Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, April 17, 2024

கணவன் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு அமங்கலமாக செய்யப்படும் சடங்குகள் இந்து மதத்தின் அகோர முகத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. கணவன் இறந்து ஏழாவது நாள் இறந்தவனுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு, ஒப்பாரி வைத்து பின் இறந்தவனின் மனைவியை தன் அம்மா வீட்டிற்கு அழைத்து வந்து விடுவார்கள். அதுவும் இரவு பொழுதில் அழைத்து வருவார்கள் ஏனென்றால் அவளை யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக, மறுநாள் சூரியன் வருவதற்கு முன்னே மீண்டும் அழைத்துச் சென்றுவிடுவார்கள். அப்பெண் தாய்வீட்டுக்கு வரும்வேலை பூவும், பொட்டும், தாய் வீட்டு சீர் என்று கொடுத்த புடவையை கட்டிகொண்டு சோகமாக ஒரு மூலையில் அமர்ந்திருக்க, அங்கு வருவோர் போவோர் எல்லாம் அப்பெண்ணை பார்த்துவிட்டு கண்ணீருடன் மூக்கை சிந்திவிட்டு செல்வார்கள். அப்போது அப்பெண்ணை பார்காதவர்களை பார்த்து சொல்லுவார்கள், "கடைசியா வந்து மூஞ்சிய பார்த்துட்டு போப்பா.. மறுபடியும் எப்போ அவள இப்படி பார்க்க போற..'என்று. என்னிடமும் அப்படி சொன்னார்கள். "நான் ஏன் அப்படி பார்க்கணும்" என்று கேட்டேன். இதேதான் மீண்டும் கேட்கிறேன் ஏன் இந்த பழமையான பொறம்போக்குகள் வகுத்த அறம் கேட்ட விதியை தூக்கி சுமக்க வேண்டும்..? ஏன் நான் அப்படி பார்க்கனும்.? அதாவது கடைசியாக முகத்தை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்வதன் அர்த்தம், இனிமேல் அந்தப் பெண் சாகும்வரை கை நிறைய வலையல் இல்லாமல், பூவும், பொட்டும் இல்லாமல் இருப்பாள் அதனால் கடைசியாக மங்களகரமாக இருக்கும்போதே பார்த்துவிடுங்க என்பதுதான் அதன் பொருள். இந்த விதிகள் எல்லாம் ஏன் எப்போதும் ஆண்களுக்கு பொருந்தாமல் போகிறது.!? பெண்களும் இதை எல்லாம் ஏன்.!?, எதற்கு.? என்று கேட்காமல் அப்படியே ஏற்றுகொள்கிறார்கள்.!? நான் இங்கு ஒரு விசயத்தை வலியுருத்த விரும்புகிறேன். ஒரு பெண்ணின் கணவன் இறந்தால் அவள் மிகுந்த சுதந்திரம் அடைந்தவளாக மாறுகிறாள். மாறவேண்டும். ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு முதன்மையாக கட்டுப்படுத்துபவன், அடக்குபவன் அவனின் கணவனே.. அந்த முதன்மையானவனே இல்லாதபோது, அப்பெண் யாருக்கு கட்டுபடவேண்டும்,? யாருக்கு அடிபணியவேண்டும்.? உண்மையில் பெண்ணின் சுதந்திரம், ஆணிடம் இருந்து முழுமையாக விடுதலை பெறும்போதே கிடைக்கிறது. பெண்ணின் கணவன் இறக்கும்போது, அவள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. அவள், அவளுக்கான விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழலாம்... அவள் இந்த சமூக நச்சரிப்பு கூட்டதிலிருந்து விலகி என்றும் சுதந்திரமாக வாழலாம்.. கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன், திருமணம் சொர்கத்தில் நிச்சயக்கபட்டு ஒன்று" என்ற பழைய மக்கிபோன பஞ்சாங்கத்தை தூக்கிபோட்டு அவள் வாழவேண்டும். இதைவிட அவள், திருமணம் என்ற பந்தத்தில் உள்ளே செல்லாமல் இருப்பதுதான் மிகச் சிறப்பு. #இந்துமதம், நயவஞ்சகத்தனமான ஆண்களின் சூழ்ச்சியால் பின்னப்பட்டுள்ளது. அதில் பெண்களே முதல் பலியாகிறார்கள். :-Rk.Guru (Must Share this post...)

0 comments: