ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள், ஒரே நிறம் கொண்டவர்களாக இருப்பார்கள், சில சமயம் ஒரே தொழிலையும் செய்வார்கள்.
ஆனால் “சாதி” என்ற வார்த்தை வரும்போது, அவர்கள் அறியாமலே தங்களைப் பிரித்து வைப்பார்கள்.
சாதிக்கு இனம், மொழி, தொழில், நிறம் போன்ற எந்த அடையாளமும் இல்லை.
ஆனால் வெளிப்புறத்தில் காலம் காலமாக அது ஒரு வேற்றுமையை உருவாக்கி வைத்திருக்கிறது.
இந்த “சாதிய” தன்மைக்கு ஒத்த கிளை அமைப்பாக சில சமூக பழக்கங்களையும் குறிப்பிடலாம்:
பெண்களுக்கு எதிரான வன்முறை;
“பொட்ட கழுதை, நீயும் பேச ஆரம்பிச்சிட்டியா!” என்ற அவமதிப்பு;
தன்னைவிட இளையவரிடம் “சின்ன பையன், உனக்கு என்ன தெரியும்?” என்று பேசுவது;
பொருளாதார வித்தியாசம் கொண்ட ஒருவரை நோக்கி “ஒன்னும் இல்லாத பையன்! நீ எனக்கு அறிவு சொல்லுறியா? உன்ன அடிச்சா கூட கேட்க்க ஆள் இல்லாத அனாதை!” என்று இழிவாகக் கூறுவது.
இவை எல்லாம் சாதியின் கிளை அமைப்புகளே.
அவை சாதி மனப்போக்கிற்கு மேலும் கொடூரமான வலிமையைச் சேர்க்கின்றன.
மனிதனின் மனம் எப்போதும் தன்னை உயர்வாக காட்ட விரும்புகிறது.
அந்த “ஆணவத்துக்குப்” பொருத்தமான கருவாக சாதியம் இருந்து கொண்டிருக்கிறது.
மேற்கத்திய வெள்ளையர்கள் இன்றுவரை இந்தியாவின் சாதிய அமைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏனெனில் சாதிக்கு எந்த வடிவமும் இல்லை, ஆனால் அது வெளிப்புற வடிவத்தையும் சமூக கட்டமைப்பையும் ஆழமாகப் பாதிக்கிறது.
இந்த வடிவமற்ற சாதியச் சிந்தனையை முற்றிலும் ஒழிக்க, வெறும் சமூகநீதித் திட்டங்கள் போதாது.
அதன் வேர்களையே நசுக்க வேண்டும்.
முதலில், “சாதி சங்கங்கள்” எனப்படும் அமைப்புகள் முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும்.
இரண்டாவது, கல்விச்சான்றிதழ்களில் எந்தவிதமான சாதி விவரமும் குறிப்பிடக் கூடாது.
மூன்றாவது, அனைத்து சாதிப் பிரிவுகளையும் இந்தியாவிலிருந்து ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
மரத்தின் கிளைகளை வெட்டுவதால் அது முளைக்கும்;
ஆனால் அதன் வேர்களுக்கு நீர் பாய்ச்சாமல் விட்டால் —
ஒரு நாள் அந்த நச்சு மரம் தானாகவே சாய்ந்து விழுந்து, மண்ணோடு மண்ணாகிப் போகும்
0 comments:
Post a Comment