Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Tuesday, October 28, 2025

சிறிய செயல்களில் பெரிய வெற்றி



ஒரு பொருளை நாம் பாதுகாக்கவும் வேண்டும், அதே வேலை அதை பராமரிக்வேண்டும். பாதுகாப்பும், பராமரிக்கும் மிக முக்கியம். இது பொருளுக்கு மட்டும் என்பது கிடையாது, உடலுக்கும் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

நல்லா நவீன ஆடை போட்டு கொண்டு இருப்பார்கள் ஆனால் உடல் பயிற்சி, உணவு பழக்கத்தில் எந்த விதமான திட்டமும்  இருக்காது. வயிறு முட்ட குடிப்பது, வயிறு முட்டத் தின்பது, குப்புறப்படுத்து தூங்குவது ஆனால் வெளியே செல்லும் பொழுது மட்டும் டிப்-டாப்பாக செல்வது.

இது உடலை பராமரிப்பதாக இருக்கும் ஆனால் உடல் பாதுகாப்பில் பெரிய ஓட்டை விழுந்து விடும் அதனால் பராமரிப்பு இருக்கும் போது பாதுகாப்பும் மிக முக்கியம்.

எதையும் மிக சிறிய (Micro) அளவில் அணுக வேண்டும் ஆனால் நாம் பெரிய (Macro) அளவில் சிந்திக்கிறோம், திட்டங்கள் போடுகிறோம். அது பெரிதாக கனவாக இருந்தாலும் ஈடறாது.

ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது பற்றி படத்தில் பார்த்து நாம் ரசிக்கலாம் ஆனால் நடைமுறையில் அது சின்ன சின்ன விஷயங்களை கவனித்துக் கொண்டு சரிபடுத்திக் கொண்டு நகரும் போதுதான் வெற்றியை சாத்தியமாக்க முடியும்.

இங்க திட்டம் போடும் தலைவர்களைவிட செயலாற்றும் செயலாளர்கள்தான் தேவை.

அதனால் பாதுகாப்பு, பராமரிப்பு மைக்ரோ லெவலில் வேலை செய்வதுதான் வெற்றியை மிக எளிதாக்கி கொடுக்கும்.

வாழ்க வளமுடன்..!

:-Rk. Guru

Wednesday, October 22, 2025

“சாதியின்றி சமத்துவம் — மனிதனின் உண்மையான வளர்ச்சி”




“சாதியின்றி சமத்துவம் — மனிதனின் உண்மையான வளர்ச்சி”

ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள், ஒரே நிறம் கொண்டவர்களாக இருப்பார்கள், சில சமயம் ஒரே தொழிலையும் செய்வார்கள்.
ஆனால் “சாதி” என்ற வார்த்தை வரும்போது, அவர்கள் அறியாமலே தங்களைப் பிரித்து வைப்பார்கள்.

சாதிக்கு இனம், மொழி, தொழில், நிறம் போன்ற எந்த அடையாளமும் இல்லை.
ஆனால் வெளிப்புறத்தில் காலம் காலமாக அது ஒரு வேற்றுமையை உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்த “சாதிய” தன்மைக்கு ஒத்த கிளை அமைப்பாக சில சமூக பழக்கங்களையும் குறிப்பிடலாம்:

பெண்களுக்கு எதிரான வன்முறை;

“பொட்ட கழுதை, நீயும் பேச ஆரம்பிச்சிட்டியா!” என்ற அவமதிப்பு;

தன்னைவிட இளையவரிடம் “சின்ன பையன், உனக்கு என்ன தெரியும்?” என்று பேசுவது;

பொருளாதார வித்தியாசம் கொண்ட ஒருவரை நோக்கி “ஒன்னும் இல்லாத பையன்! நீ எனக்கு அறிவு சொல்லுறியா? உன்ன அடிச்சா கூட கேட்க்க ஆள் இல்லாத அனாதை!” என்று இழிவாகக் கூறுவது.


இவை எல்லாம் சாதியின் கிளை அமைப்புகளே.
அவை சாதி மனப்போக்கிற்கு மேலும் கொடூரமான வலிமையைச் சேர்க்கின்றன.

மனிதனின் மனம் எப்போதும் தன்னை உயர்வாக காட்ட விரும்புகிறது.
அந்த “ஆணவத்துக்குப்” பொருத்தமான கருவாக சாதியம் இருந்து கொண்டிருக்கிறது.

மேற்கத்திய வெள்ளையர்கள் இன்றுவரை இந்தியாவின் சாதிய அமைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏனெனில் சாதிக்கு எந்த வடிவமும் இல்லை, ஆனால் அது வெளிப்புற வடிவத்தையும் சமூக கட்டமைப்பையும் ஆழமாகப் பாதிக்கிறது.

இந்த வடிவமற்ற சாதியச் சிந்தனையை முற்றிலும் ஒழிக்க, வெறும் சமூகநீதித் திட்டங்கள் போதாது.
அதன் வேர்களையே நசுக்க வேண்டும்.

முதலில், “சாதி சங்கங்கள்” எனப்படும் அமைப்புகள் முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும்.
இரண்டாவது, கல்விச்சான்றிதழ்களில் எந்தவிதமான சாதி விவரமும் குறிப்பிடக் கூடாது.
மூன்றாவது, அனைத்து சாதிப் பிரிவுகளையும் இந்தியாவிலிருந்து ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மரத்தின் கிளைகளை வெட்டுவதால் அது முளைக்கும்;
ஆனால் அதன் வேர்களுக்கு நீர் பாய்ச்சாமல் விட்டால் —
ஒரு நாள் அந்த நச்சு மரம் தானாகவே சாய்ந்து விழுந்து, மண்ணோடு மண்ணாகிப் போகும்

Friday, July 18, 2025

நீண்ட நாள் வாழ்வு, பல நாள் கனவு, குறுகிய வாழ்க்கை.. ஒரு நாள் மரணம் மறுநாள் அடக்கம் முடிந்தான் மனிதன், ஆனால் அவன் போடும் ஆணவ ஆட்டம்.!! :-Rk. Guru (Share this post...)

Thursday, July 17, 2025

அழகு எங்கு உள்ளது.!?

* அழகு என்பது வெளிப்புறத்தில் இல்லை அது உடலில் இருக்கும் உறுப்புகளிலும், மனதிலும் உள்ளது. இது இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் வெளிப்புற அழகு தன்னால் மிளிரும் ஆனால் 90 சதவீத மக்கள் வெளிப்புற அழக்குகே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விலை உயர்ந்த ஆடைகள் அணிகிறார்கள் ஆனால் ஆடைக்கேற்ற மாதிரி உடல் இல்லை. ஆண்கள் நிறைமாத கர்ப்பிணி போல் தொப்பை இருக்கிறது. அதுல பேண்ட், சர்ட் டக் செய்துகொண்டு நடந்து செல்வதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. இதேதான் 90% பெண்களும், வீட்டில் இருக்கும் அண்டாகளுக்கும், குண்டாங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஊதி போகிறார்கள். #நோய் நம்மை நோக்கி வருவதில்லை. நாம்தான் நோயை நோக்கி தேடி செல்கின்றோம். நட்புடன்... 💐 :-Rk. Guru Astrologer, Social Activist, Life & Spiritual Counseller Whatsapp: +919361782696 +917904507838 (Share this post...)

Wednesday, July 16, 2025

பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வா.!?

என்னுடைய நிலைப்பாடு தீய செயல் செய்து கூட ஒருவனை ஊரே சேர்ந்து காரி துப்பினாலும் தற்கொலை எண்ணத்திற்கு வரக்கூடாது என்பேன். அவனும் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது. தீய செயல் செய்து ஊரே காரி துப்பினாலும் தற்கொலைக்கு வரக்கூடாது என்று சொல்லும் போது சத்தியம், தர்மத்தின் வழி சென்று நேர்மையான நல்ல காரியங்கள் செய்து அதில் ஏற்படும் பிரச்சனைக்கு போராட துணிவு இல்லாமல் தன்னை மாய்த்துக் கொள்வது என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிறவியில் நாம் பிறந்தது வாழ்வதற்காகதான். பிற உயிர்கள் பிறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது, இறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் நாம் பிறப்பை தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் இறப்பை தேர்ந்தெடுக்க முடியும். இறப்பை தேர்ந்தெடுக்க முடியும் என்ற உரிமையில் இயற்கை படைத்த உயிரை இயற்கையே எடுத்துக்கொள்ளும் வரை அதற்கு எதிராக செயல்படக்கூடாது. மனிதன் தோன்றிய 2 லட்சம் வருடமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் போராடிதான் கடந்து வந்திருக்கின்றான். இந்த பூமியில் உயிர் வாழ்வதுதே மிகப்பெரிய போராட்டம்தான் அதற்கு தற்கொலை என்றுமே ஒரு தீர்வாக இருக்க முடியாது. தற்கொலைதான் முடிவு என்றால் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்கும் இந்த அளவுக்கு முன்னேறி இருக்காது. அதனால் பிரச்சனையை நாளை தள்ளி போடுங்கள் அந்த நாளை வரும் பொழுது அந்த பிரச்சனை வீரியம் குறைந்திருக்கும் சில நாட்களில் பிரச்சனை என்பதே இல்லாமல் போயிருக்கும். #தற்கொலை எண்ணத்திற்கு இதுதான் குறைந்தபட்ச ஒரு தீர்வாக இருக்கும். நட்புடன்... 💐 :-Rk. Guru Life & Spiritual Counseller Whatsapp: +919361782696 +917904507838 (Share this post...)

Saturday, June 21, 2025

அமெரிக்காவின் ரவுடி இஸ்ரேல்

அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ, ஈரான் தலைவர் காமெனியை கொலை செய்துவிட்டால் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்? உங்கள் பதில் என்னவாக இருக்கும்? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு புதின், "இப்படியான சாத்தியங்கள் குறித்து நான் விவாதிக்கக்கூட விரும்பவில்லை. இது கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். ------------------------------- # ரஷ்ய அதிபர் புதின் மிகப்பெரிய மூளைக்காரன்தான் என்ன ஒரு சமார்த்தியமான பதில்.!! " விவாதிக்க விரும்பவில்லை.. " என்றால் அவருக்கு தகுந்த பாதுகாப்பு எங்களால் கொடுக்க முடியும். "எங்கள தாண்டிதான் அவர தொட முடியும்..." என்பதுதான் புட்டின் சொன்ன பதிலின் ஆழமான பொருள் உள்ளது. அதனால் அமெரிக்காவவோ, இஸ்ரேலோ சர்வாதிகார ஆதிக்க மனோபாவத்தை விட்டு தொலைய வேண்டும். இராணுவம் ஒரு நாட்டிற்குள் செல்லாமல் நவீன ஏவுகனை, ட்ரோன் மூலம் ஒரு நாட்டை அழிக்கலாம் தற்போது அந்த போர் நிலைக்குதான் எல்லா நாடுகளுக்கும் உள்ளது. அதனால் இனிமேல் ஒரு நாட்டை முழுதாக யாராலும் கட்டுப்படுத்த முடியாது உதாரணம் மூன்று வருடங்களால் நடக்கும் ரஷ்ய, உக்ரையின் போர். போர் தந்திரம், போர் யுக்திகள் எல்லாம் மாறிவிட்டது. அதனால் அமெரிக்காவின் அடாவாடி கைப்புள்ளையான இஸ்ரேல் இதை மரமண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டும். நட்புடன்... 💐 :-Rk. Guru Astrologer, Social Activist Life & Spiritual Counseller Whatsapp: +917904507839 (Share this post...)

Sunday, February 9, 2025

மகிழ்வித்து மகிழ்

தமிழில் எனக்கு பிடித்த வார்த்தைகள்: "மகிழ்வித்து, மகிழ்" இந்த இரண்டு வார்த்தைகளை கொண்டு நாம் அறத்தின் வழி சென்றால், நம் நாடும் செழிக்கும், வீடும் செழிக்கும். தீயதாக நாம் எடுத்துகொண்டால், அறம் விழும். தீயது என்பது பிறரை பொய்யாக மகிழ்வித்து, பின் அவர்களை வீழ்த்தி, ஒரு நேரம் தான் மட்டும் மகிழ்ந்து, காலப்போக்கில் அம்மகிழ்ச்சியும் சென்று, நோயில் வீழ்ந்து, மடிந்து போவது. ஆனால் அறம் சார்ந்த மகிழ்வு என்பது நோய் கொண்டு இறக்கும் தருவாயிலும் "தான் வாழ்வில் மகிழ்வித்த நபர்கள் இன்னும் அறத்துடன் மகிழ்கிறார்கள்" என்ற மகிழ்வுடன் கண் துயில்வது. உயிர் செல்வது... #நாம் வாழும் வாழ்வு, ஏதோவித ஒரு அர்த்தத்தை நமக்கு உணர்த்திகொண்டே உள்ளது. அதில் ஒன்றே, " மகிழ்வித்து மகிழ்"... :-Rk.Guru