இன்று உலகத்தில் படிக்காதவன் கண்டுபிடித்ததைதான் பல பல்கலைகழகங்களில் ஆய்வக படிப்பாய் இருக்கிறது. இதில் அறிவாளியை விட புத்திசாலி சிறந்தவனாக என்றும் இருக்கிறான்....சினிமா படம் பார்க்க அதிகம் பேரு வருவாங்க ஆனா நல்ல தரமான படம் எடுக்க படைப்பாளிகள்தான் குறைவு...பள்ளி படிப்பு சரியாக படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்ப கண்டுபிடிச்சாரு ஆனா அவருக்கு பின்னாடி வந்தவங்க ஏற்கனவே கண்டுபிடிச்ச பல்ப இன்னும் கண்டுபிடிச்சு அதை பிரகாச படுத்தினாங்களே தவிர கண்டுபிடிப்பு என்று ஒன்றும் இல்லை....அதை மெருகூட்டுவது ஒன்றும் பெரிய சாமர்த்தியம் இல்லை. படைப்பதே என்றும் நிலைக்கும்.
முதலில் அடித்தளம் யார் இட்டார்கள் என்பதே பார்க்கவேண்டும். அதனால நான் ரொம்ப படித்தவன் ph.d முடித்தவன் B.E எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்தவன் என்று சொல்லிகொள்வதில் என்ன பெருமை வேண்டிருக்கு அடித்தளம் இட்டவன் உனக்கு முன்னே இருக்கிறான். அதற்கு நீ ஒரு மேலும் வடிவம் கொடுத்தாய் அவ்வளவே..!
படிக்காத காமராஜ் நாட்டுக்கு அதிகம் செய்தார் என்று சொல்றாங்க ஆனா அவரு படித்திருந்தால் இன்னும் அதிகமா செய்துருப்பாரு என்று பல பேரு சொல்றாங்க அவரு படித்திருந்தாலும் செயரதான் செய்திருப்பாரு இதில் ஒன்றும் பெரிய அற்புதமோ, அதிசையமோ நடந்திருக்காது..
நான் கேட்கிறேன், ரொம்ப படித்த அறிவாளிகளெல்லாம் நாட்டுக்கு அப்படி என்ன பெருசா சாதனை பண்ணிடாங்க, சமுதாயத்தில் என்ன ஒரு பெரிய விழிப்புணர்வா உண்டாக்கிட்டாங்க...ஆராய்ந்து பார்த்தால் ஒன்றும்மில்லை...அப்படி அவர்கள் ஏதும் செய்திருந்தால் ஏற்கனவே செயததுடைய மிச்சமாகத்தான் அச்சாதனை இருந்திருக்கும்..
படைப்பாளி என்றும் படைப்பாளிதான். அவன் புத்தி, அறிவுக்கு என்றும் ஈடாகாது..அதனால் ஒருவருடைய படிப்பை மட்டும் வைத்து புத்தியின் திறமையை தவறா எடைபோடகூடாது.
நம் பலகலைகழகங்களில், நாலு பேரு உட்கார்ந்து மார்க்கு போட்டு நீ நல்லா படித்த அறிவாளி என்று சொல்லி, கைல ஒரு பட்டத்தை கொடுத்தால் நாம் அறிவாளியா..நம்ம அறிவு நமக்கு தெரியாத
அறிவு எனபது ஏற்கனவே அறிந்ததை அறிவது..ஆனால் புத்தி எனபது அறியாததை அறிவது..
இதுதான் என் புத்தியின் அறிவு...!
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல..!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
23 comments:
ஒரு விஷயம் கேள்வி பட்டு இருக்கிங்களா என்று தெரியல குரு, நிலாவுல gravitational force இல்லாததால,அங்க பேனா உபயோகிச்சா மை flow ஆவதில்லை அப்படின்னு ஒரு பெரிய விஞானி கூட்டம் கருத்தரங்குனு நடத்தி என்ன பண்ணலாம் என்று விவாதிச்சங்கலாம்!! அங்க solution ஏதும் கிடைகவில்லயாம்! கடசியா ஒரு விஞாநியோட பையன் கேட்டானாம் Y would u not use a pencil அப்படின்னு ! இது நடந்ததோ, ஜோக் ஒ, இது தான் நீங்க சொல்லி இருக்க பதிவின் GIST !! பகிர்வுக்கு நன்றி !!
நல்லா இருக்கு
பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியிலே அனுபவ பாடம் கற்பவர்கள்தான், வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏதோ உபகாரம் செய்ய முடியும். அனுபவ மெருகேறாத எந்த ஏட்டுப் படிப்பும் யாருக்கும் உதவாது.
என்ன நண்பரே.... ரொம்ப ஆவேசம் தெரியுது... யாராவது ஏடாகூடமா பேசிட்டாங்களா???
நல்ல பதிவு..
//அதை மெருகூட்டுவது ஒன்றும் பெரிய சாமர்த்தியம் இல்லை. படைப்பதே என்றும் நிலைக்கும்//
உண்மைதான்..
//அடித்தளம் இட்டவன் உனக்கு முன்னே இருக்கிறான். அதற்கு நீ ஒரு மேலும் வடிவம் கொடுத்தாய் அவ்வளவே..!//
அடடா soooper...!
@vinoveenee
பதிவு புரிந்தமைக்கு மிக்க நன்றி....இவை எளிமைபடுத்துவது சுலபமானதுதான் ஆனால் தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பதுபோல் அல்லவா இருக்கும்....வட்டத்துக்கு நடுவுளா அம்பை குறிபார்த்து ஏய்வதை விட அம்பை ஏய்துவிட்டு சுற்றி வட்டம் போட்டுவிடுவேண்டியதுதான் இது ரொம்ப எளிமையானதுதான்....முரண்பட்ட செயல்கள்தான் மனித வாழ்வில் நடைபெறுகிறது.
@ஆண்டாள்மகன்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க...
@r.selvakkumar
உணமைதான்
@ஜூனியர் தருமி
ஏட கூடமா பேசினாதனா வார்த்தை வருமா ஏட கூடமா பேசினதா பார்த்தாகூட எழுத தோன்றும்...
@Riyas
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க...
@எம் அப்துல் காதர்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க...
///அறிவு எனபது ஏற்கனவே அறிந்ததை அறிவது..ஆனால் புத்தி எனபது அறியாததை அறிவது..
இதுதான் என் புத்தியின் அறிவு...!//////
அருமையான வரிகள், அற்புதமான சிந்தனை படித்து பட்டம் வங்கியர் எல்லாம் புத்திசாலி அல்ல படிக்காதவன் எல்லா முட்டாளும் அல்ல என்பதை விளக்கும் உயரிய சிந்தனை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
correct
நீங்கள் கூறியுள்ளவற்றில் முற்றிலும் எனக்கு உடன்பாடு உள்ளது நண்பா....
அறிவாளியோ... புத்திசாலியோ....
படிக்காதவர்களை இன்றும் ஏளனமாக பார்க்கும் நிலை உள்ளது குரு....
@கனிமொழியாள்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க...
அருமையான பதிவு. உங்களுக்கான பின்னுட்டத்தில் கூட அருமையான கதையொன்று. இதை அமெரிக்க ரஷ்ய நாடுகளுக்கிடையே நடந்ததாக கூறுவார்கள்
அதை மெருகூட்டுவது ஒன்றும் பெரிய சாமர்த்தியம் இல்லை. படைப்பதே என்றும் நிலைக்கும்
உண்மைதான்....????? rk..........rk........super go..
சிந்தனை குரு!!!!
நான் கூட படைப்பாளி என்று சொல்லி கொண்டு திரியும் சிலரை பற்றி என் சிந்தனை ஓட்டத்தை பதிவு செய்துள்ளேன் ........
முடிந்தால் படித்து தங்கள் கருத்தை சொல்லவும் .....
http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_14.html
@தனி காட்டு ராஜா
///இவர்கள் மற்றவர்களின் உருவாக்கத்தை பயன்படுத்தி
நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள் ,அவ்வளவுதான்....... ///
தன்னை படைப்பாளி என்று சொல்லிகொள்பவர்கள் எல்லாம்....நிஜத்தை தவிர்த்து நிழலுக்கு வர்ணம் பூசுகிறார்கள்...
அருமை பதிவு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்
@ம.தி.சுதா
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க...
@Anonymous
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க...
சில நாட்களுக்கு முன் நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழிச்சியில்
"நமது கல்விமுறை ஒரு கல்வியாளானை உருவாக்குவதில்லை "ஓர் சிறந்த வேலைகாரனையே உருவாக்குகிறது என்று ஒரு திரைப்பட இயக்குனர் சாடினார் .
உங்கள் பதிவை பாரத்ததும் இந்த கருத்தே என் மனதில் தோன்றுகிறது ....
Post a Comment