Pages

Sunday, February 22, 2015

அது என்ன தியானம் என்பது.? சும்மா உட்கார சொல்கிறாங்க..!
நான் பிறந்தது முதல் எனக்கான ஆன்மிக தேடுதல் ஆரம்பித்துவிட்டது. 
ஆரம்பத்தில் உருவழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தேன். மந்திரங்கள் உச்சரித்தேன். யோகா பயின்றேன். சித்தர்கள் சொன்னதையேல்லாம் தேடி படித்தேன். ஞான குருமார்களை சந்தித்தேன். எங்கும் எனக்கான விடை கிடைக்காமல் ஒருவித தேடுதலுடனே அலைந்தேன். இந்த ஆர்வம், முயற்சியே ஒரு ஆன்மிக சாதானக்கு எப்போதும் வேண்டும். அது நம்மை என்றும் பக்குவபடுவத்தும் தளம்.. அதில் விழுந்து, அடிபட்டு வரும்போது ஒரு வெறுமை தோன்றும் அவ்வெறுமை  கவனிப்பதில் நிலைநிறுத்தும்போது தியானம் கைவரபடுகிறது.

நான் ஆன்மிகத்தை பேசும்போதேல்லாம். அதிகம் பேர்  கேட்கிறார்கள், “அது என்ன தியானம் என்பது.? சும்மா உட்கார சொல்கிறாங்க, கண்ண மூட சொல்கிறாங்க, கண்ண மூடினா கருப்பா தெரியுது. அதான் தியானமா...? என்கிறாங்க.

நான் சொன்னேன், “அது ஆரம்பம்தான் தொடர்ந்து அதையே பார்த்துகொண்டு இருக்கனும்.என்றேன்.

ஒரு பெண் கருவுற்று, அக்கரு குழந்தையாகி  பூமியில வந்து விழுவதற்கே 10 மாதம் ஆகிறது. ஆனா, தியானம் என்பது நீங்க நினைத்தவுடன் கைக்கூடிய வரும் பொருளா... முதலில் நமக்கு பொறுமை வேண்டும்.  ஒரு ஆன்மிக தேடுதல் வேண்டும். இருப்பதிலே எளிமையானுதும் தியானம்தான். அதுபோல் இருப்பதிலே கடினமானதும் அதுதான். இதை நாம் எப்படி எடுத்துகொள்கிறோம் என்பதை பொருத்துதான் ஆன்மிக பயணம் உள்ளது.

நான், பதினைந்துவருடமாக ஆன்மிக தேடுதலில் உள்ளவன். இன்னும் பயணித்து கொண்டிருக்கிறவன். அந்த  பயண அனுவத்தை, என் தியான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் எளிமையாகவும் சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்.

முதலில் நம் உடலும், மனதும் தனிதனியானது அல்ல... இரண்டும் இணைந்து ஒன்றாக செயல்படுவது. நாம் கண்ணால் பார்க்கும் பொருள்கள் யாவும் மனதின் கற்பனையின் வடிவமே... உடல்தான் அப்பொருளை உருவாக்கியது. ஆனால் பின் இருந்து இயக்கியது மனம்தான். மனமும், உடலும் ஒரு மாட்டுவண்டியில் கட்டிய இரண்டு மாடுகள். ஒன்று நின்றாலும், இன்னோன்று செயல்படாது. தலைவலி வரும்போதுதான் மனம் தலையை பற்றியே நினைக்கும். பல்வலி வரும்போதுதான் நாக்கு பல் இருக்கும் பகுதியே துலாவிகொண்டிருக்கும். உடல்  நோயில் சரிந்தால் அது சரியாகும் வரையே மனம் உடலை சுற்றியே இருக்கும். அப்போது பதைபதைக்கும். அந்த நேரத்தில் யாரவது  நம்மிடம் சாதரணமாக பேசினாலும் கோவப்பட்டு எரிந்து விழுவோம். பின் உடல் சரியானதும் மனது, ஆசையேனும் இறைகைகட்டி பறக்க ஆரம்பிக்கும். இங்கு உடல் என்பது வெறும் செயல்படும் கருவிதான்  ஆனால் மனதுதான் அதன் சூத்திரதாரி  இதில் நேரடியாக பாதிக்கபடுவது உடல்தான். அதுதான் நம் கண்ணுக்கு தெரிவது. இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்

உடலியல், மனயியல், உளவியல்  போன்றவை எல்லாம் இன்று மனிதனை பயன்படுத்தி, பணம் சாம்பாதிக்கும் துறையாக மாறிவிட்டது. எதுவும் நிரந்திர தீர்வுக்கு வழிவகுக்கவில்லை.

மனம், உடல், இது பொதுவாய் எல்லோருக்கும் தெரியும். உடல் கண்ணுக்கு தெரிவது, மனம் கண்ணுக்கு தெரியாதது. அது வலியும், சந்தோசத்தையும் மட்டும் உணரக்கூடியது. இப்போதுதான் தியானத்தைபற்றி முக்கிய ஒன்றை நான் சொல்ல போகிறேன். இந்த இரண்டையும் தாண்டிய இன்னோன்று உண்டு. அது மனதாலும், உடலாலும் கட்டுபடுத்த முடியாதது. அது பிரபஞ்ச சக்தியானது அது வெறுமனே கவனிப்பது. அதை எப்படி விளக்கலாம் என்றால், டென்னிஸ் ஆடுபவர்கள், ஒரு  பக்கம் அடிகிற பந்தை இன்னொரு பக்கம் அடிப்பாங்க, அது போல் இந்த பக்கம் வந்த பந்தை அந்த பக்கம் அடிப்பாங்க... இப்படி, அப்டியும் போற பந்தை ஒருத்தர், வலைக்கு மேலே அமர்ந்து பார்த்துகொண்டே இருப்பாரு தெரியுங்களா..? அவர் யார் என்றால் அவர்தான் அவ்விளையாட்டின் நடுவர். அவர் வேலை,  பந்து எங்கு தடைபடுறது யார் தடுத்தது, யாருக்கு பாயின்ட் போய் சேரும் என்பதை கவனித்துகொண்டே இருப்பார். இப்ப நடுவரே இல்லாமல் விளையாடுகிறாங்க என்று நினைத்து பாருங்க... அந்த ஆட்டம் எப்படி இருக்கும். கடைசியில் சண்டையில்தான் போய் முடியும்.

இதில் நம் வாழ்கை எனும் ஆட்டத்தில்,  நடுவர் இல்லை என்று நினைத்து ஆடுகிறோம் ஆனால் அங்கு நடுவர் இருக்கிறார். நடுவர் இல்லாமல் எந்த ஆட்டமும் இல்லை... அப்படி இருந்தால் அது ஆட்டமே இல்லை. அங்கு நடுவர் இருக்கிறார். நாம் அவரை கவனிக்காமல் ஆடுகிறோம். இப்போது முதன்முறையாக நாம் நடுவர் இருக்கிறார் என்று நினைத்து ஆடபோகிறோம். இப்போது ஆட்டம் பதட்டமாக இருக்கும் ஒருவித பரவசமாகவும் இருக்கும். அதற்குதான் தியானம் துணையாக இருக்க போகிறது.  

இப்போது உங்க உடலும், மனமும், ஆசை கொண்ட பந்தை  ஆடட்டும். ஆனா, நீங்க நடுவரா இருந்து அதை கவனிங்கஇந்த விளையாட்டில் எந்த மதிப்பீடும் வேண்டாம் எந்த மதிபெண்ணும் கொடுக்கவேண்டாம். வெறுமனே கவனியுங்க அது போதும். இப்போது அது வெறும் விளையாட்டுதான் என்ற முதன் முதாலாக உங்களுக்கு ஒரு புரிதல் உண்டாகும். அதில் தீவிரம் கொள்ளமாட்டிங்க வெறுமனே கவனித்துகொண்டே அதை விளையாடுவிங்க... உணர்ச்சிவசபடமாட்டிங்க, ஏனென்றால் உணர்ச்சிவசபடுவங்கதான் பதட்டமடைவாங்க, பயபடுவாங்க உணர்வு பூர்வமான சிந்திகிறவங்க அடுத்து என்ன செயலாம் என்பதைதான் யோசிப்பாங்க... நமக்கு தெரிந்தவங்களுக்கு அடிபட்டால் நாம் உடனே பதட்டம் அடைகிறோம். ஆனா நாம் பதட்டம் அடைவது போல டாக்டரும் பதட்டம் அடைந்தால் என்ன ஆகும்.  மருத்துவம் பார்க்க முடியாது. நாமும் நம் மனதுக்கும், உடலுக்கு தலைசிறந்த மருத்துவராகதான் இப்போது இருக்கவேண்டும். ஒன்றை நினைவுபடுத்திகொள்ளுங்கள். “100 வயது நான் ஆரோக்கியமாக வாழ்வேன் என்று சொல்பவன் எந்த வியாதி வந்து செத்து போவான்.? சொல்லுங்க... எப்படியும் அவனுக்கு ஒரு நோய் வந்துதானே இறப்பு வரும். இதில் புரிந்துகொள்ளவேண்டியது மரணம் என்பது நிச்சயக்கபட்ட ஒன்று இதை மாற்றமுடியாது. இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் கவனிக்கும்போது மரண பயம் உண்டாகும். அப்படி பயம் வரும் போது அந்த பயத்தையும் கவனிக்கவேண்டும். ஏனென்றால் மனம் எப்படியும்  நீடித்து இருக்கனும் என்றுதான் நினைக்கும். அது உடலோடு ஒட்டிகொண்டு தனித்து வராது. அப்படி மனம்  பயம் கொள்ளும் போது அந்த பயத்தையும் நீங்க கவனிக்கும் போது அப்பயம் தானாய் நீங்கும். மனம் கொஞ்சம் பக்குவபடும் முதன் முறையாக உடலைவிட்டு தனித்து வெளிவரும். அப்போதே இருட்டாக இருந்தில் மனதின் முகம் தெரியும். 

அந்த முகத்தை கவனிப்பது நடுவரான உங்களுக்கு அந்நடுவர்தான் அதுதான் விழிப்புணர்வு அல்லது தன்ணுணர்வு என்று சொல்வது. 

ஒரு மான் புல் மேய்கிறது என்றால் அது எங்கு ஆபத்து உள்ளது என்று உணர்ந்தே மேய்ந்துகொண்டிருக்கும். அவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும். ஒரு ஆடோ, மாடோ, குரங்கோ எந்த உயிரினத்தையும் தூக்கி தண்ணீரில் போட்டால் அவரை அட்டகாசமாக நீந்துகிறது. மிக எச்சரிச்சரிக்கையாக இருக்கிறது ஆனால் குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான் என்று டார்வின் பரிபாணம் சொல்கிறது. பின் ஏன் நம்மால் தண்ணீரில்  நீந்த முடியவில்லை அதற்காக ஏன் விசேச பயிற்சி எடுத்து நீந்த வேண்டிருக்கு.? ஏனென்றால் உடலை, ம்னம், ஆசை கொண்டு மங்கடித்துவிட்டது, மறுக்கடித்துவிட்டது, அதை மீட்டேடுக்கதான் தியானம்.


இப்போது இரண்டு கடந்து மூன்றாவதுக்கு வந்துவீட்டீர்கள். அதாவது உடல், மனது, தன்ணுணர்வு. ஆம், இந்த தன்ணுணர்வு கொண்டுதான் உடலையும் மனதையும் கவனிக்கவேண்டும் அது எப்படி என்றால் நீங்க திரைபடம் பார்கிறீர்க்ள். அங்கு முதலில் வெண்திரை இருக்கிறதுசிறிது நேரம் கழித்து பின்னால் இருந்து ஒளி பீச்சபடுகிறது. நமக்கு பிடித்த  நடிகர், நடிகை திரையில் தோன்றிவிடுகிறார்கள். கைதட்டல், விசில் சத்தம் காதை கிழிகிறது.   இப்போதுதான் கவனமாக இருக்கவேண்டும் உடல் என்னும் வெண்திரையில், மனம் எனும் ஒளி பீயிச்சபடுகிறது இப்போது நீங்கள் முழு கவனிப்பவாரக இருந்தால் அதில் ஒன்றாமல் வெறும் பார்வையாளானாக, நடுவராக இருந்து கவனிப்பீர்கள். இல்லையேன்றால் அந்த வெண்திரையும் மறந்து, மறைந்து, ஒளியே உண்மையேன நம்பி, அதிலே லயபட்டு, அந்த நடிகர், நடிகைக்கு ரசிகராகி கோவில் கட்டி பின் கும்பாபிஷேகம் பண்ணி வரும் தேர்தலில் எம்.எல்.ஏவாக ஆக்கி, அதை தாண்டி அவரை தமிழ்நாட்டின் முதல்வராகவே ஆக்கி விடுவோம். முதல்வரானவங்க சும்மா இருப்பாங்களா.? இருந்தாங்களா.? மேலும் நம்மை எப்படியேல்லாம் முட்டாளாக்களாம் என்பதிலே கவனமாக இருப்பாங்க.. இப்படிதான் உலகத்தில் உள்ள ஒவ்வொரு  நாட்டின் தலைவிதியும் சினிமா போன்று ஒவ்வொருவிததில் மாறுது. அந்த தலைவிதி யாரால மாறுது.? நம்மால்தான் மாறுது... கேட்டா இப்படி சொல்லுவோம், “அவர் பிரதமரா, முதலமைச்சரா வருவார்ன்னு விதி இருக்கு வந்துட்டாரு என்போம். ஆனா, அவர் வருவது நாம் கவனிக்காமல் விதைவிதிச்சோம் என்பதை நாம் சாவுகாசமாக மறந்துவிட்டோம். அதை மறக்காமல் அது திரைபடமாக இருந்தாலும், வாழும் வாழ்வாக இருந்தாலும் கவனித்தலில்தான் மாற்றம் வரும்.

இதுபோல மாற்றம் வர, நம் மனதை கவனிக்கும்போது அது வாழ்வேனும் திரைபடமே என்று பார்கும்போது. உங்களுக்கு முதன் முறையாக புதிய பார்வை வந்துள்ளது. அங்கு நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கபடுகீறீர்கள். அதுதான் பிரபஞ்ச பார்வை, அது மூன்றாவது கண் பார்வை. பாருங்கள், பாருங்கள் பார்த்துகொண்டே இருங்கள்.

இப்போது மேகம் வானத்தில் வந்துகொண்டே இருக்கும். வானம் என்றால் மேகம் இருக்கதானே செய்யும் ஆனால் மேகத்தை கடந்தால் அங்கு வானமும் இருக்காது, மேகமும் இருக்காது. அங்கு பிரபஞ்ச ஒளி, ஒலியே இருக்கும்.

இப்போது மனதை கவனிக்க, கவனிக்க உங்கள் மனது முதன் முறையாக உடலை கட்டுபடுத்தாது என்பதை நீங்கள் உணர்வீர்கள். உடல் இப்போது முழு தளர்வாக, ஒய்வு தன்மைக்கு செல்லும். உடல் தூங்குகிறது என்று கூட அதை சொல்லலாம் ஆனால் மனம் எண்ணம்கொண்டு பல கனவாய் காட்சியளிக்கும் அதையும் நீங்கள் கவனிப்பீர்கள். நாம் இரவில் தூங்குவது இதன் அடிபடையில்தான் நடக்கிறது. அங்கு ஒரு சிறுவித்தியாசம்  நாம் மனதையும், உடலையும் கவனிப்பதில்லை நாம் மனதுடன் அதன் காட்சிகளில் ஒன்றிவிடுகிறோம். கனவு காண்கிறோம். ஆனால் தியானம் அப்படி நடக்காது அங்கு கவனித்துகொண்டே நாம் தூங்கிகொண்டிருப்போம். இதைதான் சித்தர்கள் சொன்னது, “தூங்காமல் தூங்கி எழுவது எக்காலம் என்று.  இதை தொடந்து கவனிக்கும் போது இது நம் அன்றாட வாழ்வின் செயல்களிலே நடக்கும். செயல் இருக்கும் ஆனால் செயல்படும் மனம் அங்கு இருக்காது. அங்கு கவனித்துகொண்டிருக்கும் தியானமே இருக்கும். அது அழகாக காட்சி அளிக்கும். இதுபோல செயலைதான் ஜப்பான் மக்கள் செய்கிறார்கள். இன்று உலகத்தில் அரிய அழகான பொருட்கள் ஜப்பானில்தான் உள்ளது. ஏனென்றால் அவர்கள் அதை தியானமாக செய்கிறார்கள். அதுதான் அங்கு ஜென் ஆக பரிணமிக்கிறது. ஜென் என்பது தியானம் என்ற தமிழ் சொல்லிருந்து தியான் என்ற சமஸ்கிரத சொல்லாகி, சீனாவில் அது தியோ என்றாகி அது ஜப்பானில் ஜென்னாக மாறியது. வார்த்தைதான் மாறியதே தவிர தியான தன்மை என்றும் மாறாது. அந்த தியானம் என்ற ஜென்னை கொண்டு போனவர் நம் தமிழர் போதி தர்மரே அவர்தான் ஜென்னை முழுமையாக மலர செய்தார்.

இப்போது தியானம் நம் நடைமுறை வாழ்கையில் இணைந்தே இருக்கும்போது வெண்திரையில், மாய ஒளி வீசுவது குறைகிறது. ஒருவேலை முழுவதும் இல்லாமல் போய்விட்டது. கரைந்துவிட்டது என்று கூடசொல்ல்லாம். இப்போது வெறும் திரைமட்டும் இருக்கிறது அதை பார்வையாளன் பார்த்துகொண்டு இருக்கிறான். பள்ளமான இட்த்தில்தான் நீர்வந்து சேரும், காற்று இல்லாத இடத்தில்தான் காற்று வந்து சேரும். காலி பாத்திரத்திலே நீரை  நிரப்ப முடியும்... “ஒன்று இல்லாத இடத்தில்தான் இன்னொன்று வந்து சேரும் என்பது இயற்கை விதி.

வெண்திரையில் மாய ஒளி நின்ற பிறகு, இன்னொரு ஒளி அங்கு வீசப்படும் அதுதான் பிரபஞ்ச்ச ஒளி. அது எம்மாதிரி ஒளி என்பது நான் இன்னும் அறியவில்லை ஆனால் அதன் சிறு சிதறலை நான் உணர்ந்தவன். அதன் சாரலில் நனைந்தவன். அது சொல்லில் எழுத முடியாத பரவசம். ஒரு ஞானி சொன்னது,  “ஞானம் என்பது சொல்லில் சொல்லமுடியாதது அப்படி சொன்னால் அது ஞானம் இல்லாதது.” அது முழுக்க, முழுக்க உணரகூடியது. இதனால்தான் சிவபித்தர்கள். சித்தர்கள் ஆவதற்கு முன்னே “இறைவா ஆனந்த அப்பரவசத்தை தாங்கும் வலிமையை தா என்று மனம் உருகி வேண்டுவார்கள். ஏனென்றால் அந்த தேனின் ஒரு துளியை அவர்கள் ருசித்துவிட்டார்கள். இதனாலே அப்படி சொல்வார்கள்.

அந்த வெண்திரையில் பிரபஞ்ச ஒளி இருக்கும்போது   கவனிப்பவர் அதாவது உங்கள் தன்ணுணர்வு, பிரபஞ்ச ஒளியில் இணைந்துவிடும் அல்லது கரைந்துவிடும் என்று சொல்லாம். சூரியன் வந்த பின் பனி உறுகி ஆவியாகி போவதுபோல் அந்த பிரபஞ்ச்ச சூரியனில் ஐக்கியமாகிறது. இந்த இணைப்பில்தான் மனிதன் கடவுளாகிறான். ஞானி மீண்டும் குழந்தையாக பிறக்கின்றார். இதனால்தான் ஏசுவும் சொன்னார், “நீங்கள் குழந்தையாக மாறுங்கள். மீண்டும் குழந்தையாக பிறங்கள் என்று  குழந்தை, மனம் இல்லாமல், தன்  உடலையும் அறியாமல் கடவுளாக இருக்கிறது ஆனால் ஞானி எல்லாம் அறிந்து அதனை அறியாமல் இருக்கிறார். அவர் ஆற்றை கடந்துவிட்டார். படகையும் அங்கையே விட்டுவிட்டார். முழுமையில் கலந்துவிட்டார். நிர்வாணம் ஆகிவிட்டார். இதுவே முழு நிர்வாணம் என்பது முழுமையில் கலப்பதே நிர்வாணம் மற்றபடி ஆடையை கலைந்து நிற்பது நிர்வானம் அல்ல... அது ஒரு குறீயிடு. முழு நிர்வாணத்தில்தான். நானே கடவுள் (அகம் பிரம்மாஸ்மி) என்பதை நாம் உணர்வோம். அதுவே உண்மையான மதம், அதுவே புத்தம், இந்து, சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் எல்லாம்..

ஆறுகள் பலவானாலும் சேரும் இடம் கடலே. இதை நாம் புரிந்துகொண்டாலே போதும்.

முழு கவனிப்பதிலே இறைவன் வாழ்கிறான். அவனே இறைவனாகிறான். அதுவே தியானம். மனதை(மாயஒளி) கவனியுங்கள் உடல்(படகு) ஒய்வு தனமைக்கு செல்லும். மாய ஒளி இல்லாத இடத்தில் கவனிப்பு(தியானம்) என்ற ஒளி மூலம் ஆற்றை கடக்கலாம். அப்போது படகு(உடல்) ஆற்றிலே விட்டுவிட்டு கரையேறலாம்.

பிறவி பெருங்கடல் நீந்துவோர் நீந்தார்
இறைவனடி சேராதர்.

இந்த திருகுறளின் உண்மை பொருள் இதுவே... கண்ணை மூடுங்கள் இருள் தெரிந்தால் பரவாவில்லை. இருட்டில் மறைந்திருக்கும் மனம் தன் முகத்தை காட்ட ஆரம்பிக்கும். அதுவே ஆரம்பம்.


முதல் அடி எடுத்துவையுங்கள். அதுவரை காத்திருந்து கவனியுங்கள்.

என்றும் நட்புடன்:0 comments: