Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, April 17, 2024

மரணம் நெருங்கி வரும் வேளையில், "இனிமேல் நாம் பிழைக்க முடியாது அவ்வளவுதான்..." என்று பயத்துடன் இருக்கும்போது மீண்டும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால் நமக்கு தெரியும். இவ்வளவு நாள் ஆணவத்தில் ஆடிய ஆட்டம், திமிராக பேசிய பேச்சு எல்லாம் நம் கண் முன்னால் வீழ்ந்துகிடக்கும்.. அதை நன்கு உணரலாம். அப்படியும் உணரவில்லை என்றால் அதுங்க எல்லாம் மனித பிறவிகளே இல்லை... கண்ணதாசன் பாடலைதான் இங்கு குறிப்பிடவேண்டும். "உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு... இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு... கொண்டாடும் போது ஒரு நூறு பேரு.. உடல் கூடு விட்டு ஆவி போனால் கூட யாரு..!? #மரணம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டு போய்விடும். நாம் பல வருடம் வாழும் வாழ்க்கை வர்ணஜாலம்கொண்ட மிகப் பெரிய நீர்க்குமிழி. அதை வெடிக்க வைக்க ஒரு சின்ன குண்டூசி போதும். பட்டென்று வெடித்து இருந்த சுவடு தெரியாமல் போய்விடும். "ஒருவருக்கு தன் வாழ்வை பற்றிய 'புரிதலே' மிக பெரிய அரசன்" என்கிறார் புத்தர். எனக்கு வாழ்வை பற்றிய மிக நுட்பமான புரிதல் உள்ளது. அது உங்களுக்கு...!? :-Rk.Guru rkguru3@gmail.com (Share this post...)

0 comments: