந்தாலும் சரி மனிதர்கள் என்று வரும் போது அந்த அமைப்பு தலையிட முடியும் ... அப்படி ஒரு அமைப்பை நான் கூறிய விசயங்களோடு இன்னும் ஆரோக்கியமான,தேவையான விசயங்களை சேர்த்து ஆரம்பிக்கபட வேண்டும்..மேலும் தற்போது அதிகாரத்தில் உள்ள அமைப்புகளோடு இணைந்து அங்கு முள் வேலிகளுக்குள் இருக்கும் சகோதர,சகோதரிகளுக்கு பாதுகாப்பும்,நிரந்தரமாக விடுவிக்கபட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்... மேலும் போரில் ராஜபக்சே அரசு செய்த தவறுகளை கண்டிக்கும் பொருட்டு,இனி எந்த நாட்டிலும் இது போன்ற கொடுமைகள் நடக்காத வண்ணம்,அந்த போரில் முக்கிய பங்கு பெற்ற அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் அது இந்தியனாக இருந்தாலும்.... அது நடக்க என்ன தேவையோ அதை செய்ய வேண்டும்..
நம் இனம் என்று பார்த்து நம் சகோதர,சகோதரிகளை இழந்தது போதும்,இனியாவது நம் இனம் மனித இனம் என்று பார்போம்,அனைவரிடத்திலும் இந்த எண்ணத்தை ஏற்படுத்துவோம்.. மனிதர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எல்லா அடையாளங்களை உதறிவிட்டு மனிதன் என்ற ஒற்றை அடையாளத்துடன் தீமையை,தியவர்களை எதிர்க்கும் நிலையை உருவாக்க வேண்டும் தோழரே!!!
"ஈழம் மலர்வதே எங்கள் சுதந்திரம்...அதுவே எம்மக்களுக்கும், தமிழுக்கும் கிடைக்கும் சுதந்திரம்...அதுவே தமிழனின் தாகம்...!"
????????????????
@kippoo
கருத்திட்டமைக்கு நன்றி
//இன்று இந்தியாவின் சுதந்திர நாள்!
ஈழத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?//
ஓய் ரம்மி, நம்ம மீனவர்களை daily நாய் மாதிரி சுடுறாங்களே, அப்ப என்னத்த புடுங்குனாங்க..
Australia'la ஒரு வட இந்தியென அடிச்சா இந்தியவே கொதிக்குதே ... அப்ப தமிழ்லன் உயிர்நா அவ்வளவு கேவலமா போய்டுச்சா ???.. உன்னய மாதிரி சுரனை இல்லாம தமிழ்லன் இருக்கறத்தாலதான் உலகம் எல்லாம் அடி வாங்கிடு கேக்க நாதி இல்லாம இருக்கான்
//சீமான் பேசிய விதம் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் என்பது நடுநிலையாளர்களின் கருது//
யார் அந்த நடுநிலையாளர்கள்??? cho ramasamy, MK narayanan, subramiya swamy, dinamani,dinamalar,Hindu, etc.. Intha poonul partykathaan neenga sollura nadunillai naataamaigala??? Mr LK
@Kumar
கோவகனல்மிக்க எல்லோருக்கும் உறைக்கும் விதமாக கருத்திட்ட உங்களுக்கு என் நன்றிகள்.....
Post a Comment